இந்திய பொருளாதார நடவடிக்கைகளில் முன்னேற்றம்

/idhalgal/general-knowledge/progress-indian-economic-activity

2021 ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,12,020 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.20,522 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ. 26,605 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.56,247 கோடி (இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 26,884 கோடி உட்பட) மற்றும் மேல்வரி(செஸ்) ரூ.8,646 கோடி (இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப் பட்ட ரூ. 646 கோடி உட்பட).

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.23,043 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.19,139 கோடியும் மத்திய அரசு வழக்கம்போல் வழங்கிவிட்டது. மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தற்காலிக தீர்வாக மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இடையே 50:50 என்ற விகிதத்தில் ரூ.24,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

வழக்கமான மற்றும் தற்காலிக தீர்வுகளுக்குப்பின் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் ஆகஸ்ட் மாத மொத்த வருவாய், மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.55,565 கோடி மற்றும் மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.57,744 கோடி.

2021 ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய், கடந்தாண்டின் இதே கால ஜிஎஸ்டி வருவாயைவிட 30 சதவீதம் அதிகம். இந்த மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனை வருவாய்(இறக்குமதி சேவைகள் உட்பட), கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 27 சதவீதம் அதிகம். 2019-20-ஆம் நிதியாண்டின் ஆகஸ்ட் மாத வருவாயான ரூ.98, 202 கோடியுடன் ஒப்பிட்டாலும், இந்தாண்டு ஆகஸ்ட் மாத வசூல் 14 சதவீதம் அதிகம்.

தொடர்ந்து 9 மாதங்களாக, ரூ.1 லட்சம் கோடி இலக்கை கடந்து வந்த ஜிஎஸ்டி வசூல், கொரோனா 2-ஆம் அலைக்குப்பின்பு கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் குறைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடி இலக்கை கடந்தது. இது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை காட்டுகிறது.

பொருளாதார வளர்ச்சியுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடவடிக்கைகள், போலி ரசீது மூலம் ஜிஎஸ்டி மோசடி ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் காரணமாகவும் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களிலும் ஜிஎஸ்டி வரி வசூல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தின் கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.7,060 கோடி. இது கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.5,245 கோடியாக இருந்தது. தற்போது 35 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

50 பொருட்களின் வரி விகிதம் ஆய்வு 2015-16-ஆம் ஆண்டு முதல் ஐந்து வருட ஜிஎஸ்டி நடைமுறைக்கு 14 % கூட்டு வரி விகிதத்தின் அடிப்படையில் உண்மையான வசூல் மற்றும் பாதுகாக்கப்பட்ட தொகை ஆகியவற்

2021 ஆகஸ்ட் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,12,020 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.20,522 கோடி. மாநில ஜிஎஸ்டி ரூ. 26,605 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.56,247 கோடி (இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ. 26,884 கோடி உட்பட) மற்றும் மேல்வரி(செஸ்) ரூ.8,646 கோடி (இறக்குமதி பொருட்கள் மீது வசூலிக்கப் பட்ட ரூ. 646 கோடி உட்பட).

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.23,043 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.19,139 கோடியும் மத்திய அரசு வழக்கம்போல் வழங்கிவிட்டது. மேலும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தற்காலிக தீர்வாக மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இடையே 50:50 என்ற விகிதத்தில் ரூ.24,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

வழக்கமான மற்றும் தற்காலிக தீர்வுகளுக்குப்பின் மத்திய அரசு மற்றும் மாநிலங்களின் ஆகஸ்ட் மாத மொத்த வருவாய், மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.55,565 கோடி மற்றும் மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.57,744 கோடி.

2021 ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய், கடந்தாண்டின் இதே கால ஜிஎஸ்டி வருவாயைவிட 30 சதவீதம் அதிகம். இந்த மாதத்தில், உள்நாட்டு பரிவர்த்தனை வருவாய்(இறக்குமதி சேவைகள் உட்பட), கடந்தாண்டின் இதே மாதத்தை விட, 27 சதவீதம் அதிகம். 2019-20-ஆம் நிதியாண்டின் ஆகஸ்ட் மாத வருவாயான ரூ.98, 202 கோடியுடன் ஒப்பிட்டாலும், இந்தாண்டு ஆகஸ்ட் மாத வசூல் 14 சதவீதம் அதிகம்.

