சாகித்ய அகாடமி விருது

/idhalgal/general-knowledge/sagitta-academy-award

சாகித்ய அகாடமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளி களுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப் படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

sa

  • பரிசுத்தொகையாக 1 இலட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.
  • இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப் படுகிறது.
  • சாகித்ய அகாடமி இந்திய அரசினால், 1954, மார்ச் 12-இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு.
  • இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்

சாகித்ய அகாடமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளி களுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப் படும் மதிப்பிற்குரிய விருதாகும்.

sa

  • பரிசுத்தொகையாக 1 இலட்சம் ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன.
  • இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப் படுகிறது.
  • சாகித்ய அகாடமி இந்திய அரசினால், 1954, மார்ச் 12-இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு.
  • இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாடமி.
  • இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாடமி.
  • இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்பு களை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளி யிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை சாகித்ய அகாடமி செய்து வருகிறது.
  • இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளைத் தேர்வு செய்து சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
  • சோ.தர்மன்
  • 2019-ஆம் ஆண்டின் தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எழுதிய "சூல்' என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. உலகில் முக்கியப் பிரச்சினை தண்ணீர் தான். இங்குள்ள கண்மாய்களின் இன்றைய நிலை குறித்து "சூல்' நாவல் பேசுகிறது.
  • தமிழகத்தின் தென்கோடியிலுள்ள மக்களின் வேளாண்மையோடு ஒன்றரக் கலந்த வாழ்க்கை யையும், அவர்களது இயற்கை சார்ந்த அறிவையும், நீர் மேலாண்மையில் அவர்களுடைய ஆழ்ந்த புலமையையும், நவீன அறிவியலால் அவை யெல்லாம் காணும் சரிவுகளையும் அந்த நிலத்தின் மணத்தோடு குறிப்பிடுகிறது சூல் நாவல்.
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் அடுத்த உருளைகுடி கிராமத்தைச் சேர்ந்த இவர் 1953, ஆகஸ்ட் 8-இல் பிறந்தார். இயற்பெயர் சோ. தர்மராஜ். பெற்றோர் சோலையப்பன்-பொன்னுத்தாய். 1976-1996 வரை கோவில்பட்டியில் உள்ள நூற்பாலையில் வேலை பார்த்துள்ளார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவியும், வினோத் மாதவன், விஜய சீனவாசன் என்ற 2 மகன்களும் உள்ளனர். சோ.தர்மன் இதுவரை 13 நூல்கள், 8 சிறு கதைதொகுப்புகள், 4 நாவல்கள் எழுதி யுள்ளார். வில்லிசை குறித்தும் ஆய்வு நூல் வெளியிட்டுள்ளார்.
  • கரிசல் வட்டார எழுத்தாளர் கி.ரா. என அழைக்கப் படும். கி. ராஜநாராயணனின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு எழுத்துப்பணியை தொடங்கினார் சோ. தர்மன்.
  • ஏற்கெனவே தமிழக அரசு சார்பில் 2 முறை விருது பெற்றுள்ளார். இவரது "கூகை' நாவல் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தால் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் "மூங்கா' என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • இவரது படைப்புகள் பல்வேறு பல்கலைக்கழகங் களில் பாடமாக உள்ளன. இவரது படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. இவரது படைப்புகளை ஆய்வு செய்து 62 பேர் எம்.ஃபில். பட்டமும், 43 பேர் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றுள்ளனர்.
gk010120
இதையும் படியுங்கள்
Subscribe