இலங்கையின் அரிசி உற்பத்தியானது 2021-22-ஆம் ஆண்டில் 2.92 மில்லி-யன் மெட்ரிக் டன்கள் என கணிசமான அளவு குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3.39 மெட்ரிக் டன்களாக இருந்தது. இலங்கையின், உள்நாட்டு உற்பத்தி குறைந்ததன் விளைவாக இலங்கையின் இறக்குமதியை 0.65 மில்லி-யன் டன் என அமெரிக்க விவசாயத் துறை மதிப்பிட்டுள்ளது.
இருப்பினும், இதில் முக்கிய விஷயம் என்னவென்றால், 2021-22-ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட உற்பத்தி 2016-17 மற்றும் 2017-18-ஆம் ஆண்டின் 2-2.5 மெட்ரிக் டன்கள் என்ற அளவுகளை விட அதிகமாக உள்ளது. 2016-17-ஆம் ஆண்டில் இலங்கையின் அரிசி இறக்குமதி 0.75 மெட்ரிக் டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்டதை விட அதிகம்.
சமீபத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவின் விளைவுகள் – இயற்கை விவசாயத்திற்கு ஒரே இரவில் முழுவதுமாக மாறுதல் மற்றும் ரசாயன விவசாய இடுபொருட்களை இறக்குமதி செய்ய தடை செய்தல் – இவை அனைத்தும் தீவிரமான விஷயங்கள் இல்லையா? அல்லது குறைந்தபட்சம் 2016-17 மற்றும் 2017-18 இயற்கைப் பேரழிவுகள், நெற்பயிர் பயிரிடப்படும் பரப்பு பெரிய அளவில் சுருங்குவதற்கு வழிவகுத்ததா? என்று கேள்விகள் எழுந்துள்ளன.
இலங்கையில் மிகப்பெரிய அளவில் பயிரிடப்படுகிற அரிசியில் மட்டுமல்ல, இலங்கையின் நம்பர் 1 விவசாய ஏற்றுமதிப் பொருளைப் பொறுத்தமட்டில் இதே போன்ற ஒரு முடிவு எடுக்கப்படலாம்: 2021-இல் இலங்கையின் தேயிலை உற்பத்தி (299.34 மில்லியன் கிலோ) உண்மையில், 2020-ஐ விட (278.49 மில்லியன் கிலோ) அதிகமாக இருந்தது. ஏற்றுமதியும் 7.7% வளர்ந்தது. மதிப்பு அடிப்படையில் கூட, 2021-இல் அந்நாட்டின் தேயிலை ஏற்றுமதி, 1,324.37 மில்லியன் டாலராக இருந்தது. இது முந்தைய ஆண்டின் 1,240.9 மில்லியன் டாலர் என்பதைவிட அதிகம்.
ஒரு வகையில், ராஜபக்சே அரசாங்க நிர்வாகத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்பட்ட இயற்கை வேளாண்மை கொள்கை மட்டுமே விவசாயப் பேரழிவை உருவாக்கவில்லை என்று தெரிகிறது. இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி விவசாயத் துறையைவிட அது பேரியல் பொருளாதாரத்துடன் தொடர்புடையது.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மே 6, 2021 அரசாணையால் கட்டவிழ்த்துவிடப் பட்ட மனிதனால் உருவாக்கப்பட்ட விவசாயப் பேரழிவு என்பதும் உண்மை ஆகும்.

ஜூன் 30, 2019-இல் அந்நாட்டின் வெளிநாட்டு நிதி கையிருப்பு (சர்வதேச நாணய நிதியத்தில் வைத்திருக்கும் தங்கம் மற்றும் பணம் உட்பட) அதிகபட்சமாக 8,864.98 மில்லியன் டாலரைத் தொட்டது. பிப்ரவரி 28, 2020-இல் கூட – கோவிட்-19 பரவலுக்கு முன்பு – வெளிநாடு நிதி கையிருப்பு 7,941.52 மில்லியன் டாலராக இருந்தது.
இலங்கையின் சுற்றுலா வருவாய் (2019-இல் ரூ.3,606.9 மில்லியன் டாலரில் இருந்து 2021-இல் 506.9 மில்லியன் டாலராக குறைந்தது). தொழிலாளர்களின் பணம் (6,717.2 மில்லியன் டாலரில் இருந்து முதல் 5,491.5 மில்லியன் டாலரை வரை) வீழ்ச்சியடைந்ததால்,வெளிநாட்டு நிதி இருப்புக்களும் குறையத் தொடங்கின. அவை 2021 மார்ச் இறுதியில் 4,055.16 மில்லியன் டாலராகவும், செப்டம்பர் இறுதியில் 2,704.19 மில்லியன் டாலராகவும், 2021 நவம்பர் இறுதியில் 1,588.37 மில்லியன் டாலராகவும் வீழ்ச்சியடைந்தன.
இலங்கையின் தேயிலை ஏற்றுமதியையும், உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு இரசாயனங்களை விட அதிக விலை கொடுத்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையையும் இந்த மோசமான பொருளாதார கொள்கைதான் பாதித்துள்ளது .
இலங்கையில் இரசாயன உரத்திற்கு தடை விதித்ததன் மூலம் தாம் தவறிழைத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இந்தத் தடை இலங்கையின் உணவுப் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.
பொருளாதார நெருக்கடி தொடர்பாக கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதியன்று கருத்துத் தெரிவித்த இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, "மே மாதத்துடன் இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெறும் உதவிகள் நிறைவுக்கு வரும். அதன் பின்னர் என்ன செய்யப் போகின்றனர்?
இலங்கையில் மிகப்பெரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத அளவில் மக்களுக்கு வாழ முடியாத சூழல் ஏற்படும்" என்று தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்து இலங்கையின் விவசாயத் துறை எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களை சுட்டிக்காட்டு வதாக இருந்தது. உரத் தட்டுப்பாடு, விளைந்த பொருட்களை விற்பதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றால் இலங்கையின் விவசாயிகள் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்னைகள் அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அறிகுறிகள்.
இலங்கையின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு சுமார் 7 சதவீதமாக இருக்கிறது. மக்கள் தொகையில் சுமார் 27 சதவீதம் பேர் விவசாயத் துறையைச் சார்ந்த தொழிலாளர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இனி ரசாயன உரங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை என்றும் இயற்கை உரங்களையே விவசாயிகள் பயன்படுத்த வேண்டுமென்றும் அறிவித்தது. ரசாயன உரங்களால் உடல் நலத்திற்கு தீங்கு ஏற்படுவதால் இந்த முயற்சி என வெளிப்படையாகக் கூறப்பட்டாலும், டாலர் தட்டுப்பாடும் இதற்கு ஒரு காரணம்.
இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் புதல்வரும், அமைச்சரு மான நாமல் ராஜபக்சே பதவி விலகியதைத் தொடர்ந்து, அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் ஒன்றாகப் பதவி விலகியிருக்கிறார்கள். உடனடியாக அமைச்சுகளைப் பொறுப்பேற்கவும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் தன்னுடன் இணையுமாறு ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கோரியிருக்கிறார். இவ்வாறாக இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொரு மாற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது மக்கள் எழுச்சி.
மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடங்கியதன் பிறகு முதன்முதலாக நாடாளுமன்றம் கூடியதும் அங்கே செல்லும் வழியில் மக்கள் ஒன்றுகூடத் தொடங்கினார்கள். இதனால் அச்சமுற்ற நாடாளுமன்ற உறுப்பினர் கள் இரவு வேளையில் நாடாளுமன்றத் தின் பின்வாசல் வழியாக வெளியேற நேர்ந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவின் அரசியல் வாழ்க்கை முடியப்போவதை அறிந்துகொண்ட கூட்டணிக் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்திருக் கிறார்கள்.
இவ்வளவு காலமும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசியலில் இவ்வாறான மாற்றம் ஏற்பட, லட்சக்கணக்கான பொதுமக்கள் ஒன்றாகத் திரண்ட மக்கள் எழுச்சிதான் காரணமாகும். சமீபத்தில் இலங்கையில் மாத்திரமல்லாமல் சர்வதேசம் முழுவதும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராகப் பொதுமக்கள் இரவும் பகலுமாக வெயிலிலும் மழையிலும் ஒன்றுதிரண்டிருக் கிறார்கள். சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்திகளில் இந்த மக்கள் எழுச்சியும், இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான கோஷங்களும் இடம்பெற்றிருக்கின்றன.
உண்மையில், உயிர் வாழ்வதற்காகவும் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்வ தற்காகவும் மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள்தான் அவர்களை இவ்வாறு ஒன்றுகூடவும் அரசாங்கத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழவும் செய்திருக் கின்றன. அமைச்சர்கள் பதவி விலகி யதைத் தொடர்ந்து, ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகுவார்கள் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். அந்த எதிர்பார்ப்பைப் பொய்ப்பித்து, ஜனாதிபதி அதே அமைச்சர்களை அழைத்து வேறு பிரதானமான அமைச்சுப் பொறுப்புகளை வழங்கியுள்ளமை மக்களை மேலும் கொந்தளிக்கச் செய்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களினதும் நெருங்கிய உறவினர்களினதும் நண்பர்களினதும் குடும்பங்கள் இரவோடு இரவாக வேறு நாடுகளுக்குத் தப்பித்துப் போய்விட்டதுமே, அவர்கள் அவ்வளவு காலமும் முறைகேடாகச் சேர்த்த மக்கள் சொத்துக்களையும் எடுத்துச் சென்றுள்ளார்களா என்ற கேள்வி மக்களுக்குள் எழுந்துள்ளது.
