பத்ம விருதுகள்!

/idhalgal/general-knowledge/padma-awards

ந்தியாவில் பாரத ரத்னாவிற்கு அடுத்து உயரிய விருதுகளான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இவ்விருதுகள் 1954-ஆம் ஆண்டு துவக்கப்பட்டன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகிறது.

 1978, 1979, 1993 முதல் 1997- ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு போர் சூழலின் போது பத்ம விருதுகள் வழங்கப்படவில்லை.

 பத்ம விருதுகளானது பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளிலும் வழங்கப்படுகின்றன.

award

 பத்மஸ்ரீ விருதானது புகழ்பெற்ற சேவைக்காகவும்; பத்ம பூஷன் விருது உயர்ந்த புகழ்பெற்ற சேவையாற்றி வருபவருக்காகவும்; பத்மவிபூஷன் அபூர்வமான மற்றும் புகழ்பெற்ற சேவைக்காகவும் வழங்கப்படுகின்றன.

 பத்ம விருதுகள் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டுகள், மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொதுகாரியம், சிவில் சர்வீஸ், வர்த்தகம், தொழில் என எந்த ஒரு பிரிவிலும் தனித்தன்மை கொண்டு விளங்குபவர்கள் பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

 கீழ்க்காணும் பல பிரிவுகளிலிருந்து பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

 கலை: இசை, ஓவியம், சிற்பக்கலை, புகைப்படக்கலை, சினிமா, நாடகம்.

 சமூக பணி: பொதுசேவை, அறக்கட்டளை, சமூக திட்டங்களில் ஈடுபாடு.

 பொது விவகாரங்கள்: சட்டம், பொதுவாழ்க்கை, அரசியல்.

 வர்த்தகம் & தொழில்: வங்கி, பொருளாதார நடவடிக்கைகள், மேலாண்மை, சுற்றுலா மேம்பாடு, வணிகம்.

 மருத்துவம்: மருத்துவ ஆராய்ச்சி, ஆயுர்வேதத்தில் சிறப்பு நிபுணத்துவம், ஹோமியோ மருத்துவத்தில் நிபுணத்துவம், சித்தா, அலோபதி, இயற்கை மருத்துவம்

 இலக்கியம்& கல்வி: ஊடகம், கல்வி கற்பித்தல், நூல், ஆசிரியர், இலக்கியம், எழுத்தறிவு மேம்படுத்துதல், கல்வி சீர்திருத்தம்.

 குடிமை பணிகள்: அரசு பணியாளர்களின் மிக சிறந்த நிர்வாகம் மற்றும் சேவை

 விளையாட்டுகள்: பிரபல விளையாட்டுகள், தட

 விளையாட்டுகள்: பிரபல விளையாட்டுகள், தடகளம், சாகசங்கள், மலையேறுதல், யோகா, விளையாட்டு சாதனைகள்.

 அறிவியல் & பொறியியல்: விண்வெளிப் பொறியியல், அணு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு.

 மற்றவை: மற்றவைகளில் சேராத இந்திய கலாச்சாரம், மனித உரிமை பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் உயிரின ஆர்வலர்.

 பத்ம விருதுகள் அனைத்து நபர்களுக்கும் பொதுவானது. இனம், மதம், தொழில், பதவி, பாலினம் போன்ற வேறுபாடுகள் காண்பதில்லை.

 இவ்விருதுகள் பொதுவாக இறந்தவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனினும் தலைசிறந்த ஒருவருக்கு பத்ம விருது வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வழங்கலாம்.

 இந்த மிக உயர்ந்த பத்ம விருதுகள் ஒருவருக்கு வழங்கப்பட்டு மீண்டு வழங்கப்படுமானால் ஐந்து வருட இடைவெளிக்கு பின்னரே பத்ம விருது வழங்கப்படும். ஆனால் மிகச்சிறந்த நபருக்கு விருது குழுவினரால் இதிலிருந்து விதிவிலக்கு தரப்படும்.

