மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக் கான தேர்வானது தகுதியுள்ளவர்களை நாட்டின் பல்வேறு உயர் அரசுப் பணிகளில் பல்வேறு நிலைகளில் பணியமர்த்துவதால் இத்தேர்வு மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது. இத்தகைய பெருமைமிகு தேர்வில் ஒவ்வொரு வருடமும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி மாணவர்கள் தரவரிசைப் பட்டியலில் அதிகளவில் இடம் பெறுவது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல போட்டித் தேர்வர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் சிறந்த பயிற்சி மற்றும் குறிப்புகளை முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். வெற்றி பெறுகின்றனர். விடாமுயற்சியுடன் மனம் தளராது பயின்று வரும் தேர்வர்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் சிறந்த வழிகாட்டுதல்களும் உதவிகளும் வழங்கப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sankarias.jpg)
கடந்த ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 363 தேர்வர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியைச் சேர்ந்தவர்கள். வி.எஸ். நாராயண சர்மா அகில இந்திய அளவில் 33-வது ரேங்கையும் தமிழ்நாடு அளவில் முதலாம் இடத்தையும் பெற்றதன் மூலம் இந்த ஆண்டும் தரவரிசையில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது சங்கர் ஐஏஎஸ் அகாடமி. அவர் இத்தேர்வின் ஒவ்வொரு நிலையையும் வெற்றிகரமாக தேர்ச்சிபெற சங்கர் ஐஏஎஸ் அகாடமி மிக முக்கிய காரணம். இங்கு வழங்கிய தரமான போட்டித் தேர்விற்கான பயிற்சியும் குறிப்புகளும் வெற்றிக்கு துணையாக இருந்தது. இத்தேர்வின் ஒவ்வொரு நிலைக்கும், ஒருவர் நேர்மையான மற்றும் தொடர் பயிற்சியின் மூலமே பெறக்கூடிய கூர்மையான திறன் களைப் பயன்படுத்த வேண்டும் என்பதே சூத்திரமாகும். நுட்பமான கலந்துரையாடல் மற்றும் புரிதலுடன் வழங்கப்படும் மாதிரி தேர்வு தொடரைப் பயன்படுத்துவதன் மூலம் இத்தேர்விற்கு தேவையான திறனை மேம்படுத்திக்கொள்ள முடியும். இத்தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு (எழுத்துத் தேர்வு) மற்றும் நேர்முகத்தேர்வு என மூன்று நிலைகளை கொண்டதாகும். சங்கர் ஐஏஎஸ் அகாடமியில், இத்தேர்வின் அனைத்து நிலைகளுக்கான மற்றும் குறிப்பிட்ட நிலைகளுக்கான சிறப்பு பயிற்சிக்கும் தேர்வர்களுக்கு சிறந்த வகையிலும் எளிய வகையிலும் பயிற்சி அளிக்க ஏராளமான பயிற்சி திட்டங்கள் தேர்வர்களின் தேவை களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டு அவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டும் வருகின்றது.
கோயம்புத்தூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி போட்டித் தேர்வரான டி.ரஞ்சித் அவரது இரண்டாவது முயற்சியில் அகில இந்திய அளவில் 750-வது இடத்தை பிடித்து சாதனை புரிந்துள்ளார். அதேபோல கடந்த ஆண்டு அகில இந்திய அளவில் 268 ரேங்க் பெற்று தற்போது இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியாக பணியாற்றி வரும் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி நிகழ்த்திய சாதனை வரலாற்றை இவர் மீண்டும் நிகழ்த்தியுள்ளார். இருவரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் குடிமைப்பணிக்கான தேர்வின் மூன்று நிலைகளுக்கும் பயிற்சி பெற்றவர்கள். அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்ற 363 பேரில் 20 பேர் இந்த தேர்வின் முதல் முயற்சியிலேயே தேர்வானவர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sankarias1.jpg)
தற்போது தரவரிசையில் முன்னணி இடங்களை பெறும் பெண் தேர்வர்களின் எண்ணிக்கையும் சீராக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜக்ரதி அவஸ்தி அகில இந்திய அளவில் 2-வது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும், முதல் 10 ரேங்க்குகளில் 6 தேர்வர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியைச் சேர்ந்தவர்களாவர். அகில இந்திய அளவில் தரவரிசையில் முன்னணி இடத்தை பெற்ற இந்த 6 தேர்வர்களில் 4 பேர் பெண் தேர்வர்கள் என்பது இதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி. தமிழ்நாடு அளவில் 36 தேர்வர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 36 தேர்வர்களில் 25 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியைச் சேர்ந்தவர்கள். யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, வங்கித் தேர்வு மற்றும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்வதற்கான முன்னணி பயிற்சி நிறுவனம் சங்கர் ஐஏஎஸ் அகாடமி.
மேலும், தேர்விற்கான முயற்சி எண்ணிக்கைகள், வயது வரம்பு ஆகியவை முழுமையாக முடிவடையும் நிலையில் இருந்தும் பயிற்சி நிறுவனத்தில் மிகவும் தீவிரமாக தயாராகி, வழங்கப்படும் அனைத்து வளங்களையும் பயன்படுத்தி மீதமிருக்கும் வாய்ப்புகளில் பணி பெற்றிட கூடுதல் முயற்சியுடன் தயாராகி வரும் பல போட்டித் தேர்வர்களையும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி ஊக்குவித்து பயிற்சியளித்து வருகிறது. தேர்வர்களின் தேர்வை நோக்கிய பயணத்தில் அவர்களுக்கு உதவுவதற்கான நம்பகத்தன்மை கொண்ட வழிகாட்டியாக சங்கர் ஐஏஎஸ் அகாடமி உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-11/sankarias-t.jpg)