டிஜிபி சைலேந்திர பாபு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் விவசாயப் படிப்பில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களைப் பெற்றவர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொது சட்டம் இளங்கலைப் படிப்பும் மக்கள்தொகைக் கல்வியில் முதுகலையும் படித்தார். அதைத் தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணங்களும் அதன் விளைவுகளும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார். தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ளார்.
முதலில் திருவனந்தபுரம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளையில் அதிகாரியாக பணியைத் தொடங்கினார். அதன்பிறகு இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல்துறை அகாடமியில் பயிற்சி பெற்றார். அதைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம், சேலம், தர்மபுரி ஆகிய ஊர்களில் காவல்துறை துணை கண்காணிப்பாளராகவும், திண்டுக்கல், செங்கல்பட்டு, சிவகங்கை, கடலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங் களில் காவல்துறை கண்காணிப்பாள ராகவும் பணியாற்றினார். பிறகு சென்னை, அடையார் துணை கமிஷனராக பணியாற்றினார். அதையடுத்து விழுப்புரம் பகுதியில் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும், சென்னை காவல்துறையில் இணை கமிஷனராகவும் பணியாற்றினார்.
அதன் பிறகு திருச்சி டி.ஐ.ஜி ஆகவும், கரூர், தமிழ்நாடு காகித ஆலையில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், சிறப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் பணியாற்றினார்.
அதன்பிறகு கோயம்புத்தூர் மாநகர கமிஷனராகப் பணியாற்றினார்.
பிறகு காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு வடக்கு மண்டல ஐ.ஜி-யாக பணியாற்றினார்.
அவரின் எழுத்தார்வத்தின் தூண்டுதலால் உடலினை உறுதி செய், நீங்களும் ஐ.பி.எஸ். அதிகாரி ஆகலாம், அமெரிக்காவில் 24 நாட்கள், உனக்குள் ஒரு தலைவன் போன்ற புத்தகங்களைத் தமிழிலும், வர்ன் ற்ர்ர் ஸ்ரீஹய் க்ஷங்ஸ்ரீர்ம்ங் ஹய் ஒடந ர்ச்ச்ண்ஸ்ரீங்ழ், டழ்ண்ய்ஸ்ரீண்ல்ப்ங்ள் ர்ச் நன்ஸ்ரீஸ்ரீங்ள்ள் ண்ய் ஒய்ற்ங்ழ்ஸ்ண்ங்ஜ், ஆ ஞ்ன்ண்க்ங் ற்ர் ட்ங்ஹப்ற்ட் ஹய்க் ட்ஹல்ல்ண்ய்ங்ள்ள், இர்ஹ்ள் ஹய்க் ஏண்ழ்ப்ள் க்ஷங் ஹம்க்ஷண்ற்ண்ர்ன்ள், ஆகிய புத்தகங்களை ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறார்.
இளைஞர்களோடு கலந்துரையாடுவதும் அவர்களை சரியான இலக்கு நோக்கிய முனைப்பு கொண்டவர்களாக உருவாக்குவதும் பிடித்த விஷயம். சுருங்கச் சொன்னால் மாணவர்கள் மனதில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்துவது தான் அவரின் மிகச்சிறந்த பண்பு. பதவி எதுவாக இருந்தாலும் போலீஸ் என்ற பொறுப்பு எப்போதும் முழுமையானதாக இருக்க வேண்டும் என்பது அவரின் கருத்து. அதிலிருந்து அவர் ஒருபோதும் மாறியதில்லை.
காவல்துறையில் பல்வேறு பதவி களையும், குடியரசுத் தலைவர் பதக்கம், உயிர்காப்பு நடவடிக்கைக்கான பிரதமரின் பதக்கம், வீரதீர செயல்களுக் கான முதல்வர் பதக்கம் உள்ளிட்டவற்றை பெற்றவர். இவர் குற்றச் செயல்களுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்க கூடியவர் என்று பெயர் பெற்ற அதிகாரி. எனவே டிஜிபியாக பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை தொடங்குவார் எனும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் அவர் பதவி ஏற்ற பின்னர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவரின் சில முக்கிய அண்மை கால நடவடிக்கைகளை இங்கு தொகுத்தளித்துள்ளோம்.
சட்டம் ஒழுங்கு சீரமைப்பு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரமைக்க காவல்துறையினர் ஓயாது உழைத்து வருகின்றனர். இருப்பினும், குற்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. இதனை தடுப்பதற்காகவே பல அதிரடி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக டிஜிபி சைலேந்திர பாபு பொறுப்பேற்றதில் இருந்து காவல் துறையினரும் பணிகளை முறையாக செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குற்ற சம்பவங்களை குறைப்பதற் காகவும், தடுப்பதற்காகவும், புதிய திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதிலும், வெளி மாநில ஆட்களை வைத்து வீடு கட்டும் உரிமையாளர்கள், இன்ஜினியர்கள், கட்டட கான்ட்ராக்டர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள், இறால் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் குல்பி, ஐஸ் விற்று தொழில் செய்து வருபவர்கள், உள்ளூர்வாசிகள் மூலமாக வேலை பார்க்கும் வெளி மாநில நபர்கள் உட்பட அனைவரின் விவரங் களையும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அல்லது நகராட்சி அலுவலகங் களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இணையதள விளையாட்டு
பப்ஜி, பிரீ ஃபயர் உள்ளிட்ட இணையதள விளையாட்டில் மூழ்கி கிடக்கும் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு. இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட உண்மையான விளையாட்டுகளை சேர்ந்து விளையாடுவோம் என அழைப்பு விடுத்துள்ளார். நாள் முழுவதும் இணையதள விளையாட்டுகளில் கவனத்தை செலுத்தும் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி யாகி விடும் எனவும் எச்சரிக்கை விடுத் துள்ளார்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை
தமிழகத்தில் இனி வரும் நாட்களில் முக்கிய பண்டிகைகள், விழாக்கள், அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர் களின் பிறந்தநாள் போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற முக்கிய நிகழ்வுகளில் அரசியல், சாதி மற்றும் மதத் தலைவர்கள் பங்கேற்கும்போது இரு தரப்பினரிடையே மோதல் சம்பவங்கள் ஏற்படவும், சட்டம் ஒழுங்குபிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ள தால், அவசரகால பணிகளுக்காக ஆயுதப்படையினர் மற்றும் காவல் ஆளிநர்களை தயார் நிலையில் வைக்க பல்வேறு அறிவுறுத்தல்களுடன் அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ஆயுதப்படையினர் மற்றும் இளம் காவல் ஆளிநர்களுக்கு வாரம் இரண்டு அல்லது மூன்று முறை கவாத்து பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அதனை ஆயுதப்படையில் உள்ள உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும், ஆயுதப்படையில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு கலவரச் சம்பவங்களின்போது படையை வழிநடத்த அவ்வப்போது பயிற்சி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆயுதப்படையில் உள்ள கேடயம், லத்தி, ரப்பர் தோட்டாக்கள், பிளாஸ்டிக் தோட்டாக்கள், பம்ப் ஆக்ஷன் கன், கேஸ் கன், கேஸ் செல் மற்றும் இதர ஆயுதங்கள் போதுமான அளவில் உள்ளதா எனவும், சரியாக வேலை செய்கிறதா எனவும் அவ்வப் போது தணிக்கை செய்வதுடன், அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை ஆயுதப்படையினருக்கு கவாத்து பயிற்சியின்போதே உரிய பயிற்சி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கலவரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தும் வஜ்ரா, வருண் மற்றும் இதர வாகனங்களை முறையாக பராமரித்து தயார் நிலையில் வைக்க அறிவுறுத்த வேண்டும் எனவும், ஒலிப்பெருக்கிகள் மூலம் போராட்டக் காரர்களை கலைப்பதற்கும், போராட்டம் நடக்கும்போது அதனை ஒளிப்பதிவு செய்யவும் ஆளிநர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவலர்களுக்கு முக்கிய அறிவிப்பு
காவல்துறையினர் அரசு பேருந்துகளில், கைதிகளை அழைத்துச் செல்லுதல் அல்லது வாரண்ட் தொடர்பான பணிகள் உள்பட துறை சார்ந்த பணிகள் தவிர்த்து மற்ற சொந்த தேவைக்காக பயணம் செய்யும் போது கண்டிப்பாக டிக்கெட் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் விதிமுறைகளை பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
விசாரணை கைதிகள் மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக இனிமேல் இரவு நேரங்களில் விசாரணை நடத்தக்கூடாது என்றும் குற்றவாளிகளை கைது செய்யும் போது அவர்களை மாலை நேரத்திற்குள் சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு "தமிழ்நாடு காவல்துறை தலைவராக பணியாற்றுவது ஓர் அரிய சந்தர்ப்பம். காவல்துறையினர் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வ தற்கும் மனித உரிமைகளை மதித்து நடத்தப்பதற்கான பயிற்சியும் அளிக்கப்படும்” என்றார். காவலர்களின் குறைகளையும் கேட்டு அதை தீர்க்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தமிழக முதல்வர் தனிப்பிரிவில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
காவல்துறையில் ஆர்டர்லி முறை ஒழிப்பு
தமிழகத்தில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாகப் பணியாற்றும் போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும், ஆர்டர்லி தொடர்பாக ஏதாவது புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நன்னடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி இவ்வழக்கு அண்மையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகவும், அதன்படி, 19 ஆர்டர்லிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளனர் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காவல்துறை அதிகாரி களின் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் பேரில், மாவட்ட எஸ்பி அளவில் இருந்து ஏடிஜிபி டிஜிபி வரையிலான அனைத்து காவல்துறை அதிகாரி களின் வீடுகளில் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் பணியாற்றக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, இந்த உத்தரவை சரியாக கடைபிடிக்காத வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்டர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. ஆர்டர்லி முறை ஒழிப்பில் அனைத்து அதிகாரிகள் சார்பில் டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளார் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- எஸ். செல்வராஜ்