பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம்

/idhalgal/general-knowledge/prime-ministers-rural-housing-scheme

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6.1 லட்சம் பயனாளிகளுக்கு, ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உத்தரபிரதேச முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கிராமப்புறங்களுக்கான, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஏற்கனவே, முதல் தவணைத் தொகையை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணைத் தொகை, 5.30 லட்சம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை ஆகியவை, தற்போது விடுவிக்க உள்ள நிதியுதவியில் அடங்கும்.

house

இந்தியாவில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடுகளை வழங்குவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் (யு.டி.க்கள்) மற்றும் மத்திய நோடல் ஏஜென்சிகள் (சி.என்.ஏக்கள்) மூலம் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மிஷன் மத்திய உதவியை வழங்குகிறது.

ஏழைகளின் நலனுக்காக தொடங்கப் பட்ட இந்த திட்டத்தில், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட நகர்

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 6.1 லட்சம் பயனாளிகளுக்கு, ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உத்தரபிரதேச முதல்வர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கிராமப்புறங்களுக்கான, பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஏற்கனவே, முதல் தவணைத் தொகையை பெற்ற 80 ஆயிரம் பயனாளிகளுக்கான இரண்டாவது தவணைத் தொகை, 5.30 லட்சம் பயனாளிகளுக்கான முதல் தவணைத் தொகை ஆகியவை, தற்போது விடுவிக்க உள்ள நிதியுதவியில் அடங்கும்.

house

இந்தியாவில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டம், கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடுகளை வழங்குவதற்காக மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் (யு.டி.க்கள்) மற்றும் மத்திய நோடல் ஏஜென்சிகள் (சி.என்.ஏக்கள்) மூலம் செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மிஷன் மத்திய உதவியை வழங்குகிறது.

ஏழைகளின் நலனுக்காக தொடங்கப் பட்ட இந்த திட்டத்தில், பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் கீழ் வரும் 2021-22 நிதியாண்டின் இறுதிக்குள் 20 மில்லியன் வீடுகளை கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் நிலையை மேம்படுத்து வதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், கட்டப்படும் வீடுகளில் கட்டாயமாக குடும்பத்தின் பெண் தலைவர்கள் உரிமையாளர் அல்லது இணை உரிமையாளராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார ரீதியாக பலவீனமான, குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் உள்ள குடும்பங்கள் மற்றும் பயனாளர்களுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி மானியங்களையும் இந்த திட்டத்தில், வழங்கப்படுகிறது.

2022-க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி ஏற்படுத்தித் தரப்படும் என பிரதமர் அறிவித்ததற்கிணங்க, கிராமப்புறங் களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டம், என்ற பெயரிலான முன்னோடித் திட்டம், 20 நவம்பர், 2016 அன்று தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் இதுவரை 1.26 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டப் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும், 100% நிதியுதவியாக, தலா ரூ.1.20 லட்சம் (சமவெளிப் பகுதிகளில்) மற்றும் ரூ.1.30 லட்சம் (மலைப்பிரதேச மாநிலங்கள்/ வடகிழக்கு மாநிலங்கள்/ இடர்ப்பாடு மிகுந்த பகுதிகள்/ ஜம்மு -காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள்/ ஐஏபி/ இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு) வழங்கப்படுகிறது.

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டப் பயனாளிகளுக்கு, யூனிட் நிதியுதவி தவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம், திறன் பயிற்சி பெறாத தொழிலாளர்களின் ஒத்துழைப்பும் வழங்கப்படுவதோடு, கிராமப்புறங்களுக்கான தூய்மை இந்தியா இயக்கம் அல்லது வேறு பிற பிரத்யேக நிதியுதவித் திட்டத்தின் கீழ், நவீன கழிப்பறைகள் கட்டுவதற்காகவும் ரூ.12,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

மத்திய அரசு மற்றும் மாநில/யூனியன்பிரதேச அரசுகளின் பிற திட்டங்களுடன் இணைத்து, பிரதமரின் உஜ்வலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயு இணைப்பு, மின்சார இணைப்பு, ஜல்ஜீவன் இயக்கத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் செய்து தரப்படுகிறது.

