பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் தனது துறையை சீரமைக்கவும், செயலாக்கத்தை அதிகரிக்கவும், மாறுதலை ஏற்படுத்தவும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளது. அரசு பல்வேறு சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு, ஆய்வு மற்றும் உற்பத்தி, சுத்திகரிப்பு, சந்தைப்படுத்துதல். இயற்கை வாயு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பலன்களை பெற்றுள்ளது.
ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமம் தொடர்பான கொள்கை (எச்.இ.எல்.பி.) திறந்த பரப்பளவு உரிமம் தொடர்பான கொள்கை (ஓ.ஏ.எல்.பி.) உற்பத்தி பகிர்மான ஒப்பந்த நிர்வாகத் திலிருந்து வருவாய் பகிர்மான ஒப்பந்த நிர்வாகத்திற்கு மாறியிருப்பது எளிதாக வணிகம் புரிதல் கொள்கையை அடிப்படையாக கொண்டதாகும்.
இயற்கை வாயு தொகுப்பு
இயற்கை வாயுவை எரிவாயுவாக நாடு முழுவதும் பயன்படுத்துவதற்காகவும் எரிவாயுவை அடிப்படையாக கொண்ட பொருளாதார யுகமாக மாற்றவும் கூடுதலாக 13,500 கிலோமீட்டர் தூர எரிவாயு குழாய் அமைக்கும் பணி, எரிவாயு தொகுப்பை நிறைவு செய்ய நடைபெற்று வருகிறது.
பிரதமர் உர்ஜா கங்கா திட்டம் (ஜகதீஷ்பூர் ஹாடியா மற்றும் பொகாரோ தம்ரா குழாய் பதிப்பு திட்டம் (ஜெ.எச்.பி. டி.பி.எல்.) 2655 கிலோமீட்டர் தூர எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் ரூ.12,940 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 40 சதவீதம் மத்திய அரசு வழங்கும் முதலீட்டு மானியமாகும் (ரூ.5176 கோடி). இந்த திட்டத்தை டிசம்பர் 2020-இல் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.v வடகிழக்கு பகுதிக்கு எரிவாயு தொகுப்பை நீட்டிப்பதற்காக 729 கிலோ மீட்டர் தூர குழாய் பதிக்கும் திட்டம் பாராவுணையிலிருந்து கவுகாத்தி வரை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் (ஜெ.எச்.பி.டி.பி.எல்.) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
வடகிழக்கு மண்டலம் எரிவாயு தொகுப்பு:
வடகிழக்கு பகுதி மாநிலங்களுக்கும் மற்றும் சிக்கிம் மாநிலத்திற்கும் எரிவாயு தொகுப்பை மேலும் நீட்டிக்க கூட்டு நிறுவனம் ஒன்று இந்திர தனுஷ் எரிவாயு தொகுப்பு லிமிடெட் என்ற பெயரில் 10.08.2018 அன்று தொடங்கப்பட்டுள்ளது. மத்திய பொதுத்துறையின் 5 எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி.எல், ஓ.என்.ஜி.சி., ஜி.ஏ.ஐ.எல்., ஓ.ஐ.எல் மற்றும் என். ஆர்.எல். ஆகியவை இந்நிறுவனத்தை தொடங்கியுள்ளது.
கொச்சி குட்டநாடு பெங்களூரு மங்களூரு குழாய் பதிக்கும் திட்டம் கேல் நிறுவனம் 872 கிலோமீட்டர் தூர குழாய் பதிப்பு திட்டத்தை 5550 கோடி ரூபாய் முதலீட்டில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மேம்படுத்தி வருகிறது. இதற்கான பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன.
எண்ணூர்- திருவள்ளூர்- பெங்களூரு- நாகப்பட்டினம்- மதுரை-தூத்துக்குடி (இ.டி.பி.பி.என்.எம்.டி.பி.எல்.) இந்தியன் ஆயில் நிறுவனம் 1385 கிலோ மீட்டர் தூர குழாய் பதிக்கும் திட்டத்தை 4,497 கோடி ரூபாய் முதலீட்டில் மேம்படுத்தி வருகிறது. இந்த குழாய் பதிக்கும் திட்டம் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் வழியாக செல்லும். இதன் ஒரு பகுதியில் (எண்ணூர்- மணலி மற்றும் ராமநாதபுரம் தூத்துக்குடி) குழாய் பதிக்கும் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மீதமுள்ள பகுதியில் குழாய் பதிக்கும் பணிகளும் செயல்படுத்தப்பட உள்ளது.
எரிவாயு தொகுப்பு திட்டத்தை நிறைவு செய்யும் வகையில் இதர எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்படும். இவை படிப்படியாக செயல்பாட்டுக்கு வரும்.
