நோபல் பரிசு 2018

/idhalgal/general-knowledge/noble-prize-2018

* நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்துகிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

nobel

* நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கு வோருக்கு ஆண்டுதோறும், கல்வி, கலாச்சார அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்காக ஸ்வீடன் மற்றும் நார்வே அமைப்பு களால் வழங்கப்படுவது நோபல் பரிசு ஆகும்.

1. இயற்பியல் (Physics)

2. வேதியியல் (Chemistry)

3. இலக்கியம் (Literature)

4. மருத்துவம்(Medicine)

5. அமைதி (Peace)

6. பொருளாதார அறிவியல் (Economic Science)

ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

* நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் பிறந்த அவர் வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.

* டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்திவந்தார். தனது கடைசி உயில் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.

* ஆண்டுதோறும் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

நோபல் பரிசு வழங்கும் இடங்கள்: * அமைதிக்கான நோபல் பரிசு - நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது.

* இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதார அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள்- சுவீடன் நாட்டில் வழங்கப்படுகின்றன.

சுவீடன் நடுவண் வங்கி - பொருளாதார அறிவியல் நோபல் பரிசு

* பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு 1968-இல் சுவீடன் மத்திய வங்கியினால் அதன் 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக் கட்டளையின் அவ்வருட வருமானத் தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

அமைதி நோபல் பரிச

* அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாடு வழங்குகிறது. ஆல்பிரட் நோபலின் உயிலின் படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு வழங்குகிறது.

இயற்பியல்

அக்டோபர் 2 அன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

adar

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், ஃபிரான்ஸைச் சேர்ந்த ஜெரால்ட் மொரூவ், கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லாண்ட் ஆகியோர் கூட்டாக இந்தப் பரிசைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இயற்பியலில் லேசர்இயற்பியல் (laser physics) என்றழைக்கப்படும் துறையில் ஆற்றிய பெரும் பணிக்காக இவர்களுக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், ஆர்தர் ஆஷ்கின், ஆப்டிகல் ட்வீசர்ஸ்(optical tweezers) என்ற கண்டுபிடிப்பைச் சாத்தியமாக்கியவர்.

அறிவியல் கற்பனையை உண்மையாக்கிய கண்டுபிடிப்பு என இது வர்ணிக்கப் படுகிறது. ஆர்தரின் கண்டுபிடிப்பு பழசு தற்போது அவருடைய வயது 96. 55 ஆண்டுகளில் முதன்முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசை ஒரு பெண் பெற்றது சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அரை நூற்றாண்டுக்குப் பிறகு விருது பெற்றிருப்பதால் இயற்பியல் துறையில் உள்ள பெண்களுக்கெல்லாம் டோனா ஸ்டிரிக்லாண்ட் முன்னுதாரண மாகியிருக்கிறார்.

இதற்கு முன்னர் 1903-ஆம் ஆண்டு மேரி க்யூரியும், 1963-ஆம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் இயற்பியலுக் கான நோபல் பரிசை பெற்ற பெண்கள் ஆவர். விஞ்ஞானி ஆஷ்கின் ஆப்டிகல் ட்வீசர்ஸ் (optical tweezers)எனப்படும் ஒருவகை லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். அது உயிரியல் அமைப்பை அறிந்துகொள்ள உதவுகிறது. 2017-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை ரெய்நர் வேயிஸ், கிப் த்ரோன் மற்றும் பாரி பாரிஷ் ஆகியோர் ஈர்ப்பு விசை அலைகளை கண்டறிவதில் நிகழ்த்திய பணிகளுக்காக பெற்றனர்.

jerald

ஆர்தர் ஆஷ்கின் (அமெரிக்கா) (உயிரியல் அமைப்பை அறிந்துகொள்ள உதவும் ஆப்டிக்கல் டிவிசர்ஸ்) டோனா ஸ்டிரிக்லாண்ட் (கனடா) ""அதிக அடர்த்திக் கொண்ட புற ஊதா குறுகிய ஒளி துகள்கள்'' உருவாக்கத்திற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

dona

ஜெரால்ட் மொரூவ் (பிரான்ஸ்)க்கும் அதிக அடர்த்தி கொண்ட புற ஊதா கதிர் ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மருத்துவம்

அக்டோபர் 1 அன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி. அலிசன், ஜப்பானைச் சேர்ந்த டசுக்கு ஹோன்ஜோ ஆகியோர் இந்த நோபல் பரிசைப் பகிர்ந்துகொள் கிறார்கள். புற்றுநோய் எதிர்ப்பு செல்களில் இருக்கும் தடைகளையும் அவற்றைக் களையும் வழிமுறையையும் கண்டுபிடித் ததன் மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை யில் இவர்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்தி யுள்ளனர் என நோபல் கமிட்டி வர்ணித் துள்ளது. இவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்று மருத்துவ உலகம் கொண்டாடுகிறது. உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு அலிசன் - ஹோன்ஜோ உருவாக்கிய புதுமையான சிகிச்சை முறை வியக்கத்தக்க பலன்களைத் தரவல்லது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அலிசன், கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டசுக்கு ஹோன்ஜோ ஆகியோர் 1.01 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 7.5 கோடி ரூபாய்) மதிப்புள்ள இந்த நோபல் பரிசுத் தொகையைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த டசுக்கு ஹோன்ஜோ, ""என் ஆய்வை நான் தொடர விரும்புகிறேன். அப்போதுதான் எப்போதும் இல்லாத அளவுக்கு பல புற்றுநோயாளிகளை இந்த இம்யூன் செக் பாயிண்ட் தெரபி காக்கும் என்கிறார். ""இந்த முறை மூலம் சிகிச்சைப் பெற்ற புற்றுநோய் நோயாளிகளை பார்ப்பது நெகிழ்வான ஒரு கௌரவம். அறிவியலின் சக்திக்கு அவர்கள்தாம் வாழும் உதாரணம்"" என்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன். நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புதான் நம்மை நோய் தாக்காமல் காக

* நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்துகிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

nobel

* நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கு வோருக்கு ஆண்டுதோறும், கல்வி, கலாச்சார அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்காக ஸ்வீடன் மற்றும் நார்வே அமைப்பு களால் வழங்கப்படுவது நோபல் பரிசு ஆகும்.

1. இயற்பியல் (Physics)

2. வேதியியல் (Chemistry)

3. இலக்கியம் (Literature)

4. மருத்துவம்(Medicine)

5. அமைதி (Peace)

6. பொருளாதார அறிவியல் (Economic Science)

ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

* நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் பிறந்த அவர் வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.

* டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்திவந்தார். தனது கடைசி உயில் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.

* ஆண்டுதோறும் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

நோபல் பரிசு வழங்கும் இடங்கள்: * அமைதிக்கான நோபல் பரிசு - நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது.

* இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதார அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள்- சுவீடன் நாட்டில் வழங்கப்படுகின்றன.

சுவீடன் நடுவண் வங்கி - பொருளாதார அறிவியல் நோபல் பரிசு

* பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு 1968-இல் சுவீடன் மத்திய வங்கியினால் அதன் 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக் கட்டளையின் அவ்வருட வருமானத் தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

அமைதி நோபல் பரிச

* அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாடு வழங்குகிறது. ஆல்பிரட் நோபலின் உயிலின் படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு வழங்குகிறது.

இயற்பியல்

அக்டோபர் 2 அன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

adar

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், ஃபிரான்ஸைச் சேர்ந்த ஜெரால்ட் மொரூவ், கனடாவைச் சேர்ந்த டோனா ஸ்டிரிக்லாண்ட் ஆகியோர் கூட்டாக இந்தப் பரிசைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். இயற்பியலில் லேசர்இயற்பியல் (laser physics) என்றழைக்கப்படும் துறையில் ஆற்றிய பெரும் பணிக்காக இவர்களுக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், ஆர்தர் ஆஷ்கின், ஆப்டிகல் ட்வீசர்ஸ்(optical tweezers) என்ற கண்டுபிடிப்பைச் சாத்தியமாக்கியவர்.

அறிவியல் கற்பனையை உண்மையாக்கிய கண்டுபிடிப்பு என இது வர்ணிக்கப் படுகிறது. ஆர்தரின் கண்டுபிடிப்பு பழசு தற்போது அவருடைய வயது 96. 55 ஆண்டுகளில் முதன்முறையாக இயற்பியலுக்கான நோபல் பரிசை ஒரு பெண் பெற்றது சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அரை நூற்றாண்டுக்குப் பிறகு விருது பெற்றிருப்பதால் இயற்பியல் துறையில் உள்ள பெண்களுக்கெல்லாம் டோனா ஸ்டிரிக்லாண்ட் முன்னுதாரண மாகியிருக்கிறார்.

இதற்கு முன்னர் 1903-ஆம் ஆண்டு மேரி க்யூரியும், 1963-ஆம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் இயற்பியலுக் கான நோபல் பரிசை பெற்ற பெண்கள் ஆவர். விஞ்ஞானி ஆஷ்கின் ஆப்டிகல் ட்வீசர்ஸ் (optical tweezers)எனப்படும் ஒருவகை லேசர் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். அது உயிரியல் அமைப்பை அறிந்துகொள்ள உதவுகிறது. 2017-ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை ரெய்நர் வேயிஸ், கிப் த்ரோன் மற்றும் பாரி பாரிஷ் ஆகியோர் ஈர்ப்பு விசை அலைகளை கண்டறிவதில் நிகழ்த்திய பணிகளுக்காக பெற்றனர்.

jerald

ஆர்தர் ஆஷ்கின் (அமெரிக்கா) (உயிரியல் அமைப்பை அறிந்துகொள்ள உதவும் ஆப்டிக்கல் டிவிசர்ஸ்) டோனா ஸ்டிரிக்லாண்ட் (கனடா) ""அதிக அடர்த்திக் கொண்ட புற ஊதா குறுகிய ஒளி துகள்கள்'' உருவாக்கத்திற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

dona

ஜெரால்ட் மொரூவ் (பிரான்ஸ்)க்கும் அதிக அடர்த்தி கொண்ட புற ஊதா கதிர் ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

