த்திய அரசின் சார்பில், இந்தியாவின், 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த படைப்புகளுக்கு, சாகித்ய அகாடமி விருதுகளை வழங்குகிறது. விருதாளர் களுக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கம், செப்பு பட்டயம், பொன்னாடை ஆகியவை, டெல்-லியில் நடக்க உள்ள விழாவில் வழங்கப்படும்.

அந்த வகையில், 2024-ஆம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் வெளியானது.

அதில் 'திருநெல்வே-லி எழுச்சியும், வ.உ.சி.,யும்- 1908' என்ற ஆய்வு நூலை எழுதிய தமிழ் பேராசிரியர் ஏ.ஆர்.வெங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

svs

1908 மார்ச் 13-இல் வ.உ.சி., கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆங்கிலேய அரசு, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மக்கள் மீது வரி விதிக்கப்பட்டது. அதற்கு முன்போ பின்போ சுதந்திர போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம்.

ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.

Advertisment

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர் களுள் ஒருவரான வெங்கடாசலபதி, புதுடெல்-லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாறு பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.

சென்னை, வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியரான இவர், வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன்,

உ.வே.சா., எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார் என கடந்த நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளின் பரிமாணங்களை ஆவணப்படுத்தி யுள்ளார்.

Advertisment

அந்தக் காலத்தில் காப்பி இல்லை, ஆஷ் அடிச்சுவட்டில், வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 Who Owns That Song?: the Battle for Subramania Bharati's Copyright, Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the British Maritime Empire உட்பட தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியும் பதிப்பித்தும் உள்ளார்.

ஏ.ஆர். வெங்கடாசலபதி பெற்ற விருதுகள்

2021-ஆம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது.

2021-2022-ஆம் ஆண்டுகளில் மகாகவி பாரதியார் விருது.

கோயம்புத்தூர், உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் இவருக்கு 2023-ஆம் ஆண்டிற்கான டாக்டர் நல்ல பழனிசாமி பிற துறைத் தமிழ்த் தொண்டர் விருது வழங்கியது.