இயற்கை வாயுவை பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் அரசு நகர வாயு விநியோக தொகுப்பை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்வதில் முக்கியத்துவம் அளித்துள்ளது. சிஜிடி தொகுப்புகள் தூய்மையான எரிபொருளை (பி.என்.ஜி) வீடுகளுக்கும் தொழில்துறை மற்றும் வர்த்தக தொழில்கூடங்களுக்கும் விநியோகம் செய்வதையும், வாகனங்களுக்கு போக்குவரத்து எரிபொருளை (சி.என்.ஜி) விநியோகிக்கவும் உறுதி செய்துள்ளது.
திரவ இயற்கை வாயு (எல்.என்.ஜி.)
நாட்டில் அதிகரித்து வரும் வாயுத் தேவையை எதிர்கொள்வதற்காக பல்வேறு நிறுவனங்னள் திரவ இயற்கை வாயு-வை (எல்.என்.ஜி.) உலக வாயுச் சந்தைகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போதுள்ள நான்கு எல் என் ஜி முனையங்கள் மூலம் எல் என் ஜி இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வாயுவை சீரமைக்கும் திறன் சுமார் 26.3 எம் எம் டி பி ஏ (95 எம்.எம்.எஸ்.சி எம்.டி). அளவுக்கு இந்த முனையங்களுக்கு உள்ளது.
2018 அன்று பிரதமர் முந்த்ரா எல் என் ஜி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் ஜி.எஸ்.பி.சி. எல்.என்.ஜி நிறுவனம் மேம்படுத்தியுள்ளது. இந்த முனையம் எல் என் ஜி-யின் ஐந்து எம்.எம்.டி.பி.ஏ. கையாளும் திறன் கொண்டது. கூடுதலாக இரண்டு புதிய எல். என் ஜி, முனையங்கள் ஐந்து எம்.எம். டி.பி.ஏ திறனுடன் எண்ணூரிலும் (தமிழ்நாடு) மற்றும் தம்ராவிலும் (ஒடிஷா) தற்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதமரின் உஜ்வாலா யோஜனா (பிஎம்யுஒய்)
நாட்டில் பிபிஎல் எரிவாயுவை பயன் படுத்தும் வீட்டினருக்கு தூய்மையான எல்பிஜி சமையல் எரிவாயுவை வழங்குவதற்காக அரசு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வைப்புத் தொகை செலுத்தாமல் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து கோடி பெண்களுக்கு எல்பிஜி இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. பின்னர் இந்த எண்ணிக்கை எட்டு கோடியாக உயர்த்தப்பட்டு பட்ஜெட்டில் இதற்காக ரூ.12,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சிறந்த நிர்வாகத்தைக் கருதி அரசு சமையல் எரிவாயு ( எல்.பி.ஜி) நுகர்வோருக்கு பஹல் திட்டத்தின் மூலம் மானியம் வழங்குவதை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசின் இந்த முயற்சியின் மூலம் மானியம் பெறுவோரின் எண்ணிக்கை சீரமைக்கப்பட்டுள்ளது.
சுத்திகரிப்பு நிலையம்
நாடு முழுவதும் இயங்கி வரும் 23 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 18 பொதுத்துறையிலும் 3 தனியார் துறையிலும் மீதம் இரண்டு கூட்டுத்துறை யிலும் உள்ளன. இந்த சுத்திகரிப்பு நிலையங் களின் மொத்த சுத்திகரிப்புத்திறன் 247.566 எம்.எம்.டி.பி.ஏ. எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் உள்நாட்டுத் தேவையில், நாடு தன்னிறைவை எட்டியிருப்பது மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் போதுமான அளவு பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி செய்து வருகிறது.
ஆட்டோ எரிபொருள் தொலைநோக்கு மற்றும் கொள்கை பி எஸ் ஒய & பி எஸ் யஒ எரிபொருள்கள் நாட்டில் அறிமுகம்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் உத்தரவின்படி பி எஸ் ஒய ஆட்டோ எரிபொருள்களை நாடு முழுவதும் படிப்படியாக அமலுக்கு கொண்டுவர அறிவிக்கை வெளியிட்டது. இதன்படி பிஎஸ்ஒய ஆட்டோ எரிபொருள்கள் 01.04.2017 முதல் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வரும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது
எத்தனால் கலந்த பெட்ரோல் (இ.பி.பி) திட்டம்
ஆலைகளுக்கான எத்தனால் விலை, 100 சதவீத கரும்புச் சாறை எத்தனால் உற்பத்திக்காக பயன்படுத்துவோருக்கு ஒரு லிட்டர் விலை ரூ.59.19 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலையை சர்க்கரை ஆலைகளுக்கு ஞஙஈக்கள் செலுத்திவிடும்.
