தெற்காசிய விளையாட்டு போட்டிகள்

/idhalgal/general-knowledge/south-asian-games
  • தெற்காசிய விளையாட்டு போட்டிகள் 1984-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு தெற்காசியா நாட்டில் நடைபெறும். இதுவரை 12 முறை போட்டி நடைபெற்றுள்ளது.
  • இவையனைத்திலும் இந்திய அணியே முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 7 முறையும், இலங்கை 3 முறையும், 2-வது இடத்தை பிடித்துள்ளன. நேபாளம் ஒருமுறை 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    sag

  • 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஆப்கானிஸ்தான் பங்கேற்றது. ஆனால் இந்த முறை அந்த அணி பங்கேற்கவில்லை.
  • இந்தியாவில் மூன்று முறை தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நடை பெற்றுள்ளன.
  • தெற்காசிய பிராந்தியத்தில் அசைக்க முடியா
  • தெற்காசிய விளையாட்டு போட்டிகள் 1984-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு தெற்காசியா நாட்டில் நடைபெறும். இதுவரை 12 முறை போட்டி நடைபெற்றுள்ளது.
  • இவையனைத்திலும் இந்திய அணியே முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 7 முறையும், இலங்கை 3 முறையும், 2-வது இடத்தை பிடித்துள்ளன. நேபாளம் ஒருமுறை 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    sag

  • 12-வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஆப்கானிஸ்தான் பங்கேற்றது. ஆனால் இந்த முறை அந்த அணி பங்கேற்கவில்லை.
  • இந்தியாவில் மூன்று முறை தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நடை பெற்றுள்ளன.
  • தெற்காசிய பிராந்தியத்தில் அசைக்க முடியாத அணியாகத் திகழும் இந்திய அணி, இதற்கு முன்னர் நடைபெற்ற 12 போட்டிகளிலும் பதக்க பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
  • கடைசியாக 2016-இல் அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 189 தங்கம் உள்பட 309 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.
  • sag

    13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி

  • 13-வது தெற்காசியா விளையாட்டுப் போட்டிகள் நேபாள நாட்டின் தலைநகர் காட்மாண்டு மற்றும் பொக்காரா, ஜனக்பூர் ஆகிய மூன்று நகரங்களில் டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெற்றது.
  • இந்த தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா, வங்காளதேசம், பூடான், மாலத்தீவு, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 7 நாடுகளை சேர்ந்த 2,715 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.
  • இந்தியாவின் சார்பில் 487 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
  • தெற்காசிய போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியினர் குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால் சிங் தலைமையில் தேசிய கொடியேந்தி தொடக்க விழா அணிவகுப்பில் கலந்து கொண்டார்கள்.
  • 26 விளையாட்டுகளில் 316 வகையான போட்டிகள் நடைபெற்றன. முதன்முறையாக பாரா கிளைடிங், கோல்ஃப், கராத்தே போன்றவை சேர்க்கப்பட்டன.
  • 8 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் போட்டி மீண்டும் சேர்க்கப்பட்டது. இதில் வங்காளதேசம் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
  • sag

    தெற்காசிய விளையாட்டில் பதக்கம்

  • 10 நாட்கள் நடைபெற்ற போட்டியின் முடிவில், இந்தியா 174 தங்கம், 93 வெள்ளி, 45 வெண்கலம் என 312 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது.
  • இந்தியாவை தொடர்ந்து, நேபாளம் 51 தங்கம் உட்பட 206 பதக்கத்துடன் 2-வது இடத்தையும், இலங்கை 40 தங்கம் உட்பட 251 பதக்கத்துடன் 3-வது இடத்தையும் பெற்றன.
  • 1984-இல் தெற்காசிய போட்டிகள் தொடங்கியதில் இருந்து பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை வகித்த போதிலும், தற்போதுதான் இந்தியா அதிக பதக்கங்களை வென்றுள்ளது.
  • தெற்காசிய விளையாட்டு ஒன்றில் இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்கள் இதுவாகும். முன்னதாக, 2016-இல் சொந்த மண்ணில் நடந்த போட்டியில் 309 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது.
  • துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தில் 19 வயது இந்திய வீராங்கனை மெகுலி கோஷ் 253.3 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்று உலக சாதனை படைத்தார்.
  • இதற்கு முன்பு துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டிலா 252.9 புள்ளிகள் குவித்ததே உலக சாதனையாக இருந்து வந்தது.
  • இந்தியா அதிகபட்சமாக நீச்சல் போட்டியில் 27 தங்கமும், துப்பாக்கி சுடுதலில் 18 தங்கப் பதக்கமும் வென்றது.
  • மல்யுத்தத்தில் 15 பிரிவு போட்டிகளிலும் இந்தியா தங்கம் வென்று சாதனை படைத்தது.
  • அடுத்த தெற்காசிய விளை யாட்டு போட்டி 2021-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெறும்.

gk010120
இதையும் படியுங்கள்
Subscribe