அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி

/idhalgal/general-knowledge/science-and-technology-development

ஆதார் அட்டை

* 2018 மார்ச் 31 நிலவரப்படி ஆதார் சேர்க்கை 120 புள்ளி 7 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2014 மே 31-இல் 63 புள்ளி 22 கோடியாக இருந்தது.

* ஏறக்குறைய 100 சதவீதம் வயதுவந்தோர் ஆதார் பெற்றுள்ளனர். (2018 மார்ச் 31 நிலவரப்படி) இந்த சதவீதம் 2014 மே 31-ஆம் தேதி 62 சதவீதமாக இருந்தது.

* ஆதாருடன் இணைக்கப்பட்ட தனித்தன்மை வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 2018 மார்ச் 31-இல் 59.15 கோடியாக உயர்ந்தது. இது 2014 மே 31ல் ஏழு கோடிக்கும் குறைவாகவே இருந்தது.

* 2016 செப்டம்பருக்கு பிறகு 58 புள்ளி 3 கோடி மொபைல் சிம்கார்டுகள் ஆதார் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளன.

பொதுச் சேவை மையங்கள்

* 2017 டிசம்பர் நிலவரப்படி 2.92 லட்சம் பொது சேவை மையங்கள் சிறப்பாக செயல்பட்டு டிஜிட்டல் சேவைகள் வழங்கி வருகின்றன. ஆதார் சேர்க்கை, டிக்கெட் முன்பதிவு, குடிமக்களுக்கான மின்னணு ஆளுகை சேவைகள், போன்றவற்றை இந்த மையங்கள் 2.15 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் அளித்து வருகின்றன. 2016-இல் இத்தகைய மையங்கள் 2.29 லட்சம் இருந்தன.

* இதனால் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், தலித்துகள், மற்றும் பெண்களிடையே டிஜிட்டல் தொழில் முனைவுத் திறன் வளர்ந்துள்ளது.

* இந்த பொதுச் சேவை மையங்களில் 52,000-க்கும் அதிகபட்ட பெண்கள் பணியாற்றுகிறார்கள். இவற்றின் மூலம் டிக்கெட் முன்பதிவு, தொலை மருத்துவம், ஜன் அவ்ஷாதீ, ஆதார் சேவைகள் போன்றவை மக்களுக்கு வழங்கப் படுகின்றன.

பாரத் நெட் திட்டம் கட்டம்

* 2.5 லட்சம் கிராமங்களில் பாரத் நெட் திட்டம் உயர்வேக பிராண்ட்பேண்ட் சேவைகளை வழங்கும்.

ஆதார் அட்டை

* 2018 மார்ச் 31 நிலவரப்படி ஆதார் சேர்க்கை 120 புள்ளி 7 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2014 மே 31-இல் 63 புள்ளி 22 கோடியாக இருந்தது.

* ஏறக்குறைய 100 சதவீதம் வயதுவந்தோர் ஆதார் பெற்றுள்ளனர். (2018 மார்ச் 31 நிலவரப்படி) இந்த சதவீதம் 2014 மே 31-ஆம் தேதி 62 சதவீதமாக இருந்தது.

* ஆதாருடன் இணைக்கப்பட்ட தனித்தன்மை வங்கி கணக்குகளின் எண்ணிக்கை 2018 மார்ச் 31-இல் 59.15 கோடியாக உயர்ந்தது. இது 2014 மே 31ல் ஏழு கோடிக்கும் குறைவாகவே இருந்தது.

* 2016 செப்டம்பருக்கு பிறகு 58 புள்ளி 3 கோடி மொபைல் சிம்கார்டுகள் ஆதார் அடிப்படையில் வழங்கப் பட்டுள்ளன.

பொதுச் சேவை மையங்கள்

* 2017 டிசம்பர் நிலவரப்படி 2.92 லட்சம் பொது சேவை மையங்கள் சிறப்பாக செயல்பட்டு டிஜிட்டல் சேவைகள் வழங்கி வருகின்றன. ஆதார் சேர்க்கை, டிக்கெட் முன்பதிவு, குடிமக்களுக்கான மின்னணு ஆளுகை சேவைகள், போன்றவற்றை இந்த மையங்கள் 2.15 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களில் அளித்து வருகின்றன. 2016-இல் இத்தகைய மையங்கள் 2.29 லட்சம் இருந்தன.

* இதனால் ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், தலித்துகள், மற்றும் பெண்களிடையே டிஜிட்டல் தொழில் முனைவுத் திறன் வளர்ந்துள்ளது.

