ஓபெக் எனப்படும் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு தான் சர்வதேச அளவில் முதன்மையாக கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையை முடிவு செய்துவருகிறது. இந்த கூட்டமைப்பு 14 முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்.
ஓபெக் எண்ணெய் உற்பத்தி அளவையும் விலையையும் நிர்ணயித்து வந்தாலும். உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையும் சச்சரவும், வளைகுடா போரும் விலையில் பல ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிட்டன.
பி.ஜே.பி அரசு 2017 ஜூன் மாதம் 16 முதல் மாறும் எரிபொருள் விலை என்ற புதிய முறையை அமல்படுத்தியது. இதன்படி தினமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாறுதல் ஏற்படும்.
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் காலை 6 மணிக்கு அன்றைய பெட்ரோல், டீசல் விலை மாறுதலடையும். இந்த புதிய விலை கொள்கையை கொண்டுவந்து எரிபொருள் மானியத்தை முழுவதுமாக நிறுத்திவிட்டது பி.ஜே.பி அரசு.
பி.ஜே.பி அரசு மாறும் எரிப்பொருள் விலை கொள்கையை அமல்படுத்தி இருந்தாலும் அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் தலையிட்டு மாற்றி விடுகிறதாக ஊடகங்கள் புகார் கூறின. ஆனால் இதே அரசு 2014 நவம்பர் முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் ஒன்பது முறை மத்திய கலால் வரியை உயர்த்தியுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது எண்ணெய் நிறுவனம் நிர்ணயிக்கும் விலை, மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி சேர்ந்தே நிர்ணயிக்கப் படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையும் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணமும் ச
ஓபெக் எனப்படும் எண்ணெய் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு தான் சர்வதேச அளவில் முதன்மையாக கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விலையை முடிவு செய்துவருகிறது. இந்த கூட்டமைப்பு 14 முக்கிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்.
ஓபெக் எண்ணெய் உற்பத்தி அளவையும் விலையையும் நிர்ணயித்து வந்தாலும். உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட சண்டையும் சச்சரவும், வளைகுடா போரும் விலையில் பல ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்திவிட்டன.
பி.ஜே.பி அரசு 2017 ஜூன் மாதம் 16 முதல் மாறும் எரிபொருள் விலை என்ற புதிய முறையை அமல்படுத்தியது. இதன்படி தினமும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாறுதல் ஏற்படும்.
நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் காலை 6 மணிக்கு அன்றைய பெட்ரோல், டீசல் விலை மாறுதலடையும். இந்த புதிய விலை கொள்கையை கொண்டுவந்து எரிபொருள் மானியத்தை முழுவதுமாக நிறுத்திவிட்டது பி.ஜே.பி அரசு.
பி.ஜே.பி அரசு மாறும் எரிப்பொருள் விலை கொள்கையை அமல்படுத்தி இருந்தாலும் அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் தலையிட்டு மாற்றி விடுகிறதாக ஊடகங்கள் புகார் கூறின. ஆனால் இதே அரசு 2014 நவம்பர் முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் ஒன்பது முறை மத்திய கலால் வரியை உயர்த்தியுள்ளது.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலையானது எண்ணெய் நிறுவனம் நிர்ணயிக்கும் விலை, மத்திய அரசின் வரி, மாநில அரசின் வரி சேர்ந்தே நிர்ணயிக்கப் படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலையும் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணமும் சேர்த்து சுத்திகரிப்பு செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இப்போது இந்த பெட்ரோல் மீது மத்திய அரசின் கலால் வரி லிட்டருக்கு ரூ. 20 விதிக்கப்படுகிறது. தமிழக அரசு மதிப்பு கூட்டு வரியாக லிட்டருக்கு 22 ரூபாய் விதிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாடுக்காக விதிக்கபடும் வரி லிட்டருக்கு 25 பைசாவும் விற்பனை கமிஷன் லிட்டருக்கு 3 ரூபாய் 60 பைசாவும் ஆக மொத்தம் சேர்ந்து 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 83.88 பைசா ஆகும்.
மத்திய அரசு இந்தியாவில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவந்துவிட்டது.
ஆனால் பெட்ரோல், டீசல் மட்டும் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் கொண்டு வராமல் இருக்கிறது. பெட்ரோல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால், 12 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பெட்ரோல் விலை ரூ. 38.10 பைசாவாக இருக்கும். 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பெட்ரோல் விலை இருக்கும். ரூ 40.05 பைசாவாக இருக்கும், 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பில் பெட்ரோல் விலை ரூ.43.44 பைசாவாக இருக்கும்.
இப்போது இரண்டு நெருக்கடிகளை இந்தியா சந்தித்து வருகிறது. ஒன்று தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏறிக்கொண்டே செல்கின்றது. இன்னும் ஏற வாய்ப்புள்ளது. இரண்டு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகின்றது.
இது நாட்டின் பொருளாதாரத்தில் வருவாய் பற்றாக்குறையை அதிகரிக்கும். இன்னொருபுறம் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதால், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அதிக செலவு ஏற்பட்டு, வர்த்தக பற்றக்குறை ஏற்படும். இது பொருளாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.
இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வினால் போக்குவரத்துக்கான செலவு தொடர்ந்து அதிகமாகும். பயணிகள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து கட்டணம், கப்பல் சரக்கு கட்டணம் என அனைத்தும் அதிக செலவாகும். குறிப்பாக சரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பதால் அனைத்து உணவுப் பொருள்களும் கடுமையாக விலை ஏறும். இது நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கும்.
பண வீக்கம் என்பதனை சுருக்கமாகச் சொன்னால், கடந்த ஒர் வருடமாக ரூபாய் 100 என்ற பொருள், இன்று ரூபாய் 120 என்ற நிலைக்கு உயர்ந்தால் அது பணவீக்கம். அன்றும் அதே 100 ரூபாய் மதிப்புதான். இன்றும் அதே ரூ.100 மதிப்புதான். ஆனால் பொருளின் விலை மட்டும் 20 அதிகரித்துவிடும். பொருள் மற்றும் ரூபாய் ஆகிய இரண்டின் மதிப்பும் சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை, அதில் ஏற்றமோ இறக்கமோ என எது ஏற்பட்டாலும் பொருளாதாரத்தில் பிரச்சனையாகும்.
பணவீக்கத்தால் பொருளின் மதிப்பு கூடி மக்களின் வாங்கும் சக்தி குறையும்.
இதன் விளைவு மக்கள் பொருளை பயன்படுத்துவதைத்தான் குறைப்பார்கள். பொருளின் பயன்பாடு குறைந்தால், உற்பத்தி குறையும், வேலைவாய்ப்பு குறைந்து போகும்.
பணவீக்கம் அதிகரிப்பதால் அத்தியாவசியப் பொருட்கள் அதிகளவில் விலை ஏற ஆரம்பிக்கும். அதேபோல சிறிய தொழில் நிறுவனங்களின் உற்பத்திக்கான மூலதன செலவு அதிகமாகும்.
சிறுதொழில்கள் முடங்குவதால் வேலையின்மை ஏற்படும். இன்னொருபுறம் விவசாயிகளுக்கான டீசல் விலை உயர்வு, உரம், யூரியா விலை உயர்வு அதிகரித்து விவசாயம் குறைந்து போகும். இதனால் உணவு பொருள்கள் அனைத்தும் தாறுமாறாக விலை ஏறும்.
ஆக பெட்ரோல், டீசல் உயர்வால் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி அதிகரித்து நாட்டின் தொழில் வளர்ச்சியும் விவசாய உற்பத்தியும் குறைந்து போகும்.
பணமதிப்பு நீக்கத்தால் ஏற்கனவே சரிந்துபோன பொருளாதார வளர்ச்சி எரிபொருள் பணவீக்கத்தால் பெரிய அளவில் பொருளாதார சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் 64 ரூபாயாக இருந்தது, தற்போது 72 ரூபாயாகியிருக்கிறது. ""ரூபாயின் மதிப்புச் சரிவுக்குப் புறக் காரணங்கள்தான் மூலம்'' என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருக்கிறார். அதிலும் குறிப்பாக, செலாவணியில் ஊக வியாபாரம் செய்பவர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தை மையமாக வைத்துச் செயல்படுகின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் கணிசமான அளவு வெளிநாடுகளின் செலாவணிகள் கையிருப்பில் உள்ளன. உடனடியாக நமக்குப் பெருத்த தட்டுப்பாடு அல்லது நெருக்கடி வராது. நம்முடைய கவலையெல்லாம் இப்படி ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிகிறதே என்பதைப் பற்றித்தான். இப்படியே தொடர்ந்தால், உள்நாட்டுப் பொருளாதாரத்தை இது பெரிதும் பாதிக்கத் தொடங்கலாம்.
அத்துடன் இறக்குமதியாகும் அவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். டாலர் கணக்கில் கடன் வாங்கிய இந்திய நிறுவனங்கள் அதிக வட்டி செலுத்த நேரும். இதனால் அவற்றின் லாபம் குறையும், செலவு அதிகமாகும்.
மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் இணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஏற்கெனவே, அவசியமில்லாத இறக்குமதிகளைத் தவிர்க்கவும் அவசியமானவற்றின் அளவைக் கட்டுப்படுத்தவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல்-டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசும் மதிப்புக்கூட்டு வரியை (வாட்) மாநில அரசுகளும் குறைக்க வேண்டும். சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை குறைவாக இருந்தபோது, அரசுக்கு வருவாய் தேவை என்பதற்காகத்தான் மத்திய அரசு அதன் மீது உற்பத்தி வரியை அதிகமாக விதித்தது. எனவே, உற்பத்தி வரியைக் குறைத்தாக வேண்டிய தார்மிகக் கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது.
அடுத்ததாக, ரிசர்வ் வங்கி தன் கைவசம் வைத்திருக்கும் டாலர்களைச் சந்தையில் விடுவிக்கலாம். இதனால் சந்தையில் டாலர் கிடைப்பது அதிகமாகி ரூபாயின் மதிப்பு சரிவது கட்டுப்படலாம். ஆனால், கையிருப்பில் உள்ள டாலர்களை அதிகம் செலவிட்டால் பிறகு நிலைமை சிக்கலாகும்போது நெருக்கடி அதிகமாகி விடும். எனவே, எச்சரிக்கையுடன்தான் இதைச் செயல்படுத்த வேண்டும்.
இப்போது பணவீக்க விகிதம் 4%. ரூபாயின் மதிப்பு இப்படியே இருந்தால் இது மேலும் அதிகரிக்கும். இதனால் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு (எம்பிசி) கூடி வங்கிகளில் டெபாசிட்டு களுக்கான வட்டியை மேலும் உயர்த்த நேரிடலாம். இது பணவீக்க விகிதத்தையும் கட்டுக்குள் கொண்டுவரலாம். இதனால், பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும். காரணம், நிறுவனங்களின் லாபம் குறையும். நிறுவனங்களின் லாபம் குறையும் என்றால், அந்நிய முதலீட்டா ளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து பெரும் எண்ணிக்கையில் விலகுவார்கள். அது ரூபாயின் மதிப்பை மேலும் சரித்துவிடும்.