தொடர்ந்து 9 மாதங்களாக, ரூ.1 லட்சம் கோடி இலக்கை கடந்து வந்த ஜிஎஸ்டி வசூல், கொரோனா 2-ஆம் அலைக்குப்பின்பு கடந்த ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் குறைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் மீண்டும் ரூ.1 லட்சம் கோடி இலக்கை கடந்தது. இது பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை காட்டுகிறது.

பொருளாதார வளர்ச்சியுடன், ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடவடிக்கைகள், போலி ரசீது மூலம் ஜிஎஸ்டி மோசடி ஆகியவற்றின் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் காரணமாகவும் ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களிலும் ஜிஎஸ்டி வரி வசூல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தமிழகத்தின் கடந்த ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.7,060 கோடி. இது கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் ரூ.5,245 கோடியாக இருந்தது. தற்போது 35 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

50 பொருட்களின் வரி விகிதம் ஆய்வு 2015-16-ஆம் ஆண்டு முதல் ஐந்து வருட ஜிஎஸ்டி நடைமுறைக்கு 14 % கூட்டு வரி விகிதத்தின் அடிப்படையில் உண்மையான வசூல் மற்றும் பாதுகாக்கப்பட்ட தொகை ஆகியவற்றுக்கு இடையேயான வருவாய் இடைவெளிக்கு ஜிஎஸ்டியின் கீழ் மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, மாநிலங்களுக்கு மீண்டும் மீண்டும் கடன் வழங்குவதன் மூலம் இழப்பீட்டு செஸ் பற்றாக்குறையை ஈடுசெய்ய அரசாங்கம் கடன் வாங்க முடிவு செய்தது. சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) நிகழ்ச்சி நிரலில் தற்போதுள்ள சட்ட உத்தரவுக்கு அப்பால் உள்ள மாநிலங்களுக்கான இழப்பீடு வரைமுறையை நீட்டிப் பதற்கான விவாதங்கள் மற்றும் ஜி.எஸ்.டி விகித மாற்றங்கள் மற்றும் தெளிவு படுத்தல்களின் வடிவத்தில் 50-க்கும் மேற்பட்ட பொருட்களின் ஜிஎஸ்டி விகிதம் மறுஆய்வு செய்யப்படுகிறது.

2015-16-ஆம் ஆண்டு முதல் ஐந்து வருட ஜிஎஸ்டி நடைமுறையில் 14 % கூட்டு விகிதத்தின் அடிப்படையில் உண்மையான வசூல் மற்றும் பாதுகாக்கப்பட்ட தொகை ஆகியவற்றுக்கு இடையேயான வருவாய் இடைவெளிக்கு ஜிஎஸ்டியின் கீழ் மாநிலங்களுக்கு இழப்பீடு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, மாநிலங்களுக்கு மீண்டும் மீண்டும் கடன் வழங்குவதன் மூலம் இழப்பீடு செஸ் பற்றாக்குறையை ஈடுசெய்ய அரசாங்கம் கடன் வாங்க முடிவு செய்தது.

மாநிலங்களுக்கான இழப்பீட்டு பற்றாக்குறையை சமாளிக்க முதல் தொகுதி ரூ.75,000 கோடி ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. கடன் வாங்கிய இந்த தொகைகளை திருப்பிச் செலுத்துதல் மற்றும் செஸ் வசூல் மூலம் நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கு, இழப்பீட்டு ஏற்பாடு ஜூன் 2022-க்கு அப்பால் 2.5-3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஜி.எஸ்.டி கவுன்சிலில் 32 பொருட்கள் மற்றும் 29 சேவைகளுக்கான விலையை மதிப்பாய்வு செய்யப் போகிறது. கவுன்சிலிலின் கீழ் உள்ள நிரந்தர குழு சோலார் பிவி திட்டங்கள், புதிய பழங்கள் மற்றும் பருப்புகள், தேங்காய் எண்ணெய், மென் பானங்கள், செறிவூட்டப்பட்ட அரிசி குருனை, உள்ளக கேளிக்கை பூங்காக்கள் போன்ற பொருட்களுக்கு மாற்றங்களை பரிந்துரைத்துள்ளது. நிரந்தர குழு உச்சவரம்பில், விசிறி, ஏர் கூலர், ரப்பர், பருத்தி, மெட்டல் ஸ்கிராப், லித்தியம் அயன் பேட்டரி மற்றும் சானிட்டரி நாப்கின்களுக்கு உள்ளீட்டு வரி வரவு ஆகியவற்றுக்கு எந்த விகித மாற்றங் களையும் பரிந்துரைக்கவில்லை.

பொருளாதார நடவடிக்கைகளின் முன்னேற்றம் ஆகஸ்ட் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியானது ஜூலை மாதத்தில் வசூலிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து இரண்டு மாதங்களாக ஜி.எஸ்.டி. ரூ. லட்சம் கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவிட் தொற்றுநோய் இரண்டாம் அலையின் போது தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட உள்ளூர் ஊரடங்குகளுக்கு பிறகு பெறப்பட்டுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.எடி வசூல் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் குறிக்கிறது.

ஜூலை மாதத்தில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படும் ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிகம் மதிப்புள்ள சரக்குகளுக்காக விதிக்கப்பட்ட இலிவே பில்கள் கட்டாயமாக்கப்பட்ட பிறகு, பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட முன்னேற்றம் வெளிப்படை யாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்திலும் அவை சீராக இருந்தன.

ஜூலை மாதத்தில், இலிவே பில் உற்பத்தி ஜூன் மாதத்தில் 5.46 கோடியிலிருந்து 6.41 கோடியாகவும், மே மாதத்தில் இது 4 கோடியாகவும் உயர்ந்தது. ஆகஸ்ட் மாதத்தில் இலிவே பில் உற்பத்தி 6.33 கோடியாக சீராக உள்ளது. தினசரி சராசரி இவே பில்கள் சுமார் 21.1 லட்சம், ஜூலை மாதத்தை விட சுமார் 2 சதவீதம் அதிகம்.

ஏப்ரல்மே மாதத்திற்கான மின் உற்பத்தி, எரிபொருள் நுகர்வு மற்றும் ரயில்வே சரக்கு போன்ற சில உயர் குறிகாட்டிகள் தொடர்புடைய தரவு, கொரோனா முதல் அலையை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலைக்குப் பிறகு மீள்வது வேகமாக இருக்கிறது என்பதை குறிக்கிறது.

தொடர்ச்சியாக ஒன்பது மாதங்களாக ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் ஜி.எஸ்.டி. வசூலான பிறகு ஜூன் மாதத்தில், கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 1 லட்சம் கோடிக்கு குறைவாக பதிவானது.

கோவிட் இரண்டாம் அலைக்கு பிறகு, அமலுக்கு வந்த தளர்வுகள் காரணமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூலில் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது. இது பொருளாதாரம் சீராக மீள்வதை குறிக்கிறது. பொருளாதார வளர்ச்சி, ஏய்ப்பு எதிர்ப்பு நடவடிக்கைகள், குறிப்பாக போலி பில்லர்களுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை ஜிஎஸ்டி வசூலுக்கு பங்களித்து வருகின்றன. வரவிருக்கும் மாதங்களிலும் வலுவான ஜிஎஸ்டி வருவாய் தொடர வாய்ப்புள்ளது,” என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி-இல் பெட்ரோல் மற்றும் டீசல் மகாராஷ்டிரா மற்றும் கேரள ஆகிய மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பிற்குள் கொண்டுவருவதை எதிர்க்கின்றன. இரண்டு மாநில அரசுகளின் நிதி அமைச்சர்களின் அறிக்கைகள் ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டத்திற்கு முன்பு வெளிவந்துள்ளன.

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர விரும்புவதாக பேசப்படுகிறது. அது பற்றி எந்த தகவலும் வரவில்லை. தற்போது வரை 30 -32 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி, மகாராஷ்டிரா அரசுக்கு கிடைக்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மத்திய அரசு விதிக்கும் வரியை குறைக்கலாம். மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீது எந்த தாக்கமும் ஏற்படக்கூடாது,” என்று மகாராஷ்டிர மாநில நிதியமைச்சர் அஜீத் பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவுக்குப் பிறகு, கேரள அரசும் இந்தப் பிரச்னையில் தனது கருத்தை வெளியிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்பட்டால், மாநில அரசு அதை எதிர்க்கும் என்று கேரள நிதி அமைச்சர் என் பாலகோபால் தெரிவித்தார்.

இந்தியாவில் ஜிஎஸ்டி செயல்முறை 2017 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் உட்பட ஐந்து பெட்ரோலிய பொருட்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இந்த இரண்டிலி லிருந்தும் கிடைக்கும் வருவாயை மத்திய மற்றும் மாநில அரசுகள் பெரிதும் சார்ந்திருப்பதாக வாதிடப்பட்டது.

சமீபத்திய நாட்களில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பிஜேபி அல்லாத மாநில அரசுகள் இந்த பொருட்களுக்கான கலால் வரியை குறைக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டன.

