ரு தேசம் ஒரே திட்டம் என்ற சிந்தனையின் அடிப்படையில் புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இதற்கு முன்பு நடைமுறையில் இருந்த அனைத்து திட்டங்களிலும் உள்ள சிறப்பான கூறுகளை எடுத்துச் சேர்த்தும், பலவீனமான குறைபாடுகளுள்ள கூறுகளை நீக்கிவிட்டும் இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டத்தையும், மாற்றம் செய்யப்பட்ட அதன் இன்னொரு வடிவத்தையும் நீக்கிவிட்டு இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

நோக்கங்கள்

இயற்கை இடர்கள், பூச்சிகள், நோய்கள் ஆகியவற்றினால் பயிர்கள் விளையாமல் போகும் நிலையில் விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கவும், காப்பீட்டு வசதியை ஏற்படுத்தி தரவும் இது வந்துள்ளது.

விவசாயிகளின் வருமானம் பாதிப்படையாமல் பாதுகாத்து அவர்கள் விவாசயத்தை தொடர்ந்து செய்துவருவதற்கு உதவுகிறது.

Advertisment

விவசாயிகள் புதுமையான நவீன வேளாண் நடைமுறைகளை கையாளுவதை ஊக்குவித்தல்.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

காரிப் பருவப் பயிர்களுக்கு 2%, ரபி பருவப் பயிர்களுக்கு 1.5% என்ற வீதத்தில் ஒரே சீரான காப்பீட்டுக் கட்டணம் விவசாயிகளிடமிருந்து பெறப்படும். ஆண்டுப் பயிர்களான பணப் பயிர்கள், தோட்டக் கலைப் பயிர்கள் ஆகியவற்றிற்கு 5% காப்பீட்டுக் கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். விவசாயிகள் செலுத்தும் காப்பீட்டுக் கட்டணம் மிகக் குறைவானவை. எனவே, மீதி கட்டணத்தை அரசாங்கம் செலுத்தி விடும். இயற்கைப் பேரிடர்களால் பயிர் இழப்புகள் ஏற்படும்போது விவசாயிகளுக்கு முழு இழப்பீட்டுத் தொகையும் கிடைக்கும்.

Advertisment

அரசாங்கம் வழங்கக்கூடிய மானியங் களுக்கு உச்சவரம்பு ஏதுமில்லை. காப்பீட்டுக் கட்டண பாக்கி 90% இருந்தாலும்கூட அதை அரசே ஏற்கும். காப்பீட்டுக் கட்டணத்தை குறைவாக நிர்ணயித்து விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை குறைவாக வழங்குவதற்கு முன்னர் வழி இருந்தது. காப்பீட்டுக் கட்டணத்திற்கு அரசு செலுத்தும் மானியச் செலவைக் குறைப்பதற்காக இப்படி செய்யப்பட்டது. இப்போது இந்த நிலை மாற்றப்பட்டுவிட்டது. காப்பீடு செய்யப்பட்டதொகையை விவசாயிகள் முழுமையாகப் பெற்று கொள்ளமுடியும்.

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்து வதற்கு மிக அதிக அளவில் ஊக்கம் தரப்படுகிறது. சீர்மிகு கைபேசிகள் (Smart Phones) மூலம் எவ்வளவு பயிர் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்பது பற்றிய தரவுகள் பெறப்பட்டு பதிவேற்றப்பட்டு விவசாயிகளுக்கு சேரவேண்டிய தொகை தாமதமின்றி கிடைக்க வழி செய்யப்படும். தொலைஉணர்வு செயற்கைக்கோள்களும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத்திட்டம் இதற்கு முன்பு இருந்த வேளாண் காப்பீட்டு தேசியத்திட்டம், மாற்றியமைக்கப்பட்ட வேளாண் காப்பீட்டு தேசியத் திட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டமாகும். இந்தத் திட்ட செயலாக்கத்தில் சேவை வரிக்கு விலக்கு தரப்பட்டுள்ளது. புதிய திட்டம் காப்பீட்டுக் கட்டணத்தில் விவசாயிகளுக்கு 75 முதல் 80% மானியத்தை உறுதி செய்யும். அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் அறிவிப்பு செய்யப்பட்ட பயிர்களை பருவகாலத்தின்போது பயிர் செய்யும் பயிர்க் காப்பீட்டில் ஆர்வமுள்ள விவசாயிகள் அனைவருக்குமானது இந்தத்திட்டம்.

