தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா

/idhalgal/general-knowledge/personal-data-protection-bill

ணினிகள் மற்றும் இணையத்தின் பெருக்கத்திற்கு மத்தியில், நுகர்வோர் நிறைய தரவுகளை உருவாக்கி வருகின்றனர், இது நிறுவனங்கள் தங்கள் ப்ரௌசிங் முறைகள் மற்றும் பிற ஆன்லைன் நடத்தைகளின் அடிப்படையில் தனிப்பயனாக்கப் பட்ட விளம்பரங்களைக் காட்ட அனுமதித்துள்ளது. நிறுவனங்கள் பயனர்களின் ஒப்புதலைப் பெறாமல் இந்த தரவுத்தொகுப்புகளை நிறைய சேமிக்கத் தொடங்கின, மேலும் தரவு கசிந்தபோது அந்த நிறுவனங்கள் அதற்கு பொறுப்பேற்கவில்லை.

அத்தகைய நிறுவனங்களை பொறுப்புக் கூற வைக்க, அரசாங்கம் 2019-இல் முதல் முறையாக தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவை தாக்கல் செய்தது.

தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவின் இறுதி வரைவில் வலியுறுத்தப்பட்டதாக நம்பப்படும் முக்கிய மாற்றங்களில் ஒன்று, தனிநபர் அல்லாத தரவை அதன் வரம்பிற்குள் சேர்ப்பதாகும், இது மசோதாவின் தன்மையை தனிநபர் தரவு பாதுகாப்பிலிருந்து வெறும் தரவு பாதுகாப்பிற்கு மாற்றுகிறது.

இறுதி வரைவு, குழந்தைகளின் தரவுகளை பிரத்தியேகமாக கையாளும் நிறுவனங் களை தரவு பாதுகாப்பு ஆணையத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்வதன் மூலம், சட்டத்தின் பல்வேறு விதிகளை செயல்படுத்துவது குறித்து முடிவெடுக்கும் அதிகாரங்களைக் கொண்ட ஒரு ஒழுங்குமுறை அமைப்புக்கு கூடுதல் இணக்கத்தை கோருவதாகவும் கூறப்படுகிறது.

கூட்டுக் குழு வலியுறுத்தியதாகக் கூறப

கூட்டுக் குழு வலியுறுத்தியதாகக் கூறப் படும் மூன்றாவது முக்கிய அம்சம், அனைத்து சமூக ஊடக நிறுவனங் களையும் வெளியீட்டாளர்களாகக் கருதுவதும், இடைத்தரகர்களாகச் செயல்படவில்லை என்றால், அவர்களின் தளங்களில் உள்ள உள்ளடக்கத்திற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதும் ஆகும்.

மேலும், தொழில்நுட்பத்தை கையாளும் தாய் நிறுவனம் இந்தியாவில் அலுவலகம் அமைக்காத வரையில், எந்த ஒரு சமூக ஊடக நிறுவனமும் இந்தியாவில் செயல்பட அனுமதிக்கப்படக் கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளதாக கூறப் படுகிறது.

சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட SWIFT கட்டண முறைக்கு மாற்றாக இருக்கும் உள்நாட்டு கட்டண முறையை அமைப்பது போன்ற பிற அம்சங்களும் பரிந்துரைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டுக் குழு அதன் உறுப்பினர் களிடமிருந்து அதிக எதிர்ப்பைப் பெற்ற ஒரு முக்கிய ஆலோசனையானது, சட்டத்தின் பயன்பாட்டிலிருந்து எந்தவொரு நிறுவனத்திற்கும் விலக்கு அளிப்பது போன்ற பரந்த அளவிலான அதிகாரங்கள் அரசாங்கத்திற்கு உள்ளது என்பதாகும்.

கூட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களாலும் இறுதி வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், குளிர்காலக் கூட்டத்தொடரின் போது மசோதா தாக்கல் செய்யப்படும். இருப்பினும், கூட்டுக் குழுவின் உறுப்பினர் களில் சிலர் சில அம்சங்களில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர், எனவே மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு சில மாற்றங்கள் சாத்தியமாகும்.

2018-ஆம் ஆண்டில் முதன்முதலில் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட இந்த மசோதா இப்போது மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா வரைந்த அசல் வரைவில் தற்போது மசோதா பல மாற்றங்களைக் கண்டுள்ளது, அவர் திருத்தப்பட்ட மசோதா “அரசிற்கு ஒரு வெற்று காசோலை” என்று கூறினார்.

98 உட்பிரிவுகளைக் கொண்டதாகக் கூறப்படும் இந்த மசோதா, 2019 டிசம்பரில் பாஜக எம்பி மீனாட்சி லேகி தலைமையிலான ஜேபிசிக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் லேகிக்கு பதிலாக மற்றொரு பாஜக எம்பியான பிபி.சவுத்ரி தலைவராக நியமிக்கப்பட்டார். 30 பேர் கொண்ட கூட்டு குழுவிற்கு மார்ச் மற்றும் செப்டம்பர் 2020-இல் நீட்டிப்புகளும், பிப்ரவரி 2021-இல் இறுதி நீட்டிப்பும் கிடைத்தது.