 வழக்கமாக ஆண்டுதோறும் அனைத்து மாநிலம் மற்றும் மத்திய ஆட்சி பகுதி அரசுகள், இந்திய அரசின் துறைகள், மத்திய அமைச்சரவை, பாரத ரத்னா மற்றும் பத்ம விருது பெற்றவர்கள் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பரிந்துரைகள் பெறப்படுகின்றன. இப்பரிந்துரைகள் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் பெறப்படுகின்றன. மேலும் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் போன்றவற்றின் ஆதரவுகளும் பெறப்படுகின்றது.

award

 விருது குழுவானது ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

 ஆண்டுதோறும் விருது குழுவினரால் விருது வழங்கப்படுவர் பரிந்துரை செய்யப்படுவர். இப்பரிந்துரை பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவரின் அனுமதிப்பெற்ற பின்னர் விருது முறைப்படி அறிவிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். யாரொருவரும் விருது குழுவினரின் பரிந்துரையின்றி பத்ம விருதினை பெறமுடியாது.

 ஒரு வருடத்திற்கு வழங்கப்படும் பத்ம விருதுகள் 120 மேல் வழங்கப்படகூடாது. என்றாலும், இறந்த பின்னர் வழங்கப்படும் விருது மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் இவற்றிலிருந்து விதிவிலக்கானவை.

 பத்ம விருதுகள் பெற உள்ளவர்கள் பற்றிய விவரங்கள் இந்திய அரசிதழில் வெளியாகும். விருதுகளை ரத்து செய்யவும் எந்த ஒரு நபரை விருது பட்டியலிலிருந்து நீக்கவும் குடியரசுத் தலைவருக்கு அதிகாரமுண்டு.

 ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 குடியரசுத்தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். விருதுகள் பொதுவாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வழங்கப்படும். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில் இவ்விருதுகளை வழங்குவார்.

 விருதானது அலங்காரமான சான்றிதழ் குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். பதக்கம் அணிவிக்கப்படும். இந்த பதக்கத்தை எந்த ஒரு விழாவிலோ அல்லது மாநில நிகழ்ச்சிகளிலோ அணிந்து கொள்ளலாம்.

 விருது பரிசுத்தொகை கொண்டிருக்கவில்லை. இந்த விருதினை பெற்றவர்கள் விருது பெற்ற விவரத்தை கடிதத்தின் உறையில் அழைப்பிதழ், போஸ்டர்கள், புத்தகங்களில் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை ஏதேனும் தவறாக பயன்படுத்தினால், விருது பறிமுதல் செய்யப்படும்.

 இந்த விருதுகளுக்கு எவ்வித பணம் அல்லது ரயில், விமான பயண சலுகைகள் வழங்கப்படுவதில்லை.

 பத்ம விருதுகள் பற்றிய உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினையடுத்து, இந்திய அரசு உயர்ந்தளவிலான மறுபரிசீலனை குழுவினை அமைத்தது. இக்குழு துணைக் குடியரசுத் தலைவர் தலைமையில் செயல் பட்டு, 1996 நவம்பரில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையினை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு, பத்ம விருதுகளுக்கான நிறுவனத்தை 1997-இல் அமைத்து அதற்கான விருது கமிட்டியும் நியமனம் செய்யப்படுகிறது.

பத்ம விபூஷன்

பத்ம விபூஷன் (Padma Vibhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் பாரத ரத்னாவுக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது உயரிய விருது. பதக்கம் மற்றும் பாராட்டிதழ் வழங்கப்படுகிறது. இது முதன் முதலிலில் 1954-ஆம் ஆண்டில் ஜனவரி 2-லிருந்து இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறன.

