கிராம தத்தெடுப்பு திட்டம்
சுகாதாரம், சுத்தம், பசுமை பரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய அடிப்படை வசதிகளை கொண்ட மாதிரி கிராமங்களை உருவாக்குவதற்காக ‘சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா’ என்ற கிராம தத்தெடுப்பு திட்டம் 2014 -ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதன் படி மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கே அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் பெண்கள், முதியோர், குழந்தைகள் நலன் சம்பந்தப்பட்ட திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம் 2019-ஆம் ஆண்டுக்குள் 2500 கிராமங்கள் மேம்பாடு அடைந்து விடும்.
குறிக்கோள்
மகாத்மா காந்தியின் இந்த விரிவான மற்றும் இயல்பான தொலைநோக்கு பார்வையை தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, உண்மையானதாக மாற்றுவதே சான்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனாவின் (நஆஏவ) குறிக்கோளாகும்.
கிராம் யோஜனாவின் மதிப்பீடுகள்
கிராம மக்கள் மற்றவர்களுக்கு சிறந்த மாதிரிகளாக மாறச் செய்வதற்காக, வெறும் உள்கட்டமைப்பு உருவாக்கு வதையும் தாண்டி, கிராம மக்களிலும் குறிப்பிட்ட நற்பண்பு மதிப்பீடுகளை புகட்டுவது நஆஏவயின் நோக்கமாகும். இந்த மதிப்பீடுகளில் பின் வருவன உள்ளடங்கும்:
மக்கள் பங்கேற்பை அதன் முடிவாக ஏற்றுக் கொள்ளுதல் – கிராம வாழ்க்கை தொடர்பான முடிவு எடுத்தலில் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் ஈடுபடுவதை உறுதி செய்தல்.
அந்தியோத்யா பின்பற்றுதல் – கிராமத்தில் உள்ள “மிகவும் ஏழ்மை யான மற்றும் மிகவும் ந-லிந்த நபர்” நல்வாழ்வடைவதற்கு உதவி செய்தல்.
பா-லின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் பெண்களுக்கு மரியாதை தருதலை உறுதி செய்தல்.
சமூக நிதிக்கு உத்தரவாதமளித்தல்
தொழில் கண்ணியம் மற்றும் சமுதாய உணர்வு மற்றும் தன்னார்வத் தொண்டு குறித்து புகட்டுதல்.
சுத்தமாக இருக்கும் பண்பாட்டை வளர்த்தல்.
வளர்ச்சி மற்றும் சூழலி-யலுக்கு இடையே சமச்சீர் நிலையை உறுதி செய்து – இயற்கையோடு இணைந்து வாழ்க்கை நடத்துதல்.
உள்ளுர் பண்பாட்டு பாரம்பரியத்தை பாதுகாத்து வளர்த்தல்.
பரஸ்பர ஒத்துழைப்பு சுய-உதவி மற்றும் தற்சார்பு குறித்து புகட்டுதல்.
கிராம சமுதாயத்திடையே அமைதி மற்றும் நல்லி-ணக்கம் வளர்த்தல்.
பொது வாழ்க்கையில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மை, கடமைப் பொறுப்பு மற்றும் நேர்மையை கொண்டு வருதல்.
சுய உள்ளாட்சியை வளர்த்தல்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படைக் கடமைகளில் வகை செய்ய மதிப்பீடுகளை பின்பற்றுதல்.
முக்கிய நோக்கங்கள்
அடையாளம் காணப்பட்ட கிராம பஞ்சாயத்துகளின் முழு வளர்ச்சிக்கு வழி வகுக்கக் கூடிய செயல்முறைகளை முடுக்கி விடுதல்.
பின் வருவனவற்றின் மூலம் அனைத்து பிரிவு மக்களின் வாழ்க்கை தரத்தை கணிசமான அளவுக்கு அபிவிருத்தி யடைச் செய்தல்.
மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள்
உயர் உற்பத்தித் திறன்
அதிகரித்த மனிதவள மேம்பாடு
நல்ல வாழ்வாதார வாய்ப்புகள்
வேற்றுமை பாரபட்சக் குறைவு
உரிமைகள் மற்றும் உரிமைத் தகுதிகளுக்கு அணுக்கம்
பரந்த சமூகத் திரளல்
வளமான சமூக மூலதனம்
இதர கிராம பஞ்சாயத்துகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக, அடையாளம் காணப்பட்ட மாதிரி கிராமங்களை (ஆதர்ஷ் கிராம்ஸ்) உள்ளாட்சி உருவாக்க பள்ளிக்கூடங்களாக வளர்த்தல்.
இந்த நோக்கங்களை எய்துவதற்காக பின் வரும் அணுகுமுறையால் நஆஏவ க்கு வழி காட்டப்படும்.
மாதிரி கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் (ஙட) தலைமை, திறமை, உறுதிப்பாடு மற்றும் ஆற்றலை ஊக்குவித்து வளர்தல்.
பங்கேற்பு உள்ளுர் அளவு வளர்ச்சிக்கு சமுதாயத்தினருடன் ஈடுபடுதல் மற்றும் சமுதாய மக்களை திரட்டுதல்.
மக்களின் விருப்பங்கள் மற்றும் உள்ளுர் ஆற்றலுக்கேற்ப விரிவான வளர்ச்சியை எய்துவதற்காக பல்வேறுபட்ட அரசு திட்டங்கள் மற்றும் தனியார் மற்றும் தன்னார்வ தொண்டு முயற்சிகளை ஒருங்கமைவு செய்தல்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் மற்றும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுடன் கூட்டு ஏற்படுத்துதல்.
விளைவுப் பயன்கள் மற்றும் நீடிப்புத் தன்மை குறித்து முனனப்பு செலுத்துதல்.
செயல் நடவடிக்கைகள்
ஒரு மாதிரி கிராமம் (ஆதர்ஷ் கிராமம்) என்பது, நாடாளுமன்ற உறுப்பினர், கிராம பஞ்சாயத்து, சிவில் சமூகம் மற்றும் அரசு இயந்திரத்தால் உரியவாறு வகை செய்யப்பட்ட மற்றும் இருக்கக் கூடிய வள ஆதாரங்கள் மற்றும் தங்கள் திறன்களை முடிந்த வரை சிறந்த அளவுக்கு பயன்படுத்தி மக்களின் பகிர்ந்து கொள்ளப்பட்ட தொலைநோக்கி-லிருந்து உருவாகுதல் வேண்டும். இயற்கையாகவே, ஒரு மாதிரி கிராமத்தின் (ஆதர்ஷ் கிராம்) அம்சங்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி இருக்கும். இருப்பினும், முக்கிய செயல் நடவடிக்கைகளை விரிவாக அடையாளம் காண்பது சாத்தியப்படும். இவற்றில் பின்வருவன உள்ளடங்கும்.
தனிப்பட்ட வளர்ச்சி சுகாதார நடத்தை மற்றும் பழக்கவழக்கங் களை புகட்டுதல்.
தினசரி உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வளர்த்தல்.
மது அருந்துதல், புகை பிடித்தல், போதை மருந்து பயன்படுத்துதல் முத-லியன போன்ற ஆபத்து நடத்தையை குறைத்தல்.
மனித வளர்ச்சி சுகாதார அட்டை, மருத்துவ பரிசோதனை உள்ளடங்கிய அடிப்படை சுகாதார வசதிகளுக்கு உலகளாவிய அணுக்கம்.
மொத்த நோய்த் தடுப்பு ஏற்படுத்துதல்.
பா-லின விகிதத்தை சமச்சீர் செய்தல்.
100% மருத்துவமனை சார்ந்த டெ-லிவரி.
குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பப் பெண்கள் மற்றும் தாய்பாலூட்டும் தாய்மார்கள் மீது தன் முனைப்புடன் ஊட்டச்சத்து நிலையை அனைவருக்கும் மேம்படுத்துதல்.
மாற்றுத் திறனாளிகளின், குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்களின் தனித் தேவைகள் குறித்து கடுமையான முனைப்பு செலுத்துதல்.
பத்தாம் வகுப்பு வரை கல்வி வசதிகளுக்கு உலகளாவிய அணுக்கம்.
பள்ளிக்கூடங்களை ‘ஸ்மார்ட் பள்ளிக் கூடங்களாக’ மாற்றுதல், ஸ்மார்ட் பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறைகள், மின்-நூலகங்கள், வலை சார்ந்த கற்பித்தல் ஆகிய வற்றைக் கொண்டிருக்கும் மற்றும் தரக் கல்வியை வழங்குவதற்கு அனைத்து மாணவர்களையும் மின்-படிப்பாளிகளாக மாற்றும்.
உரிய வயது வந்தோர் எழுத்தறிவு, மின் எழுத்தறிவு, மின்-நூலகங்கள் உள்ளிட்ட கிராம நூலகங்கள், சமூக வளர்ச்சி பாரத் நிர்மான தன்னார்வ தொண்டர்கள் போன்ற தன்னார்வ தொண்டு பெருக்குவதற்குரிய செயல் நடவடிக்கைகள்.
உள்ளுர் வளர்ச்சியில் முற்றிலும் பங்கேற்று பங்களிப்பதற்கு மக்களின் திறனை வளர்த்தல்.
கிராம முதியோர்கள், உள்ளுர் முன் மாதிரிகள் குறிப்பாக பெண்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை கவுரவிப்பதற்குரிய செயல் நடவடிக்கைகள்.
