தூய்மையான இந்தியா இயக்கம்

/idhalgal/general-knowledge/pure-india-movement

pureindiaந்த ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்துடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சுகாதாரத் திட்டமான, தூய்மையான இந்தியா இயக்கம் ஐந்தாவது ஆண்டை நிறைவு செய்கிறது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளான அக்டோபர் 2, 2019 விழா கொண்டாட்டத்துக்குள் இந்தியாவை, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக மாற்றுவோம் என்ற லட்சியத்தை மோடியின் அரசு முன்வைத்துள்ளது.

 2019-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் கழிவறை என்ற நோக்கமானது, குறுகிய ஐந்தாவது ஆண்டு காலத்திற்குள் மிகப்பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அக்டோபர் 2, 2014 முதல் தூய்மை யான இந்தியா இயக்கத்தின் கீழ் 4.90 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. குடிநீர் மற்றும் துப்புறவுத் துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி செப்டம்பர் 24, 2017 வரை 2.44 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிவறை இல்லாத கிராமங்களாகவும், 203 மாவட்டங்கள் திறந்தவெளி கழிவறை இல்லாத மாவட்டங்களாகவும் திகழ்கின்றன.

pureindia இந்தத் திட்டத்தில் அரசு மாபெரும் வெற்றி அடைவதற்கு, பொதுத்துறை நிறுவ

pureindia இந்தத் திட்டத்தில் அரசு மாபெரும் வெற்றி அடைவதற்கு, பொதுத்துறை நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கைகோர்த்து செயல்பட்டதுதான் முக்கிய காரணம். அந்த வகையில் பல்வேறு வியாபார நிறுவனங் களும், கூட்டு மனப்பான்மையுடன் ஏராளமான கிராமங்களை சமுதாயப் பொறுப்புடன் தத்தெடுத் துள்ளன. அதனால் 2012-ஆம் ஆண்டு 38% என்ற அளவில் இருந்த நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு, தற்போது ஒரேயடியாக 68% என்ற அளவுக்கு முன்னேறியுள்ளது. இது நல்ல முன்னேற்றம் என்றாலும் இன்னமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.

 இதனை கருத்தில்கொண்டு, சுவிச்ட கி சேவா எனப்படும், தூய்மையே பெரும் சேவை இயக்கம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, தூய்மையை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதன் முக்கிய நோக்கம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட, "தூய்மையான இந்தியா' இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதாகும். இந்த இயக்கத்தின் மூலம் சுகாதார விழிப்புணர்வை நாடு முழுவதும் பரப்புவதற்கு குடிநீர் மற்றும் துப்புறவுத் துறை அமைச்சகம் பல்வேறு அமைச்சகம், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது.

 பிரதமர் நரேந்திர மோடி, தானே முன்வந்து புதுடெல்லியின் தெருக்களில் குப்பையை அகற்றி அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கி வைத்ததுதான், தூய்மையான இந்தியா இயக்கம் ஆகும்.

 நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரமான இந்தியாவை காண விரும்பிய மகாத்மா காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில், இந்தத் திட்டத்தில் பொதுமக்கள் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று மோடி விடுத்த அழைப்பை, மக்கள் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.

 இந்த இயக்கத்தில் திறந்தவெளி கழிப்பறை பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்தி, வீடு தோறும் கழிவறை கட்டுவது, சுகாதாரமான முறையில் குப்பை அகற்றுதல் போன்ற பல லட்சியங்கள் இணைந்துள்ளன.

 இழிவான தீண்டாமைக்கு எதிராகவும் சுகாதார சுய சேவைக்காகவும் நமது தேசத் தந்தை மேற்கொண்ட போராட்டம், சுதந்திரத்திற்குப் பின்னர் தணிந்துவிட்டது. மகாத்மா மரணம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்தும், இன்றும் சுகாதார மின்மை, தீண்டாமை தொடர்கின்றன.

 பல்வேறு உடல் நோய்களும், திடீர் மரணங்களும் ஏற்படுவதற்கு சுகாதார சீர்கேடு காரணமாக இருக்கிறது. வாட்டர் எய்டு எனப்படும் தொண்டு நிறுவனம், அதனுடைய 2014-ஆம் ஆண்டு அறிக்கையில் ஓர் அசாதாரணமான சூழலை சுட்டிக் காட்டியுள்ளது.

 சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் மோசமான சுற்றுச்சூழல் காரணமாக இந்தியாவின் 1.2 பில்லியன் மக்களில் மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவானவர்களே சுகாதாரத்துடன் வாழ்வ தாகவும், ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதுக்கு உட்பட்ட 1,86,000 சிறுவர்கள் வயிற்றுப்போக்கு நோயினால் மரணத்தை தழுவுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதில் பொருளாதார ஆபத்தும் அடங்கியுள்ளது.

 சுகாதாரக் குறைபாடு காரணமாக ஏற்படும் நோய் மற்றும் மரணம் காரணமாக ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.4% இழப்பை நாடு சந்தித்து வருவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த சவால்களை எதிர்த்து போரிடுவதற்கு ஒட்டுமொத்த அரசு அமைப்புகளும் மாற்றத் திற்கான முயற்சியில் இறங்கியுள்ளன.

 உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, சுகாதாரமின்மை மற்றும் சுத்தமின்மை காரணமாக ஓவ்வொரு இந்தியனும் சராசரியாக ரூ.6,500/- செலவிடுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். தூய்மையான இந்தியா இயக்கத்தின் மூலம் பொதுமக்கள் உடல் நலன் மேம்படுவதுடன், ஏழைகளின் வருமானமும் உயரும், இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். சுகாதாரத்தை அரசியலாகப் பார்க்காமல், தேச பக்தியாக கருதி பொதுமக்கள் நலனுக்குப் பாடுபட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

 உலக நாடுகளின் சிறுவர் நிதியம் (மசஒஈஊஎ), சமீபத்தில் எடுத்திருக்கும் கணக்கீட்டின் படி, தூய்மையான இந்தியா அமைப்புக்கு செலவிடும் ஒரு ரூபாயானது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் ரூ.4.30 சேமிப்பதாக தெரிவித்துள்ளது. இதன்படி திறந்தவெளியற்ற கழிவறை பயன்படுத்துவதன் மூலம் மருத்துவச் செலவு குறைவு, நேரம் மிச்சம், மற்றும் இறப்பு இழப்பீடு கணக்கு காரணமாக ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுதோறும் ரூ.50,000/- சேமிக்க இயலும் என்று தெரிவிக்கிறது. இதனால் கிடைக்கும் அதிகபட்ச நன்மை, ஏழை மக்களுக்குத்தான் கிடைக்கும் என்றும் தெரிவிக்கிறது.

gk011018
இதையும் படியுங்கள்
Subscribe