Advertisment

தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டம்

/idhalgal/general-knowledge/tamil-nadu-govt

மிழ்நாட்டின் பெண்களுக்கான கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை பயின்று, கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் உயர்கல்வி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக, பெண்களுக்கு உயர் கல்வி அளித்தல், பா-லின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், வறுமையில் தவிக்கும் மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

ஆசிரியர்கள் தினத்தன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசுகையில், "அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமை களுக்காக குரல் கொடுத்தவர்தான் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடியவர். அந்தக் காலத்தில் மூடநம்பிக்கைக் காரணமாக முடக்கப்பட்ட பெண்களுக்கு உரிமைக் கதவைத் திறந்துவிட்டவர் அவர். 100 ஆண்டுகளுக்கு முன்பு, மகத்தான புரட்சியை தந்தை பெரியாருடன் இணைந்து நடத்திக் காட்டியவர் அவர்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப் பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்

மிழ்நாட்டின் பெண்களுக்கான கல்வியை உறுதி செய்யும் நோக்கத்தில், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை பயின்று, கல்லூரிகளில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் உயர்கல்வி திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக, பெண்களுக்கு உயர் கல்வி அளித்தல், பா-லின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், வறுமையில் தவிக்கும் மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

ஆசிரியர்கள் தினத்தன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசுகையில், "அடக்கி ஒடுக்கப்பட்ட பெண்களின் உரிமை களுக்காக குரல் கொடுத்தவர்தான் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள். படிக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடியவர். அந்தக் காலத்தில் மூடநம்பிக்கைக் காரணமாக முடக்கப்பட்ட பெண்களுக்கு உரிமைக் கதவைத் திறந்துவிட்டவர் அவர். 100 ஆண்டுகளுக்கு முன்பு, மகத்தான புரட்சியை தந்தை பெரியாருடன் இணைந்து நடத்திக் காட்டியவர் அவர்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப் பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வித் திட்டமாக மாற்றி யமைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் பெயர்தான் தற்போது, புதுமைப் பெண் திட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

tnn

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் கடந்த 1989-ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. பெண்களுக்கான கல்வி கிடைக்காமலும், குழந்தை திருமணங்களும் பரவலாக இருந்த காலகட்டம் அது. தேவதாசி முறையை எதிர்த்து போராடிய இராமாமிர்தம் அம்மையார், திராவிட இயக்கத்துடன் இணைந்து, பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தார். அதில் ஒன்று, பெண்களுக்கான கல்வி.

இதன் காரணமாகவே, அவருடைய நினைவாக, அன்றைய முதல்வராக இருந்த மு. கருணாநிதி, பெண்கள் கல்வியை மேம்படுத்தும் விதமாக அறிமுகப்படுத்திய இந்த திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. பெண்கள் எட்டாம் வகுப்பு படித்து முடித்தால், அவர்கள் திருமணத்தின்போது ரூ. 5000 திருமண நிதியுதவி தொகை வழங்கப்படும் என்பதாக திட்டத்தை அப்போது அறிவித்தார். முதல்வராக இருந்த மு.கருணாநிதி. பிறகு, 10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு திருமணத்தின்போது ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்பதாக இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

பின்னர், 2009-ஆம் ஆண்டு இந்த உதவித்தொகை ரூ. 25,000 ஆக உயர்த்தப் பட்டது. இதன்பின் அதிமுக ஆட்சியின்போது, 2011-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலி-தா பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படித்த பெண்களுக்கு உதவித் தொகையை 50,000 ஆக உயர்த்தி, தா-லிக்கு 4 கிராம் தங்கமும் இந்த திட்டம் மூலம் வழங்கினார். பள்ளிக்கல்வி முடித்த பெண்களுக்கு 25,000 ரூபாய் உதவித்தொகை தொடர்ந்தது.

அதன்பிறகு, 2016-ஆம் ஆண்டு, 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.

18 வயதை நிரம்பிய ஒரு பெண்கள் இந்தத் திட்டம் மூலம் திருமண உதவி பெற முடிந்தது. பழங்குடியினப் பெண்களுக்கு, ஐந்தாம் வகுப்பு முடித்தவர்கள் 18 வயதுக்குப் பிறகு ஊக்கத்தொகையை பெறத் தகுதியுடையவர்கள்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளி தனது திருமணத்திற்கு குறைந்தது 40 நாட்களுக்கு முன்னதாக, அழைப்பிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்த திருமண உதவித் திட்டம் பயனாளிகளை சென்றடைய வில்லை எனவும், கிட்டத்தட்ட 3 லட்சத்து 34,913 விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாகவும், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், தற்போது புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

புதுமைப் பெண் திட்டம் அடிப்படைத் தகுதிகள்:

மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து, தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவராக இருக்க வேண்டும்.

அரசு பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர், சீர்மரபினர் பள்ளிகள், மாற்றுத் திறனாளிகள் நலப் பள்ளிகள், சமூகப் பாதுகாப்பு துறை பள்ளிகள் ஆகும்.

மாணவிகள் 8 அல்லது 10 அல்லது 12-ஆம் வகுப்புகளில் படித்து, பின்னர் முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங் களில் (ஐண்ஞ்ட்ங்ழ் ஊக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய் ஒய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ள்) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

2022-2023-ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும், இதர முதலாம் ஆண்டி-லிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டி-லிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியை பொறுத்தவரையில், மூன்றாம் ஆண்டி-லிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவ கல்வியை பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலி-ருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

இளங்கலைப் படிப்புகள், உயர் தொழிற்கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்தப் படிப்புகள் என அனைத்து உயர் கல்விகளுக்கு மட்டுமல்லாமல் பட்டயப்படிப்புகள், சான்றிதழ்ப் படிப்புகள் போன்றவற்றுக்கும் இத்திட்டம் பொருந்தும்.

இந்த நிதியாண்டில் 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள மாதங்களுக்காக ரூபாய் 698 கோடி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் 6,00,000 மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் முதல் பெறப்பட்டு, விண்ணப்பங்கள் சரிப்பார்க்கப்பட்டு, சரியான பயனாளர் களை உறுதிச்செய்துள்ள அரசு, மேலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாணவியர்கள் படிப்பைத் தொடர்வதை உறுதி செய்ய உயர் கல்வித்துறைக்கு உத்தரவிட்டுக் கல்வியை உறுதி செய்கிறது.

கொரோனா பெருந்தொற்று முடிந்து, மக்கள் இயல்பு வாழ்விற்குத் திரும்ப முயலும் காலத்தில், கல்வி இடை நிற்றலைத் தடுக்கும் பொருட்டு அரசு, இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இத்தகையப் பாதிப்பைக் கணித்தும், கருத்தில் கொண்டும், அதிலும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவியர்களுக்கு மிகத் தேவையான நேரத்தில் கல்வி ஊக்கத் தொகை வழங்குகிறது தமிழ்நாடு அரசு வறுமையால் வாடும் குடும்பங்களுக்கு அரசு துணைநிற்கும் என்று மக்களுக்குச் சொல்லும் அதே வேளையில், கைமாறாக உங்கள் பெண்குழந்தைகளைப் படிக்க வையுங்கள் என்றும் வழிகாட்டுகிறார் முதலமைச்சர். பெண்கள் பொருளாதாரச் சுதந்திரத்தை அடையும் வாய்ப்புகளை ஏற்படுத்தி, பாலி-னச் சமத்துவத்தை நோக்கி மேலும் ஒருபடி முன்னே அழைத்துச் செல்கிறார் அவர். மேலும் இது பெண்களின் திருமண வயதை அதிகப்படுத்தவும் உதவும்.

gk010423
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe