தீன்தயாள் உபாத்யாயா கிராம ஒளித்திட்டம்

* 2015 ஜுலை 25 அன்று திட்டம் தொடங்கப்பட்டது.

*இத்திட்டத்தின் கீழ் 597,464 கிராமங்களுக்கு முழுமையாக மின்வசதி செய்துத் தரப்பட்டது

*கார்வ் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இது தீன்தயாள் உபாத்யாயா கிராமஒளி திட்டத்தின் கீழ் கிராமப்புற மின்சார இணைப்பு பணியை குடிமக்கள் தெரிந்துகொள்வதற்கான செயலி ஆகும்..

Advertisment

உதய் திட்டம்

* 2015 நவம்பர் இருபதாம் தேதி தொடங்கப் பட்டது. மாநில மின்சார விநியோக நிறுவனங்களுக்கு செயல்முறை மற்றும் நிதி லாபநிலையில் அளிப்பதற்காக இத்திட்டம் கொணரடப்பட்டது.

* உதய் வலைதளம் (www.uday.gov.in) வெளிப்படையான கண்காணிப்புக்கென உருவாக்கப்பட்டது

Advertisment

சவபாக்யா

* 2017 செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கப் பட்டது. நான்கு கோடி ஏழை மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு இலவச மின்சார இணைப்புகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

* திட்டத்தின் மொத்த செலவின மதிப்பீடு - ரூ.16,320 கோடி. மொத்த பட்ஜெட் ஆதரவு ரூ. 12,320 கோடி.

விட்டுக் கொடுத்து விடுங்கள் இயக்கம்

* 2015 மார்ச் 27-ஆம் தேதி தொடங்கப்பட்டதுவிட்டுக் கொடுத்து விடுங்கள் இயக்கம் - சுமார் 1.04 கோடி நுகர்வோர் மானியத்தை விட்டுக்கொடுத்துள்ளனர்.

உர்ஜா கங்கா திட்டம்

* எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கிழக்கு இந்தியா மேம்பாட்டுக்காகவும் பிரதமரின் உர்ஜா கங்கா என்று அழைக்கப்படும் 2655 கிமீ நீள ஜகதீஷ்பூர் ஹால்டியா மற்றும் போகாரோ தம்ரா தேசிய எரிவாயு குழாய்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

* இந்த குழாய் பாதையை பரூனி முதல் குவஹாத்தி வரை 750 கிமீ நீளத்திற்கு விரிவாக்குவதற்கான திட்டத்திற்கும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் வடகிழக்கு மண்டலம் தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணைக்கப்படும். இந்தத் திட்டம் 2021-இல் நிறைவு பெறும்.

தூய்மை இந்தியா திட்டம்

* இத்திட்டம் 02. 10. 2014 அன்று தொடங்கப்பட்டது. தூய்மையான மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை காணவேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் திட்டம்.

* இதன் இலக்கு: 2019 அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் திறந்தவெளிக் கழிப்பிடங்களை அகற்றுதல்.

* திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 6.8 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளில் நவீனக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.

* 266 மாவட்டங்களில் உள்ள 3.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடமற்றவையாக மாற்றப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா கோஷ்

* கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தூய்மை நிலையை மேம்படுத்த, பள்ளிகளில் மாணவிகளுக்கான கழிப்பறைகள் கட்ட முன்னுரிமை.

* பள்ளிகளில் புதிய கழிப்பறைகள் அமைக்கவும் பயன்படாத கழிப்பறைகளை புதுப்பிக்கவும் ரூ.365 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தூய்மை இந்தியா செஸ்

* தூய்மை இந்தியா திட்டத்திற்காக, தூய்மை இந்தியா என்ற பெயரில் கூடுதல் வரி வசூலிக்கப்பட்டு, இலக்கை அடைய செலவிடப்பட்டுள்ளது.

ஸ்வச் ஸ்வஸ்த் சர்வத்ரா

* தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் காயகல்ப் திட்டங்களின் சாதனைகளுக்குதூண்டுகோலாக, மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை ஆகியவை இணைந்து ஏற்படுத்திய கூட்டு முயற்சியாகும்.

பிரதமர் சுகன்யா சம்ரிதி யோஜனா

* இத்திட்டம் 22.01.2015-இல் தொடங்கப்பட்டது

* பெண் குழந்தைகள் நலன் மற்றும் அவர்களது எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்ய சிறிய டெபாசிட் சேமிப்புத் திட்டம்.

* 1.26 கோடிக்கு மேல் கணக்குகள் தொடங்கப்பட்டன. 2017 நவம்பர் வரை ரூ.19,183 கோடி அளவுக்கு டெபாசிட் செய்யப்பட்டது.

போஷன் அபியான் தேசிய ஊட்டச்சத்து இயக்கம்

*நாடு முழுவதும் பிறந்த குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து வழங்க வகை செய்யும் தேசிய ஊட்டச்சத்து இயக்கம் 2022-ஜ (போஷன் அபியான்) பிரதமர் 08.03.2018-இல் தொடங்கி வைத்தார்.

* உடல் வளர்ச்சி குறைப்பாட்டை ஆண்டுக்கு 2 சதவீதம் அளவிலும், ஊட்டச்சத்து குறைப்பாட்டை 2 சதவீத அளவிலும், ரத்தச்சோகையை ( சிறார்கள்,பெண்கள் மற்றும் விடலைப் பருவ பெண்கள் இடையிலான) 3 சதவீத அளவிலும், பிறப்பு எடை குறைவை 2 சதவீத அளவிலும் குறைப்பதை இந்த இயக்கம் இலக்காக கொண்டுள்ளது.

