* சாகித்ய அகாடமி விருது (SahityaAkademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற் குரிய விருதாகும்.
* பரிசுத்தொகையாக 1 இலட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.
* இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
* சாகித்ய அகாடம

* சாகித்ய அகாடமி இந்திய அரசினால், 1954, மார்ச் 12-இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு.
* இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாடமி.
* இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம் களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாடமி.
* இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப் படுத்துவது போன்ற பல பணிகளை சாகித்ய அகாடமி செய்து வருகிறது.
* இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப் படுகின்றன எஸ். ராமகிருஷ்ணன் தமிழ் இலக்கியத்துக்கான 2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது சஞ்சாரம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கரிசல் பூமியின் பின்னணியில் அமைந்திருக்கும் நாதஸ்வரக்காரர் களின் வாழ்க்கை பற்றியது இந்த நாவல்.
விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங் கிணறு என்ற ஊரில் பிறந்தவரான எஸ். ராமகிருஷ்ணன் நாவல்கள், ஏராளமான சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள், திரைப்பட நூல்கள், குழந்தைகள் நூல்கள் ஆகியவற்றையும் எழுதியுள்ளார்.
இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, கன்னடம், வங்காளம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஆங்கில இலக்கியம் கற்ற எஸ்.ராமகிருஷ்ணன் கல்லுரி நாட்களில் எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய முதல்கதை கபாடபுரம். அது கையெழுத்து பிரதியாக நண்பர்களால் வாசிக்கபட்டு தொலைந்து போனது. பின்னர் இவரது முதல்கதை பழைய தண்டவாளம் கணையாழியில் வெளியானது.
பெரும் மாற்றத்தை உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணன் 25 ஆண்டு காலமாக தொடர்ந்து முழு நேரமாக எழுதி வருகிறார்.