மருத்துவம்

அக்டோபர் 1 அன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் பி. அலிசன், ஜப்பானைச் சேர்ந்த டசுக்கு ஹோன்ஜோ ஆகியோர் இந்த நோபல் பரிசைப் பகிர்ந்துகொள் கிறார்கள். புற்றுநோய் எதிர்ப்பு செல்களில் இருக்கும் தடைகளையும் அவற்றைக் களையும் வழிமுறையையும் கண்டுபிடித் ததன் மூலம் புற்றுநோய்க்கான சிகிச்சை யில் இவர்கள் ஒரு புரட்சியை ஏற்படுத்தி யுள்ளனர் என நோபல் கமிட்டி வர்ணித் துள்ளது. இவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்று மருத்துவ உலகம் கொண்டாடுகிறது. உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய்க்கு அலிசன் - ஹோன்ஜோ உருவாக்கிய புதுமையான சிகிச்சை முறை வியக்கத்தக்க பலன்களைத் தரவல்லது. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அலிசன், கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டசுக்கு ஹோன்ஜோ ஆகியோர் 1.01 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 7.5 கோடி ரூபாய்) மதிப்புள்ள இந்த நோபல் பரிசுத் தொகையைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த டசுக்கு ஹோன்ஜோ, ""என் ஆய்வை நான் தொடர விரும்புகிறேன். அப்போதுதான் எப்போதும் இல்லாத அளவுக்கு பல புற்றுநோயாளிகளை இந்த இம்யூன் செக் பாயிண்ட் தெரபி காக்கும் என்கிறார். ""இந்த முறை மூலம் சிகிச்சைப் பெற்ற புற்றுநோய் நோயாளிகளை பார்ப்பது நெகிழ்வான ஒரு கௌரவம். அறிவியலின் சக்திக்கு அவர்கள்தாம் வாழும் உதாரணம்"" என்கிறார் பேராசிரியர் ஜேம்ஸ் பி அலிசன். நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புதான் நம்மை நோய் தாக்காமல் காக்கிறது. ஆனால் இந்த நோய் எதிர்ப்பு அமைப்பு நம் சொந்த திசுக்களைத் தாக்காமல் தடுக்க அதற்குள்ளேயே சில விதிவிலக்கான ஏற்பாடுகள் உள்ளன. இந்த இடை வெளியை பயன்படுத்தி, நோய் எதிர்ப்பு அமைப்பை ஏமாற்றி சில வகை புற்றுநோய்கள் நம் உடலைத் தாக்குகின்றன. நோய் எதிர்ப்பு அமைப்பில் உள்ள இந்த கட்டுப்பாட்டினை தளர்த்தி நோய் எதிர்ப்பு செல்களையே புற்றுநோய் செல்கள் மீது தாக்குதல் தொடுக்கும்படி செய்வதற்கான வழிவகையை அலிசனும் ஹோஞ்சோ-வும் உருவாக்கியுள்ளனர். "இம்யூன் செக் பாயிண்ட் தெரபி' முறையை பின்பற்றி பிரிட்டன் சுகாதாரத்துறை தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளித்து வருகிறது.

வியத்தகு நல் விளைவுகளை இந்த சிகிச்சை முறை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவர்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சையில் புதிய மைல்கல் என்றும் கருதப்படுகிறது.

அபரிமிதமாக வளர்ந்த விஞ்ஞானம் மருத்துவத் துறையில், பெரிய அளவில் முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இருந்தும், உயிர்கொல்லி நோய்கள் உட்பட எத்தனையோ நோய்களுக்கு இன்றும் சிகிச்சையில்லை என்பதே உண்மை. அதிலும், புற்றுநோய்க்கு இன்றும் நிரந்தரத் தீர்வு இல்லை. புற்றுநோய் உயிரை எடுப்பதுடன், தாங்க முடியாத வலியையும் வேதனையையும் தருகிறது. இந்நிலையில், புற்றுநோய் சிகிச்சையில் முற்றிலும் புதுவகையான வழிமுறையைக் கண்டறிந்த ஜேம்ஸ் அலிசன், டசுக்கு ஹோன்ஜோ ஆகிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு, இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. வாழ்நாளை நீட்டித்த புரதம் ஜேம்ஸ் அலிசன் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அவர் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளர். டசுக்கு ஹோன்ஜோ ஜப்பானைச் சேர்ந்தவர். அவர் ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்.

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்களின் புரதச் சத்தைப் பல்கிப் பெருகச் செய்து, நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு முறையை வலுவாக்கி, அதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை எதிர்த்து அழிப்பது எப்படி என்பதை இந்த விஞ்ஞானிகள் மருத்துவ உலகுக்குக் காட்டினர். அவர்களின் இந்த வழிமுறையை அடியொற்றி பல சிகிச்சைமுறைகள் தோன்றின. அவை புற்றுநோயாளிகளின் வலியைக் குறைப்ப துடன், அவர்களின் வாழ்நாளையும் நீட்டித்தன.

புற்றுநோயை எதிர்க்கும் டி-செல்கள்

நான்கு நபர்கள் அமரக்கூடிய காரில் நூறு பேர் அமர்ந்தால் என்ன ஆகும் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது. புற்றுநோய் என்பது அத்தகைய ஒன்றுதான். இதில் ஒரே இடத்தில், நூறு என்பது ஆயிரம், பத்தாயிரம், ஒரு லட்சம் என்று செல்கள் பெருகி, தீராத வேதனை அளித்து, இறுதியில் நம் உயிரைப் பறிக்கும்.

ஆரம்பக்கட்ட புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சை முறைகள் உள்ளன. கதிர்வீச்சு, கீமோதெரபி போன்ற அந்த சிகிச்சை முறைகளால் புற்றுநோயாளிகள் படும் அவஸ்தை சொல்லில் அடங்காதது. மேலும், இந்த சிகிச்சைமுறைகள் புற்றுநோய் செல்களை மட்டும் அழிப்பதில்லை. நம் உடலில் உள்ள நல்ல செல்களையும் சேர்த்தே அழிக்கின்றன.

பொதுவாக, நம் உடலுக்குள் ஏதேனும் அந்நியப் பொருள் தோன்றினாலோ நுழைந்தாலோ நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள், அவற்றுக்கு எதிராகப் போரிட்டு அழிக்கும். புற்றுநோயை எதிர்க்கும் செல்கள் டி-செல்கள் எனப்படுகின்றன. இந்த டி-செல்கள் உடலில் இயற்கையாகவே தோன்றினாலும், அவை புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதில்லை. டி-செல்களின் போராடும் தன்மையைத் தடுக்கும் விதமாகப் பல தடைகள் அந்த டி-செல்களில் உள்ளன.

