தமிழக பட்ஜெட் 2020-21

/idhalgal/general-knowledge/tamil-nadu-budget-2020-21

  • சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். அதன் விவரங்கள் வருமாறு:
  • தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் பலனாக 2014-15-ஆம் ஆண்டில் 918 ஆக இருந்த பாலினப் பிறப்பு விகிதம், 2019-ஆம் ஆண்டில் 936 ஆக உயர்ந்துள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்கு 140.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களினால், 2019-20-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 4,795 நபர்கள் பயனடைந்துள்ளனர். 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களுக்காக, 726.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இதுவரை 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம், 2020-21-ஆம் ஆண்டிலும் 253.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிப்பதற்கு, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய நிறுவனம், பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்கும். சென்னையில் 8 இடங்களிலும், கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர், காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், மொத்தம் 13 இடங்களில் இத்தகைய விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்தில் பாலின சமத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அட்டவணையின் படி, 2020-21-ஆம் ஆண்டில் மகளிர் நலத் திட்டங்களுக்காக மொத்தம் 78 ஆயிரத்து 796.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 43 ஆயிரத்து 243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்படும் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், நாள்தோறும் 48.57 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென, 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 1,863.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாடு அற்ற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்வதற்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளின் ஆரம்ப கால கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,535.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கடினமான சுற்றுச்சூழலில் பரிதவிக்கும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, அரசின் அடிப்படைக் கடமையாகும். ஆதரவற்றோர் இல்லங் களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தித் தர இந்த அரசு முயற்சி செய்யும். தற்போது புதிதாக வகுக்கப்பட்டு வரும், தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும். 2020-21 -ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூகப் பாதுகாப்பு இயக்ககத்திற்கு 175.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நோபல் பரிசு பெற்ற முனைவர் எஸ்தர் டஃப்லோவின் தலைமையிலான ஒரு குழுவைக் கொண்டு, முதியோர் பிரச்சினைகள் தொடர்பான நீண்ட கால ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், முதியோர் நலனுக்கான பல முன் முயற்சிகளை இந்த அரசு தொடங்கும். இதன் முன்னோட்டத் திட்டமாக, 37 மாவட்டங்களிலும் உள்ள தலா 2 வட்டாரங்களில், 37 லட்சம் ரூபாய் மொத்தச் செலவில் முதியோர் ஆதரவு மையங்களை இந்த அரசு தொடங்கும். 2020-21 -ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூக நலன் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்காக 5,935.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நாட்டிலேயே சுகாதாரத் துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
  • அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கை களின் விளைவாக, 2010-ஆம் ஆண்டில் ஆயிரம் குழந்தைகளுக்கு 24 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம், 2017-ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு 16 ஆகக் குறைந்துள்ளது. மாநில அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2010-2012-ஆம் ஆண்டு காலத்தில் ஒரு லட்சம் உயிர் பிறப்புகளுக்கு 90 ஆக இருந்த தாய்மார்கள் இறப்பு விகிதம், 2015-2017-ஆம் ஆண்டு காலத்தில் 63 ஆகக் குறைந்து, 2019-ஆம் ஆண்டில் இது மேலும் 57 ஆகக் குறைந்துள்ளது. நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்கு 2030-இன் படி, ஒரு லட்சம் உயிர் பிறப்புகளுக்கு தாய்மார்களின் இறப்பு விகிதம் 70 என்ற இலக்கு பல ஆண்டுகளுக

  • சட்டசபையில் தமிழக அரசின் பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார். அதன் விவரங்கள் வருமாறு:
  • தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் ஆகியவற்றின் பலனாக 2014-15-ஆம் ஆண்டில் 918 ஆக இருந்த பாலினப் பிறப்பு விகிதம், 2019-ஆம் ஆண்டில் 936 ஆக உயர்ந்துள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டங்களுக்கு 140.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
  • பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களினால், 2019-20-ஆம் ஆண்டில் 1 லட்சத்து 4,795 நபர்கள் பயனடைந்துள்ளனர். 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பல்வேறு திருமண நிதியுதவித் திட்டங்களுக்காக, 726.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இதுவரை 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம், 2020-21-ஆம் ஆண்டிலும் 253.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
  • பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிப்பதற்கு, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய நிறுவனம், பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்கும். சென்னையில் 8 இடங்களிலும், கிருஷ்ணகிரி, திருச்சி, ஓசூர், காஞ்சிபுரம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும், மொத்தம் 13 இடங்களில் இத்தகைய விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்தில் பாலின சமத்துவத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அட்டவணையின் படி, 2020-21-ஆம் ஆண்டில் மகளிர் நலத் திட்டங்களுக்காக மொத்தம் 78 ஆயிரத்து 796.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 43 ஆயிரத்து 243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்படும் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ், நாள்தோறும் 48.57 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கென, 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில், 1,863.32 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் மழலையர் பள்ளிக் குழந்தைகளின் ஊட்டச்சத்தினை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்து குறைபாடு அற்ற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை உறுதி செய்வதற்கும், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், குழந்தைகளின் ஆரம்ப கால கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 2,535.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கடினமான சுற்றுச்சூழலில் பரிதவிக்கும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது, அரசின் அடிப்படைக் கடமையாகும். ஆதரவற்றோர் இல்லங் களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தி, அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தித் தர இந்த அரசு முயற்சி செய்யும். தற்போது புதிதாக வகுக்கப்பட்டு வரும், தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும். 2020-21 -ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூகப் பாதுகாப்பு இயக்ககத்திற்கு 175.35 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நோபல் பரிசு பெற்ற முனைவர் எஸ்தர் டஃப்லோவின் தலைமையிலான ஒரு குழுவைக் கொண்டு, முதியோர் பிரச்சினைகள் தொடர்பான நீண்ட கால ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், முதியோர் நலனுக்கான பல முன் முயற்சிகளை இந்த அரசு தொடங்கும். இதன் முன்னோட்டத் திட்டமாக, 37 மாவட்டங்களிலும் உள்ள தலா 2 வட்டாரங்களில், 37 லட்சம் ரூபாய் மொத்தச் செலவில் முதியோர் ஆதரவு மையங்களை இந்த அரசு தொடங்கும். 2020-21 -ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், சமூக நலன் மற்றும் மதிய உணவுத் திட்டத்திற்காக 5,935.13 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நாட்டிலேயே சுகாதாரத் துறையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது.
  • அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கை களின் விளைவாக, 2010-ஆம் ஆண்டில் ஆயிரம் குழந்தைகளுக்கு 24 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம், 2017-ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவுக்கு 16 ஆகக் குறைந்துள்ளது. மாநில அரசின் புள்ளிவிவரங்களின்படி, 2010-2012-ஆம் ஆண்டு காலத்தில் ஒரு லட்சம் உயிர் பிறப்புகளுக்கு 90 ஆக இருந்த தாய்மார்கள் இறப்பு விகிதம், 2015-2017-ஆம் ஆண்டு காலத்தில் 63 ஆகக் குறைந்து, 2019-ஆம் ஆண்டில் இது மேலும் 57 ஆகக் குறைந்துள்ளது. நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்கு 2030-இன் படி, ஒரு லட்சம் உயிர் பிறப்புகளுக்கு தாய்மார்களின் இறப்பு விகிதம் 70 என்ற இலக்கு பல ஆண்டுகளுக்கு முன்கூட்டியே எய்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், தகுதி வாய்ந்த கர்ப்பிணித் தாய்மார் களுக்கு இரண்டு பேறுகாலம் வரை 18 ஆயிரம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப் படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவாக தமிழ்நாட்டில் மட்டுமே 99.9 சதவீதம் பிரசவங்கள் மருத்துவமனை யில் நடைபெறுவது, இத்திட்டத்தின் வெற்றியைச் சுட்டிக் காட்டுகிறது. இதில், 65 சதவீத பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. இதுவரை, இத்திட்டத்தின் கீழ் 60.64 லட்சம் ஏழை கர்ப்பிணித் தாய்மார்கள் 6,033.81 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றுள்ளனர்.
  • மத்திய அரசின் மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டமான பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம், மாநில அரசின் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
  • 2019-20-ஆம்ஆண்டில் மத்திய அரசிட மிருந்து 23.10 கோடி ரூபாய் பெறப் பட்டுள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தினைச் செயல்படுத்த 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் 959.21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசின் பொது சுகாதார முறையின் மூலமாக, தொடக்க மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ சேவைகளைத் தரமாக வழங்குவதில் தமிழ்நாடு பெருமிதம் கொள்கிறது. மாநிலத்தில் உள்ள ஆரம்பம் மற்றும் இரண்டாம் நிலை சுகாதார நிலையங் களுக்கான வசதிகளை இந்த அரசு தொடர்ந்து வலுப்படுத்தும்.
  • அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக தொற்றா நோய்களின் மேலாண்மையை வலுப்படுத்தவும், ஏற்றத்தாழ்வின்றி, சமமான தாய்-சேய் சுகாதார சேவைகளை வழங்கவும், 2,857 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக, 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 260.14 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • வேகமாகப் பரவி 25 நாடுகளைப் பாதித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஒரு சர்வதேச பொது சுகாதார நெருக்கடி நிலை என்று உலக சுகாதார மைய அமைப்பு அறிவித்துள்ளது. தேசிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு பின்பற்றி, நோய்க் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், முகமூடி மற்றும் மூன்று அடுக்கு முகமூடிகளை அரசு கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துள்ளது. முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியுதவிகள் வழங்கப்படும்.
  • தரமான உயர்நிலை மருத்துவ சிகிச்சை களை அனைத்துப் பிரிவு மக்களும் சமமாகப் பெறவேண்டும் என்பதற்காக, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை இந்த அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், 1.59 கோடி குடும்பங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், திட்டம் தொடங்கப்பட்ட 2012-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை, 41.12 லட்சம் பயனாளிகள் 6,601.59 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகள் 2,453.22 கோடி ரூபாய் பெற்று, அதைக்கொண்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
  • முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், மத்திய அரசின் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் ஒருங்கிணைக்கப் பட்டு, காப்பீட்டுத்தொகை ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக 1,033.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தரமான தமிழ்நாட்டு மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும், சுகாதாரத் துறையில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதற்கான முக்கியக் காரணம் ஆவர். மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் கனவாகும். முதல்வரின் தளராத முயற்சிகளின் விளைவாக, முன்பு எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப் பட்டினம், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகளை 3,575 கோடி ரூபாய் மொத்த மதிப்பீட்டில் ஒரே ஆண்டில் நிறுவிட மத்திய அரசிடம் மாநில அரசு அனுமதி பெற்றுள்ளது. 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், இந்த 11 மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்றுக்கொண்டு, அது, கடலூர் மாவட்டத்திற்கான அரசு மருத்துவக் கல்லூரியாக அமைக்கப்படும்.
  • ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன், மொத்தம் 1,634 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், நகர்ப்புறங் களில் உள்ள 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 10 மாவட்ட மற்றும் மாவட்ட துணை மருத்துவமனைகளுக்கு கட்டிடங்கள் மற்றும் மருத்துவக் கருவிகள் வழங்கப்படும். இதற்கென 2020-21-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் 510.15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு 15 ஆயிரத்து 863.37 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சிறந்த நீதி நிர்வாகத்திற்கு தமிழக அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. 2011-ம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட 494 புதிய நீதிமன்றங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் குற்றங்களை பிரத்யேகமாக விசாரிப்பதற்கென 16 சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1,317.04 கோடி ரூபாய் செலவில் நீதிமன்ற கட்டிடங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் உட்பட பிற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • uu
  • 2020-201 பட்ஜெட்டில் புதிய கட்டிடங் களின் கட்டுமானத்திற்காக 12.92 கோடி ரூபாய் உள்பட நீதி நிர்வாகத்திற்கென 1,403.17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ஐ மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார். இதில் பட்டியலிடப் பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. ஏற்கெனவே திட்டப் பட்டியலை தயார் செய்து வைத்திருந்த தால், சமீபத்தில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு பட்டியலில் தமிழகத்திற்கு பயனளிக்கும் பல திட்டங்களை அதில் சேர்ப்பதற்கு உடனடியாக தெரிவிக்க முடிந்தது.
  • அதன்படி தமிழ்நாட்டின் 8.53 லட்சம் கோடி ரூபாய் மொத்த செலவிலான, 173 திட்டங்கள், மத்திய அரசின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசு இத்திட்டங்கள் முழுமை பெறுவதற்கு உதவியளிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
  • தமிழக பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 11,894.48 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் 77.94 கோடி ரூபாய் செலவில் 53.36 ஏக்கர் பரப்பளவில் மெகா உணவுப் பூங்கா அமைக்கப்படும். 2020-21-ஆம் கல்வியாண்டில், பிரதான் மந்திரி கிஷான் சம்பதா யோஜனா திட்டத்தின் கீழ் 218 கோடி ரூபாய் செலவில் தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், கடலூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங் களில் வேளாண் பதப்படுத்தும் மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன.
  • தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், கரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.70 கோடி ஆகும்.
  • தமிழக அரசு பட்ஜெட்டில் மகளிருக்கான திட்டங்களுக்காக ரூ.1,662 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் மகளிருக்கான அம்மா மானிய விலை இருசக்கர வாகனத்திட்டம் குறித்து அறிவித்தார்.
  • பின்னர் அது நடைமுறைக்கு வந்தது.
  • அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் 1.88 லட்சம் பணிபுரியும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • இந்த ஆண்டு பட்ஜெட்டில் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு ரூ.253.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டத்திற்கு ரூ.959 கோடி என மொத்தம் மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்காக ரூ.1662 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர தாலிக்குத் தங்கம் திட்டத்துக்கான ஒதுக்கீடு சமூக நலத்துறையின் கீழ் வரும்.
