மிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கடந்தாண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில், ஆளுநர் இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதை முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். அன்றைய தினமே அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இந்த மசோதா குறித்து தமிழகம் மற்றும் மத்திய அரசு சட்டம் கூறுவது என்ன என்பது குறித்து பார்ப்போம்.

rummy

ஆன்லைன் சூதாட்டத்தில் தமிழகத்தின் சட்டம்

Advertisment

ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் அல்லது பிற பங்குகளுக்காக விளையாடப்படும் வாய்ப்புக்கான ஆன்லைன் கேம்களை இந்த சட்டம் தடை செய்கிறது.

இது ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகளை குறிக்கிறது. இது வாய்ப்பு மற்றும் திறமை ஆகிய இரண்டும் உள்ளடங்கிய ஆன்லைன் கேம்களாக வரையறுக்கிறது. எவ்வகையான சூதாட்டமாக இருந்தாலும் அது தடை செய்யப்படுவதாக மசோதாவில் கூறப் பட்டுள்ளது.

மாநிலத்தின் முன்மொழியப்பட்ட கேமிங் அதிகாரம் வாய்ப்புள்ள விளையாட்டுகளைக் கண்டறிந்து, தடைசெய்யப்பட்ட கேம்களின் அட்டவணையில் சேர்க்க பரிந்துரைக்கும்.

Advertisment

ஆன்லைன் சூதாட்ட செயலி, இணையதளங்களை கணக்கெடுப்பது, தடை விதிக்க வேண்டிய விளையாட்டு களின் பட்டியலை தயாரிக்கும் பணியில் சைபர் க்ரைம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சட்டத்தின்படி, ஆன்லைன் விளையாட்டு விளையாடுவோருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் சிறை தண்டனை விதிக்கப்படும்.

ஆன்லைன் விளையாட்டுக்கு விளம்பரம் செய்வோருக்கு ஓராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

இதுபோன்ற விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். இவர்கள் மீண்டும் தவறு செய்தால், 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

stalin

ஜூன் 9, 2022 அன்று ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் நான்கு பேர்கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

அந்தக் குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், உளவியல் மருத்துவர் லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

அந்தக் குழு வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி சந்துரு தலைமையிலான குழு பல்வேறு தரப்பினரின் கருத்து களைக் கேட்டறிந்து, ஏற்கெனவே இருக்கும் விதிகளின்படி ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாது என்பதால், புதிய சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு பரிந்துரை செய்தது. கடந்த ஆண்டு, ஜூன் 27-ஆம் தேதி, 71 பக்க அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு சமர்ப்பித்தார்.