மத்திய விளையாட்டு அமைச்சகம் 2024-ஆம் ஆண்டுக்கான தயான் சந்த் கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கப்படும் பட்டியலையும், துரோணாச்சாரியர் விருது வழங்கப்படும் பட்டியலையும், தயான் சந்த் விருது வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலையும் வெளியிட்டது.
தயான் சந்த் கேல் ரத்னா விருது
தயான் சந்த் கேல் ரத்னா விருது இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா விருது என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். 1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள அர்ஜூனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது பாரீஸ் ஒலி-ம்பிக்கில் இரட்டை பதக்
மத்திய விளையாட்டு அமைச்சகம் 2024-ஆம் ஆண்டுக்கான தயான் சந்த் கேல் ரத்னா, அர்ஜூனா விருது வழங்கப்படும் பட்டியலையும், துரோணாச்சாரியர் விருது வழங்கப்படும் பட்டியலையும், தயான் சந்த் விருது வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் பட்டியலையும் வெளியிட்டது.
தயான் சந்த் கேல் ரத்னா விருது
தயான் சந்த் கேல் ரத்னா விருது இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா விருது என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். 1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்ற விருது இல்லாமையை நீக்கியது. இதனை அடுத்துள்ள அர்ஜூனா விருது துறை சார்ந்த விருதாக இருக்கிறது. மாற்றாக இவ்விருது அனைத்து விளையாட்டுத் துறைகளுக்கும் பொதுவான சீரிய விருதாக மிகச்சிறந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
2024-ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது பாரீஸ் ஒலி-ம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர், உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி. குகேஷ், இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகிய 4 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 தயான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றவர்கள்
1) மனு பாகர் (துப்பாக்கி சுடுதல்)
2) டி.குகேஷ் (செஸ்)
3) ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி)
4) பிரவீன் குமார் (பாரா தடகளம்)
அர்ஜூனா விருது 1961-ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனைகளை படைக்கும் வீரர் களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு மகாபாரத கதையில் உள்ள கதாபாத்திரமான அர்ஜூனனின் வெண்கலச் சிலையோடு, விருதுத் தொகை ஐந்து லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் இவ்விருதின் செயல்வீச்சு அர்ஜூனா விருது துவங்கப்பட்ட காலத்திற்கு முற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது. தவிர, விருது வழங்கப்படும் துறைகளும் விரிவாக்கப் பட்டு இந்திய பாரம்பரிய விளையாட்டு களும், உடல் ந-லிவடைந்தோருக்குமான விளையாட்டுகளும் சேர்க்கப்பட்டன.
வில்வித்தை விளையாட்டு, தடகள விளையாட்டுகள், இறக்கை பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், பில்-லியர்ட்ஸ் & ஸ்னூக்கர், குத்துச்சண்டை, கேரம், சதுரங்கம், கிரிக்கெட், ஈருருளி ஓட்டம்,
குதிரையேற்றம், கால்பந்து, கோல்ப், சீருடை பயிற்சிகள், ஹாக்கி, ஜூடோ, சடுகுடு, டென்னிஸ், படகு ஓட்டுதல், துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், மேசை பந்தாட்டம், கைப்பந்தாட்டம், பாரம் தூக்குதல், மல்யுத்தம், பாய்மர படகோட்டம் ஆகிய பிரிவுகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் (பாரா தடகளம்), நித்யா சுமதி சிவன் (பாரா பாட்மின்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா பாட்மின்டன்), அபய் சிங் (ஸ்குவாஷ்) ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
2024-ஆம் ஆண்டுக்கான அர்ஜூனா விருது 32 பேருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது.
2024 அர்ஜூனா விருது பெற்றவர்கள்
1. ஜோதி யாரார்ஜி (தடகளம்)
2. அன்னுராணி (தடகளம்)
3. நிட்டு (குத்துச்சண்டை)
4. சாவீட்டி (குத்துச்சண்டை)
5. வந்திகா அகர்வால் (செஸ்)
6. சலி-மா டெட் (ஹாக்கி)
7. அபிஷேக் (ஹாக்கி)
8. சஞ்சய் (ஹாக்கி)
9. ஹர்மன்பிரீத் சிங் (ஹாக்கி)
10. சுக்ஜித் சிங் (ஹாக்கி)
11. ராகேஷ் குமார் (பாரா வில்வித்தை )
12. ப்ரீத்தி பால் (பாரா தடகளம்)
13. ஜீவன்ஜி தீப்தி (பாரா தடகளம்)
14. அஜித் சிங் (பாரா தடகளம்)
15. சச்சின் சர்கேராவ் (பாரா தடகளம்)
16. தரம்பீர் (பாரா தடகளம்)
17. பிரணவ் சூர்மா (பாரா தடகளம்)
18. ஹகாடோ சீமா (பாரா தடகளம்)
19. சிம்ரன் (பாரா தடகளம்)
20. நவ்தீப் (பாரா தடகளம்)
21. நிதேஷ் குமார் (பாரா பாட்மின்டன் )
22. துளசிமதி முருகேசன் (பாரா பாட்மின்டன் )
23. நித்யா ஸ்ரீ சுமதி சிவம் (பாரா பாட்மின்டன்)
24. மணிஷா ராமதாஸ் (பாரா பாட்மின்டன் )
25. கபில் பார்மர் (பாரா ஜூடோ )
26. மோனா அகர்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்)
27. ரூபினா பிரான்சிஸ் (பாரா தடகளம்)
28. ஸ்வப்னில் குசாலே (துப்பாக்கி சுடுதல்)
29. சரப்ஜித் சிங் (துப்பாக்கி சுடுதல்)
30. அபய் சிங் (ஸ்குவாஷ்)
31. சஜன் பிரகாஷ் (நீச்சல்)
32. அமன் (மல்யுத்தம்)
வாழ்நாள் சாதனைக்கான அர்ஜூனா விருது
சுச்சா சிங் (தடகளம்)
முரளிகாந்த் ராஜாராம் பேட்கர் (பாரா நீச்சல்)
துரோணாச்சாரியா விருது
துரோணாச்சாரியா விருது 1985-ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றவருக்கு மகாபாரத கதையில் ஆசானாக கருதுப்படும் துரோணரின் வெண்கல் சிலையோடு இந்திய ரூபாய் மூன்று லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படுகிறது.
2024 துரோணாச்சாரியா விருது பெற்றவர்கள்
1. சுபாஷ் ராணா (பாரா துப்பாக்கி சுடுதல்)
2. திபாலி- தேஷ்பாண்டே (துப்பாக்கி சுடுதுல்)
3. சந்தீப் கங்வன் ( ஹாக்கி)
வாழ்நாள் சாதனைக்கான துரோணாச்சாரியார் விருது
முரளிதரன்(பாட்மின்டன்)
அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ(கால்பந்து)
2024 மௌலானா அபுல் கலாம் ஆசாத் விருது
சண்டிகர் பல்கலைக்கழகம், பஞ்சாப்