* வயது முதிர்ந்த காலத்தில் சமூக பாதுகாப்பு அளிக்கவும், 60 மற்றும் அதற்குமேற்பட்ட வயதை கொண்ட முதியோர் களுக்கு, நிச்சயமற்ற சந்தைநிலையில்,எதிர்கால வருமான இழப்புநிலை நலனை பாதுகாக்கவும் பிரதம மந்திரிவாய வந்தனா யோஜனா(Pradhan Mantri Vaya Vandana Yojana (PMVVY)) திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
* இந்த திட்டமானது, 10 ஆண்டுகாலத்துக்கு ஆண்டுக்கு 8 சதவீத நிச்சயலாபத்தை உறுதிசெய்கிறது.
* அதாவது, எல்ஐசி வழங்கும் லாபத்துக்கும், உறுதியளிக்கப்பட்ட ஆண்டுக்கு 8 சதவீத வட்டிக்கும் இடையிலான வேறுபாட்டை, வருடாந்திர அடிப்படையில் மத்திய அரசால் மானியமாக அளிக்கப்படும்.
* 10 ஆண்டு காலத்துக்கு இதில் வாடிக்கையாளர்கள் சேரும் போது தேர்ந்தெடுக்கும், மாதம் / காலாண்டு / அரையாண்டு / ஆண்டு அடிப்படையிலான காலத்தின் இறுதியில் வட்டி கணக்கிட்டு வழங்கப்படும்.
* இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.1000 ஓய்வூதியமாக பெற சேர ரூ. 1,50,000 முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சமாக இதில் ரூ.7,50,000ஐ முதலீடு செய்து, மாதத்துக்கு ரூ.5,000 பெறலாம். இத்திட்டத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2018 மே 3-ஆம் தேதிவரையில் இத்திட்டத்தில் சேரமுடியும்.
* மூத்தகுடிமக்கள் சேமிப்பு திட்டம் 2014 ஆனது, 60 வயதை எட்டிய தனிநபர்களுக்கான ஒரு வைப்பு நிதியாகும்.
* இருப்பினும், வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்றவர்கள், 55 வயதுக்கு பின்னர் தானாக முன்வந்து விருப்ப ஓய்வு பெற்றவர்கள் (விஆர்எஸ்) மற்றும் ராணுவத்தில் இருந்து 50 வயதுக்கு பின்னர் ஓய்வு பெற்றவர்கள் ஆகியோரும் சில நிபந்தனைகளின் அடிப்படையில் இக்கணக்கை தொடங்கலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pmscheme.jpg)
* இந்த திட்டத்தின் கீழ் அதிகபட்ச முதலீடு தொகை ரூ. 15 லட்சம் ஆகும்.
* 01.01.2018 முதல் 31.03.2018 வரையிலான காலாண்டில் இந்த திட்டத்துக்கான வட்டிவிகிதம் 8.3 சதவீதமாகும்.
* இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் வைப்பு தொகைக்கு வருமானவரிச் சட்டம் 1961ன் பிரிவு 80சி. யின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
* இருப்பினும், வைப்பு தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு, வருமான வரிவிலக்கு அளிக்கப்படவில்லை. மூலதனத்தில் வரிபிடித்தம் (டிடிஎஸ்) பிரிவு இத்திட்டத்துக்கு பொருந்தும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02/pmscheme.jpg)