  • பணிபுரியும் மகளிர் விடுதிகளை நிர்வகிக்க தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் என்ற சிறப்பு நோக்க முகமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 8 இடங்களில் பணிபுரியும் மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
  • அம்மா உணவகத்தை மேலும் விரிவாக்க பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அம்மா உணவகத்துக்காக ரூ.100 கோடி ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அம்மா உணவகத் திட்டத்திற்காக ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத் தவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மீது இதற்கான நிதிச்சுமை விழாமல் செயல்படுத்துவதற்காகவும் இலாப நோக்கமற்ற ஒரு சிறப்பு நோக்கு முகமையை உருவாக்க அரசு முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அம்மா உணவகத் திட்டத்தைச் திறம்பட செயல்படுத்துவதற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்பு மற்றும் நன்கொடை பங்களிப்புகளை இந்த சிறப்பு நோக்கு முகமை சேகரிக்கும் பணியைச் செய்யும், அம்மா உணவகத்துக்காக ரூ.100 கோடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதுதவிர அம்மா உணவகங்களுக்கு தொடர்ந்து மானிய விலையில் உணவுப் பொருட்களை அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங் களுக்கே அம்மா உணவகத்தைக் கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமையை கொண்டாடி உலகறியச் செய்ய தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக, ஹார்வர்டு பல்கலைக்கழகம், ஹுஸ்டன் பல்கலைக்கழகம், வாரணாசி இந்து பல்கலைக்கழகம் மற்றும் கவுஹாத்தி பல்கலைக்கழகம் உட்பட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழி கற்பித்தலைக் கொண்டு வர சீரிய முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
  • 2019-ஆம் ஆண்டில் சிகாகோ நகரில் நடைபெற்ற 18-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, பாரிஸ் நகரில் நடைபெற்ற 4-வது ஐரோப்பிய தமிழாராய்ச்சி மாநாடு, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடு ஆகியவற்றுக்கு தமிழக அரசு நிதியுதவி அளித்துள்ளது.
  • ஒரு கோடி ரூபாய் மானியத்தில் தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் பெயரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒப்பிலக்கண ஆய்வு இருக்கையை தமிழக அரசு நிறுவ உள்ளது.
  • 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்ட மதிப்பீடுகளில், தமிழ் வளர்ச்சித் துறைக்காக 74.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பாசன ஏரிகளைப் புனரமைப்பதற்காக 510.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-2021-ஆம் ஆண்டில் 1,364 நீர்ப்பாசனப் பணிகள் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்படும். 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் குடிமராமத்து திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 5,000 ஊராட்சி ஒன்றியங்களில் பராமரிப்பில் உள்ள சிறிய பாசன ஏரிகள், கிராம ஊராட்சிகளின் பராமரிப்பில் உள்ள 25 ஆயிரம் குளங்கள் மற்றும் ஊரணிகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக, சிறப்பு ஒதுக்கீடாக 500 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், 750 கோடி ரூபாய் நிதியும் இணைக்கப்பட்டுள்ளது.
  • காவிரிப் படுகையில் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை விரிவாக்கல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லணை கால்வாய் அமைப்பின் பணிகள், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 2,298 கோடி ரூபாய் மதிப்பீட்டுடன் மேற்கொள்ளப் படும். 2020-2021 பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கென 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன் 1,560 கோடி ரூபாய் செலவில் பருவகால மாற்ற தழுவல் திட்டத்தைச் செயல்படுத்தும் பணி காவிரி பாசனப் பகுதியில் முழுவீச்சில் முன்னேற்றமடைந்து வருகிறது. இத்திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 105.29 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 1,995 கோடி ரூபாய் திட்டச் செலவில் என்.ஆர். உப வடிநிலத்தில் ஏனைய பகுதிகளை இத்திட்டத்தில் இரண்டாம் கட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கோரிக்கைகளையும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு செய்து வருகிறது.
