இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் நடைபெற்றது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டன.
தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.23 கோடி ஆகும். முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும்.
தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.
மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் இருந்தனர்.
தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக சுமார் ஒரு லட்சம் போலீசார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டன
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் நடைபெற்றது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டன.
தமிழகத்தில் உள்ள மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6.23 கோடி ஆகும். முதல் தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் ஆகும்.
தமிழகத்தில் 874 ஆண் வேட்பாளர்கள், 76 பெண் வேட்பாளர்கள் என மொத்தம் 950 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர்.
மொத்தம் 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 39 பொது பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் பணியில் இருந்தனர்.
தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்காக சுமார் ஒரு லட்சம் போலீசார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
39 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மொத்த வாக்குச்சாவடிகளில் 44,800 வாக்குச்சாவடிகள் வெப் காஸ்டிங் முறையில் நேரடியாக கண்காணிக்கப்பட்டன.
பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு பணியாற்றிய அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், போலீசார் என அனைவரும் பெண்களே.
தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல்கட்ட மக்களவைத் தேர்தலை யொட்டி, நாடு முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் 39, ராஜஸ்தானில் 12, உத்தரப் பிரதேசத்தில் 8 மத்தியப் பிரதேசத்தில் 6, உத்தரகாண்ட்டில் 5 தொகுதிகள் உள்ளிட்ட இந்த 102 தொகுதிகளில் ஏறத்தாழ 62 சதவீத வாக்குகள் பதிவாகின.
தமிழகத்தின் 18 வயது நிரம்பிய முதல் முறை வாக்காளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர். பலரும் செல்ஃபி எடுத்து தங்கள் சமூக வலைதளங்களில் பெருமிதத்துடன் பதிவிட்டனர்.
இதேபோல், மூத்த குடிமக்களும் மிகுந்த அக்கறையுடன் வாக்குச்சாவடி வந்து ஜனநாயகக் கடமையாற்றினர். அவர்கள் சிரமமின்றி வாக்களிப்பதற்கு உரிய வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து கொடுத்தது.
தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என சில கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வாக்குப்பதிவை அதிகரிக்க, புதுச்சேரியில் இரண்டு பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டதுடன், வாக்காளர் களுக்கு கூழ், மோர், பதநீர் வழங்கப்பட்டது கவனம் ஈர்த்தது.
தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டுத் மக்களவை தேர்தலில் 5,85,03,189 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 4,18,25,669 பேர் வாக்களித்தனர். வாக்குப் பதிவு சதவீதம் 72.47 ஆக இருந்தது.
2024-ஆம் ஆண்டு தமிழக மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் 69.46% ஆகும். இது கடந்த 2019 மக்களைவை தேர்தலை விட 3% குறைவாகும்.
தமிழகத்திலேயே அதிகளவாக தருமபுரி மக்களவை தொகுதியில் 81.48% வாக்குகளும், குறைந்த அளவாக மத்திய சென்னை மக்களவை தொகுதியில் 53.91% வாக்குகளும் பதிவானது.
சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் கடந்த தேர்தலைவிட சராசரியாக 4% வாக்குகள் குறைந்துள்ளன.
கடந்த தேர்தலில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 தொகுதிகளில் சராசரி வாக்குப்பதிவு 60.07%ஆக இருந்தது. தற்போதைய தேர்தலில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் சராசரியாக 56.10% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளன.
மக்களவை தேர்தலில் கடந்த தேர்தலை விட தற்போது 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு சரிந்துள்ளது. தூத்துக்குடி தொகுதியில் 59.96% வாக்குப் பதிவு; கடந்த தேர்தலை விட 10% வாக்குப்பதிவு சரிந்துள்ளது.
நகர்புறங்களில் வசிக்கும் மக்களில் 10-இல் 4 பேர் வாக்களிக்கவில்லை. தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.