* சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றதற்கு எங்களின் வாழ்த்துக் களை தெரிவித்துக் கொள்கிறோம்.உங்களை பற்றி கூற முடியுமா?
நன்றி, ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர்தான் எனது பூர்வீகம். எனது அம்மா ஜெய்ப்பூர் என்.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் அறிவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார்.எனது தந்தை தொழிலதிபர். நான் 2014-இல் ஐ.ஐ.டி பாம்பேயில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தேன். பின்பு ஹரியானா மாநிலத்தின் குர்கானில் எர்னஸ்ட் & யங் நிறுவனத்தில் இணை ஆலோசகராக பணிபுரிந்தேன். சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியிலிருந்து விலகினேன். முழுமையாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்ய ஆரம்பித்தேன். மானுடவியல் பாடத்தை சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தேன். சென்ற ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 328-வது ரேங்க் பெற்று, இந்திய வருவாய் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். மீண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி இந்த ஆண்டு அகில இந்திய அளவில் 12-வது ரேங்க் பெற்று ஐ.ஏ.எஸ். பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளேன்.
* பாராட்டுகள். இந்தாண்டு ஐ.ஏ.எஸ்.கிடைத்தது உங்கள் இரண்டாவது முயற்சியில் இல்லையா?
இல்லை. இது என்னுடைய மூன்றாவது முயற்சி. என்னுடைய முதல் முயற்சியில் இண்டர்வியூ வரைதான் செல்ல முடிந்தது. இரண்டாவது முயற்சியில்328-வது ரேங்க் பெற்றேன். இந்தாண்டு மூன்றாவது முயற்சியில் 12-வது ரேங்க் பெற்றுள்ளேன்.
* இந்த தேர்வுக்கு எப்படி தயார் செய்தீ

* இந்த தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?
எனது பள்ளி வயதில் ஐ.ஏ.எஸ். அதிகாரி யாகி குழந்தைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பினேன். எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் அனாதை இல்லத்திற்கு சென்று பல உதவிகள் செய்தேன். அதுவே என்னுள் சேவை மனப்பான்மையை வளர்த்தது. சுருக்க மாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஐ.ஏ.எஸ் பணிக்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகம் கொடுத்தது. ஐ.ஏ.எஸ் பணி மூலம் இந்த சமூகத்தில் குழந்தைகளுக்கு சிறந்த சேவை செய்ய சட்டபூர்வமாக செயல்படமுடியும் என நம்பினேன். அந்த நம்பிக்கையே ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வேண்டும் என்ற கனவாக உருவானது.இந்த கனவுக்காக கடந்த மூன்று ஆண்டுகளாக படித்து நனவாக்கினேன். இரண்டாவது என்னுடைய குடும்பம் இந்த தேர்வில் வெற்றிபெற மிகவும் எனக்கு உறுதுணையாக இருந்தது. முதல் முயற்சியில் தேர்ச்சி பெறாததனால் சோர்ந்து விட்டேன். என் குடும்பத்தினர், அடுத்த முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவாய் என நம்பிக்கையும் தைரியமும் கொடுத்தனர். மூன்றாவது கடின உழைப்பின் மூலம் இந்தாண்டு எனது இலட்சியத்தை அடைந்துவிட்டேன். இந்த தேர்வுக்கு தயார் செய்யும் நீண்ட பயணத்தில் நான் ஏற்கனவே பணிபுரிந்த அனுபவம் நல்ல உதவியாக இருந்தது.
* பிரிலிமினரி தேர்வுக்கு எந்த மாதிரி தயார் செய்தீர்கள். மாதிரி தேர்வுகள் மற்றும் பயிற்சிகள் ஏதேனும் சிறப்பாக எடுத்துக் கொண்டீர்களா?
சிவில் சர்வீசஸ் பிரிலிமினரி தேர்வுக்கு தயார் செய்யும் பார்முலாவே அனைத்துபாடங்களையும் திரும்ப திரும்ப படிப்பதுதான். பிரிலிமினரி தேர்வு சிலபஸ் மிகப் பெரியது. அதிக அளவில் நடப்பு நிகழ்வு பகுதிகள் அடங்கியுள்ளது. முழுமையாக அனைத்து பாடங்களையும் சிலபஸ் படி படித்து முடித்துவிட்டேன். பின்பு தினமும் ஒரு நாள் வீதம் மாதிரி தேர்வு எழுதி பார்ப்பேன். இரண்டு மாதங்களாக இந்த மாதிரி தொடர்ந்து மாதிரி தேர்வுகளை எழுதிபார்த்தேன். இந்த காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 60 மாதிரி தாள்களை தேர்வு எழுதி பார்த்தேன். இது என்னுடைய இரண்டாவது முயற்சி. மூன்றாவது முயற்சியில் 18 நாட்கள் மட்டும் மாதிரி தேர்வு எழுதிப் பார்த்தேன். 18 நாட்களில் 15 தாள்கள் மட்டும் தேர்வு எழுதினேன். இந்த கலை பிரீலிமினரி தேர்வுக்கு தயார் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. அடுத்து என்னுடைய விருப்பப் பாடத்தில் நன்கு ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். அனைத்து என்.சி.ஆர்.டி புத்தகங்களையும் மூன்று முறை முழுமை யாக படித்தேன். இதன் மூலம் 80 தாள்களை மாதிரி தேர்வு எழுதினேன். இப்போது தேர்வின் மீது பலமான நம்பிக்கை வந்தது.