கடன் இணைக்கப்பட்ட மானிய திட்டம்

இத்திட்டத்தில் வங்கிகளின் மூலம் ரூ.6,00,000/- அல்லது ரூ.9,00,000/- அல்லது ரூ.12,00,000/- வழங்கப்படும். ரூ.6,00,000-த்திற்கு 6.5% வட்டியும், ரூ.9,00,000-த்திற்கு 4% வட்டியும், ரூ.12,00,000-த்திற்கு 3% வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்.

மலிவு விலை வீட்டுவசதி திட்டம்

இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் ஒரு குடியிருப்பு வழங்கப்படும். ஒரு குடியிருப்பின் கட்டுமான மதிப்பில் 10 சதவிகித தொகையை பயனாளி முன்வைப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

பயனாளி தானே வீடு கட்டிக் கொள்ளும் திட்டம்

இத்திட்டத்தில் பயனாளிக்கு ரூ.2,10,000/- நான்கு தவணைகளாக வழங்கப்படும். பயனாளிகளின் மூலம் கட்டப்படும் வீடானது 300 சதுர அடிக்கு அதிகமாகவும் 600 சதுர அடிக்கு மிகாகலும் இருத்தல் வேண்டும்.

திட்டத்தின் பயனை பெறுவதற்கு கான தகுதிகள்: வருட வருமானம் மூன்று லட்சத்திற்கு குறைவாக இருத்தல் வேண்டும்.

பயனாளி திருமணமானவராக இருத்தல் வேண்டும். பயனாளிகளுக்கு கான்கிரிட் வீடு இருத்தல் கூடாது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்: பயனாளிகள் நில உரிமை பத்திரம் அல்லது பட்டா, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை சமர்ப்பித்தல் வேண்டும். வருமானம் 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ள இந்திய மக்களுக்கு இத்திட்டம் உதவியாக இருக்கும்.

இந்த திட்டம் கீழ் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் PMAY நகர்புற (Urban) (PMAY – U) மற்றும் PMAY கிராமின் (Gramin) (PMAY – G) என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் நான்கு கூறுகள் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு EWS):: இந்த பிரிவில், குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது. குறைந்த வருமானக் குழு (எல்.ஐ.ஜி): இதில் குடும்பத்தின் ஆண்டு வீட்டு வருமானம் ரூ 3 லட்சம் முதல் ரூ 6 லட்சம் வரை இருக்கலாம்.

நடுத்தர வருமானக் குழு (எம்.ஐ.ஜி): இந்த பிரிவில், குடும்பத்தின் ஆண்டு வீட்டு வருமானம் ரூ .6 லட்சம் முதல் ரூ. 18 லட்சம் இருக்கலாம்.

சேரி குடியிருப்பாளர்கள்: மெலிதான பகுதிகளில் வாழும் மக்கள். இந்த திட்டத்தில் பயன்பெற தேவையான ஆவணங்கள்:

அடையாளச் சான்று (ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர்களின் ஐடி) முகவரி சான்று. வருமான சான்று (படிவம் 16, வங்கி கணக்கு அறிக்கை, சமீபத்திய வருமான வரி ஆவணம்.)

மாநில அரசுகளால் இயக்கப்படும் பொது சேவை மையத்தில் (சி.எஸ்.சி) ஒரு படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். ஆன்லைன் படிவங்களுக்கு ரூ. 25 பிளஸ் ஜி.எஸ்.டி கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பணம் பெறும் நோக்கில், எந்தவொரு தனியார் நபர்களோ அல்லது நிறுவனங்களோ அனுமதிக்கப் படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

gk010221
இதையும் படியுங்கள்
Subscribe