மதுவிலக்கு திருத்த சட்டமசோதா

/idhalgal/general-knowledge/prohibition-amendment-bill

மிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் தற்போது 1937-ஆம் ஆண்டு மதுவிலக்கு சட்டம் அம-லில் உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் கள்ளக்குறிச்சி யில் கள்ளச் சாராயம் அருந்தி 67-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச் சாராயம் தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக, தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையில் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் சு.முத்துசாமி தாக்கல் செய்தார். மசோதாவில் கூறியிருப்பதாவது தற்போதுள்ள 1937-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மது இறக்குமதி செய்துவது, ஏற்றுமதி செய்வது, அருந்துதல் ஆகிய குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது.

இதேபோல், ம

இதேபோல், மனித உயிருக்கு கேடு விளைவிக்கக் கூடிய கள்ளச் சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வதுபோன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக் கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதப்படுவதால் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து கள்ளச் சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்றும் அரசு கருதுகிறது. கள்ளச் சாராயத்துடன் கலக்கக் கூடிய எரிசாராயம், மெத்தனால் போன்ற தடைசெய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ள சாராய விற்பனையை தடுக்க தண்டனை அதிகரிப்பது அவசியமாகிறது. இதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் சிறை தண்டனையின் கால அளவு, தண்டனைத் தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ss

ஆயுள் தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும்

கள்ளச் சாராயத்தை தயாரிக்கவும், கொண்டு செல்வற்கும், வைத்திருப் பதற்கும், நுகர்வுக்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு கள்ளச் சாராயம் அருந்தி மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்றவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக, ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

சீல் வைக்க வேண்டும்

மது அருந்துவதற்குப் பயன்படுத்தப்படும் உரிமம் பெறாத இடங்களை மூடி சீல் வைக்க வேண்டும். குறிப்பிட்ட ஓரிடத்தில் உரிமம் பெறாமல் மது அருந்துவதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அனுமதி பெறாமல் மது அருந்த ஓரிடம் பயன்படுத்தப்பட்டால், அந்த இடம் மதுவிலக்கு அலுவலர் அல்லது வட்டாட்சியர் நிலைக்குக் குறையாத அலுவலரால் சீல் வைக்கப்பட வேண்டும். அந்த இடத்துக்கு உரிய பாதுகாப்பை சம்பந்தப்பட்ட உரிமையாளர் அல்லது பொறுப்பாளரே வழங்க வேண்டும்.

இதேபோல குற்றங்களில் பயன்படுத்தும் அனைத்து அசையும் சொத்துகளையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்த பயன்படுத்தப்படும் உரிமம் இல்லாத இடங்களை மூடி சீலிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அனுமதியின்றி மது அருந்த பயன்படுத்தப்பட்ட இடம் எதற்காக சீல் வைக்கப்பட்டது என்பதை எழுத்துபூர்வமாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் 2 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். குறிப்பிட்ட இடத்தை மூன்று மாதங்களுக்கு மிகாமல் தொடர்ந்து மூடி வைக்கலாம்.

ss

மேல்முறையீடு செய்யலாம்

சீல் வைக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக, சம்பந்தப்பட்ட உரிமையாளர் 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். இந்த மேல்முறையீட்டை பெறும் மாவட்ட ஆட்சியர் அதன் மீது உத்தரவுகளை பிறப்பிப்பார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையும், ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

கள்ளச் சாராயத்துக்காக வண்டிகள், வாகனங்கள் மற்றும் அசையும் சொத்துகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், அவை அரசால் பறிமுதல் செய்யப்படும்.

வேறு மாவட்டத்திற்கு செல்லக் கூறலாம்

கள்ளச் சாராய வழக்கில் ஏற்கனவே தண்டனை பெற்ற நிலையில், வேறொரு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கலாம். அந்தச் சமயத்தில் நீதிபதி தாமாக அல்லது தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் நன்னடத்தை அலுவலரிடம் இருந்து கருத்தை பெறலாம். தண்டனைக் காலம் முடிவுற்ற பிறகு, அந்த நபரை அவர் வசிக்கிற அல்லது தொழில் செய்கிற இடத்திலிருந்து வேறு மாவட்டத்துக்குச் சென்றுவிடும்படி கேட்டுக் கொள்ளலாம்.

இதுதவிர, இந்த குற்றங்களை செய்யக் கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதிலிருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு உத்தரவாதத் தொகையுடன் கூடிய பிணை பத்திரத்தை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத் துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப் பட்டுள்ளது.

இதுபோன்ற குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒருவரை அந்தப் பகுதியில் இருந்தே அகற்றுவதற்காக மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், கள்ளச் சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடியவர்கள், பயன்படுத்தக்கூடிய பொருட்கள், இடம் என அனைத்தையும் வரைமுறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளை அதிகரிக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழிவகையும் ஏற்படுத்தி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த சட்டத்திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தம் உறுப்பினர்களின் விவாதத்துக்குப்பின் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

gk010824
இதையும் படியுங்கள்
Subscribe