33-வது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் 2024 பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில் ஜூலை 26 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை 17 நாட்கள் நடைபெற்றது.

இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்து 714 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

வழக்கமாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறும். ஆனால் முதன்முறையாக பாரீஸின் முக்கிய அடையாளமாக திகழும் சீன் நதியில் நடத்தப்பட்டது.

நடந்த முடிந்த ஒலிம்பிக்கில் 32 விளையாட்டில் 48 வகைகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

Advertisment

இந்தியா தரப்பில் மொத்தம் 16 வகையான விளையாட்டு போட்டிகளுக்கு 112 வீரர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

oo

10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியாவின் மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

Advertisment

இதேபோன்று 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் மனு பாக்கரும், சரப்ஜோத் சிங்கும் பங்கேற்றனர்.

இருவரும் வெண்கல பதக்கத்தை வென்றனர்.

மேலும் 50 மீட்டர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ஸ்வப்னில் குசாலே 3-வது இடத்தை பிடித்து வெண்கல பதக்கத்தை வென்றார்.

இதன் மூலம் இந்த பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய சாதனையையும் படைத்தார் ஸ்வப்னில் குசாலே.

ஒட்டு மொத்தமாக இந்தியாவின் துப்பாக்கி சுடுதல் அணி இந்தியாவுக்கு 3 பதக்கங்களை பெற்றுத் தந்தது.

வெண்கல பதக்கத்திற்கான ஆக்கி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி இந்திய அணி பதக்கத்தை கைப்பற்றியது.

தங்கம் வெல்வார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கத்தை வென்றார்.

அவர் தனது இரண்டாவது சுற்றில் 89.45 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டோக்கியோவில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றிருந்தார்.

பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் எறிந்து ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்றார்.

இதேபோன்று ஆடவருக்கான மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் அமன் ஷெராவத் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். ஒட்டு மொத்தமாக இந்தியா 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6 பதக்கங்களை பெற்றுள்ளது.

17 நாட்கள் நடந்த இந்த விளையாட்டு திருவிழாவில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் 126 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்தது.

91 பதக்கங்களுடன் சீனா 2-வது இடத்தையும், 45 பதக்கங்களுடன் ஜப்பான் 3-வது இடத்தையும் பிடித்தன. இந்தியா 6 பதக்கங்களுடன் 71-வது இடத்தை பெற்றது.

போட்டியை நடத்திய பிரான்ஸ் 64 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் மொத்தம் 90 நாடுகள் இடம்பிடித்தன. இதில் ஒரேயொரு வெண்கலப் பதக்கம் வென்ற அகதிகளுக்கான ஒலிம்பிக் அணியும் அடக்கம்.

பொதுப் போட்டியாளர்களாக பங்கேற்ற ரஷ்யா, பெலாரஸ் அணிகள் வென்ற பதக்கங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை.

தி ஸ்டேட் டி பிரான்ஸ் ஒலிம்பிக் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நிறைவு விழாவில் வண்ணமயமான வாணவேடிக்கைக்ளுடன், ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் மோட்டார் பைக் சாகசங்கள், ஸ்னூப் டாக் இசை நிகழ்ச்சி, வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்புடன் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்தது.

நிறைவு விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில், இந்திய தேசியக் கொடியை துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான மனு பாக்கரும், ஹாக்கி வீரரான பி.ஆர்.ஸ்ரீஜேஷும் ஏந்திச் சென்றனர்.

மேலும் விழாவின் இறுதியில் ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டு அடுத்த ஒலிம்பிக் (2028) நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் போட்டி அமைப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வினேஷ் போகத்

பெண்களுக்கான மல்யுத்தம் பிரீஸ்டைல் 50 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சார்பில் வினேஷ் போகத் விளையாடினார். வழக்கமாக 53 கிலோ பிரிவில் களமிறங்கும் வினேஷ் போகத், முதன்முறையாக இப்பிரிவில் பங்கேற்றார்.

கியூபாவின் லோபசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக பைனலுக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம் தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தார்.

இந்த நிலையில், பைனலுக்கு முன்னதாக வினேஷ் போகத்தின் உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. 50 கிலோ பிரிவில் விளையாடும் வினேஷ் போகத் 100 கிராம் அளவிற்கு எடை கூடியதால், ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதனால் அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது. பைனலுக்கு முன்னேறிய அமெரிக்க வீராங்கனை சாராவுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

பாரீஸ் ஒலிம்பிக்கில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற அர்ஷத் நதீம், ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தான் நட்சத்திரமானார். அதிக தூரம் எறிந்த (92.97 மீ.,) இவர், புதிய ஒலிம்பிக் சாதனை படைத்தார்.

ஆண்களுக்கான 4ஷ்400 மீ., தொடர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அமெரிக்க அணி (3 நிமிடம், 07.41 வினாடி) உலக சாதனை படைத்தது.

ஆண்களுக்கான 'போல்வால்ட்' போட்டியில் சுவீடனின் அர்மாண்ட் டுப்ளான்டிஸ் (6.25 மீ.,) 9-வது முறையாக உலக சாதனை படைத்தார்.

மல்யுத்த போட்டியில் ('கிரிகோ-ரோமன்' 130 கிலோ) கியூபாவின் மிஜைன் போபஸ் நுனேஸ், தொடர்ச்சியாக 5 தங்கம் வென்று உலக சாதனை படைத்தார்.

பெண்களுக்கான 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின்-லெவ்ரோன் (50.37 வினாடி) உலக சாதனை படைத்தார்.

பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்ச்சண்ட் பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த வருட ஒலிம்பிக்சில், 400 மீட்டர் 200 Ľ Breaststroke, 200 L Butterfly, 200 LLi Individual Medley, 400 மீட்டர் Individual Medley -வில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.

22 வயதே ஆகும் லியான் மர்ச்சண்ட் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக்சே இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான நீச்சல் போட்டி 1500 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் அமெரிக்காவின் கேட்டி லெடிக்கி (15 நிமிடம், 30.02 வினாடி) ஒலிம்பிக் சாதனை படைத்தார்.

பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் செயின்ட் லூசியாவின் ஜூலியன் ஆல்பிரட் தங்கம் வென்றார். இது, ஒலிம்பிக் வரலாற்றில் செயின்ட் லூசியா நாட்டிற்கு முதல் பதக்கம்.