நாட்டின் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்-லி - செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இது அவரது 11-வது சுதந்திர தின உரையாகும். அதில், வளர்ந்த பாரதம் தொடங்கி ஒரே நாடு ஒரு தேர்தல் வரை பல்வேறு அம்சங்களை முன்வைத்து உரையாற்றினார். அந்த சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
“தேசத்தின் விடுதலைக்காக தங்களது உயிரை துறந்தவர்களுக்கு இந்நேரத்தில் வீர வணக்கம் செலுத்துகிறேன். இந்த நாடு அவர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. ‘வளர்ந்த பாரதம் 2047’ என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கிறது. இதற்காக பலதரப்பட்ட மக்கள் உழைத்து வருகின்றனர். அன்று 40 கோடி மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை வெளியேற்றினர். தற்போதுள்ள 140 கோடி பேர் தேசத்தை வல்லரசு ஆக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் நமது கவலை அதிகரித்துள்ளது. இருந்த போதும் நாம் அதிலிருந்து மீண்டு வருகிறோம். வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசம் துணை நிற்கும். மற்ற ஜி20 நாடுகளை விடவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சார்ந்து இந்தியா அதிக முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதில் விண்வெளித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.
அதை கருத்தில் கொண்டு விண்வெளித் துறையில் பல சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம்.
உலக

உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை இந்தியா விரைவில் அடையும். 2036 ஒலிம்பிக் போட்டியை இந்தியா நடத்த வேண்டுமென்பது நமது கனா. இந்த நேரத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற நம் வீரர், வீராங்கனைகளை வாழ்த்துகிறேன். ‘வளர்ந்த பாரதம் 2047’ இலக்கை அடைய நாம் 24ஷ்7 உழைக்க வேண்டும். சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய விரும்புகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
வேதனை அளிக்கிறது. அது தொடர்பாக விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். மேலும் இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும், சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். அண்டை நாடுகளில் அமைதியை உறுதி செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 புதிய மருத்துவ கல்வி பயில்வதற்கான இடங்கள் உருவாக்கப்படும். இதன் மூலம் நம் மாணவர்கள் வெளிநாடுகளில் சென்று மருத்துவம் பயில வேண்டிய அவசியம் இருக்காது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதில் பெரிய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு மாவட்டம் ஒரு பொருள் என்ற சூழல் உருவாகியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தை எப்படி மறக்க முடியும். கோடிக்கணக்கான மக்களை காப்பாற்ற தடுப்பூசிகளை விரைவாக கொண்டு சேர்த்தோம். நம் நாட்டிற்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கு அனுப்பி வைத்தோம்.
பயங்கரவாதம் நமக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதை முறியடிக்க நாம் முன்னெடுத்த சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், வான்வெளி தாக்குதல் ஆகியவற்றை நினைத்து இளைஞர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
வளர்ச்சி அடைந்த இந்தியா 2047 என்ற இலக்கிற்காக நாட்டு மக்களிடம் இருந்து கருத்துகள் கேட்டிருந்தேன். பலரும் ஆர்வத்துடன் அனுப்பி வைத்திருந்தனர்.
அதில் சிலர், நம்முடைய இந்தியாவை திறன் மேம்பாட்டின் தலைநகராக மாற்றலாம். உற்பத்திக்கான கேந்திர மாக மாற்றலாம். முழுவதும் சுய சார்பு தன்மையுடன் செயல்படும் வகையில் மாற்றலாம். அரசு நிர்வாகம், நீதித்துறை ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வரலாம். கிரீன்ஃபீல்டு நகரங்களை உருவாக்குதல், இந்தியாவிற்கு என்று தனியாக விண்வெளி நிலையத்தை கட்டமைத்தல் எனப் பல விஷயங்களை தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், ஹிந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து, 140 கோடி இந்தியர்களும் கவலை தெரிவித்துள்ளனர். அங்குள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். எப்போதும் போல், வங்கதேசத்துடனான நம் நட்பு சிறப்பாக இருப்பதுடன், அந்த நாட்டின் வளர்ச்சியிலும் அக்கறையுடன் உள்ளோம்.
