தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013-இன் கீழ் நாட்டில் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடையி-லிருந்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மானிய விலையில் ரேஷன் பொருட்களை வாங்குவதை உறுதி செய்வதுONORC திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

உதாரணமாக, உத்தரபிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்திலி-ருந்து வேலைக்காக ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி மும்பையில் பி.டி.எஸ் சலுகைகளை அணுக முடியும். தனக்கு தேவையான உணவுப் பொருட்களை தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த புலம் பெயர் தொழிலாளி பெற முடியும் என்றாலும் கூட, சொந்த ஊரில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர் களும் தங்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை அங்குள்ள ரேசன் கடையில் இருந்து பெற இயலும்.

இந்த சீர்திருத்தத்தை தொன்மையான பொது விநியோக அமைப்பில் (பி.டி.எஸ்) ஊக்குவிக்க, அரசு மாநிலங்களுக்கு சலுகைகளை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் போது மாநிலங்கள் கூடுதல்கடன் வாங்குவதற் கான முன்நிபந்தனையாக ONORC-ஐ அமல்படுத்த கோரியது. இந்த திட்டத்தை அமல்படுத்திய 17 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ. 37,600 கோடி கடன் வாங்க அனுமதிக்கப்பட்டது.

rr

Advertisment

ONORC என்பது தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பயனாளிகளின் ரேஷன் கார்டு, ஆதார் எண் மற்றும் மின்னணு புள்ளிகள் விற்பனை (ePoS) ஆகியவற்றை உள்ளடக்கியது. நியாய விலைக் கடைகளில் ஈபோஸ் சாதனங் களில் பயோமெட்ரிக் அங்கீகாரம் மூலம் கணினி ஒரு பயனாளியை அடையாளம் காட்டுகிறது. இந்த திட்டம் integrated Management of Public Distribution System (IM-PDS) மற்றும் Annavitran (annavitran.nic.in)) ஆகிய இரண்டு இணையதளங்களின் ஆதரவுடன் இயங்குகிறது ஒருவர் ரேஷன் கடைக்கு செல்லும் போது பயோமெட்ரிக் மூலம் தன்னை அடையாளம் காட்டுகிறார்.

அன்னவிதரன் போர்ட்டலில் விவரங் களுடன் நிகழ்நேரத்துடன் பொருந்துகிறது. ரேஷன் கார்டு விவரங்கள் சரிபார்க்கப்பட்டதும், ரேஷன் கடை ஊழியர் பயனாளிகளுக்கு தேவையான ரேஷன் பொருட்களை வழங்குவார். அன்னவிதரன் போர்டல் உள்-மாநில பரிவர்த்தனைகளின் பதிவைப் பராமரிக்கிறது. இது மாவட்டங்களுக்கு உள் மற்றும் மாவட்டங்களுக்கு வெளியே நடைபெறும் ரேஷன் பொருட்கள் விநியோகத்தை பதிவு செய்கிறது. ஐஎம்-பிடிஎஸ் போர்டல் மாநிலங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை பதிவு செய்கிறது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன் படி 81 கோடி மக்கள் உணவு பொருட்களை மானிய விலையில் பெற உரிமை உண்டு. ஒரு கிலோ அரிசி ரூ. 3-க்கும், ஒரு கிலோ கோதுமை ரூ. 2-க்கும் இதர தானியங்கள் 1 கிலோ ரூ. 1-க்கும் ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் 28, 2021-ன் படி, 5.46 லட்சம் ரேஷன் கடைகள் நாட்டில் உள்ளன. ஒவ்வொரு என்.எஃப்.எஸ்.ஏ ரேஷன் கார்டு வைத்திருப்பவரும் தனது ரேஷன் கார்டு பதிவு செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள நியாய விலைக் கடையின் கீழ் ஒதுக்கப்படுவார்.