அத்தகைய தடைகள் குறித்தும், அந்தத் தடைகளை அகற்றுவது குறித்தும்தான் அலிசனும் ஹோன்ஜோவும் தனித்தனி யாக வெவ்வேறு நாடுகளில் இருந்தபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களின் ஆராய்ச்சிக்கு முன்புவரை, புற்றுநோய்க் கான சிகிச்சை என்பது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை அழிப்ப தாகவே இருந்தது.

tauk

நம் உடலில் இருக்கும் டி-செல்களாலேயே புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் எனும்போது, புற்றுநோய் செல்களை நாம் ஏன் அழிக்க வேண்டும்? என்று இவர்களுக்குள் எழுந்த கேள்வியே, இவர்களது ஆராய்ச்சியின் தொடக்கப் புள்ளி. டி-செல்லில் இருந்த சி.டி.எல்.ஏ.-4 (CTLA-4) எனும் தடையை அலிசன் கண்டறிந்தார். அந்தத் தடையைக் களையும் வழிமுறையையும் வெற்றிகரமாகக் கண்டறிந்து அதை மருத்துவ உலகுக்கு அவர் நிரூபித்துக் காட்டினார். இது நடந்தது 1997. பிறகு 2010-இல் மனிதர் களிடம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப் பட்டது. ஆனால், அதற்கு முன்பே 1992-இல் டி-செல்லில் இருந்த பி.டி-1 (PD-1) எனும் தடையை ஹோன்ஜோ கண்டறிந்தார். எனினும், 2012-ல்தான், இவரது ஆய்வு மனிதர்களிடையே வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. இன்று மருத்துவ உலகம் இந்த இரண்டு முறைகளையும் ஒருங்கே பயன்படுத் துகிறது. ஈபகஆ-4, டஉ-1 போன்று வேறு என்னென்ன தடைகள் உள்ளன என்பதைக் கண்டறியும் முயற்சியில் இன்று ஒட்டுமொத்த மருத்துவ உலகமும் ஈடுபட்டுள்ளது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நாளில் அலிசன் நியூயார்க்கில் இருந்தார். நோய் எதிர்ப்பு இயலில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றுவதற்காக அவர் அங்கு வந்திருந்தார். அதிகாலை 5.30 மணிக்கு அவருடைய மகனிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவரை எழுப்பிவிட்டது. தகவலைச் சொன்னார் மகன். தூக்கக் கலக்கத்தில் இருந்தவர், சரி என்று சொல்லியபடி மீண்டும் தூங்கிவிட்டார். 6.30 மணிக்கு அவரது அறைக் கதவு பலமாகத் தட்டப்பட்டது.

jamesபதறியடித்து எழுந்து கதவைத் திறந்தால், அவரது அறைக்கு முன்பாக, அந்தக் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த அனைவரும் ஷாம்பெயின் பாட்டிலைக் கையில் ஏந்தியபடி நின்றுகொண்டிருந்தனர்.

திறக்கப்பட்ட ஷாம்பெயின் பாட்டிலி லிருந்து கொப்பளித்த நுரை அவரின் மீது பீச்சியடிக்கப்பட்டது.

எந்தத் திட்டமிடலுமற்ற ஒரு கொண்டாட்டம் அங்கு அரங்கேறியது.

அந்தக் கொண்டாட்டத்தின் இடையில் தான் நோபல் கமிட்டியிடமிருந்து அதிகாரப்பூர்வத் தகவல் அவருக்கு வந்தது. உடனடியாகச் செய்தியாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு பேட்டி எடுத்தனர்.

அதற்கு அவர் ""உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு இன்னும் விடியவே இல்லை. என் கண்களில் இன்னும் தூக்கம் மிச்சமுள்ளது. நான் ஒரு சாதாரண விஞ்ஞானி. என்னுடைய ஆராய்ச்சி முடிவுகள், சக மனிதனின் உயிரைக் காப்பாற்றுகிறது என்பதை நினைக்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தியைவிட வேறு என்ன பெரிய மகிழ்ச்சியும் பெருமையும் எனக்குக் கிடைத்து விடப்போகிறது? என்று அவர்களிடம் தெரிவித்துவிட்டு'' அலிசன் தன்னுடைய அறைக்குள் சென்றுவிட்டார்.

வேதியியல்

அக்டோபர் 3 அன்று வேதியியலுக் கான விருது அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரான்சஸ் அர்னால்டு, ஜார்ஜ் பி. ஸ்மித், இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரிடன் கிரகோரி வின்டர் ஆகியோர் நோபல் பரிசைப் பகிர்ந்துகொள்கின்றனர். என்சைம் (நொதி) தொடர்பான ஆய்வில் தங்களின் அரிய கண்டுபிடிப்புகளுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

francis

உயிரியலில் ரசாயன எதிர்வினைகளை அதிகரிக்கச் செய்யக்கூடிய புதிய நொதி களை உருவாக்க இயக்கப் பரிணாமம் என்ற தொழில்நுட்பத்தை இவர்கள் பயன்படுத்தினார்கள். அதற்காகவே விருது இவர்களுக்கு இப்போது வழங்கப் படுகிறது. இந்த நொதிகள் புதிய மருந்துகள், பசுமை எரிபொருட்களை உற்பத்தி செய்யப்பயன்படுபவை. பிரான்சஸ் அர்னால்டு இந்தப் பரிசில் பாதித் தொகை பெற உள்ளார். மீதியை ஜார்ஜ் பி. ஸ்மித்தும், கிரகோரி வின்டரும் சமமாகப் பகிர்ந்துகொள்ள உள்ளார்கள். ஸ்மித்தும் கிரகோரி வின்டரும் புதிய புரதங்களைப் பரிணமிக்கச் செய்ய பெஜ் காட்சி தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள். குறிப்பிட்ட பாக்டீரியாவை அழிக்கச் செய்து புதிய ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு இதனை அவர்கள் பயன்படுத்தியதற்காக இந்த விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டார்கள். இவர்களில் பிரான்சஸ் அர்னால்டு வேதியலுக்கான நோபல் பரிசு பெறும் ஐந்தாவது பெண்.

georgeஇதில் நொதியங்கள் பற்றிய ஆய்வு எரிபொருள் முதல் மருத்துகள் உற்பத்தி வரை பலதுறைகளில் மானுட குல வளர்ச்சிக்குப் பயன்படுவதாகும்.

