உலகை அச்சுறுத்தும் ஒமிக்ரான் கொரோனா வைரஸ்

/idhalgal/general-knowledge/omigron-corona-virus-threatening-world

கொரோனா தொற்று குறித்த புதிய அறிவிப்பில், ஏற்கனவே உலக நாடுகளில் இன்னும் டெல்டா மாறுபாடு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ஒமிக்ரான் தொற்று தாக்கம் குறித்து உடனே முடிவுக்கு வந்துவிட இயலாது என்று கூறியது உலக சுகாதார நிறுவனம். ஒமிக்ரான் தொற்று குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு இன்னும் விடை தெரியவில்லை. ஆனால் வருகின்ற நாட்களில் அதிகப்படியான தரவுகள் நமக்கு கிடைக்கும் என்றும் அது கூறியுள்ளது. பரவும் தன்மை, மருத்துவ தீவிரம், மறுதொற்றின் ஆபத்து மற்றும் தடுப்பூசிகளின் சாத்தியமான தாக்கம் என ஒமிக்ரான் குறித்த முக்கிய விசயங்களை அப்டேட் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இந்த பிறழ்வு கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் புதிய கொரோனா தொற்றுகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு மத்தியில் சுமார் 62,021 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தையை வாரத்தைக் காட்டிலும் 111% அதிகமாகும். மேலும், கொரோனா பாசிட்டிவ் விகிதம் நவம்பர் 7-ஆம் தேதி அன்று 1.2% ஆக இருந்த நிலையில் தற்போது அது 22.4% ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் அண்டை நாடுகளான எஸ்வாதினி (1990%), ஜிம்பாப்வே (1361), மொசாம்பிக் (1,207%), நமீபியா (681%) மற்றும் லெசோத்தோவில் (219%) கொரோனா தொற்று பரவல் விகிதம் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் இந்நாடு களில் குறைவாகவே உள்ளது. நமீபியாவில் மொத்த மக்கள்தொகை யில் வெறும் 12.1% மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதே நேரத்தில் லெசோதோவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 26.7% ஆகும். தென்னாப்பிரிக் காவின் மக்கள்தொகையில் 25.2% மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

உலகளாவிய தரவுகளின் படி டிசம்பர் 7-ஆம் தேதி அன்று, 57 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப் பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனாலும், முந்தைய டெல்டா பிறழ்வு பல்வேறு நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் தொற்றுநோய்களை உருவாக்கி வருகின்ற சூழ-லில் ஒமிக்ரானின் தாக்கம் குறித்து விரைவில் முடிவுக்கு வர இயலாது என்று கூறியது.

ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பிறழ்வுகளைக் காட்டிலும் தற்போது உருவாகியுள்ள ஒமிக்ரானின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் அது அதிகப்படியான தொற்றினை பரப்புமா என்பது குறித்து முடிவு செய்ய தரவுகள் தேவை. SARS-CoV-2 நோய்த்தொற்றுகளில் 1% ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக இருந்தால், அது ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும், புதிய தொற்றுநோய்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கு

கொரோனா தொற்று குறித்த புதிய அறிவிப்பில், ஏற்கனவே உலக நாடுகளில் இன்னும் டெல்டா மாறுபாடு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில் ஒமிக்ரான் தொற்று தாக்கம் குறித்து உடனே முடிவுக்கு வந்துவிட இயலாது என்று கூறியது உலக சுகாதார நிறுவனம். ஒமிக்ரான் தொற்று குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு இன்னும் விடை தெரியவில்லை. ஆனால் வருகின்ற நாட்களில் அதிகப்படியான தரவுகள் நமக்கு கிடைக்கும் என்றும் அது கூறியுள்ளது. பரவும் தன்மை, மருத்துவ தீவிரம், மறுதொற்றின் ஆபத்து மற்றும் தடுப்பூசிகளின் சாத்தியமான தாக்கம் என ஒமிக்ரான் குறித்த முக்கிய விசயங்களை அப்டேட் செய்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இந்த பிறழ்வு கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் புதிய கொரோனா தொற்றுகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு மத்தியில் சுமார் 62,021 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தையை வாரத்தைக் காட்டிலும் 111% அதிகமாகும். மேலும், கொரோனா பாசிட்டிவ் விகிதம் நவம்பர் 7-ஆம் தேதி அன்று 1.2% ஆக இருந்த நிலையில் தற்போது அது 22.4% ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் அண்டை நாடுகளான எஸ்வாதினி (1990%), ஜிம்பாப்வே (1361), மொசாம்பிக் (1,207%), நமீபியா (681%) மற்றும் லெசோத்தோவில் (219%) கொரோனா தொற்று பரவல் விகிதம் சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் இந்நாடு களில் குறைவாகவே உள்ளது. நமீபியாவில் மொத்த மக்கள்தொகை யில் வெறும் 12.1% மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதே நேரத்தில் லெசோதோவில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதம் 26.7% ஆகும். தென்னாப்பிரிக் காவின் மக்கள்தொகையில் 25.2% மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