முன்னதாக, ஒரு பயனாளி தனக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைக்கு வெளியே தனக்கு தேவையான ரேஷன் பொருட்களை வாங்க இயலாது. எந்த ஒரு நியாய விலைக்கடையிலும் பொருட்களை வாங்க இந்த திட்டம் மக்களுக்கு உதவும் என்று மத்திய அரசு நினைத்தது. ரேஷன் கார்டுகளின் 100% ஆதார் இணைப்பு முடிந்தவுடன் இது சாத்தியம் என்றும் நம்பியது, மேலும் அனைத்து நியாய விலைக் கடைகளும் ஈபோஸ் சாதனங்களை கொண்டுள்ளது. (தற்போது நாடு முழுவதும் 4.74 லட்சம் சாதனங்கள் ரேஷன் கடைகளில் நிறுவப்பட்டுள்ளது) 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், ரேஷன் கார்டு பெயர்வுத்திறன் (portability) குறித்த பணிகளுக்காக 2018 ஏப்ரல் மாதத்தில், IM-PDS அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. திறமையற்ற தன்மை மற்றும் கசிவுகளால் வரலாற்று ரீதியாக சிதைக்கப்பட்ட பி.டி.எஸ்ஸை சீர்திருத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

மாநிலங்களுக்கு இடையே செயல்படும் திட்டமாகவே அறிமுகம் செய்யப் பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் கிராமங் களுக்கு திரும்பி சென்ற நிகழ்வு இந்த பட்டியலை விரைவுபடுத்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. கொரோனா சிறப்பு நிவாரண நிதி அறிவிப்பின் போது அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

அசாம், சத்தீஸ்கர், டெல்-லி மற்றும் மேற்கு வங்கம் நீங்கலாக ஏனைய 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இந்த திட்டத்தின் கீழ் இணைந்துள்ளன. இந்த பகுதிகளில் மொத்தம் 69 கோடி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் பயனாளிகள் உள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.35 கோடி பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் ONORC இன் கீழ் பதிவு செய்யப் படுகின்றன என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் கூறியுள்ளது.

ஆகஸ்ட் 2019-இல் ஞசஞதஈ தொடங்கப் பட்டதிலி-ருந்து மொத்தம் 27.83 கோடிக்கும் அதிகமான பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் (உள்-மாநில பரிவர்த்தனைகள் உட்பட) இந்த 32 மாநிலங்களில் நடைபெற்றுள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட 19.8 கோடி பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகள் கோவிட் தொற்று காலத்தில் பதிவாகி யுள்ளது என ஜூன் 3-ஆம் தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.

டெல்லி நியாய விலைக் கடைகளில் ஈபோஸ் பயன்பாட்டை இன்னும் தொடங்கவில்லை, இது ONORC - ஐ செயல்படுத்துவதற்கு ஒரு முன்நிபந்தனையாகும். மேற்கு வங்காளத்தைப் பொறுத்தவரையில், என்.எஃப்.எஸ்.ஏ அல்லாத ரேஷன் கார்டு வைத்திருப் பவர்கள் மாநில அரசு வழங்கிய ரேஷன் கார்டுகளும் ஒரு நாடு ஒரு ரேசன் அட்டை திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாட்டில் உணவுப் பொருட்களுக்கான தரத்தை நிர்ணயிக்கிறது. உணவு செறிவூட்டலையும் வரையறுக்கிறது. இது உணவின் ஊட்டச்சத்து தரத்தை மேம்படுத்துவதற்கும் பொதுமக்களுக்கு வழங்குவதற்கும் ஒரு உணவில் அத்தியாவசிய நுண்ணூட்டச் சத்துக் களின் உள்ளடக்கத்தை வேண்டுமென்றே அதிகரிக்கிறது. மேலும், சுகாதாரத்திற்கு குறைந்தபட்ச ஆபத்துடன் ஆரோக்கிய மான நன்மைகளை வழங்குகிறது.