அதே போல் பேஜ் டிஸ்ப்ளே முறையைப் பயன்படுத்தி பரிணாமம் அடையும் நோய் எதிர்ப்புப் பொருள், கேன்சர் உள்ளிட்ட தற்தடுப்புச் சக்தி கொண்ட நோய்களை எதிர்க்கவல்லது. சில சந்தர்ப்பங்களில் ஒரு இடம் விட்டு ஒரு இடத்திற்கு பரவும், தாவும் மெட்டா ஸ்டேடிக் கேன்சர்களையும் எதிர்க்கவல்லது.

உயிர்வாழ்க்கையின் ரசாயன உபகரண மான புரோட்டீன்கள் என்பது தனிப்பயனாக்கப்பட்டு, மாற்றப்பட்டு, புதுப்பிக்கப்பட்டு இன்று பிரமிக்கத்தக்க வகையில் நினைத்துப் பார்க்க முடியாத பல்லுயிரிப் பெருக்கத்துக்கு வழிவகை செய்துள்ளது.

இந்த நோபல் பரிசு வென்ற விஞ்ஞானிகள் பரிணாமம் எனும் ஆற்றலினால் உத்வேகம் பெற்றவர்கள், எனவே மரபணு மாற்றம், தேர்வு (செலக்‌ஷன்), போன்ற கோட்பாடுகளின் அடிப்படையில் மனிதனின் வேதியியல் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் புரதங்களைக் கண்டுபிடிக்க ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வுகள் பிற்பாடு பெரிய அளவில் மனித குலத்துக்கு பயனளிக்கும் ஆய்வுகளின் ஆரம்பக் கட்டம்தான் என்று நோபல் அகாடமி தன் செய்திக் குறிப்பில் கூறியுள்ளது.

குறிப்பிட்ட பாக்டீரியாவை அழிய செய்து புதிய ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்கு இதனை அவர்கள் பயன்படுத்தினர். இவ்வாறு தீங்கான பாக்டீரியாக்களை மற்றும் வைரஸ்களை சமநிலைப்படுத்தி நோய் எதிர்ப்பு அமைப்பால் பயன்படுத்தப்படும் பெரிய புரதங் களாக இந்த ஆன்டிபாடிகள் செயல் பட்டன.

இந்த பெஜ் காட்சி தொழில்நுட்பப்படி உருவாக்கப்பட்ட முதலாவது ஆன்டிபாடியான 'அடலிமுமாப்' 2002-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

vindor

இது முடக்கு வாதம், தடிப்பு தோல் அழற்சி மற்றும் குடல் அழற்சி நோய் களுக்கு சிகிச்சை அளிக்க பயன்பட்டது.

அதுமுதல் நச்சுத்தன்மை, நோய் தடுப்பு திறனை அதிகரித்தல், பிற இடங்களில் பரவும் புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஆன்டிபாடிகளை பெஜ் காட்சி தொழில்நுட்பம் உருவாக்கியுள்ளது.

பொருளாதார அறிவியல்

பொருளாதாரத்தில் 2018-ஆம் ஆண்டுக் கான நோபல் பரிசினை அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் வில்லியம் நார்தாஸ் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் பால் ரோமர் ஆகிய இரு பொருளாதார அறிஞர்களும் பகிர்ந்து கொள்கிறார்கள். முதலாமவர் உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றத் தினால் ஏற்படும் பாதிப்புகளை பொருளாதார அளவீடுகளில் எவ்வாறு கணக்கிடுவது மற்றும் அப்பிரச்சினைகளை பொருளியல் கருவிகள் கொண்டு எவ்வாறு சரி செய்வது போன்ற ஆய்வு களைச் செய்தவர்.

இரண்டாமவர் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் முக்கியத் துவத்தையும், அவற்றை ஊக்குவிப்பதற்கான வழிகளையும் ஆராய்ச்சி செய்துள்ளார். இவற்றுக்காக இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர். இவர்களின் ஆராய்ச்சி, பேரியல் பொருளாதார கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மேலும் செம்மைப்படுத்தி நீண்ட கால மற்றும் நிலைத்த பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு தயாராவது என்பதற்கான வழிமுறைகளை சொல்லக்கூடியவை.

palromar

வில்லியம் நார்தாஸின் பங்களிப்பு நார்தாஸின் ஆய்வுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு சுற்றுச்சூழலை சார்ந்துள்ளது எனவும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் எவ்வாறு நீண்டகால வளர்ச்சியை தடுக்கும் எனவும் தெளிவு படுத்துகின்றன. அவரின் தொடக்க கால ஆய்வுகள் பசுமை அல்லது நிலைத்த தேசிய வருவாயைக் கணக்கிடுவது பற்றியதாகும். பெரும்பாலான நாடுகள் தங்களின் வருமான வளர்ச்சி குறித்த கணக்கீட்டில் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பை (GDP)மட்டுமே கணக்கில் கொள்கின்றன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் இயற்கை வளங்களை பயன்படுத்துதல் மற்றும் நிலம், காற்று, நீர் நிலைகளில் ஏற்படும் மாசுபாட்டின் காரணமாக நாட்டில் ஏற்படும் இழப்பீடுகளை இந்த வருமான கணக்கீட்டில் எடுத்துக் கொள்வது இல்லை. இந்த மாதிரியான கணக்கீட்டு முறை, ஒரு நாடு வளர்ந்து வருவது போன்ற மாயத் தோற்றத்தையே ஏற்படுத்துகின்றது.