உலகளாவிய தரவுகளின் படி டிசம்பர் 7-ஆம் தேதி அன்று, 57 நாடுகளில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப் பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனாலும், முந்தைய டெல்டா பிறழ்வு பல்வேறு நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்னும் தொற்றுநோய்களை உருவாக்கி வருகின்ற சூழ-லில் ஒமிக்ரானின் தாக்கம் குறித்து விரைவில் முடிவுக்கு வர இயலாது என்று கூறியது.

ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் பிறழ்வுகளைக் காட்டிலும் தற்போது உருவாகியுள்ள ஒமிக்ரானின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் அது அதிகப்படியான தொற்றினை பரப்புமா என்பது குறித்து முடிவு செய்ய தரவுகள் தேவை. SARS-CoV-2 நோய்த்தொற்றுகளில் 1% ஓமிக்ரான் மாறுபாட்டின் காரணமாக இருந்தால், அது ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தும், புதிய தொற்றுநோய்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்ற ஒமிக்ரான் மீதான நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்தின் முன்னறிவிப்பை இது சுட்டிக்காட்டுகிறது.

விரிவான க்ளஸ்டர் விசாரணைகள், தொடர்பு-தடமறிதல் மற்றும் வீட்டுப் பரிமாற்ற ஆய்வுகள் உட்பட நடந்துவரும் மற்றும் திட்டமிடப்பட்ட தொற்றுநோயியல் ஆய்வுகள், முன்பு தடுப்பூசி போடப்பட்ட அல்லது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நடுநிலைப்படுத்துதல் ஆய்வுகள் மற்றும் தடுப்பூசி செயல்திறன் பற்றிய ஆய்வுகள், அதிகரித்த பரவும் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியிடம் இருந்து தப்பிக்கும் முறை பற்றிய நமது புரிதலை மேம்படுத்த உதவும்.

தற்போது தீவிரத் தன்மை குறித்த வரையறுக்கப்பட்ட தரவுகள் மட்டுமே உள்ளன. மேலும் ஓமிக்ரான் மாறுபாட்டின் மூலம் நோயின் தீவிரத்தன்மையில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா என்பதை அறிவது தற்போது சவாலானது.

டிசம்பர் 6-ஆம் தேதி வரை, 18 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அடையாளம் காணப்பட்ட 212 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் நோயின் தீவிரத்தன்மை குறைவாகவும் லேசானதாவும் உள்ளது.

கோவிட்-19 காரணமாக தென்னாப்பிரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமும் 82% வரை அதிகரித்துள்ளது. 502 முதல் 912 நபர்கள் வரை நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-க்கு இடைப்பட்ட காலங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், ஒமிக்ரான் தொற்றுடன் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது இன்னும் தெரியாது என்று ரஐஞ கூறியுள்ளது.

டெல்டா மாறுபாட்டைக் காட்டிலும் தீவிரத்தன்மை சமமாக இருந்தாலும் அல்லது குறைவாக இருந்தாலும் கூட, அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அதிகரிக்கும் என்றும், வழக்கு எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கைகளுக்கு இடைப்பட்ட காலம் அதிகரிக்கும் என்றும்WHO கூறியுள்ளது.