வன்முறை மற்றும் குற்றம் இல்லா கிராமங்களுக்கு பின் வருவன போன்ற செயல் நடவடிக்கைகள்:
குடிமக்கள் குழுக்களை அமைத்தல், குறிப்பாக இளைஞர்களை உணர்வூபூர்வ மாக்கல்
கிராம விளையாட்டுகள் மற்றும் நாட்டுப்புறக் கலை விழாக்கள், மக்களிடையே ஒரு பெருமளவு உணர்வைப் பதிய வைக்கக் கூடிய ஒரு கிராம பாட்டை உருவாக்குதல், ‘கிராம தினம்’ கொண்டாடுதல்.
சமூக ரீதியில் ஒதுக்கப்பட்ட பிரிவினரை, குறிப்பாக பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினரை சேர்த்து, ஒருகிணைப்பதற்கு முனைப்பான நடவடிக்கைகள், இயற்கை பண்ணை முறை விவசாயம், மண் வள அட்டைகள், நதஒ போன்ற பயிர் தீவிரப்படுத்துதல், விதை வங்கிகள் அமைத்தல், சாண வங்கி, கால்நடை விடுதி உள்ளிட்ட கால்நடை வளர்ச்சி, டிம்பர் (வெட்டு மரம்) சாரா வன விளைபொருளுக்கு மதிப்பு கூட்டல் மற்றும் சேகரித்தல் சாண வங்கி, கால்நடை விடுதி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு
சிறிய நீர் பாசனம்
வேளாண் சேவை மையங்கள்
கீழ் வருவன போன்ற ஊரக தொழில்மயமாக்குதல்
அறுவடைக்குப் பின் தொழில்நுட்பங்கள்
குறுதொழில் முனைவகங்கள்
பால்பொருள் வளர்ச்சி மற்றும் பதப்படுத்துதல்
உணவுப்பொருள் பதப்படுத்துதல்
மரபு சார்ந்த தொழில்கள்
சுய வேலைவாய்ப்பு மற்றும் வேலையமர்த்தலுக்கு, தகுதி வாய்ந்த அனைத்து இளைஞர்களுக்கும் தொழில்திறன் வளர்ப்பு.
சுற்றுச்சூழல் சுற்றுலா உள்ளிட்ட கிராம சுற்றுலா.
மேற்கண்ட செயல் நடவடிக்கைகள் அனைத்தும், குறிப்பாக குடும்பங்களை வறுமையி-லிருந்து மீட்டெடுப்பதில் முனைப்பு செலுத்துதல் வேண்டும். இதற்கு அமைப்பு மற்றும் கூட்டமைப்பு மகளிர் சுய உதவி குழுக்கள், அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலை வழங்கி, அவர்களை நிதியமைப்பிற்குள் கொண்டு வர வேண்டியது மிகவும் இன்றியமையாதது ஆகும்.
சுற்றுச்சூழல் வளர்ச்சி
ஒரு சுத்தமான மற்றும் பசுமை கிராமத்திற்குரிய செயல் நடவடிக்கை களில் பின் வருவன உள்ளடங்கும்.
ஒவ்வொரு வீட்டிலும் மற்றும் அனைத்து பொது நிறுவனங்களிலும் கழிப்பறைகள் வழங்குதல் மற்றும் அவற்றை முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்தல்.
உரிய திட மற்றும் திரவ கழிவுப்பொருள் மேலாண்மை.
சாலையோரம் மரம், செடிகள் நடுதல்.
பசுமை நடைபாதைகள் உள்ளிட்ட வீட்டுத்தோட்டங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள விருப்பத் தெரிவுகளுக்கேற்ப மரம் நடுதல்.
சமூக வனக்காடு
நதி நீர் உற்பத்தியிட மேலாண்மை, குறிப்பாக தொன்று தொட்ட நீர் நிலைகளை புதுப்பித்தல்.
மழை நீர் சேகரிப்பு – கூரை மேல் பகுதி மற்றும் இதர பகுதிகள்.
உள்ளுர் காற்று, நீர் மற்றும் நில மாசுபாட்டை குறைத்தல்.
அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகள்
வீடு இல்லாத அனைத்து ஏழை மக்களுக்கும், மோசமான வீடுகளில் வசித்து வரும் அனைத்து ஏழை மக்களுக்கும் பக்காவான வீடுகள்.
வீட்டுக் குழாய் இணைப்புடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குழாய் நீர், குடி நீர்.
உட்புறம் மூடிய வடிகால்களுடன் அனைத்து பருவநிலை சாலைகள்.
பிரதான சாலை வலையமைப்புடன் அனைத்து பருவ சாலை இணைப்பு.
மாற்று எரிசக்தி ஆதாரங்களிலி-ருந்து, குறிப்பாக சூரிய எரி சக்தியிலி-ருந்து, அனைத்து வீடுகளுக்கும் மற்றும் தெரு விளக்குகளுக்கும் மின்னிணைப்பு.
அங்கன்வாடிகள், பள்ளிக்கூடங்கள், சுகாதார நிலையங்கள், கிராம பஞசாயத்து அலுவலகம் மற்றும் நூலகங்கள் போன்ற பொது நிறுவனங் களுக்கு பக்கா உள்கட்டமைப்பு வசதி.
சமூக கூடங்கள், சுய உதவிக் குழு கூட்டமைப்பிற்குரிய கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் இடுகாடுகள் – சுடுகாடுகள் உள்ளிட்ட குடியுரிமைக்குரிய வசதிகள்.
கிராம சந்தைகள்.
டஉந கடைகளுக்கு உள் கட்டமைப்பு வசதி.
குறு சிறிய வங்கிகள் / அஞ்சல் அலுவலகங்கள்.
அகன்ற வரிசை அலைக்கற்றை இணைப்பு மற்றும் பொது சேவை மையங்கள்.
தொலைதொடர்பு இணைப்பு.
பொது இடங்களில் ஈஈபயக்கள்.
சமூக பாதுகாப்பு அனைத்து தகுதி வாய்ந்த குடும்பங் களுக்கும் ஓய்வூதியம், வயது முதிர்வு, உடல் ஊனம் (மாற்றுத்திறன்) மற்றும் விதவை ஓய்வூதியம்.
ஆம் ஆத்மி பீம யோஜனா போன்ற காப்பீடு திட்டங்கள்.
உடல் நலக் காப்பீடு – தநஇவ.
டஉந – தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் உலகளாவிய அணுக்கம்.
நல்ல ஆட்சி (நல்ல ஆளுமை)
பலமான மற்றும் கடமைப் பொறுப்புடன் கிராம பஞ்சாயத்துகள் மற்றும் செயல் தீவர கிராம சபைகள் மூலம் உள் ஜனநாயகத்தை பலப்படுத்துதல்.
சிறந்த சேவை வழங்கலில் பயன் தரும் மின் ஆளுமை.
அனைவருக்கும் அட்டைகள் மஒஉஆஒ அட்டைகள் வழங்குதல்.
அரசு மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் நேரந்தவறாமல் குறித்த நேரத்தில், ஒழுங்கு முறையாக வருகை புரிவதை உறுதி செய்தல்.
துறையின் குடி மக்கள் சாசனத்திற்கேற்ப குறித்த நேரத்தில் சேவை வழங்குதல்.
ஒவ்வொரு கிராம சபைக்கு முன்பும் மகளிர் கிராம சபைகளை கூட்டுதல்.
ஓராண்டில் குறைந்தது 4 முறை ஒரு கிராம சபை கூட்டுதல்.
ஒவ்வொரு காலாண்டிற்கும் பால சபைகள் கூட்டுதல்.
திட்டம் செயல்படுத்துதல் தொடர்பான அனைத்து தகவலையும் பொது இடத்தில் மற்றும் சுவரில் எழுதுதல், அறிவிப்புப் பலகையில் உள்ளுர் மொழியில் முனைப்பாக வெளியிடுதல். இதில் பயனாளிகள் பட்டியல், இனவாரியான வரவு செலவு விவரங்கள் மற்றும் கட்டாயமாக இடம் பெறுதல் வேண்டும்.
ஒரு தகவல் தரும் மையமாக கிராம பஞ்சாயத்து செயல்படுகிறது.
பின்வரும் வகையில், மக்கள் தாக்கல் செய்யும் குறைகள் மீது குறித்த நேரத்தில் தீர்வு காணப்படுதல் வேண்டும்:
அனைத்து தன்மையுடைய குறைகளும் கிராம பஞ்சாயத்திடம் / பொறுப்பு அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும் மற்றும் அதற்கு தேதியிட்ட ரசீது கொடுக்கப்படுதல் வேண்டும்.
எழுத்துருவிலான பதிலுடன் சேர்த்து மூன்று வாரங்களுக்குள் குறைகள் தீர்க்கப்படுதல் வேண்டும்.
குறைகள் தெரிவிக்கப்படுவது மற்றும் தீர்க்கப்படுவதற்கான மேடைகள் நிறுவமையப்படுத்தப்பட்டு, அவை கிராம பஞ்சாயத்தால் ஒருங்கிணைக்கப் படுதல் வேண்டும். கிராம சபையால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் அரையாண்டு சமூக தணிக்கை, ஙஏசதஊஏஆவால் ஏற்பாடு செய்யப்படும்.