உதாரணமாக, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்களை ஒரு நாடு சுரண்டி ஏற்றுமதி செய்கிறது என்றால், நாட்டின் வருமானத்தில் அதன் மதிப்பு சேர்க்கப்படுகிறது. ஆனால் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கனிம வளத்தை இழந்துள்ளோம் என்பதை நாம் கணக்கில் கொள்வதில்லை.

இந்த இயற்கை வள சீர்கேட்டை கணக்கில் எடுக்கவில்லையென்றால், நாட்டின் வளர்ச்சி மற்றும் மனித நலன் நீண்டகால அடிப்படையில் வீழ்ச்சியடையும் என்பதை நார்தாஸின் ஆராய்ச்சி தெளிவாக்குகிறது. அவரின் சமீபகால ஆய்வுகள், புவி வெப்பமடை தலினால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைப் பற்றியது. புவி வெப்பமடைதல் என்பது சர்வதேச அளவில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

புவி வெப்பமடைதலை துரிதப்படுத்தும் கரியமில வாயு போன்ற காரணிகளை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், எதிர்கால வளர்ச்சியில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என IPCC போன்ற உலக அமைப்புகளின் ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இப்பெரும் பிரச்சினையை தீர்ப்பதற்காக, பேரா. ஆர்தர் பிகு-வின் புகழ்பெற்ற வரி விதிப்புக் கோட்பாட்டை பயன்படுத்தி, கரியமில வாயுக்களை வெளிப்படுத்தும் நடவடிக்கைகள் மேல் கார்பன் (carbon) வரி விதிக்க வேண்டும் என்று நார்தாஸ் அறிவுறுத்துகிறார்.

வரியின் மூலம் மாசுபடுத்தும் பொருட்களின் விலையை அதிகரித்து நுகர்வைக் குறைப் பதால், புவி வெப்பமடைதல் கணிசமாகக் குறையும். இருப்பினும், வரி விதிப்பால் மக்களின் நிகழ்கால நுகர்வு, வருவாய் மற்றும் வேலைவாய்ப்பில் தொய்வு ஏற்படுவதால், எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய பிரச்சினையாக எழுகின்றது.

இதற்காக வரி விதிப்பினால் ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை கணக்கிட வேண்டிய அவசியத்தை நார்தாஸ் வலியுறுத்துகிறார்.

இதற்காக ஒருங்கிணைந்த மதிப்பீட்டு மாதிரியை வடிவமைத்து அதன் மூலம் நன்மை தீமைகளை சமன் செய்யக்கூடிய அனைத்து நாடுகளுக்கும் ஒரே சீரான கார்பன் வரி விகிதத்தை நிர்ணயிக்க முடியும் என்பதை நிரூபிக்கிறார். உதாரணமாக, புவி வெப்ப அளவு அதிகரிப்பை 2 OC அளவுக்கு நிலை நிறுத்த வேண்டுமெனில் ஒரு டன் கரியமில வாயுவிற்கு சுமாராக ரூ. 3,285 வரி விதிக்க வேண்டும் என்று கணக்கிட்டுள்ளார். வரி விதிப்பினால் ஏற்படும் பாதிப்புகளை, சுற்றுச்சூழலுக்கு சாதகமான பொருட்களின் விலையைக் குறைப்பதன் மூலமும், வரி வருவாயை சுற்றுச்சூழலை மேம்படுத்த செலவிடு வதன் மூலமும் ஈடுசெய்ய முடியும்!

willaims

நாம் கவனிக்க வேண்டியது என்னவெனில், மாசு போன்ற பேராபத்தை விளைவிக்கக் கூடிய காரணிகளை சந்தைப் பொருளாதாரம் கட்டுப் படுத்துவதில்லை. இதை "சந்தையின் தோல்வி' என்று வருணிக்கின்றனர். எனவே, அரசின் வரி விதிப்பு நடவடிக்கை மூலம் இக்காரணி களை சந்தை நடவடிக்கைகளுக்குள்ளேயே கொண்டு வந்து அவற்றை சந்தை மூலமாகவே கட்டுப்படுத்தலாம் என்பதை நார்தாஸ் ஆராய்ச்சி தெளிவுபடுத்தியுள்ளது.

பால் ரோமரின் பங்களிப்பு

நார்தாஸ் மற்றும் ரோமர் இருவரின் நோக்கம் மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கானது என்றாலும், ரோமரின் கோட்பாடுகள் நார்தாஸின் கோட்பாடுகளிலிருந்து சற்று வேறுபடக் கூடியவை. ரோமரின் கருத்துகள், 1987-இல் நோபல் பரிசு வென்ற பேரா. ராபர்ட் சொலோவின் கருத்துகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. ஒரு நாட்டின் தொடர் வளர்ச்சி தொழில்நுட்ப வளர்ச்சியைச் சார்ந்தே உள்ளது என்பதை நிறுவுகிறது சோலோவின் ஆராய்ச்சி. ஆனால், இந்த தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வாறு ஒரு சந்தைப் பொருளாதாரத்தில் உருவாகிறது மற்றும் விரிவடைகிறது என்பதைப் பற்றிய கேள்விக்கு அது "எங்கோ சொர்க்கத்திலிருந்து வருகிறது' என்று ஒரு தெளிவற்ற பதிலை முன் வைக்கிறது. ரோமர் இதற்கு தர்க்க ரீதியான பதிலை தருகிறார்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது புதுப் புது சிந்தனைகள், கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது என்று ஜோசப் ஷும்ப்பீட்டர் என்ற புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் குறிப்பிடுகிறார். அதை அப்படியே ஏற்றுக் கொண்டாலும், ரோமர் ஒருபடி மேலே செல்கிறார்.

இவை ஒரு நாட்டில் உள்ள தனி நபர், தொழிற்சாலை மற்றும் கல்வி அமைப்புகள் போன்றவற்றின் உள்ளிருந்தே' வருகின்றன என்று நிறுவுகிறார். இவையே வளர்ச்சியைத் தூண்டுபவை. இவ்வாறு ஏற்படும் ஒரு நாட்டின் வளர்ச்சியை, உள்ளார்ந்த வளர்ச்சி (endogenous growth) என்கிறோம். இந்த பூமியில் நாம் எந்த வளத்தையும் புதிதாக உருவாக்க போவது இல்லை, அனைத்தும் இங்கு ஏற்கனவே இருக்கின்றவை. ஆனால் நாம் செய்ய வேண்டியது அவற்றின் உருவத்தை, பருமனை அல்லது அதன் பயனை நமது வசதிக்கேற்ப மறுசீரமைத்துக்கொள்வதில் இந்த உள்ளார்ந்த தொழில்நுட்பங்கள்' பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான புதிது புதிதான சிந்தனைகள் மற்றும் புத்தாக்கம் அனைத்தும் சந்தைப் பொருளாதார நடவடிக்கைகளின் உள்ளிருந்தே உருவாகின்றன! இது மனித வளத்தை பல்வேறு வகைகளில் ஊக்கப்படுத்தி, புதிய எண்ணங்களைப் பெருக்கி, கண்டுபிடிப்புகளை அதிகப் படுத்தி நமக்கு தேவையான மறுசீரமைப்பு களை செய்ய உறுதுணையாக உள்ளன.

புதிய எண்ணங்களை வார்த்தெடுப்பதன் மூலம் பருவநிலை மாற்றம், உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுப்புற சூழல்மாசுபாடு போன்ற வற்றை கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கு தொழில்நுட்பத்தையும் மற்றும் புத்தாக்கத்தையும் நம்மால் உருவாக்க முடிகிறது என்கிறார் ரோமர்.

ஒரு நாட்டில் உள்ள மூலதனம் மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தியானது குறைந்து கொண்டே செல்லும் தன்மை கொண்டதால், இவற்றை மட்டுமே பயன்படுத்தும் நாடு வளர்ச்சியில் சரிவை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆனால், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் பயன்கள் பன்மடங்கு பெருக்கக்கூடியவை என்பதால், இவை வளர்ச்சியை அதிகரிக்கும். ஆனால், இங்கே ஒரு பெரிய சிக்கல் என்னவெனில், ஒரு குறிப்பிட்ட தொழில்முனைவோரின் முயற்சியால் புதிய தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம் உருவாகும்போது அவற்றின் பயன்கள் இவ்வாறான முயற்சியே செய்யாத மற்ற தொழில்முனைவோர்க்கும் இலவசமாகக் கசிகின்றன!

ஒருவர் உழைப்பில் மற்ற அனைவரும் இலவச சவாரி செய்வதால், புத்தாக்கம் செய்பவரின் தொடர் முயற்சி தடைபட்டு பொருளாதார வளர்ச்சியில் சீரிய தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது! இதை நிவர்த்தி செய்ய, தொழில்நுட்பம் சார்ந்த காப்புரிமை வழங்குதல், தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மானியம் மற்றும் ஊக்கத்தொகை அளித்தல், கல்வி மற்றும் தனிநபர் திறமைகளில் புதுமைகளை புகுத்துதல் போன்ற நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ள ரோமர் பரிந்துரைக்கிறார். சில நேரங்களில், மற்ற போட்டியாளர்களை சந்தையிலிருந்து வெளியேற்ற ஒரு சில தொழில் முனைவோர் குறிப்பிட்ட தொழில்நுட்பங்களை அளவுக்கதிமாக பயன்படுத்தலாம். இதுவும் வளர்ச்சியை பாதிக்கும். இவ்வாறான தீய நடவடிக்கைகளையும் அரசாங்கம் சில கொள்கை முடிவுகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டும் என்பது ரோமரின் கருத்து! இங்கு முக்கியமாக கவனிக்கப்படவேண்டியது என்னவெனில், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் போன்ற நடவடிக்கைகளை அரசின் கட்டுப்பாடற்ற' சந்தைப் பொருளாதாரத்தின் கீழ் அனுமதிக்கும் போது அவை வளர்ச்சிக்கு பாதகம் விளைவிக்கக் கூடும் என்பதே! புதுமையை ஊக்குவிப்பதில் சந்தையின் தோல்வி தொக்கி நிற்பதால், அரசு தலையீட்டின் அவசியம் இங்கே வலியுறுத்தப் படுகிறது.