இயற்கை அல்லாத எத்தனாலுக்கு சரக்கு மற்றும் சேவை வரியைக் குறைக்கும் திட்டம் இந்த அமைச்கத் தால், வருவாய்த்துறை, நிதி அமைச் சகம் ஆகியவற்றின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டது
உயிரி டீசல் திட்ம்
8.14 கோடி லிட்டர் உயிரி டீசலை விநியோகம் செய்வதற்கான கொள்முதல் உத்தரவுகளை எண்ணெய் சந்தைப் படுத்தும் நிறுவனங்கள் மே, அக்டோபர் 2018 காலக்கட்டங்களில் வழங்கியது. 3 மாதக் காலத்திற்கு நீட்டிக்க வகை செய்யும் வகையில் இந்த உத்தரவுகள் இடப்பட்டன.
உயிரி எரிபொருள்கள் குறித்த தேசியக் கொள்கை - 2018
உயிரி எரிபொருள்கள் 2018 குறித்த தேசியக் கொள்கயை அரசு அறிவிக்கை யாக வெளியிட்டது. நாட்டின் உயிரி எரிபொருள் திட்டத்திற்கு இந்தக் கொள்கை உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த கொள்கை யின் முக்கிய அம்சங்கள் வருமாறு. உயிரி எரிபொருள்களை அடிப்படை உயிரி எரிபொருளாக வகைப்படுத்துதல் அதாவது முதலாவது தலைமுறை (1-ஜி) உயிரி எத்தனால் மற்றும் உயிரி டீசல் மற்றும் உயர்ரக உயிரி எரிபொருள்கள் இரண்டாவது தலைமுறை (2ஜி) எத்தனால்.
உயிரி சி.என்.ஜி முதலியவை, ஒவ்வொரு பிரிவுக்கும் உரிய வகையில் நிதி சலுகைகள் கிடைக்கும் வகையில் நீட்டிப்பு செய்வது.
இந்தியா -வங்கதேசம் இடையே, நட்புறவு குழாய் பதிக்கும் பணியை செப்டம்பர் 18, 2018 அன்று இருநாடுகளின் பிரதமர்கள் தொடங்கி வைத்தனர் உலகளவில் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திறனை இந்தியா 5-வது இடத்திலும், காற்றாலை மின் உற்பத்தியில் 4-வது இடத்திலும், சூரிய மின்சக்தியில் 5-வது இடத்திலும் உள்ளது.
மாசு இல்லாத கோள் என்ற அரசின் உறுதிப்பாட்டையும் பருவநிலை மாற்றத் திற்கான பாரீஸ் ஒப்பந்தத்தின்படி தேசிய அளவில் பங்களிப்புக்கான தீர்மானத்தையும் கவனத்தில் கொண்டு தூய்மையான வளங்கள் அடிப்படையில் மின் உற்பத்தித் திறனை 2030-க்குள் 40 சதவீதம் உயர்த்துவதென இந்தியா உறுதிபூண்டுள்ளது.
மேலும் 2022-க்குள் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திறனை 175 ஜிகாவாட் அளவிற்கு அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளது. சூரிய சக்தியிலிருந்து 100 ஜிகாவாட், காற்றாலை யிலிருந்து 60 ஜிகாவாட், கழிவுப் பொருட்களிலிருந்து 10 ஜிகாவாட், சிறிய அளவிலான புனல் மின் திட்டங்களிலிருந்து 5 ஜிகாவாட் என்பதாக இந்த உற்பத்தி அமையும்.
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு (ஐ.எஸ்.ஏ.)
சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டமைப்பு இந்தியாவை தலைமையிடமாக கொண்ட முதலாவது சர்வதேச அரசுகளுக்கு இடையேயான அமைப் பாக டிசம்பர் 6 2017-இல் தொடங்கப் பட்டது. அனைவருக்கும் தூய்மையான, குறைந்த செலவிலான மின்சாரம் வழங்குவது என்ற இந்தியாவின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஐ.எஸ்.ஏ. உள்ளது. ஐ.எஸ்.ஏ. கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இதுவரை 71 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவற்றில் 48 நாடுகள் இதற்கு ஏற்பு அளித்துள்ளன.
ஐ.எஸ்.ஏ.வின் முதலாவது கூட்டம் இந்தியாவில் அக்டோபர் 3, 2018-இல் நடைபெற்றது. இந்தியா, பிரான்ஸ் உட்பட ஐ.எஸ்.ஏ.வின் 37 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றன.