கட்டாயக் காப்பீடு

அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் பயிர்க்கடன் கணக்கு வைத்துள்ள விவசாயிகள் / விவசாயி கடன் அட்டை வைத்திருப்பவர்களில் கடன் பெற அனுமதிக்கப்பட்டவர்கள், அரசாங்கம் அவ்வப்போது சேர்த்துக் கொள்ள முடிவெடுக்கும் விவசாயப் பிரிவினர் ஆகியோருக்கு காப்பீடு கட்டாயமாக செய்யப்படும்.

ss

விருப்பக் காப்பீடு

மேலே குறிப்பிடப்பட்ட வகைகளைச் சாராத பிற விவசாயிகள் அனைவரும் பயிர்க்காப்பீட்டை தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பெறலாம். அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் பயிரிடப்படும் பயிர்களின் விளைச்சலில் ஏற்படக்கூடிய இழப்புகள். இயற்கையாக உருவாகும் தீ, மின்னல், புயல்காற்று, ஆலங்கட்டி மழை, சூறைக்காற்று போன்றவற்றால் ஏற்படக்கூடிய தவிர்க்க இயலாத விளைச்சல் இழப்புகளுக்கு காப்பீடு தரப்படுகிறது. வெள்ளம், நிலச்சரிவு, வறட்சி, மழையின்மை, பூச்சி/நோய் தாக்குதல், பயிர் மூழ்கிப் போதல் போன்றவற்றால் ஏற்படும் இழப்புகளும் சேர்த்துகொள்ளபடும்.

அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பகுதியைச் சேர்ந்த காப்பீடு செய்துகொண்டுள்ள விவசாயிகளில் பெரும் பகுதியினர் பயிர் செய்யும் எண்ணத்தில் செலவுகள் செய்திருந்து, மோசமான பருவநிலை காரணமாக காப்பீடு செய்யப்பட்ட பயிர்களைப் பயிரிட இயலாமல் போகும் நிலையில், காப்பீடு செய்துகொண்டுள்ள தொகையில் 25 விழுக்காடு அளவுக்கு முன் காப்பீடாகப் பெறுவதற்கு அவர்கள் தகுதி பெறுவார்கள்.

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கு அறுவடை நடந்ததி-லிருந்து 14 நாட்கள் வரை இழப்பீடு கோர முடியும்.

அறுவடை செய்து உலருவதற்காக வயல்களில் பரப்பி வைக்கப்பட்டு இழப்பு ஏற்படும் பயிர்களுக்கு இது பொருந்தும்.

உள்ளூர் அளவில் ஏற்படக்கூடிய சில குறிப்பிட்ட பிரச்சனைகள், ஆலங்கட்டிமழை, நிலச்சரிவு, பயிர் மூழ்கிப் போதல் போன்றவற்றால் ஆங்காங்கே தனிப்படுத்தப்பட்ட நிலைகளில் ஏற்படும் இழப்புகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும்.

காப்பீட்டு அலகு

இந்தத்திட்டம், அறிவிக்கை செய்யப்பட்ட ஒவ்வொரு பயிரினமும் பயிரிடப்படும் வரையறைக்குட்பட்ட பகுதிகளில் பரவலாக ஏற்படக்கூடிய இடர்கள் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் அனைவரையுமே பாதிக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. உள்ளூர் அளவில் ஏற்படக்கூடிய இடர்களுக்கும், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளுக்கும் இழப்பினைக் கணக்கிடும் அலகாக பாதிக்கப்பட்ட விவசாயியின் காப்பீடு செய்யப்பட்ட நிலம் எடுத்துக் கொள்ளப்படும்..