  • கட்டளை உயர்மட்ட கால்வாய் பணிக்காக 335.50 கோடி ரூபாயும் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நொய்யல் துணைப்படுகை திட்டம், 184 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ராஜகால்வாய் திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
  • வெள்ள உபரிநீரினை மேட்டூர் அணையில் இருந்து சேலம் மாவட்டத் தின் வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான சாரபங்கா நீரேற்று பாசனத் திட்டம் 565 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • 493.25 கோடி ரூபாய் செலவில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களுக்கு இடையே கதவணை மற்றும் 387.60 கோடி செலவில் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
  • நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கான 11 ஆயிரத்து 250 கோடி மதிப்பீட்டிலான முதல்நிலை திட்ட அறிக்கை இந்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாடு திட்டத்தின் முதல்கட்ட திருத்தச் செலவினம் 703.49 கோடி ரூபாயுடன், 89 அணைகளும் 2 பாசனப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • அணைகளுக்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டம் ஜூன், 2020 வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 610.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 அணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் 2 கட்டங்களுக்கும் சேர்த்து 2020-2021 பட்ஜெட்டில் 220.12 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் 2,962 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. 18 உப வடிநில பகுதிகளில், 1,325 குளங்கள் மற்றும் 107 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 45 செயற்கை செறிவூட்டல் கிணறுகளை நிறுவுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 குளங்கள் மற்றும் 2 முதன்மை பாசன கால்வாய்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் முதல்கட்ட மாக 787.19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு பணிகள் ஜூலை 2030-இல் நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்டத்தில் 16 உப வடிநில பகுதிகளில் 906 குளங்கள், மற்றும் 183 அணைக்கட்டுகளை புனரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் கட்டுமான பணிகள் 649.55 கோடி செலவில் 2020-2021-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். இதற்காக இந்த பட்ஜெட்டில் 583.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • அத்திக்கடவு - அவிநாசி நீர்ப்பாசன திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு பெற்றுள்ளது. இந்த திட்டத்திற்காக 2020-2021 பட்ஜெட்டில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம், 7,267 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கெனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் முதல்கட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்படுதல் மற்றும் முதல் நிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக 2020-2021 பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரம்:
  • பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக பட்சமாக ரூ.34,181 கோடி ஒதுக்கீடு.
  • உயர் கல்வித்துறைக்கு ரூ. 5,052 கோடி ஒதுக்கீடு.
  • சுகாதாரத் துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு
  • தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
  • தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
  • ஜவுளித் துறைக்கு ரூ.1224 கோடி ஒதுக்கீடு.
  • தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.
  • ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.6,754 கோடி ஒதுக்கீடு.
  • நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக ரூ.18,540 கோடி ஒதுக்கீடு.
  • மீன்வளத்துறைக்கு ரூ.1,229 கோடி ஒதுக்கீடு.
  • உணவுத்துறைக்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.
  • போக்குவரத்துத் துறைக்கு ரூ.2716.26 கோடி ஒதுக்கீடு.
  • கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.15850 கோடி ஒதுக்கீடு.
  • தமிழக காவல்துறைக்கு ரூ.8,876.57 கோடி ஒதுக்கீடு.
  • பிற்படுத்தப்படோர் நலத்துறைக்கு ரூ.1064 கோடி ஒதுக்கீடு.
  • இந்து சமய அறநிலைய துறைக்கு ரூ.281 கோடி ஒதுக்கீடு.
  • இதுதவிர முக்கியத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள்:
  • நீர் பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,306 கோடி ஒதுக்கீடு.
  • நீதி நிர்வாகத்திற்கு ரூ.1,403 கோடி ஒதுக்கீடு.
  • பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி ஒதுக்கீடு.
  • அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு ரூ.500 கோடி நிதிஒதுக்கீடு.
  • ஊரக உள்ளாட்சி அமைப்புக்கு ரூ. 5654.25 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 5306.95 கோடி ஒதுக்கீடு.
  • மதிய உணவு திட்டத்திற்கு ரூ.5935 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிடர் முன்னேற்றதிற்கு ரூ.4109 கோடி ஒதுக்கீடு.
  • ஆதி திராவிடர் மாணவர் கல்விக்கு ரூ.2018 கோடி ஒதுக்கீடு.
  • 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டத்திற்கு ரூ.966.46 கோடி ஒதுக்கீடு.
  • மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால உதவி, சேமிப்பு திட்ட சிறப்பு உதவித்தொகைக்காக ரூ.298.12 கோடி சென்னையில் வெள்ளப் பாதிப்பை குறைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • பக்கிங்காம் கால்வாய் கூவம் அடையாறு வடிகால்களை மறு சீரமைக்க ரூ.5439.76 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை கன்னியாகுமரி தொழில் வழித்தடத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் ரூ.6448 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை- பெங்களூர் தொழில்வடத் திட்டத்தின் கீழ் பொன்னேரியில் 21,966 ஏக்கரில் தொழில் முனைய மேம்பாட்டு திட்டம் அல் கெப்லா குழுமத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு வளாகம் ரூ.49,000 கோடியில் அமைக்கப்படும.

gk010320
இதையும் படியுங்கள்
Subscribe