வாரிசு அரசியல் என்பது மிகப் பெரும் பிரச்னையாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீர்வு காண்பதற்கு, எந்த அரசியல் பின்புலமும் இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இதன் வாயிலாக அரசியலில் புதிய ரத்தம் பாய்ச்சப்படும். அது, நம் ஜனநாயகத்தை வலுவாக்கும். இந்த நேரத்தில், நம் நாட்டின் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், அதை ஏற்க முடியாத சிலர், நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இது போன்ற விரக்தியாளர்களிடம் இருந்து, மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் மக்களிடையே பொய் தகவல்களை பரப்பி, மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
நம் நாடு, மதச்சார்பு இல்லாத சிவில் சட்டத்துக்கு மாற வேண்டிய நேரம்வந்துவிட்டது. அதுவும் உடனடி யாக மாற வேண்டும். இதைத் தான் நம் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. உச்ச நீதிமன்றமும் தன் பல்வேறு உத்தரவுகளில் இதை குறிப்பிட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் கனவும் அதுவே.
ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன. உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.
அடிக்கடி நடத்தப்படும் தேர்தல் காரணமாக தேசத்தின் முன்னேற்றத்தில் தடைகள் உருவாகின்றன. அதை கருத்தில் கொண்டு ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை அரசியல் கட்சிகள் ஆதரிக்க வேண்டும்” என பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
சுதந்திர தின உரையில் சாதனை படைத்த பிரதமர் மோடி பிரதமர் மோடி டெல்லி- செங்கோட்டை யில் ஆற்றிய சுதந்திர தின உரைதான், அவரது சுதந்திர தின உரைகளிலேயே மிக நீளமானது. 98 நிமிட நேரம் அவரது உரை நீடித்தது. இந்திய வரலாற்றில் எந்த பிரதமரின் சுதந்திர தின உரையை ஒப்பிட்டாலும், இதுதான் மிக நீண்ட உரை ஆகும். இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக டெல்லி- செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றியபோது, 65 நிமிடம் உரையாற்றினார்.
2015-ஆம் ஆண்டு 88 நிமிடங்களும், 2016-ஆம் ஆண்டு 96 நிமிடங்களும், 2017-ஆம் ஆண்டு 56 நிமிடங்களும், 2018-ஆம் ஆண்டு 83 நிமிடங்களும், 2019-ஆம் ஆண்டு 92 நிமிடங்களும், 2020-ஆம் ஆண்டு 90 நிமிடங்களும், 2021-ஆம் ஆண்டு 88 நிமிடங்களும், 2022-ஆம் ஆண்டு 74 நிமிடங்களும், 2023-ஆம் ஆண்டு 90 நிமிடங்களும் அவரது சுதந்திர தின உரை நீடித்தது.
இதற்கு முன்பு, அவரது நீண்ட உரை 2016-ஆம் ஆண்டு ஆற்றிய உரையாகவும், மிக குறைந்த நேர உரை 2017-ஆம் ஆண்டு ஆற்றிய உரையாகவும் இருந்தது.
பிரதமர் மோடிக்கு முன்பு, கடந்த 1947-ஆம் ஆண்டு நேரு 72 நிமிடங்களும், 1997-ஆம் ஆண்டு குஜ்ரால் 71 நிமிடங்களும் உரையாற்றியது நீண்ட நேர உரையாக இருந்தன.
கடந்த 1954-ஆம் ஆண்டு நேரு 14 நிமிடங்களும், 1966-ஆம் ஆண்டு இந்திரா காந்தி 14 நிமிடங்களும் பேசியது, குறைந்த நேர சுதந்திர தின உரைகளாக உள்ளன.
கடந்த 2012-ஆம் ஆண்டு மன்மோகன் சிங்கின் சுதந்திர தின உரை 32 நிமிடங் களிலும், 2002-ஆம் ஆண்டு வாஜ்பாயின் சுதந்திர தின உரை 25 நிமிடங்களிலும் முடிவடைந்தன.