பெண்கள் IAS கனவை சாத்தியப்படுத்தும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி - உத. வைஷ்ணவி, இயக்குனர், சங்கர் IAS அகாடமி

/idhalgal/general-knowledge/sankar-ias-women-make-ias-dream-possible-academy

த்தியக் குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குடிமைப் பணித் தேர்வுகளானது இந்தியாவில் நடைபெறும் தேர்வு களிலேயே மிகவும் சிறப்பும் முக்கியத் துவமும் வாய்ந்தது ஆகும். இத்தேர்வின் மூலமாகவே, நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை வழி நடத்துவதற்கான சரியானவர்கள் இனங்கண்டு தெரிவு செய்யப்படுகின்றனர்.

aa

ஐ.ஏ.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ். மற்றும் ஏனைய குரூப் ஆ மற்றும் இ பணிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் இந்தக் குடிமைப் பணித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளை அடையும் கனவோடு ஆண்டுதோறும் கிட்டத் தட்ட 9 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இவர்களி

த்தியக் குடிமைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் குடிமைப் பணித் தேர்வுகளானது இந்தியாவில் நடைபெறும் தேர்வு களிலேயே மிகவும் சிறப்பும் முக்கியத் துவமும் வாய்ந்தது ஆகும். இத்தேர்வின் மூலமாகவே, நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை வழி நடத்துவதற்கான சரியானவர்கள் இனங்கண்டு தெரிவு செய்யப்படுகின்றனர்.

aa

ஐ.ஏ.எஸ்., ஐ.ஏ.எஸ்., ஐ.எஃப்.எஸ். மற்றும் ஏனைய குரூப் ஆ மற்றும் இ பணிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் இந்தக் குடிமைப் பணித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளை அடையும் கனவோடு ஆண்டுதோறும் கிட்டத் தட்ட 9 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இவர்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே காணப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மொத்த விண்ணப்பதாரர்களுள் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தைக் கூடத் தாண்டவில்லை என்பதே நிதர்சனம். இவர்களில் 40 சதவீதம் பெண்களே முதல் நிலைத் தேர்வை எழுது கிறார்கள். அவர்களிலும் 2-3 சதவீதம் பெண்களே முதன்மைத் தேர்வுக்குத் தேர்வாகின்றனர்.

நேர்முகத் தேர்வை வென்று இறுதிப் பட்டியலில் இடம்பெறும் பெண்களின் எண்ணிக்கையானது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் நான்கில் ஒரு பங்குதான் என்கிறது யு.பி.எஸ்.சியின் ஆண்டறிக்கை.

தேர்வுக்காக விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே தேர்வின் அடுத்தடுத்த நிலைகளில் வெற்றிபெறும் பெண்களின் பங்கேற்பும் இறுதிப் பட்டியலில் இடம்பெறக் கூடிய சாதனைப் பெண்களின் எண்ணிக்கையும் உயரும்.

குடிமைப் பணித் தேர்வுகளில் பெண்களின் பங்கேற்பும் சாதனையும் குறைவாக இருப்பதற்குப் பல்வேறு சமூகப் பொருளாதாரச் சிக்கல்கள் அடிப்படையாக உள்ளன. இவை பெண்களின் சாதனைகளுக்குச் சவாலாக அமைந்துள்ளன.

நெருப்பாற்றில் நீந்தி வெற்றி பெறுவது போல இந்தச் சவால்களை அவர்கள் எதிர்கொண்டு குடிமைப் பணித் தேர்வுகளில் வெல்வதற்கு உறுதுணையாக சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி திகழ்கிறது.

2004-ஆம் ஆண்டில் திரு. சங்கர் அவர் களால் சென்னை அண்ணாநகரில் தொடங்கப் பெற்ற சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி தற்போது சென்னை-

அடையாறு, திருவனந்தபுரம், பெங்களூரு, சேலம், திருச்சி, மதுரை, நாமக்கல், கோயம்புத்தூர், திருவாரூர் என பல்வேறு நகரங்களில் தன் கிளை களினை நிறுவியுள்ளது.

ias

இதுவரை 1000-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளது. 2018-ஆம் ஆண்டில் குடிமைப் பணித் தேர்வுகளில் அகில இந்திய அளவில் வென்ற 759 பேரில் 126 பேர் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் மாணவர்களாவர்.

இதே போன்று சமூகப் பொருளாதார சிக்கல்களினால் தங்களது கனவை நனவாக்க இயலாமல் தவிக்கும் பெண்களும் வெற்றி பெற்று சாதனை படைத்திடும் வகையில் அவர்களுக் கென்று சங்கர் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட உள்ளன.

சங்கர் நினைவு கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளையில் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக் காக இடஒதுக்கீடும் உண்டு. இந்த நல்வாய்ப்பினை பெண்கள் பயன்படுத்திக் கொண்டு சாதனைக்கு தடையாக இருக்கும் தடைக்கற்களை தகர்த்து எறிய வேண்டும்.

இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் நாட்டின் உயர் நிர்வாகத்தில் பெண்களின் பங்கெடுப்பு என்பது ஆணுக்குச் சரிசமமாக இல்லாத சூழலே நிலவுகின்றது. இந்நிலை மாறக் குடிமைப்பணித் தேர்வுகளில் பெண்களின் பங்கேற்பும் சாதனையும் அதிகரிக்க வேண்டும். இதற்கு சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி உறுதுணையாக நிற்கும்.

gk011019
இதையும் படியுங்கள்
Subscribe