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா என்பது தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம்(NADP) ஆகும்.

தமிழ்நாடு திட்டக் குழுவானது 1971 -ஆம் ஆண்டு 25-ஆம் தேதி மே மாதம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இதன் தலைவர் ஆவார். மாநில திட்டக்குழுவானது பலதரப்பட்ட துறைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரைகள் வழங்குகிறது. இக்குழு 19.05.2006 -ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.

குறிக்கோள்–XI வது திட்டத்தின் இறுதியில் 4.1% வளர்ச்சியை வேளாண் துறையில் அடைய வேண்டும்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முக்கியக் காரணங்கள்

வேளாண் துறையின் முதலீடு குறைவதால்

GDP யில் வேளாண் துறையின் பங்கு குறைதல்

வேளாண் துறையில் கவனம் குறைதல்

ஊரக பகுதி மக்கள் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளை முற்றிலும் சார்ந்திருத்தல்

பொருளாதாரத்தின் மற்ற துறைகளின் துரித வளர்ச்சி

வேளாண் துறையில் துயர நிலை

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா –ன்

நோக்கங்கள்

மக்களை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தல்

மாநிலங்களுக்கு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வேளாண் துறையில் செயல்படுத்த அதிகாரம் வழங்குதல்

மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் வேளாண் திட்டங்களை வகுப்பதற்கு உத்திரவாதமளித்தல்

குறிக்கோளை அடைவதற்கு முக்கிய தானியங்களுக்கான அறுவடை காலத்தைக் குறைத்தல்

அதிகபட்சம் ஆதாயத்தை விவசாயி களுக்கு அளித்தல்

வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு பூரண முகவரி அளித்தல்

அடிப்படை தன்மைகள் (RKVY)

இது மாநில அளவிலான திட்டம் ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா– ல் அங்கத்தினராக ஒவ்வொரு மாநிலமும் மாநிலத் திட்டச் செலவை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் அதிகப்படுத்த வேண்டும்.

அடிப்படை செலவீனம் கணக்கிடுவதற்கு மாநிலங்களின் சராசரி செலவீனம் கடந்த மூன்று வருடங்களாக இதற்கு முந்தைய ஆண்டி-லிருந்து திட்டக்குழு சுட்டிக்காட்டுதலி-ன் படி வேளாண் சார்புத் துறைகளை வரிசைப்படுத்துதல்

மாநில மற்றும் மாவட்ட வேளாண் திட்டங்கள் தயாரிப்பதற்கு உத்திரவிடுதல்

NREGS, SASY, BRGF மற்றும் பல திட்டங்களுக்குள் அடங்குவதற்கு ஊக்குவித்தல்

இது முற்றிலும் மத்திய அரசின் முதலீடு

மாநில அரசுகளின் முதலீடு வரும் ஆண்டுகளில் குறைவாக இருந்தால்

அந்த முதலீடு RKVY– யிடம் சென்று அதன் மீத வளம் தொடங்கப்பட்ட திட்டத்திலேயே மேற்கொண்டு தொடரப்படும்.

இது ஆரோக்கியமான திட்டம் – தன்னிச்சையாக பங்கிடப்படுவதில்லை

RKVY வேளாண் மற்றும் அதன் சார்புத் துறைகளை குறிப்பிட்டு காட்டுகிறது.

இது மாநில அரசுகளுக்கு அதன் எல்லைக்குட்பட்டு சுதந்திரமாக செயல்பட நெகிழ்வுத் தன்மையைத் தருகிறது.

திட்டங்களின் உறுதியான கால நேரங்களை நிர்ணயிப்பதை ஊக்குவித்தல்.

மாநில அளவிலான அங்கீகாரக்குழு

இதன் தலைவர் தலைமை செயலாளர் ஏ.பி.சி / முதன்மை செயலாளர் வேளாண்மை – துணைவேந்தர்

செயலாளர், வேளாண்மை – உறுப்பினர் – செயலாளர்

DAC, DAHDமற்றும் திட்டக்குழு இவைகளின் பரிந்துரைத்தல் படி மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது கலந்துரையாடல் விரைவில் மாநில அளவிலான குழு அமைத்தல்

மாநில அளவிலான அங்கீகாரக்குழுவின் பொறுப்புகள்

திட்டங்களை ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா கீழ் அங்கீகரித்தல்

அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்தல்

திட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் உத்திரவாதம் அளித்தல்

எடுக்கப்படும் முயற்சிகள் தவறானவை அல்ல என்பதை உறுதிப்படுத்துதல்

வேளாண்‌ உட்கட்டமைப்பு நிதி

விவசாயிகள்‌ உற்பத்தி செய்த விளைபொருட்களை மதிப்புக்கூட்டி, இலாபகரமான விலைக்கு விற்பனை செய்யும்‌ வகையில்‌, அரசு, தனியார்‌ நிறுவனம்‌ மூலம்‌ பல்வேறு உட்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு வேளாண்மை உட்கட்டமைப்‌பு நிதித் திட்டம் மூலம் வட்டி மானியத்துடன்‌ ரூ. 2 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது.

கிராம அளவில்‌ உட்கட்டமைப்புகளை உருவாக்க முன்வரும்‌ விவசாயிகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங் களுக்கு வட்டி மானியத்துடன்‌ கடன்‌ வழங்கும்‌ வகையில்‌ வழங்கப்படும் ஒன்றிய அரசின்‌ வேளாண்‌ உட்கட்டமைப்பு நிதி(Agriculture Infrastructure Fund) எனும்‌ திட்டம்‌ தமிழ்நாட்டில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வழங்கப்படும்‌ உதவிகள்‌

அறுவடைக்குப்‌ பின்‌ மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான கட்டமைப்புகளுக்கும்‌, விவசாயிகள்‌ ஒன்றிணைந்து, சமுதாய ரீதியாக உருவாக்கப்படும்‌ வேளாண்‌ கட்டமைப்புகளுக்கும்‌ வங்கிகளில்‌ அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரை இத்திட்டத்தில்‌ கடன்‌ பெறலாம்‌. அதிகபட்சமாக ரூ. 2 கோடி வரையிலான கடனுக்கு ஏழு ஆண்டுகளுக்கு 3 சதவிகித வட்டி மானியம்‌ வழங்கப்படும்‌. குறு மற்றும்‌ சிறு நிறுவனங்களுக்கான கடன்‌ உத்தரவாத நிதி அறக்கட்டளை(CGTMSE) திட்டத்திலி-ருந்து ரூ. 2 கோடி வரையிலான கடனுக்கு உத்தரவாதமும்‌ வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில்‌ அறுவடைக்குப்‌ பின்‌ மேற்கொள்ளப்படும்‌ பணிகளுக்கான உட்கட்டமைப்புகளுக்கும்‌, விவசாயிகள்‌ ஒன்றிணைந்து சமுதாய ரீதியாக உருவாக்கும்‌ உட்கட்டமைப்புகளுக்கும்‌ கடன்‌ வசதி பெற முடியும்‌.

விவசாயிகள்‌ குழுக்களாக இணைந்து, விதை சுத்திகரிப்பு, திசு வளர்ப்பு, நாற்றுப்‌ பண்ணை போன்ற இடுபொருள்‌ உற்பத்தி, விநியோகத்தொடர்‌ கட்டமைப்பு, வேளாண்மை இயந்திர வாடகை மையம்‌, சூரிய சக்தி மூலம்‌ இயங்கும்‌ மோட்டார்‌, இயற்கை இடுபொருட்கள்‌ உற்பத்தி, நுண்ணுயிர்‌ உற்பத்தி நிலையங்கள்‌, பண்ணைப் பணிகளையும்‌, அறுவடைப் பணிகளையும்‌ தானியங்கி மூலம்‌ நவீனமயமாக்குதல்‌, துல்லி-ய பண்ணையத்திற்கான உட்கட்ட மைப்புகள்‌, ஆளில்லா விமானம் (Drone)), காளான்‌ வளர்ப்பு மற்றும்‌ பயிர்‌ தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள்‌ போன்றவை.