மீண்டும் அரசமைப்புத் திருத்தம்
நாடு முழுவதும் எதிர்ப்புக்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டு, பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசமைப்புத் திருத்தத்தை முன்மொழிந் துள்ளார். அரசமைப்பின் 20-வது திருத்தத்தை நீக்கிவிட்டு 19-வது திருத்தத்தின் ஷரத்துகளை மீண்டும் அரசியலமைப்பின் 21-வது திருத்தமாக கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் இந்த முன்மொழிவை செய்தார் மகிந்த ராஜபக்சே.
2015 ஏப்ரலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 19-வது திருத்தச் சட்டம் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவினால் அவசரமாக நிறைவேற்றப்பட்டது.
பிரதமரை தனது விருப்பப்படி பதவி நீக்கம் செய்யும் அதிபரின் அதிகாரத்தை அது நீக்கியது.
இலங்கை அரசமைப்பின் 46 (2) மற்றும் 48-வது ஷரத்துகளை திருத்துவதன் மூலம், பிரதமர் மரணம், ராஜினாமா அல்லது வேறுவிதமாக பதவியில் இருப்பதை நிறுத்தினால் அல்லது அரசாங்க கொள்கை அறிக்கையை நாடாளுமன்றம் நிராகரித்தால் மட்டுமே அமைச்சரவையை கலைக்க முடியும்.
பிரதமரின் ஆலோசனையை கேட்டு அமைச்சரவையை கலைக்கும் அதிகாரத்தை அதிபர் கொண்டிருப் பதால் அதிபரின் அதிகாரத்தையும் அந்த திருத்தம் கட்டுப்படுத்தியது.
எனினும், இது அப்போதைய பிரதமர் விக்ரமசிங்கேவால் தனது சுயநல தேவைகளுக்காகவும், உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டதாகவும் கடும் விமர்சனமும் எழுந்தது.
பொதுவாக ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும்போது அது இரண்டு கட்ட பரிசீலனைக்கு உட்படுத்தப் பட்டு ஆலோசனை செய்த பிறகே அமல்படுத்தப்படும். ஆனால், விக்ரமசிங்கே பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே விவாதித்துவிட்டு அதை அமல்படுத்தினார். அப்போது, தமிழக உறுப்பினர்கள் மொழிபெயர்க்கு மாறு கோரினர்.
அப்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு சில முக்கிய அதிகாரங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதிலும் அது இந்திய குடியரசுத் தலைவருக்கு இருக்கும் அதிகாரத்தை போன்றதாகவே இருந்தது.
அக்டோபர் 2020-இல் நிறைவேற்றப் பட்ட அரசியலமைப்பின் 20-வது திருத்தமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது. 19-வது திருத்தத்திற்கு (19ஆ) மாற்றியமைக்கப்பட்ட 20-வது திருத்தம் (20ஆ), மீண்டும் அதிபருக்கு பல அதிகாரங்களை வழங்க வகை செய்தது.
இரட்டைக் குடிமக்களுக்கு தேர்தல் உரிமை வழங்கும் சர்ச்சைக்குரிய ஷரத்து நிறைவேற்றப்பட்டது.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை யுடன் நிறைவேற்றப்பட்டது. 20ஆ மீதான விமர்சனங்கள் மிகவும் கடுமையாக இருந்தன. ஏனெனில் இது ஒரு தனிநபரின் கைகளில் அதிகபட்ச அதிகாரங்களை குவிப்பதன் மூலம் சட்டமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான சமநிலையை சீர்குலைக்கும் ஒன்றாகக் காணப் பட்டது.
பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் பல பழமைவாத மற்றும் தீவிர பௌத்த குழுக்களும் 20ஆ-ஐ எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங் களைக் கொண்டிருந்தன. இதில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் களை நாடாளுமன்ற உறுப்பினர் களாக்க அனுமதிக்கும் ஷரத்து உட்பட சர்ச்சைக்குரிய ஷரத்துகள் இருந்தன.
21-வது அரசமைப்பு திருத்தம் மூலம் அதிபரிடம் இருக்க சில முக்கிய அதிகாரங்கள் நீக்கப்படும்.
முப்படைகளும் அதிபரின் கீழ் தான் செயல்படுவார்கள். நிர்வாகம், அமைச்சரவை மட்டும் பிரதமருக்கு செல்லும். இது இந்தியாவில் இருப்பது போன்ற முறை தான். கொழும்பு உள்பட நாடு முழுவதும் அதிபர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இந்த அரசமைப்பு சட்டத் திருத்தம் மூலம் அதிபரின் நிர்வாக ரீதியிலான அதிகாரங்கள் நீக்கப்படுவதால் மக்களின் கோபம் கொஞ்சம் தணியும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்சே எதிர்பார்க்கிறார்.