பிரதமர் உஜ்வாலா யோஜனா

* வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை 01.05.2016 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

* 3.78 கோடிக்கும் மேற்பட்ட புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 30.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 13.3 சதவீதமும் வழங்கப்பட்டுள்ளன.

* நாடு முழுவதும் இத்திட்டம் விரிவாக்கப் பட்டு தற்போது 712 மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

* 2016 முதல் 2020 வரையிலான 4 ஆண்டு காலத்தில் இந்தத் திட்டத்திற்கான இலக்கு 5 கோடியிலிருந்து 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு ரூ.12,800 கோடி.

* இந்தத் திட்டம் அனைத்து எஸ்.சி., எஸ்.டி., குடும்பங்களுக்கும், பிரதமர் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, வனப்பகுதி மக்கள், மிகவும் பின்தங்கிய பிரிவினர், தேயிலைத் தோட்டம் மற்றும் முன்னாள் தேயிலைத் தோட்ட பழங்குடியினர், தீவுகள் அல்லது நதித் தீவுகளில் வசிப்பவர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் பயனாளிகளாவார்கள். மகிளா சக்தி மையங்கள்

*கிராமங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு கிராமப் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மையங்களாக மாற்றியமைக்கப் பட்டுள்ளன.

*முந்தைய பெண்களுக்கு அதிகாரமளித்தல் தேசிய இயக்கத்தின் கீழ் தேசிய மற்றும் மாநில அளவில் (பெண்களுக்கான மாநில ஆதார மையம்) இயங்கி வந்த கட்டிடங்களில் மகிளா சக்தி மையம் இயங்கும்.

*பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் மத்திய அரசின் பெண்களை மையப்படுத்தும் திட்டங்களை செயல்படுத்த புதிய மாவட்ட அளவிலான மகளிருக்கான மையம்.

மகிளா இ ஹாத்

*இத்திட்டம் 2016 மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. மகளிர் தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை சந்தைகளில் நேரடியாக விற்பனை செய்வதற்கு உதவும் ஆன்-லைன் டிஜிட்டல் சந்தைத் தளம்.

*24 மாநிலங்களைச் சேர்ந்த மகளிர் தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள் 18 பிரிவுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தியுள்ளன.

பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனா

*01.09.2017 அன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் முறைப்படி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

*கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார் களுக்கு ஏற்படும் ஊதிய இழப்பை ரொக்க ஊக்கத் தொகை வடிவில் பகுதி இழப்பீடு வழங்கப்படுகிறது. இதன் மூலம் முதல் குழந்தையை பிரசவித்த பின்னர் தாய்மாருக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது.

*பிரதமர் மாத்ரு வந்தனா யோஜனாவின் பணப் பயன்கள் நேரடி பயன் மாற்ற முறைப்படி பயனாளிகளின் வங்கி மற்றும் அஞ்சலக கணக்குகளுக்கு நேரடியாக சென்றடைகிறது.

பிரதமர் சுரக்ஷித் மாத்ரிதவா அபியான்

*2016 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 9-ஆம் தேதி தரமான மருத்துவச் சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது.

*1.16 கோடிக்கும் மேற்பட்ட கர்ப்ப கால பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 12,900-க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

நிமிர்ந்து நில் இந்தியா

*2016 ஏப்ரலில் பிரதமரால் தொடங்கப் பட்டது. எஸ்.சி./ எஸ்.டி. பெண்களிடையே தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கம் கொண்டது.

*தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு 28.02.2018 நிலவரப்படி வங்கிகள் 54,733 கடன்களை வழங்கியுள்ளன.

கைபேசிகளில் எச்சரிக்கை பொத்தான்

* ஆபத்தில் சிக்கியுள்ள பெண்கள் காவல்துறைக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் எச்சரிக்கை செய்யும் வகையில் அனைத்து கைபேசிகளிலும் எச்சரிக்கை பொத்தான்கள் இருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

* நாடு முழுவதற்கும் பெண்களுக்கான அவசர கால தொடர்பு எண் (181).

29 மாநிலங்கள் ஏற்கனவே இந்த வசதியை நிறுவியுள்ளன.

கைம்பெண்களுக்கான காப்பக விடுதி

* குடும்ப ஆதரவு கிடைக்காத கணவனை இழந்த பெண்கள் கண்ணியமாக வாழ்க்கை நடத்த உதவும்.

* பிருந்தாவனில் ஆயிரம் கைம்பெண்கள் வசிப்பதற்கான மத்திய அரசின் நிதியுதவியுடன் மிகப் பெரிய காப்பகம் கட்டப்படுகிறது.

ஸ்வதார் கிரே

* பல்வேறு சூழல்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான ஸ்வதார் கிரே திட்டத்தில், அவர்களுக்கு தங்குமிடம், உணவு. உடை, மருத்துவ வசதிகள் அளித்து பொருளாதார சமூக பாதுகாப்பும் வழங்கப்படும். தற்போது நாட்டில் மொத்தம் 559 ஸ்வதார் கிரே இயங்கி வருகின்றன.

* பணியிடத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதற்கு எதிரான சட்டம் 2013 நடைமுறையில் உள்ளது.

புகார்களை அளிப்பதற்கான ஆன்-லைன் தளம் தொடங்கப்பட்டது.

நிராமய் யோஜனா

* ஆட்டிசக் குறைபாடு, மூளைக் குறைபாடு உள்ளிட்ட பல உடல் குறைபாடு உள்ளவர்களுக்கு ரூ.1 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது.