Advertisment

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் இடஒதுக்கீடு

/idhalgal/general-knowledge/reservation-economically-weaker-sections

3:2 பெரும்பான்மையுடன், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், அரசியலமைப்பு (103-வது) திருத்தத்தின் செல்லுபடியை உறுதி செய்துள்ளது, இந்த திருத்தம் ஜனவரி 2019-இல் நடைமுறைக்கு வந்தது. இந்தத் திருத்தம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது, மேலும் சவால் ஆகஸ்ட் 2020-இல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச்க்கு பரிந்துரைக்கப்பட்டது.

Advertisment

ஞஇஈ அல்லாத மற்றும் நஈ/நப அல்லாத மக்களிடையே பொருளாதார ரீதியாக ந-லிவடைந்த பிரிவினருக்கு (ஊரந) 10 சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்குவதற்காக 103-வது திருத்தம் அரசியலமைப்பில் 15(6) மற்றும் 16(6) ஆகிய பிரிவுகளைச் சேர்த்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த திருத்தம் அரசியலமைப்பை மாற்றியது மற்றும் ‘உயர் சாதிகள்’ அல்லது ‘பொது பிரிவு’ என்று அழைக்கப்படும் ஏழைகளுக்கான ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.

உயர்கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கையிலும், மத்திய அரசு வேலை களில் ஆரம்ப ஆட்சேர்ப்புகளிலும் இந்த ஒதுக்கீடு கிடைக்கிறது. பொருளாதாரப் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு இந்தத் திருத்தம் அதிகாரம் அளித்துள்ளது.

அடிப்படையில், 103-வது திருத்தம் அரசியலமைப்பின் “அடிப்படை கட்

3:2 பெரும்பான்மையுடன், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், அரசியலமைப்பு (103-வது) திருத்தத்தின் செல்லுபடியை உறுதி செய்துள்ளது, இந்த திருத்தம் ஜனவரி 2019-இல் நடைமுறைக்கு வந்தது. இந்தத் திருத்தம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது, மேலும் சவால் ஆகஸ்ட் 2020-இல் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச்க்கு பரிந்துரைக்கப்பட்டது.

Advertisment

ஞஇஈ அல்லாத மற்றும் நஈ/நப அல்லாத மக்களிடையே பொருளாதார ரீதியாக ந-லிவடைந்த பிரிவினருக்கு (ஊரந) 10 சதவீதம் வரை இடஒதுக்கீடு வழங்குவதற்காக 103-வது திருத்தம் அரசியலமைப்பில் 15(6) மற்றும் 16(6) ஆகிய பிரிவுகளைச் சேர்த்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த திருத்தம் அரசியலமைப்பை மாற்றியது மற்றும் ‘உயர் சாதிகள்’ அல்லது ‘பொது பிரிவு’ என்று அழைக்கப்படும் ஏழைகளுக்கான ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.

உயர்கல்வி நிறுவனங்களுக்கான சேர்க்கையிலும், மத்திய அரசு வேலை களில் ஆரம்ப ஆட்சேர்ப்புகளிலும் இந்த ஒதுக்கீடு கிடைக்கிறது. பொருளாதாரப் பின்தங்கிய நிலையின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு இந்தத் திருத்தம் அதிகாரம் அளித்துள்ளது.

அடிப்படையில், 103-வது திருத்தம் அரசியலமைப்பின் “அடிப்படை கட்டமைப்பை” மீறுகிறது என்ற வாதத்தின் அடிப்படையில் சவால் இருந்தது. மைல்கல் தீர்ப்பு வழங்கப்பட்ட கேசவானந்த பாரதி வழக்கில் (1973) உச்ச நீதிமன்றம் அடிப்படை கட்டமைப்பின் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் அரசியலமைப்பின் சில அம்சங்கள் மீற முடியாதவை, அவற்றை மாற்ற முடியாது என்று தீர்ப்பளித்தது.

Advertisment

இந்த வழக்கின் முதன்மை வாதம் சமூக ரீதியாக பின்தங்கிய குழுக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும், மேலும் 103-வது திருத்தம் பொருளாதார நிலையின் அடிப்படையில் சிறப்பு பாதுகாப்புகளை உறுதியளித்து இதி-லிருந்து விலகுகிறது.

நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி மற்றும் எஸ்.பி பார்திவாலா ஆகிய மூன்று நீதிபதிகள் 103-வது திருத்தத்தின் செல்லுபடியை உறுதி செய்துள்ளனர்.

நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, பொருளாதார அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதில்லை என்றும், ஞஇஈகள் மற்றும் நஈ/நபக்கள் இடஒதுக்கீட்டுக்கான 103-வது திருத்தத்தில் பிரிவு 15(4) மற்றும் 16(4) ஆகியவற்றில் உள்ள வகுப்புகளை விலக்குவது, அடிப்படை கட்டமைப்பை சேதப்படுத்தவில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி பேலா திரிவேதி, நீதிபதி மகேஸ்வரியுடன் உடன்பட்டார். ஊரந- ஐ ஒரு தனி வகுப்பாகக் கருதுவது ஒரு நியாயமான வகைப்பாடு என்றும், சமத்துவமற்றவர்களை சமமாக நடத்துவது அரசியலமைப்பின் கீழ் சமத்துவக் கோட்பாட்டை மீறும் என்றும் அவர் தீர்ப்பளித்தார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு, சமூகத்தின் பெரிய நலனுக்காக இடஒதுக்கீடு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று நீதிபதி பேலா திரிவேதி கூறினார்.

நீதிபதி எஸ்.பி பார்திவாலா, நீதிபதி மகேஸ்வரி மற்றும் நீதிபதி திரிவேதி ஆகியோருடன் உடன்பட்டார். “இட ஒதுக்கீடு ஒரு முடிவல்ல, அது ஒரு ஆதாயமாக மாற அனுமதிக்கக் கூடாது” என்றனர்.

சிறுபான்மையினரின் பார்வை நீதிபதி எஸ் ரவீந்திர பட் மற்றும் இந்திய தலைமை நீதிபதி யு.யு லலி-த் ஆகியோரிடமிருந்து வந்துள்ளது. நீதிபதி ரவீந்திர பட், பொருளாதார அளவுகோல்களில் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பை மீறவில்லை என்றாலும், நஈ/நப/ஞஇஈ-ஐ ஊரந வரம்பி-லிருந்து விலக்குவது அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும் என்று கூறினார். தலைமை நீதிபதி லலி-த், நீதிபதி ரவீந்திர பட்டின் தீர்ப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

பெரும்பான்மை தீர்ப்பு உச்சவரம்பைத் தாக்கியதாகத் தெரிகிறது. 50% உச்சவரம்பு வரம்பின் அடிப்படையில் ஊரந- க்கான இடஒதுக்கீடு அடிப்படை கட்டமைப்பை மீறாது, ஏனெனில் உச்சவரம்பு வரம்பு நெகிழ்வற்றது அல்ல என்று நீதிபதி மகேஸ்வரி கூறினார்.

இருப்பினும், சிறுபான்மையினர் தரப்பைக் கருத்தில் கொண்டு நீதிபதி ரவீந்திர பட், 50% மீறலை அனுமதிப்பது பிரிவினைக்கு வழிவகுக்கும் என்றும், சம உரிமைக்கான விதி இடஒதுக்கீடு உரிமையாக மாறும் என்றும் கூறினார்.

உச்ச நீதிமன்றம் 1992-இல் முக்கிய இந்திரா சாவ்னி தீர்ப்பின் மூலம் விதிக்கப்பட்ட 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை மீண்டும் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டியது. அதன் அடிப்படையில், குறிப்பிட்ட குழுக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் பல மாநிலங்களின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல சிக்கல்கள் இப்போது மீண்டும் திறக்கப்படலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பள்ளி, கல்லூரி சேர்க்கைக்கான ஊரந அளவுகோல்கள் 103-வது திருத்தத்தின் அடிப்படையில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (உர்டப) ஜனவரி 31, 2019 அன்று அறிவிக்கப்பட்டது.

2019 அறிவிப்பின்படி, நஈ, நப மற்றும் ஞஇஈகளுக்கான இடஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் வராதவர் மற்றும் அவரது குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், இடஒதுக்கீட்டின் நன்மைக்காக ஊரந என அடையாளம் காணப்பட வேண்டும். அறிவிப்பில் “வருமானம்” என்ன என்பதைக் குறிப்பிடுகிறது, மேலும் சில நபர்களின் குடும்பங்கள் குறிப்பிட்ட சொத்துக்களை வைத்திருந்தால், ஊரந பிரிவில் இருந்து விலக்கப்பட்டது.

2021 அக்டோபரில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஊரந-க்கான இடஒதுக்கீட்டிற்கான சவாலை விசாரித்த உச்ச நீதிமன்றம், ரூ.8 லட்சம் எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது என்று அரசிடம் கேட்டது. வருமான அளவுகோலை மறுபரிசீலனை செய்வதாகவும், இதற்காக 3 பேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இந்த ஆண்டு ஜனவரியில், குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டது, அதில் “தற்போதைய சூழ்நிலையில், ஊரந-ஐ நிர்ணயிப்பதற்கு 8 லட்சம் ரூபாய் ஆண்டு குடும்ப வருமானத்தின் வரம்பு நியாயமானது” மற்றும் “தக்கவைக்கப்படலாம்” என்று கூறியது. எவ்வாறாயினும்,” ஊரந… வருமானத்தைப் பொருட்படுத்தாமல், குடும்பம் 5 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் அதற்கு மேல் உள்ள நபரை விலக்கலாம்” என்று குழு கூறியது. மேலும், “குடியிருப்பு சொத்து அளவுகோல்கள் முற்றிலும் அகற்றப்படலாம்” என்று குழு பரிந்துரைத்தது.

gk011222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe