Advertisment

இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்

/idhalgal/general-knowledge/prime-ministers-schools-india

த்திய அரசு ஆதரவிலான பிஎம் ஸ்ரீ பள்ளிகள் (முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) [PM SHRI Schools (PM ScHools for Rising India)ன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டம் தற்போது மத்திய / மாநில / யூனியன் பிரதேச அரசுகள் / உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில், தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளை வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 14500-க்கும் அதிகமான பள்ளிகள் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மேம்படுத்தப்படும்.

Advertisment

பிஎம் ஸ்ரீ பள்ளிகள், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அனைத்து அம்சங்களையும் கொண்டதாகவும் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகவும் விளங்கும். இந்தப் பள்ளிகள் தரமான பயிற்றுவித்த

த்திய அரசு ஆதரவிலான பிஎம் ஸ்ரீ பள்ளிகள் (முன்னேறும் இந்தியாவுக்கான பிரதமரின் பள்ளிகள்) [PM SHRI Schools (PM ScHools for Rising India)ன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய திட்டம் தற்போது மத்திய / மாநில / யூனியன் பிரதேச அரசுகள் / உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் நிர்வகிக்கப்படும் பள்ளிகளில், தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளை வலுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் 14500-க்கும் அதிகமான பள்ளிகள் பிஎம் ஸ்ரீ பள்ளிகளாக மேம்படுத்தப்படும்.

Advertisment

பிஎம் ஸ்ரீ பள்ளிகள், தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அனைத்து அம்சங்களையும் கொண்டதாகவும் மற்ற பள்ளிகளுக்கு முன்மாதிரியாகவும் விளங்கும். இந்தப் பள்ளிகள் தரமான பயிற்றுவித்தல் மூலம் மாணவர்களை மேம்படுத்துவதோடு, 21-ஆம் நூற்றாண்டுக்கான திறன்களுடன் ஒவ்வொரு மாணவரையும் முழுமையான அனைத்து திறன் கொண்டவராக உருவாக்கப் பாடுபடும்.

Advertisment

மத்திய அரசின் ஆதரவிலான இந்தப் பள்ளிகளுக்கு மொத்தச் செலவு ரூ. 27360 கோடியாக இருக்கும். இதில் 2022-23 முதல் 2026-27 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ. 18128 கோடியாக இருக்கும்.

dd

முக்கிய அம்சங்கள்

குழந்தைகளின் பல்வேறு கல்வித் திறன்கள், பன்மொழித் தேவைகள், மாறுபட்ட பின்னணியின் கவனிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, மகிழ்ச்சிகரமான பள்ளிச்சூழலுடன், உயர்தரமான கல்வியை பிஎம் ஸ்ரீ பள்ளிகள் வழங்கும்.

தேசிய கல்விக் கொள்கை 2020 தொலைநோக்கின் படி, இவர்களின் சொந்த கற்றல் நடைமுறையில் அவர்களைத் தீவிரமாக ஈடுபடச் செய்யும்.

இந்தப் பள்ளிகள் அந்தந்த பகுதிகளுக்கு வழிகாட்டுதல் வழங்குவதன் மூலம் மற்ற பள்ளிகளுக்கு தலைமை வகிப்பதாக இருக்கும்.

சூரிய மின்சக்தி தகடுகள், எல்இடி விளக்குகள் இயற்கை வேளாண்மையுடன் ஊட்டச்சத்து தோட்டங்கள், கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் நீக்கம், மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பாரம்பரிய / நடைமுறைக் கல்வி, பருவநிலை மாற்றம் தொடர்பான ஹேக்கத்தான், நீடிக்கவல்ல வாழ்க்கை முறைக்கான விழிப்புணர்வு போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களைக் கொண்டு இந்தப் பள்ளிகள் பசுமைப்பள்ளிகளாக மேம்படுத்தப்படும்.

இந்தப் பள்ளிகளில் நடைமுறைப் படுத்தப்படும் கற்பித்தல் முறை மிகுந்த அனுபவம் வாய்ந்ததாகவும், முழுமை யானதாகவும், ஒருங்கிணைந்ததாகவும், விளையாட்டு / பொம்மைகள் அடிப்படையிலும், கேள்வி கேட்கும் முறை சார்ந்தும், கண்டுபிடிப்பு சார்ந்தும், விவாத அடிப்படையிலும், நெகிழ்ச்சியானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமையும்.

ஒவ்வொரு படிவத்திலும், ஒவ்வொரு குழந்தையின் கற்றல் திறனில் கவனம் செலுத்தப்படும். அனைத்து நிலை களிலும் மதிப்பீடு என்பது கருத்து அறிதல், வாழ்க்கை நிலைகளுக்கு அறிவை பயன்படுத்துதல் மற்றும் போட்டித்தன்மை அடிப்படையில் அமையும்.

வேலைவாய்ப்பை விரிவுபடுத்தவும், சிறந்த வேலைவாய்ப்பு கிடைப்பதைக் கண்டறியவும், துறைவாரியான திறன் அமைப்புகள் மற்றும் உள்ளூர் தொழிற்சாலைகளுடன் இணைப்பு ஏற்படுத்தப்படும்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா வித்யாலயா பள்ளிகள், சமக்ரா சிக்ஷா ஆகியவற்றுக்கு தற்போதுள்ள நிர்வாக கட்டமைப்பின் மூலம் பிஎம் ஸ்ரீபள்ளிகள் திட்டம் அமல்படுத்தப்படும். தேவைப்பட்டால் குறிப்பிட்ட திட்ட அடிப்படையில் மற்ற தன்னாட்சி அமைப்புகள் ஈடுபடுத்தப்படும்.

தேசிய கல்விக் கொள்கை 2020

அமலாக்கத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்களை புரிந்து கொள்ளவும், முன்னேற்றத்தை மதிப்பிடவும் இந்தப் பள்ளிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

இந்தத் திட்டத்தின் மூலம் 18 லட்சத் திற்கும் அதிகமான மாணவர்கள் நேரடியாக பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎம் ஸ்ரீபள்ளிகளின் பார்வையில் உள்ள வழிகாட்டும் மற்றும் அரவணைக்கும் பள்ளிகளின் மூலம் கூடுதல் தாக்கம் அறியப்படும்.

gk011022
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe