பாரீஸ் பாராலிம்பிக் - 2024

/idhalgal/general-knowledge/paris-paralympics-2024

17-வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ஆம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற்றது.

வரலாற்று சிறப்புமிக்க சாம்ப்ஸ் எலிசீஸ் மற்றும் பிளேஸ் டி லா கான்கார்ட்டில் நடைபெற்ற துவக்க விழாவில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்று, போட்டிகளை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில், பிரான்ஸ் விமான படையினரின் சாகச நிகழ்ச்சியும், மாற்றுத்திறனாளி கலைஞர்கள் அரங்கேற்றிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

ff

அதைத்தொடர்ந்து, பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

இந்த போட்டியில் 170 நாடுகளை சேர்ந்த சுமார் 4,400 வீரர், வீராங்கனைகள் 22 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றனர்.

இந்த தொடரில் மொத்தம் 549 பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், சைக்கிளிங், ஐந்து பேர் பங்கேற்கும் கால்பந்து, ஜூடோ, நீச்சல் பந்தயம், டேபிள் டென்னிஸ், சக்கர நாற்காலி டென்னிஸ், சக்கர நாற்காலி கூடைப்பந்து, துப்பாக்கிச் சுடுதல், பவர் லி-ஃப்டிங் போட்டிகள் நடைபெற்றது.

இந்த தொடரில் இந்தியா சார்பாக 84 வீரர் வீராங்கனைகள் சுமார் 12 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றனர்.

இது இதுவரை

இது இதுவரை இல்லாத அளவிற்கு அதிக எண்ணிக்கையாகும்.

அதிகபட்சமாக பாரா பாட்மிண்டன் போட்டிகளில் 13 வீரர் வீராங்கனைகளும், பாரா துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் பத்து விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

இதற்கு முன் டோக்கியோ பாராலிம்பிக்கில் 54 பேர் பங்கேற்றதே, இதுவரை அதிகபட்சமாக இருந்து வந்தது. அந்த பாராலிம்பிக்கில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களை வென்றிருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து இந்த பாராலிம்பிக்கில், உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, பாட்மிண்டனில் சோலைமலை சிவராஜ், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், துளசிமதி முருகேசன், மனிஷா ராம்தாஸ், பவர் லிப்ட்டிங்கில் கஸ்தூரி ராஜாமணி என 6 பேர் பங்கேற்றனர்.

இந்திய அணியின் சாதனை

கடந்த 2020-ஆம் ஆண்டு டோக்கியோ வில் நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் கலந்து கொண்டு விளையாடிய இந்திய அணி மொத்தம் 19 பதக்கங்களை வென்றிருந்தனர்.

ஆனால், இந்த ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களை வென்று, பதக்கபட்டியலில் 18-வது இடம் பிடித்து நிறைவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு உயரம் தாண்டுதல் போட்டியில் ஹாட்ரிக் பதக்கம் வென்று புதிய சாதனையை படைத்தார்.

ரியோ பாராலிம்பிக்கில் தங்கம், டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளியும், தற்போது பாரீஸ் பாராலிம்பிக்கில் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளார்.

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (ப64) இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் 2.08 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனை படைத்தார்.

இந்திய வீரர் பிரவீன் குமாரை பொறுத்தவரை கடந்த 2021-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் 2.07 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தற்போதைய போட்டியில் அவர் தாண்டியிருக்கும் 2.08 மீட்டர் உயரம் என்பது புதிய ஆசிய சாதனையாகும்.

துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான அவானி லேகரா, ஒரே ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார்.

ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் சுமித் அண்டில், தங்கப்பதக்கத்தை தக்கவைத்து அசத்தினார்.

தடகள வீராங்கனை ப்ரீத்தி பால் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார்.

பாரீஸ் பாராலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

பார்வையற்ற பெண்களுக்கான மாரத்தான் (டி12) பைனலில் அசத்திய மொராக்கோவின் பாத்திமா எல் இட்ரிஸ்சி, இலக்கை 2 மணி நேரம், 48 நிமிடம், 36 வினாடியில் அடைந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.

இதற்கு முன் 2020-இல் ஜப்பானின் மிசாடோ மிச்சிஷிடா (2 நிமிடம், 54 நிமிடம், 13 வினாடி) சாதனை படைத்திருந்தார்.

ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் (டி47) பைனலில் மொராக்கோவின் எல் ஹடாவ் அய்மன் (46.65 வினாடி) உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.

பாரீஸ் பாராலிம்பிக்கில் கடைசி தங்கப்பதக்கம் ஈரானுக்கு கிடைத்தது. ஆண்களுக்கான 'பவர்லிப்டிங்' 107 கிலோ பைனலில், அதிகபட்சமாக 263 கிலோ தூக்கிய ஈரானின் அகமது அமின்சாதே தங்கம் வென்றார்.

cds

பதக்கப்பட்டியல்

219 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தை யும், 124 பதக்கங்களுடன் கிரேட் பிரிட்டன் 2-வது இடத்தையும், 104 பதக்கங்களுடன் அமெரிக்கா 3-வது இடத்தையும் பிடித்தன.

இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் 18-வது இடத்தை பிடித்தது.

பாரீஸ் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு தடகளத்தில் 4 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என அதிகபட்சமாக 17 பதக்கங்கள் கிடைத்தன. அடுத்து பாட்மின்டனில் 5, துப்பாக்கி சுடுதலில் 4, வில்வித்தையில் 2, ஜூடோவில் ஒரு பதக்கம் கிடைத்தன.

கடந்த முறை டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில், இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்கள் என 19 பதக்கங்களுடன் 24-வது இடத்தில் இருந்தது.

இம்முறை கூடுதலாக 10 பதக்கங்களை கைப்பற்றியதுடன் 6 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.

பாராலிம்பிக்கில் 1968 முதல் 2020 வரை இந்தியா (9 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம்) மொத்தம் 31 பதக்கம் வென்றது. இம்முறை பாரீசில் மட்டும் 29 பதக்கங்கள் கிடைத்தன.

பாராலிம்பிக் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லவில்லை.

ஒலிம்பிக் போட்டிக்கு 110 வீரர்கள் கொண்ட குழுவை இந்தியா அனுப்பி யிருந்தது. இருந்த போதிலும், இந்தியா அணியால் ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்கள் அதாவது மொத்தம் 6 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது.

பாரீசில் 12 நாட்கள் நடந்த பாராலிம்பிக் விளையாட்டு திருவிழா நிறைவு பெற்றது. பாரீசில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் நிறைவு விழா நடைபெற்றது.

வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை ஹர்விந்தர் சிங், பிரீத்தி பால் ஏந்தி வந்தனர்.

மயக்கும் இசை, நடனம், பாடல், 'லேசர் ஷோ' உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

பின்னர் ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டு, ஒலிம்பிக் கொடி 2028-ஆம் ஆண்டு பாராலிம்பிக்கை நடத்தும் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

gk011024
இதையும் படியுங்கள்
Subscribe