கடனுக்கு வட்டி தள்ளுபடி

ஒன்றிய அரசினால்‌ இத்திட்டம்‌ துவங்கிய 2020-ஆம்‌ ஆண்டு ஜூலை 8-ஆம்‌ தேதி அல்லது அதற்குப் பின்‌ அனுமதிக்கப்பட்ட வங்கிகளில்‌ தகுதியுள்ள உட்கட்டமைப்பு களுக்காக பெற்ற கடனுக்கு, இத்திட்டத்தின்‌ கீழ்‌, வட்டி மானியம்‌ பெற முடியும்‌.

விவசாயிகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ அமைப்புகள்‌, சுயஉதவிக்‌ குழுக்கள்‌, கூட்டுப்‌ பொறுப்புக் குழுக்கள்‌, தொடக்க வேளாண்மைக்‌ கூட்டுறவுக்‌ கடன்‌ சங்கங்கள்‌, விற்பனைக்‌ கூட்டுறவு சங்கங்கள்‌, வேளாண்‌ தொழில்முனைவோர்‌, புதியதாக தொழில் துவங்க முன்வரும்‌ நிறுவனங்கள்‌ (Start ups),மத்திய / மாநில அமைப்புகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளால்‌ முன்மொழியப்படும்‌ அரசு-தனியார்‌ பங்கேற்புடன்‌ கூடிய அமைப்புகள்‌, மாநில முகமைகள்‌ / வேளாண்‌ விளைபொருட்கள்‌ விற்பனைக் குழுமங்கள்‌(APMCs), தேசிய மற்றும்‌ மாநில கூட்டுறவு சங்கங்களின்‌ கூட்டமைப்புகள்‌, உழவர்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனங்களின்‌ கூட்டமைப்புகள்‌, சுயஉதவிக்‌ குழுக்களின்‌ கூட்டமைப்புகள்‌, நுகர்வோர்‌ பொருட்கள்‌ தயாரிக்கும்‌ பெரு நிறுவனங்கள்‌, ஏற்றுமதியாளர்கள்‌, உணவு பதப்படுத்துவோர்‌, உபகரணங்கள்‌ தயாரிப்போர்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ கடன்‌ வசதி பெறலாம்‌.

இத்திட்டத்தின் கீழ்‌, கடன்‌ வழங்குவதற்காக, தமிழ்நாட்டில்‌ உள்ள பெரும்பாலான முன்னோடி வங்கிகள்‌, அதிகபட்சமாக 9 சதவிகித வட்டியில்‌ கடன்‌ வழங்குவதற்கு ஒன்றிய அரசுடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ செய்துள்ளன.

தேசிய தோட்டக்கலை இயக்கம்‌, வேளாண்‌ இயந்திரமயமாக்குதலுக்கான துணை இயக்கம்‌ போன்ற பல்வேறு திட்டங்களின்‌ மானியத்தையும்‌ இணைந்தே பெற்றுக்‌ கொள்ளும்‌ வசதி இத்திட்டத்தில்‌ உள்ளதால்‌, “மூன்று சதவிகித வட்டி (3%) தள்ளுபடியுடன்‌” கடன்‌ வசதி பெற விரும்புபவர்கள்‌ தங்கள்‌ திட்டத்திற்கான விபரங்களுடன்‌ அருகில்‌ உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்‌ விற்பனை, வேளாண்‌ பொறியியல்‌ துறை அலுவலர் களையோ, வங்கி மேலாளர்கள்‌ அல்லது நபார்டு வங்கியின்‌ மாவட்ட வளர்ச்சி மேலாளர்களையோ தொடர்புகொண்டு பயனடையலாம்.