பொருளியல் தத்துவத்திற்கான பங்களிப்பு

பொருளியலின் அடிப்படைக் குறிக்கோள், பொருளாதார நடவடிக்கைகள் மூலம் தனி மனித சுதந்திரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதே! சந்தை நடவடிக்கைகள் சார்ந்த முதலாளித்துவப் பொருளாதார அமைப்பே தனிமனித சுதந்திரத்தை அடைய முக்கிய வழி என்பதை பெருவாரியான பொருளாதார நிபுணர்கள் ஏற்றுக்கொண்ட போதிலும், அத்தகைய குறிக்கோளை அடைவதற்கான கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை வகுக்கும்பொழுது, அவர்களிடையே இரண்டு விதமான கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒரு சாரார், பொருளியலின் தந்தை ஆடம் ஸ்மித் அவர்களின் கொள்கையைப் பின்பற்றி, சந்தைப் பொருளாதார நடவடிக்கைகளில் அரசாங்கம் மிகக் குறைந்த அளவே தலையிட வேண்டும் என்று வாதிடு கின்றனர். சந்தைப் பொருளாதாரத்தில் ஏற்படும் சீர்கேடுகளுக்கு, அரசாங்கத்தின் அநாவசியமான தலையீடே காரணம் என்பது இவர்களின் முக்கியக் கூற்று.

இவர்களில், முன்னரே பொருளாதாரத்திற் கான நோபல் பரிசை வென்ற மில்டன் பிரீட்மேன் (1976-இல் நோபல் பரிசை வென்றவர்), பிரெடெரிக் வான் ஹாயக் (1974), ஜேம்ஸ் புக்கனன் (1986), கேரி பெக்கர் (1992), ரொனால்டு கோஸ் (1991) மற்றும் ராபர்ட் லூகாஸ் (1995) போன்றோர் அடங்குவர்.

danishமற்றொரு சாரார், சந்தையை அதன் போக்கில் விடும்பட்சத்தில் சந்தைத் தோல்வி ஏற்பட்டு அது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் எனவும், முதலாளித்துவம் மற்றும் சந்தைப் பொருளாதாரத்தை பாதுகாத்து, தனிமனித சுதந்திரத்தை பேணுவதில் அரசின் பங்கு முக்கியம் எனும் வாதத்தையும் முன் வைப்பவர் களாகும்!

முதலாளித்துவ பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசின் தலையீடு மிக அவசியம் என்று வலியுறுத்திய பேரியல் பொருளாதாரத்தின் தந்தை ஜான் மேனாட் கெய்ன்ஸ் அவர்களின் அடியொற்றி வரும் இவர்களில், நோபல் பரிசை முன்னரே வென்ற ராபர்ட் சோலோ (1987), ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் (2001); ஜார்ஜ் அகெர்லோப் (2001), பால் க்ருக்மேன் (2008) போன்றோர் மிக முக்கியமானவர்கள்.

இந்த ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்ற பால் ரோமர் மற்றும் வில்லியம் நார்தாஸ் அவர்களின் கருத்துகள் சந்தை நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் தலையீட்டை மேலும் வலுப்படுத்துவதாக அமைகின்றன. அரசாங்கங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாடம் என்னவெனில், புத்தாக்கம் மற்றும் மாசுபடுதல் போன்ற வளர்ச்சி யைப் பாதிக்கக்கூடிய காரணிகளில் சீரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் பட்சத்தில், நாட்டில் நீண்ட மற்றும் நிலைத்த வளர்ச்சியை விரைவாக எட்டமுடியும் என்பதே.

- பேராசிரியர் எல். வெங்கடாசலம்

- பேராசிரியர் எம். உமாநாத்

அமைதி

அக்டோபர் 5 அன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமைதிக்கான நோபல் பரிசுக்கு இந்த ஆண்டு மட்டும் தனிநபர், அமைப்புகள் என 331 பெயர்கள் முன்மொழியப் பட்டிருந்தன.இதில் வல்லுறவை ஒரு போர்க் கருவியாகப் பயன்படுத்துவதற்கு எதிரான செயற்பாட்டாளராக அறியப்படும் நாடியா முராத், டெனிஸ் முக்வேகய் ஆகியோர் இந்தப் பரிசைப் பகிர்ந்துகொண்டனர்.

இருவருமே பாலியல் வல்லுறவு குற்றத் துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். ஐ.எஸ். குழுவினரால் கொடுமைப்படுத்தப்பட்டு வல்லுறவுக்கு உள்ளானவர் நாடியா முராத். 2014-இல் ஐ.எஸ். பிடியிலிருந்து தப்பிய இவர், யாசிதி சமூக மக்களின் விடுதலைக்காகவும் போராடிவருகிறார்.

டெனிஸ் முக்வேகய் காங்கோ நாட்டைச் சேர்ந்த மகளிர் நல மருத்துவர். இவர் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண் களுக்குச் சிகிச்சை அளித்துவருபவர்.

வல்லுறவால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் பேருக்கு முக்வேகய் சிகிச்சை அளித்துள்ளார். போர்களில் நடத்தப்படும் வல்லுறவால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இவர் நிபுணத்துவம் பெற்றவர்.

இந்த இருவரும் பாலியல் வன்புணர்வுக் குற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமானவர்கள் என்று நோபல் பரிசுக் குழுவின் தலைவர் பெரிட் ரெய்ஸ்-ஆண்டர்சன் தெரிவித்தார். யாசிதி சமூகத்தைச் சேர்ந்தவரான நாடியா முராத் ஐ.எஸ். குழுவினரால் கொடுமைப் படுத்தப்பட்டு வன்புணர்வுக்கு உள்ளானவர். டெனிஸ் முக்வேகய் காங்கோ நாட்டைச் சேர்ந்த பெண் நலவியல் மருத்துவர்.

டெனிஸ் முக்வேகய் காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள முக்வேகய் யும் அவரது சகாக்களும் வன்புணர் வால் பாதிக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

வன்புணர்வால் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஒரு நிபுணத் துவத்தை வளர்த்தெடுத்துள்ளனர்.

gk011118
இதையும் படியுங்கள்
Subscribe