* என்.சி.ஆர்.டி புத்தங்கங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொண்டதாக இருக்கின்றன?
என்.சி.ஆர்.டி. புத்தங்கள் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு மிகவும் பயனுள்ளவை. ஒரு வேளை புவியியல் அல்லது வரலாறு படித்தால் என்.சி.ஆர்.டி. புத்தகங்கள் மிகவும் பயனுள்ளவை.
* கட்டுரை தாளுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?
சிவில் சர்வீசஸ் தேர்வில் முதன்மையாக வென்றவர்களின் கட்டுரைகள் பல தலைப்புகளில் இணையதளத்தில் கிடைக்கின்றன. அவைகளை படித்து எனக்கு ஏற்ப தயார் செய்துக் கொண்டேன். நடப்பு கால பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் பற்றி பல தகவல்களை திரட்டினேன். அவற்றை அனைத்தையும் தலைப்புகள் வாரியாக குறிப்புகளாக தயார் செய்து கொண்டேன். தேர்வுக்கு முன்னரே அந்த குறிப்புகளை வைத்து என்னுடைய ஸ்டைலில் கட்டுரைகளாக எழுதி வைத்துக் கொண்டேன். அவ்வப்போது கட்டுரைகளை படித்துப்பார்த்து இன்னும் சிறப்பாக வடிவமைப்பது என தொடர்ந்து செய்துவந்தேன். இப்படி மொத்தமாக 20-க்கு மேற்பட்ட கட்டுரைகள் தயார் செய்து வைத்துவிட்டேன். கட்டுரைகள் பொறுத்தவரை அறிமுக பகுதி மற்றும் முடிவுரை பகுதியில் அதிக கவனத்துடன் சொந்த நடையில் தயார் செய்து கொள்ள வேண்டும். கட்டுரையின் அமைப்பு அதுபோல மிக முக்கியமானது. கட்டுரையின் தலைப்பை தழுவி சொல்லவரும் விஷயத்தை எவ்வித குழுப்பமில்லாமல் மிக தெளிவாக நேர்த்தியாக கட்டுரையில் தெரிவித்து முடிக்கவேண்டும்.
* ஏன் மானுடவியல் பாடத்தை விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்தீர்கள்?
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்யும் முன்னர் பல விருப்பப்பாடங்களை ஆய்வு செய்தேன். இந்த தேர்வுபொறுத்தவரை பத்து மாதங்களில்விருப்பப்பாடத்திற்கு சிறப்பாக தயார்செய்ய வேண்டியது அவசியம். அதிகமான சிலபஸ் கொண்டவிருப்பப்பாடத்தை கொண்டு தயார் செய்வது அவ்வளவு எளிதான காரியமில்லை. இதை மனதில் கொண்டுதான் குறைந்த சிலபஸ் கொண்ட தத்துவம் அல்லது மானுடவியல் பாடத்தில் அதிக அளவில் உயிரியல் பாடம் சேர்ந்துள்ளது. பள்ளி படிப்பின் போதே மிக கடினமாக இருந்த பாடம் உயிரியல். ஆனால் இப்போது வேறுவழியில்லை படித்தே ஆகவேண்டியது அவசியம். அதனால் மானுடவியல் பாடத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்து படித்தேன். இதன்மூலம் இரண்டாவது அதிக மதிப்பெண்ணை மானுடவியல் பாடத்தில் எடுத்தேன். மேலும் எனது பயிற்சியாளரின் சிறந்த வகுப்பு மற்றும் அளித்த பயிற்சியில் இந்த பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற முடிந்தது.
* இண்டர்வியூ எப்படி இருந்தது?
எனது இண்டர்வியூ போர்டில் டெல்லி காவல் ஆணையர் பி.எஸ். பாஸ்ஸி தலைவராக இருந்தார். அவர் என்னிடம் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் பற்றி சில கேள்விகள் கேட்டார். எந்த கேள்விக்கும் உண்மையாகவும் நேர்மையாகவும் பதிலளிக்கும் போது நமது உண்மையான ஆளுமை வெளிப்படும். அந்த விதத்தில் எனது இண்டர்வியூ மிக சிறப்பாக இருந்தது.
* இந்த தேர்வுக்கு எந்த மாதிரி பயிற்சி எடுத்துக் கொண்டீர்கள். அது எப்படி இருந்தது?
எனது சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு சங்கர் IAS அகாடமியில் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். அங்கு நேரடியா கவும் பின்னர் ஆன்லைன் பயிற்சியும் எடுத்துக்கொண்டேன். ஆன்லைன் பயிற்சி எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆன்லைன் பயிற்சி இந்த தேர்வுக்கு தயார் செய்வதில் புரட்சிகரமான முன்னேற்றமாகும். ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் அனைத்தும் வீடியோக்களாக உள்ளன. பயிற்சி மையத்திற்கு பயணம் செய்வது போன்றவற்றை கணக்கில் கொண்டால் ஆன்லைன் பயிற்சி அதிகளவில் நமக்கு நேரத்தை மிச்சப்படுத்துகிறது. சங்கர் IAS அகாடமியின் ஆன்லைன் வகுப்புகள் மிக சிறப்பானவை. நமக்கு வரும் சந்தேகங் களையும் உடனே கேட்டு தெளிவு பெற முடியும். நிச்சயம் எதிர்காலத்தில் இந்த வகுப்புகள் மிக சிறப்பாக இருக்கும்.