2014-15 முதல், எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி வசூல் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை 370 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டில், மத்திய அரசு 3.71 லட்சம் கோடி ரூபாய் இதன்மூலம் சம்பாதித்தது.” என கூறப்படுகிறது. மத்திய அரசும் இதை ஒப்புக்கொள்கிறது.

இந்த வருவாயை கருத்தில்கொண்டு மத்திய அரசு அதன் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று மாநிலங்கள் வாதிடுகின்றன.

இப்போது பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறப் படுகிறது.

இது நடந்தால் பொது மக்கள் பெரிதும் பயனடைவார்கள். பெட்ரோல் - டீசல் விலை 25 முதல் 30 சதவிகிதம் வரை குறையலாம்.

பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர கேரள உயர்நீதிமன்றத்தில் ஜூன் மாதம் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் இதுகுறித்து முடிவு எடுக்கவேண்டும் என்று இதை விசாரித்த நீதிமன்றம் கூறியது.

பெட்ரோல்-டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவந்தால், மத்திய மற்றும் மாநிலத்திற்கு 4.10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இந்த இழப்பை ஈடுசெய்வது கடினமாக இருக்கும். இலவச கொரோனா தடுப்பூசி, இலவச ரேஷன் பொருட்கள் வழங்கல் மற்றும் சீர்குலைந்து போயுள்ள பொருளாதாரத்தை மீட்சிப்பாதையில் கொண்டு வருவது போன்றவற்றுக்காக, மத்திய அரசுக்கு நிறைய பணம் தேவை,” என்று சுஷீல் மோடி குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் 10-11 ஆயிரம் கோடி -லிட்டர் டீசல் விற்கப்படுகிறது மற்றும் 3-4 ஆயிரம் கோடி -லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு பொருட்களையும் சேர்த்து, சுமார் 14 ஆயிரம் கோடி லிட்டர் டீசல் பெட்ரோல் விற்கப்படுகிறது. மாநிலங்கள் ஒரு ரூபாய் மட்டுமே வாட் வரி விதிப்பதாக வைத்துக்கொள்வோம். இதிலிருந்து இழப்பின் அளவை உங்களால் எளிதாக யூகிக்க முடியும்,” என்று முன்னாள் பெட்ரோலிய செயலர் சௌரப் சந்திரா கூறுகிறார்.

இந்த தயாரிப்புகளின் விற்பனை மற்றும் வரியைப் பொருத்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இழப்புத்தொகை வெவ்வேறாக இருக்கும். உதாரணமாக கேரளா தனக்கு ஆண்டுதோறும் 8,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிட்டுள்ளது.

"பெட்ரோல்-டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது கடினம்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் வரி விதிக்கும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. இவற்றின் வருவாயின் பெரும்பகுதி இதிலிருந்துதான் வருகிறது. ஜிஎஸ்டி வரம்பிற்குள் இவற்றைக்கொண்டு வர, இருவருமே தங்கள் வருவாயின் மீதான பேராசையை கைவிட வேண்டும். அப்போதுதான் இந்த கடினமான முடிவை எடுக்க முடியும்,"என்கிறார் சௌரப் சந்திரா.

"ஜிஎஸ்டிக்கு பிறகும் மத்திய அரசு கலால் வரியை விதிப்பது மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்வது மற்றொரு வழி. இதற்காக இரு அரசுகளும் இந்த வழிமுறையை ஒப்புக் கொள்ள வேண்டும்.” என்கிறார் அவர்.

ஜிஎஸ்டி சட்டம் தொடர்பாக ஏற்கனவே மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே தகராறு உள்ளது. இதன் கீழ், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்கான செயல்முறை உள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாயில் சுமார் 2.35 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்டுவது தொடர்பாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சண்டையிட்டு வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில் மேலும் ஒரு இழப்பு சேர்க்கப்பட்டால், பிரச்சனை அதிகரிக்கலாம்.

உண்மையில் மாநிலங்களின் வருவாய்க் கான வழிகள் குறைவாகவே உள்ளன.

மதுபானம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி, எல்லாவற்றையும் விட பெரிய இரண்டு ஆதாரங்கள்.

இத்தகைய சூழலில்,பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பாக அரசு எந்த முடிவை எடுத்தாலும், மாநில மற்றும் மத்திய அரசின் நலன்களை கவனிப்பது அவசியம்.

அதே நேரம் இதற்காக பொது மக்களின் கையிலிருந்து அதிகபணம் செலவாகக் கூடாது என்பதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

gk011021
இதையும் படியுங்கள்
Subscribe