அரிசி செறிவூட்டல் என்பது வழக்கமான அரிசியில் நுண்ணூட்டச்சத்துக்களைச் சேர்க்கும் ஒரு செயல்முறையாகும். நுண்ணூட்டச்சத்துக்கள் உணவுத் தேவைகளை மனதில் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

செறிவூட்டப்பட்ட அரிசியானது பூச்சுதல்(COATING)), நீட்டித்தல் (EXTRUSION),, தூவல் (DUSTING), பாத் (PATH) ஆகிய முறைகளில் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் நீட்டித்தல் (EXTRUSION) சிறந்த தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

எக்ஸ்ட்ரூடர் இயந்திரத்தைப் பயன்படுத்தி கலவையிலி-ருந்து செறிவூட்டப்பட்ட அரிசி கர்னல்களை தயாரிப்பது இதில் அடங்கும். அந்த அரிசி கர்னல்கள் பின்னர் வழக்கமான அரிசியுடன் கலக்கப்பட்டு செறிவூட்டப் பட்ட அரிசியை உற்பத்தி செய்கின்றன.

எக்ஸ்ட்ரூஷன் டெக்னாலஜியில், உலர்ந்த அரிசி மாவு நுண்ணூட்டச்சத்துக் களின் ப்ரீமிக்ஸ் உடன் கலக்கப்படுகிறது, மேலும் இந்த கலவையில் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. இந்த கலவை பின்னர் வெப்பம் நிறைந்த இரட்டை-ஸ்க்ரூ எக்ஸ்ட்ரூடருக்குள் செல்கிறது. பின்னர் அரிசி வடிவமாக மாற்றப்படுகிறது.

இந்த கர்னல்கள் உலர்த்தப்பட்டு, குளிர்ந்து மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. எதஃ ஆனது குறைந்தபட்சம் 12 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

அதாவது அரிசி மாவில் பொடிகளாக மாற்றப்பட்ட வைட்டமின், இரும்பு சத்து, துத்தநாக சத்து, போலிக் அமிலத்தைக் கலந்து ஈரப்பதத்து டன் கூடிய கலவை உருவாக்கப்படும். அந்தக் கலவை இயந்திரம் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசியாக மாற்றப் படும். ஆனால், இந்த அரிசியானது நேரடியாக சமைக்க முடியாது மற்ற அரிசிகளோடு சேர்த்து தான் சமைக்க முடியும்.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, செறிவூட்டப்பட்ட அரிசி கருவின் வடிவம் மற்றும் அளவு முடிந்தவரை சாதாரண அரிசியை போல இருக்க வேண்டும். தானியத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 5 மிமீ மற்றும் 2.2 மிமீ இருக்க வேண்டும் என கூறுகிறது.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மிக அதிகமாக உள்ளது. உணவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலி-ன்படி, உலகில் உள்ள வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. அதேபோல் பெண்களுக்கு அதிக அளவில் ரத்த சோகை ஏற்படுகிறது. உலகளாவிய பசி குறியீட்டில் (ஏஐஒ) 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் உள்ளது. இது "தீவிர பசி' பிரிவில் உள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு உணவுகளை செறிவூட்டுவது மிகவும் பொருத்தமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு முக்கிய உணவுகளில் அரிசியும் ஒன்று. . இந்தியாவில் தனிநபர் அரிசி நுகர்வு மாதத்திற்கு 6.8 கிலோ ஆகும். எனவே, அரிசியை நுண்ணூட்டச் சத்துக்களுடன் வலுப்படுத்துவது ஏழைகளின் உணவை நிரப்புவதற்கான ஒரு விருப்பமாகும்.

அமைச்சகத்தின் வழிகாட்டுதலி-ன்படி 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசி 1 கிலோ வழக்கமான அரிசியுடன் கலக்கப்பட வேண்டும்.

எநநஆஒ விதிமுறைகளின்படி, 1-கிலோ செறிவூட்டப்பட்ட அரிசியில் இரும்பு (28 மில்-லி கிராம்-42.5 மில்-லி கிராம்), ஃபோலிக் அமிலம் (75-125 மைக்ரோ கிராம்) மற்றும் வைட்டமின் இ-12 (0.75-1.25 மைக்ரோ கிராம்) இருக்க வேண்டும். கூடுதலாக, அரிசி நுண்ணிய ஊட்டச்சத்துக்களுடன், தனித்தனியாக அல்லது கலவையில், துத்தநாகம் (10 மில்லி- கிராம் - 15மில்லி- கிராம்), வைட்டமின் ஆ (500-750 மைக்ரோ கிராம் ஆர்.இ), வைட்டமின் இ1 (1மில்லி- கிராம் -1.5மில்-லி கிராம்), வைட்டமின் இ2 (1.25 மில்லி- கிராம்-1.75 மில்லி- கிராம்), வைட்டமின் இ3 (12.5 மில்லி- கிராம்-20 மில்-லி கிராம்) மற்றும் வைட்டமின் இ6 ஒரு கிலோவிற்கு (1.5 மில்-லி கிராம் -2.5 மில்-லி கிராம் ) இருக்க வேண்டும்.