மீண்டும் நோய்த்தொற்றில், ஓமிக்ரான் மாறுபாட்டில் உள்ள பிறழ்வுகள் ஆன்டிபாடிகளின் நடுநிலைப்படுத்தும் செயல்பாட்டைக் குறைக்கலாம், இதன் விளைவாக இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியிலி-ருந்து பாதுகாப்பைக் குறைக்கலாம் என்று முதன்மை பகுப்பாய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ff

இதனால் தான் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட ஆப்பிரிக்கர்கள் மத்தியில் இந்த தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. வயது வந்தவர்களில் 35% பேர் தற்போது கோவிட் 19 தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். சமீபத்திய தொற்றுநோயியல் ஆய்வுகள் மற்றும் மாடலிங் படி, கடந்தகால நோய்த்தொற்றுகள் காரணமாக இதில் செரோபிரேவலன்ஸ் அளவுகள் 60-80% வரை அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆரம்ப மாடலிங் ஆய்வுகள் மீண்டும் தொற்றுநோய்க்கான அதிக ஆபத்தைக் கண்டறிந்துள்ளதாக WHO கூறியது.

இருப்பினும், தடுப்பூசி போடப்பட்டவர் களைத் தொற்றும் அல்லது மீண்டும் தொற்றும் ஒமிக்ரான் மாறுபாட்டின் திறன், முன்னேற்றங்கள் அல்லது மறு-தொற்றுநோய்களின் தீவிரத்தை கண்டறிவது உட்பட இதை உறுதிப்படுத்த மேலும் ஆய்வுகள் தேவை.

கடுமையான நோய்களால் பாதிக்கப் பட்ட நோயாளிகளின் நிர்வாகத்தில் Interleukin-6 ஏற்பி தடுப்பான்கள் மற்றும் கார்டிகோஸ்டீராய்டுகள் தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும் என்று WHO மீண்டும் வ-லியுறுத்தியது. தடுப்பூசிகளால் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கூடுதல் தடுப்பூசி அளவுகளின் பயன்பாடு உட்பட தடுப்பூசி செயல்திறனை பாதிக்குமா, அவற்றின் பாதுகாப்பை குறைக்குமா என்பதை ஆய்வு செய்ய கூடுதல் தரவுகள் தேவை என்றும் அதில் குறிப்பிடப் பட்டுள்ளது ஐரோப்பாவில் பதிவாகும் ஒமிக்ரான் பாதிப்பு புதிய மாறுபாடின் ஆரம்பகால பாதிப்பின் தரவு முடிவுகள் குறைவாக தான் கிடைத்துள்ளன. நோய் தீவிரம் குறித்து ஐரோப்பாவில் பாதிப்புக்குள்ளான 70 பேரின் தரவுகள் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பாதி பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இல்லை. மற்றவர்களுக்கு லேசான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.

அதே போல், நோய் தீவிரமடைந்து மருத்துவமனை அனுமதித்தல் அல்லது உயிரிழப்பு போன்ற சம்பவங்கள் இதுவரை பதிவாகவில்லை.

இருப்பினும், நோய் தீவிரத்தை துல்லியமாக மதிப்பிடுவதற்கு நூற்றுக்கணக்கான பேரின் தரவு தேவைப்படும். ஆனால் அதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்று ஐரோப்பிய நிறுவனம் மதிப்பிடுகிறது.

இதுவரை கண்டறியப்பட்ட பெரும் பாலான பாதிப்புகள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட இளையவர் களிடமே காணப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் கடுமையான நோய் தீவிரத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என சொல்லப்படுகிறது.

அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணரான டாக்டர். கார்லோஸ் டெல் ரியோ கூறுகையில், “தென் ஆப்பிரிக்கா பாதிப்பு தரவுப்படி, மிகவும் லேசான அளவிலே நோய் பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் இளம் மாணவர்களிடம் தான் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

நிஜ உலக ஆய்வக முடிவுகளை வைத்து, ஒமிக்ரான் பாதிப்பை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பாய்வு செய்கின்றனர். இதுவரை எந்த வைரஸ் மாறுபாடிலும் காணாத சுமார் 50 பிறழ்வுகள் இருந்தன. அதில் 30-க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் ஸ்பைக் புரதத்தை கொண்டிருந்தது. தற்போதைய பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் ஸ்பைக் புரதத்தை தான் டார்கெட் செய்கின்றன.

இதுகுறித்து பிலடெல்பியாவில் உள்ள பென் இன்ஸ்டிடியூட் ஃபார் இம்யூனாலஜியின் இயக்குனர் டாக்டர் ஜான் வெர்ரி கூறுகையில், “சாதாரணமாக வைரஸ்கள் அதிகளவில் பிறழ்வுகளை உருவாக்குகையில், அதன் வீரியத்தை இழக்கக்கூடும்.சில ஓமிக்ரான் பிறழ்வுகள் வைரஸின் பாதிப்பு திறனைக் குறைக்கலாம். அதனால் ஸ்பைக் புரதத்தின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படலாம்.

மேலும், தென்னாப்பிரிக்காவில் உள்ள எச்ஐவி நோயாளி போன்ற நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபரிடம், பல மாதங்களாக ஒமிக்ரான் உருவாகியிருக்கலாம் அல்லது விலங்கிடம் உருவாகியிக்கலாம் போன்ற பல்வேறு கூற்றுகளை விஞ்ஞானிகள் கூறுகின்றனர்” என்றார்.

மக்களிடையே பரவலாக இருக்கும் ஒரே கேள்வி, உலகளவில் ரூத்ரதாண்டவம் ஆடிய கொரோனாவின் டெல்டா வேரியண்டை காட்டிலும் பாதிப்பு ஏற்படுத்துமா என்பது தான். இதற்கு பதிலளித்த தொற்று நோய் ஆராய்ச்சியாளர் சுமித் சந்தா, “ஒமிக்ரான் ஆதிக்கம் செலுத்தினாலும், லேசான பாதிப்பு காரணாக அது காய்ச்சல் போன்ற பருவகால அச்சுறுத்தலாக மாறுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது சுகாதார நிறுவனம், ஒரிரு மாதங்களுக்குள் ஐரோப்பாவில் பதிவாகும் கோவிட் 19 பாதிப்புகளில் பாதிக்கும் மேற்பட்டதற்கு ஒமிக்ரான் மாறுபாடு காரணமாக இருக்கலாம் என கூறுகிறது.

ஒமிக்ரான் குறித்து ஆராய்ச்சி தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தொற்று நோய் நிபுணர்கள் கூறுகின்றனர். தடுப்பூசிசெலுத்துவது, பூஸ்டர் டோஸ் பெறுவது, உட்புற அல்லது கூட்டமான இடங்களில் மாஸ்க் அணிவது, அவ்வப்போது கைகளை கழுவது போன்ற நடவடிக்கை களில் ஈடுபடுவது கட்டாயம் என கூறுகின்றனர்.

இங்கிலாந்தின் புதிய பகுப்பாய்வு படி, ஒமிக்ரான் மாறுபாட்டிற்கு எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசிகள் பலவீனமான பாதுகாப்பை வழங்குகிறது என்றும், பூஸ்டர் டோஸ் செலுத்தி யிருந்தால் கொரோனா அறிகுறிகளுக்கு எதிராக 75 விழுக்காடு பாதுகாப்பு இருப்பதாக கண்டறியந்துள்ளனர்.

ஒமிக்ரான் மாறுபாட்டால் பாதிக்கப் பட்ட 581 நோயாளிகள் மற்றும் டெல்டாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் தரவுகளின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப் பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு தரவின்படி, ஒமிக்ரான் முதன்முதலாக தென்பட்ட தென் ஆப்பிரிக்காவில் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகும்.கிடைத்த தரவுகளில், ஒமிக்ரான் குறைவான அளவிலே பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட 1200 பேரிடம் கணக்கிடுகையில், அதில் 98 பேர் மட்டுமே ஆக்சிஜன் சப்ளையும், 4 பேர் வென்டிலேஷனிலும் இருந்தனர்.

அதில், பெரும்பாலானோர் 40 வயதுக்கும் குறைவானவர்கள் தான். வரும் காலத்தில் பாதிக்கப்படும் நோயாளிகளின் வயது மாறும் பட்சத்தில், அதன் விளைவுகள் மாறக் கூடும்” என தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் ஒமிக்ரான்

இந்தியாவில் வேகமாக அளிக்கப்பட்டு வரும் தடுப்பூசி மற்றும் டெல்டா மாறுபாட்டினால் ஏற்பட்ட அதிகமான தாக்குதல் காரணமாக ஒமிக்ரான் தொற்றால் ஏற்படும் தீவிரத்தன்மை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அதில் குறிப்பிட்டுள்ளது சுகாதாரத்துறை.