* இந்த பொதுச் சேவை மையங்களில் 52,000-க்கும் அதிகபட்ட பெண்கள் பணியாற்றுகிறார்கள். இவற்றின் மூலம் டிக்கெட் முன்பதிவு, தொலை மருத்துவம், ஜன் அவ்ஷாதீ, ஆதார் சேவைகள் போன்றவை மக்களுக்கு வழங்கப் படுகின்றன.

பாரத் நெட் திட்டம் கட்டம்

* 2.5 லட்சம் கிராமங்களில் பாரத் நெட் திட்டம் உயர்வேக பிராண்ட்பேண்ட் சேவைகளை வழங்கும். இதனால், கிராமப்புறத்தில் உள்ள 200 மில்லியன்மக்களுக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள்.

* நாடெங்கும் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான கிராம பஞ்சாயத்துக்களுக்கு அதிவேக ஒலி இழை பைபர் கட்டமைப்பு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பாரத் நெட் கட்டம் 1 ன் கீழ் 2017 டிசம்பர் 31-க்குள் இந்த இணைப்புகள் வழங்கப் பட்டுள்ளன.

* 2018 மே 6-ஆம் தேதி நிலவரப்படி 1,15,461 கிராம பஞ்சாயத்துகளில், 2,72,690 கிலோமீட்டர் நீள ஒலி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 1,09,278 கிராம பஞ்சாயத்துக்கள் சேவை தயார் நிலையில் உள்ளன.

தொலைத்தொடர்புத்துறை

* நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 2014 ஜூனில் 75 சதவீதத்திலிருந்து 2017 செப்டம்பரில் 94 சதவீதமாக உயர்ந்த்து. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 280 மில்லியன் சந்தாதாரர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

* நவீன தொலைபேசி 2014-ஆம் ஆண்டு 190 மில்லியனாக இருந்து 2017-இல் 390 மில்லியன் அளவாக உயர்ந்தது.

* இண்டர்நெட் சேவை மூன்றில் இரண்டு மடங்கு அதாவது 66 சதவீதம் அதிகரித்தது. ஜனவரி 2014-இல் 251 மில்லியன் என்ற பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2017 செப்டம்பரில் 499 மில்லியனாக உயர்ந்தது.

* மொபைல் அடித்தள டிரான்ஸ்ரிசிவர் நிலையங்கள் (பிடிஎஸ்) இரண்டு மடங்காக அதாவது 7.94 லட்சத்திலிருந்து 16.7 லட்சமாக உயர்ந்தது.

* தொலைபேசி சந்தாதாரர்கள் மொத்த எண்ணிக்கை 2017 செப்டம்பரில் 1206.71 மில்லியன். இவர்களில் 501.99 மில்லியன் கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்கள். 704.89 மில்லியன் சந்தாதாரர்கள் நகரப் பகுதிகளை சேர்ந்தவர்கள். நாட்டின் மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி 93.4 சதவீதம் கிராமப் பகுதிகளில் 2017 செப்டம்பர் நிலவரப்படி இது 56.71 சதவீதமாகவும், நகரப் பகுதிகளில் இது 173.15 சதவீதமாகவும் உள்ளது.

* கம்பி இல்லா தொலைபேசி மொத்த சந்தாதாரர்களின் 98.04 சதவீதமாகும்.

* இண்டர்நெட் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2017 டிசம்பர் இறுதியில் 445.96 மில்லியனாகும்.

தகவல் ஒலிபரப்பு

* 56 நகரங்களில் 96 புதிய பண்பலை ஒலிபரப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

* பண்பலை ஒலிபரப்புகள், உரிமையாளர் களிடமிருந்து இடம்பெயர்வு கட்டண மாக ரூ. 1,600 கோடியும், ஏலத் தொகையாக ரூ.1130 கோடியும், அரசிடம் பெறப்பட்டுள்ளது.

*தொகுதி 2 கட்டம் 3 ஏலங்கள் 2017-இல் நிறைவடைந்தன. 48 நகரங்களில் 66 பண்பலை ஒலிபரப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

* ஏலம் மூலம் அரசுக்கு ரூ. 200.24 கோடி கிடைத்துள்ளது.

* அடுத்த தொகுதிகளில் 236 நகரங்களுக்கான 683 அலைவரிசைகள் ஏலம் விடப்படும். இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு ரூ.1100 கோடிக்கும் கூடுதலாகவருவாய் கிடைக்கும் மதிப்பிடப் பட்டுள்ளது.

சமூக வானொலி

* நாடெங்கும் 201 சமூக வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன.

* வடகிழக்கு மாநிலங்களில் சமூக வானொலி நிலையங்கள் அமைப்பதற்கான மானியத் தொகை 50 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதர மாநிலங்களில் இந்த மானியத் தொகை 75 சதவீதமாக இருக்கும். இதற்கு உச்சவரம்பு ரூ.7.5 லட்சம்.

dot

ஆகாஷ்வாணி மைத்ரி

* பங்களாதேஷ் மற்றும் வங்காள மொழி பேசும் இந்திய வம்சாவளியினருக்கான தனி சேவையை அகில இந்திய வானொலி தொடங்கியுள்ளது.

மங்கள்யான் திட்டம்

* செவ்வாய் கிரகத்தை ஆராய இந்தியா அனுப்பிய இந்த விண்கலம், மூன்றாண்டுகளுக்கு மேலாக, அதன் சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சுற்றிவந்துள்ளது. முதல் இரண்டு ஆண்டுகளில் பெறப்பட்ட தகவல்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

* இந்தியா 104 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் முதலாவதாக இந்தியா சாதனைப் படைத்துள்ளது.

* இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ, துருவ செயற்கைகோள் செலுத்து வாகனம் பி.எஸ்.எல்.வி.-சி 37 மூலம், அதிக அளவாக, ஒரே தடவையில் 104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி 2017 பிப்ரவரி 15 அன்று, விண்வெளி ஆய்வு வரலாற்றில் இந்தியா புதிய அத்தியாயத்தை படைத்துள்ளது.

* இதில், 101 செயற்கைகோள்கள், அமெரிக்கா (96), நெதர்லாந்து (1), சுவிட்சர்லாந்து (1), இஸ்ரேல் (1), கஜகஸ்தான் (1) மற்றும் சவுதி அரேபியா (1)போன்ற சர்வதேச வாடிக்கையாளர் நாடுகளுக்கு சொந்தமானவைகளாகும்.

தேசிய சூப்பர் கணினி இயக்கம்

* இந்திய மண்டல கடல்சார் செயற்கை கோள் முறை (ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.), நேவ் 1சி (இந்திய சொல் வழக்கில் கடற்பயணத்தைக் குறிக்கும் மாலுமிஅல்லது கடல் பயணி) என்ற பெயரில் இந்தியா உள்நாட்டிலேயே உருவாக்கிய மண்டல செயற்கை கோள் ஆய்வு முறையாகும்.

* இந்தியா மற்றும் இந்தியாவைச் சுற்றியுள்ளப் பிராந்தியங்களில் 1500 கிலோமீட்டர் (930 மைல்கள்) தொலைவிற்கு, இருப்பிடம் மற்றும் நேரம் சார்ந்த சேவைகைளை துல்லியமாக வழங்கமுடியும்.

தொலைத்தொடர்பு செயற்கை கோள்கள்

* தெற்காசிய செயற்கை கோள் - இந்தியா தெற்காசிய நாடுகளுக்கு வழங்கிய அன்பளிப்பாக கருதப்படும் இந்தச் செயற்கைகோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, அண்டை நாடுகளுக்கு இந்தியப் பிரதமரால் அர்ப்பணிக்கப்பட்டது.

* தெற்காசிய செயற்கைகோள் 2017 மே 5 அன்று ஜி.எஸ்.எல்.வி. - எஃப் 09 செலுத்து வாகனம் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் தரைப் பயன்பாடு, அண்டை நாடுகளில் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

* ஜி.எஸ்.எல்.வி. ஙந்-ஒஒஒ முதலாவது செலுத்து வாகனம், இந்தியாவின் தொலைத்தொடர்பு செயற்கை கோளான ஜி சாட்-19 செயற்கை கோளை 2017 ஜூன் 15 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் எந்திரத்தைக் கொண்ட இந்த செலுத்து வாகன தொழில்நுட்பம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருப்பதுடன், உயர் தொலைத்தொடர்புத் திறன் கொண்ட ஜி சாட்-19 செயற்கை கோளை வெற்றிகர மாக விண்ணில் செலுத்தியுள்ளது.

* ஜி சாட்-17 தொலைத்தொடர்பு செயற்கைகோள் 2017 ஜூன் 29 அன்று, கொருவில் இருந்து ஏரியான் செலுத்து வாகனம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. சி-பேன்டு & விரிவுப்படுத்தப்பட்ட சி-பேன்டு, தேடுதல் & மீட்பு சாதனங்கள், செல்போன் தொடர்புக்கான சாதனங்கள் மற்றும் சேவைகளை தொடர்வதற்கும், சுற்றுப்பாதை பின்புலத்தைக் கொண்ட புள்ளிவிவர டிரான்ஸ்பான்டர்கள் போன்றவற்றை இந்தச் செயற்கைகோள் சுமந்து சென்றது. ஜி சாட்-17 செயற்கைகோள், தொலைக்காட்சி ஒளிப்பரப்பு, வி சாட் மற்றும் எம்.எஸ்.எஸ். பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

gk010818
இதையும் படியுங்கள்
Subscribe