செறிவூட்டப்பட்ட அரிசியை சமைப்ப தற்கு எந்த சிறப்பு செய்முறையும் தேவையில்லை. அரிசியை சமைப்பதற்கு முன் வழக்கம்போல் சுத்தம் செய்து கழுவ வேண்டும். இந்த அரிசி சமைத்த பின்னரும் முன்பு இருந்த அதே நுண்ணூட்டச்சத்து அளவுகளை தக்க வைத்துக் கொள்ளும்.

கிட்டத்தட்ட 2,690 அரிசி ஆலைகள் செறிவூட்டப்பட்ட அரிசி உற்பத்திக்கான கலப்பு அலகுகளை நிறுவியுள்ளன. மேலும் 14 முக்கிய மாநிலங்களில் தற்போதைய கலவை திறன் 13.67 லட்சம் டன்னாக உள்ளது. எதஃ உற்பத்தி 2 ஆண்டுகளில் 7,250 டன்னிலி-ருந்து 60,000 டன்னாக உயர்ந்துள்ளது.

தற்போதுள்ள அரிசி ஆலைகள் செறிவூட்ட வசதிகளாக மேம்படுத்தப்பட வேண்டும். அதற்கான செலவு உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவைப் பொறுத்து மாறுபடும். ஒரு மணி நேரத்திற்கு 4 முதல் 5 டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அரிசி ஆலையாக மேம்படுத்த ரூ.15 முதல் 20 லட்சம் முதலீடு தேவைப்படும் என அமைச்சகம் கூறியுள்ளது.

இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி-12 ஆகிய மூன்று நுண்ணூட்டச்சத்துக்களுடன் எதஃ உற்பத்தி செலவு ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.0.60 ஆக இருக்கும் என்று அமைச்சகம் மதிப்பிடுகிறது. இந்த செலவை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். இந்த செலவை அரிசி ஆலைகளுக்கு அரசு செலுத்தும்.

செறிவூட்டப்பட்ட அரிசி சணல் பைகளில் லோகோ (‘+எ’) மற்றும் “இரும்பு, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 உடன் செறிவூட்டப்பட்டது” ஆகிய வாசகத்துடன் கட்டாயம் அச்சிடப்படும்.

நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் 2019-20-ஆம் ஆண்டி-லிருந்து தொடங்கி மூன்று வருட காலத் திற்கு பொது விநியோக முறையின் கீழ் (டஉந) “அரிசி செறிவூட்டல் என்ற திட்டத்தை மத்திய அரசின் நிதியுதவி யுடன் ரூ.174.64 கோடி மதிப்பில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், உத்தரப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு, தெலங்கானா, பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் 15 மாவட்டங்களில் கவனம் செலுத்துகிறது.

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் உட்பட 6 மாநிலங்கள் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக செறிவூட்டப்பட்ட அரிசியை விநியோகிக்கத் தொடங்கியுள்ளன. ஜூன் 2021 வரை சுமார் 2.03 லட்சம் டன் விநியோகிக்கப்பட்டது. மேலும் நான்கு மாநிலங்கள் விரைவில் இந்த திட்டத்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, பனாமா, கோஸ்டாரிகா, நிகரகுவா, பப்புவா நியூ கினியா, பி-லிப்பைன்ஸ் மற்றும் சாலமன் தீவுகள் ஆகிய ஏழு நாடுகள் அரிசி செறிவூட்டலை கட்டாயமாக்கியுள்ளன.