பத்ம விபூஷன் விருதுகள் 2018:

 இளையராஜா - இசை - தமிழ்நாடு

 குலாம் முஸ்தபா கான் - இசை - மகாராஷ்டிரா

 ட. பரமேஸ்வரன் - இலக்கியம்/கல்வி - கேரளா

பத்ம பூஷன்

பத்ம பூஷன் (Padma Bhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் 1954-ஆம் ஆண்டில் ஜனவரி 2-லிருந்து, இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது உயர் விருதாகும். எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன.

பத்ம பூஷன் விருதுகள் 2018 :

 பங்கஜ் அத்வானி - விளையாட்டு/பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் - கர்நாடகம்

 பிலிபோஸ் மார் கிரைசோஸ்டோம் - ஆன்மீகம் - கேரளா

 மகேந்திர சிங் தோனி - விளையாட்டு / கிரிக்கெட் - ஜார்க்கண்ட்

 அலெக்சாண்டர் கடாகின் (மறைவு) - பொதுவாழ்க்கை - ரஷ்யா (வெளிநாடு)

 ராமசந்திரன் நாகசாமி - தொல்பொருள் ஆய்வு - தமிழ்நாடு

 வேத் பிரகாஷ் நந்தா - இலக்கியம்/கல்வி - அமெரிக்கா

 லஷ்மண் பாய் - கலை/ஓவியம் - கோவா

 அர்விந்த் பாரிக் - கலை/இசை - மகாராஷ்டிரா

 ஷரதா சின்ஹா - கலை/இசை - பீகார்

padmashree

 பத்மஸ்ரீ

பத்மஸ்ரீ என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை, கல்வி, தொழில்,இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்தவர்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் வழங்கப்படுகிறது. இது முதன் முதலிலில் 1954 -ஆம் ஆண்டில் ஜனவரி 2-லிருந்து இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது.

பத்மஸ்ரீ விருதுகள் 2018:

பத்மஸ்ரீ விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் உள்பட 69 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 வி. ஞானம்மாள் - யோகா - தமிழ்நாடு

 விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் - கலை/நாட்டுபுற பாட்டு - தமிழ்நாடு

 ராஜகோபாலன் வாசுதேவன் - அறிவியல்/பொறியியல் - தமிழ்நாடு

 ரோமுலஸ் விட்டேகர் - வனவிலங்கு பாதுகாவலர் - தமிழ்நாடு

----------------------

பத்மஸ்ரீ சுலகிட்டி நரசம்மா

sualty கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் பவகடா தாலுகா கிருஷ்ணபுரவில் வசித்து வருபவர் சுலகிட்டி நரசம்மா.

இவர் கர்ப்பிணிகள் பாதுகாப்பாக குழந்தைகளை பெற்றெடுக்க உதவும் மகப்பேறு மருத்துவராக செயல்பட்டு வருகிறார்.

12 குழந்தைகளுக்கு தாயான இவருக்கு 22 பேரக் குழந்தைகள். இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்த்திருக்கிறார்.

இவருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுலகிட்டி நரசம்மாவுக்கு (சுலகிட்டி என்றால் கன்னடத்தில் மகப்பேறு என்று பொருள்) தெலுங்கு மொழியை தவிர வேறு மொழிகள் தெரியாது.

2012-ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு வயோஸ்ரேஸ்டா சம்மனா என்ற விருது வழங்கி கவுரவித்தது.

2014-ஆம் ஆண்டு தும்கூர் பல்கலைக்கழகம் இவருக்கு கௌவர டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

பத்மஸ்ரீ லெட்சுமி குட்டி அம்மாள்

kuttyammalகேரளாவை சேர்ந்த காணி இன ஆதிவாசி பெண் லெட்சுமி குட்டி அம்மாள் பாம்பு கடிக்கு நாட்டு மருந்து கண்டுபிடித்து அதன் மூலம் பலர் உயிரை காப்பாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இவர் 500-க்கும் மேற்பட்டநாட்டு மருந்துகளை கண்டுபிடித்து அதன் மூலம் ஆதிவாசி மக்களுக்கு சிகிக்கை அளித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்
Subscribe