தென்னாப்பிரிக்காவிற்கு வெளியே பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் மாறுபாடு பரவி வருவதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் அதன் பண்புகள் குறித்து கூறப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் இந்த மாறுபாடு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால், இந்த தொற்றின் தீவிரம் மற்றும் பரவும் தன்மை குறித்த தெளிவான தரவுகள் ஏதும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தடுப்பூசியின் வேகமான வேகம் மற்றும் டெல்டா மாறுபாட்டின் அதிக வெளிப்பாடு ஆகியவை காரண மாக நோயின் தீவிரம் குறைவாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இருப்பினும், அறிவியல் சான்றுகள் இன்னும் உருவாகி வருகின்றன.

தற்போதுள்ள தடுப்பூசிகள் ஓமிக்ரானில் வேலை செய்யாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், ஸ்பைக் மரபணுவில் பதிவாகும் சில பிறழ்வுகள் தற்போதுள்ள தடுப்பூசி களின் செயல்திறனைக் குறைக்கலாம் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இருப்பினும், தடுப்பூசி பாதுகாப்பு என்பது ஆன்டிபாடிகள் மற்றும் செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தி மூலமாகவும் உள்ளது, இது ஒப்பீட்டளவில் ஒமிக்ரானில் இருந்து சிறப்பான பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும். இருக்கும் தடுப்பூசிகளை கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வதும் மிகவும் முக்கியமானது.

கவனிக்கப்பட்ட பிறழ்வுகள், அதிகரித்த பரவுதல் மற்றும் நோயெதிர்ப்பு ஏய்ப்பு ஆகியவற்றின் முன்னறிவிக்கப்பட்ட அம்சங்கள், மற்றும் அதிகரித்த மறுநோய்கள் போன்ற கோவிட்-19 தொற்றுநோய்களில் தீங்கு விளைவிக்கும் மாற்றத்திற்கான ஆரம்ப சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படை யில் ஞம்ண்ஸ்ரீழ்ர்ய் யர்ஈ என அறிவிக்கப் பட்டுள்ளது என்பதை முன்னிலைப் படுத்துவது முக்கியம் என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. அதிகரித்த பரவுதல் மற்றும் நோயெதிர்ப்பு ஆண்ட்டிபாடிகளில் இருந்து தப்பித்துக் கொள்வது போன்ற விவகாரங்களில் உறுதியான சான்றுகள் இன்னும் இல்லை என்றும் அந்த குறிப்பு தெரிவிக்கிறது.

சரியான முறையில் முகமூடி அணிந்து கொள்வதும், இன்னும் தடுப்பூசி போடப்படாவிட்டால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக்கொள்வதும், சமூக இடைவெளியைப் பேணுவதும், நல்ல காற்றோட்டமான பகுதிகளில் வசிப்பதும் அவசியம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

RT-PCRசோதனைகள் வைரஸில் உள்ள குறிப்பிட்ட மரபணுக்களான Spike (S), Enveloped (E), Nucleocapsid (N) போன்றவற்றைக் கண்டறிந்து வைரஸ் இருப்பதை உறுதிப்படுத்துவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

ஆனாலும் ஒமிக்ரானில் எஸ் மரபணுக்கள் பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது. எனவே சில ப்ரைமர்கள் ந மரபணு இல்லாததைக் குறிக்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று பதில் அளிக்கப் பட்டுள்ளது.

இந்த குறிப்பிட்ட ந மரபணு மற்ற வைரஸ் மரபணுக்களைக் கண்டறி வதோடு, ஒமிக்ரானை கண்டறியவும் பயன்படுத்தலாம். ஆனாலும் ஒமிக்ரானை உறுதி செய்ய மாதிரி களை மரபணு வரிசைமுறை உட்படுத்தலுக்கு உட்செலுத்த வேண்டிய நிலை உள்ளது என்று கூறப் பட்டுள்ளது.

gk010122
இதையும் படியுங்கள்
Subscribe