ஐடி, சட்டம் மற்றும் உள்துறை அமைச்சகங்கள், இந்திய தனித்துவ அடையாள ஆணையம், தேசிய புலனாய்வு முகமை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டு குழு முன் தங்கள் சமர்ப்பிப்புகளை செய்துள்ளனர்.

தனியார் துறையிலிருந்து, விசா, மாஸ்டர்கார்டு இந்தியா, கூகுள் இந்தியா, பேடிஎம், பேஸ்புக் இந்தியா, ட்விட்டர் இந்தியா, அமேசான் வெப் சர்வீசஸ் மற்றும் அமேசான் இந்தியா போன்றவற்றின் நிர்வாகிகள் கூட்டு குழு முன் தங்கள் சமர்ப்பிப்புகளை செய்துள்ளனர்.

JPC உடனான கூட்டத்தில், ஏர்ர்ஞ்ப்ங்-இன் பிரதிநிதிகள் தரவு உள்ளூர்மயமாக்கலை ஒரு தேவையாக மாற்றுவதை இந்தியா தவிர்க்க வேண்டும் என்று கூறியது, இது JPC உறுப்பினர்களை வருத்தப்படுத்தியது. மறுபுறம், Paytm,, இந்தியாவில் உருவாக்கப்பட்ட தரவுகளை நாட்டிற்கு சேமிக்க வேண்டும் என்று கூறியது. இந்த மாத தொடக்கத்தில் JPC முன் ஆஜரான Ola மற்றும் Uber போன்ற கேப் ஒருங்கிணைப்பாளர்கள், தரவு உள்ளூர்மயமாக்கல் விதிமுறைகளை ஆதரித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில், JPC மசோதாவின் உட்பிரிவுகளின் பரிசீலனையைத் தொடங்குவதற்கு முன்பு, பல தொழில்நுட்பக் கொள்கை குழுக்கள் அப்போதைய தலைவர் லேகிக்கு கடிதம் எழுதி, மசோதாவின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விரிவான ஆலோசனைகளை கோரி இருந்தன. எவ்வாறாயினும், ஓடஈ இந்த ஆலோசனைகளை முன்னெடுத்தது.

நிறுவனங்கள், தொழில்நுட்பக் கொள்கைக் குழுக்கள் மற்றும் JPCஉறுப்பினர்கள் கூட குழந்தைகளுக்கான பைனரி வயது வரம்பு மற்றும் நாடு முழுவதும் உள்ள குழந்தைகளின் பரந்த புவியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் அவர்களின் மாறுபட்ட முதிர்வு நிலைகள் மற்றும் தேவைகள் அடிப்படையில் ஒரே மாதிரியான அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய அழைப்பு விடுத்துள்ளனர்.

நிறுவனங்கள் மற்றும் கொள்கைக் குழுக்கள் தனிப்பட்ட தரவுகள் தொடர்பான சில உட்பிரிவுகளைச் சேர்ப்பது பற்றிய அச்சத்தை வெளிப்படுத்தியதோடு, அது மீண்டும் அடையாளம் காணப்படுவதற்கான மிக அதிக ஆபத்தைக் கொண்டுள்ளது மற்றும் பங்குதாரர்களுக்கு சட்டச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று ஓஈட யிடம் கூறியது.

கொள்கைக் குழுக்கள், மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் அதன் அமைப்புகளுக்கான விதிவிலக்குகளை மீண்டும் மீண்டும் எதிர்த்தன.

“குறிப்பாக ஒரு விரிவான கண்காணிப்பு கட்டமைப்பு இல்லாத நிலையில், மேற்பார்வையின் சில கூறுகளை அறிமுகப்படுத்துவதற்கு, இந்த விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளன என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று பொதுக் கொள்கை குழுவான தி டயலாக் நிறுவனர் காசிம் ரிஸ்வி, கூறினார்.

2019 வரைவின்படி, தரவு பாதுகாப்பு ஆணையத்திடம் தரநிலை அமைப்பில் இருந்து தீர்ப்பு வரை பல்வேறு வகையான செயல்பாடுகளை ஒப்படைக்கப் பட்டுள்ளது, இது அதன் செயல்முறைக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் என்று ரிஸ்வி கூறினார். “இந்தியாவின் முதல் தரவுக் கட்டுப்பாட்டாளரின் செயல்பாட்டு மற்றும் கட்டமைப்பு சுதந்திரம், குடிமக்கள், வணிகங்கள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையில் மத்தியஸ் தராக வகிக்கும் முக்கிய பங்கைக் கருத்தில் கொள்வது ஒரு முக்கிய அம்சமாகும்” என்று ரிஸ்வி கூறினார்.

gk010122
இதையும் படியுங்கள்
Subscribe