நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்து கிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கு வோருக்கு ஆண்டுதோறும், கல்வி, கலாச்சார அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிப் பதற்காக சுவீடன் மற்றும் நார்வே அமைப்புகளால் வழங்கப்படுவது நோபல் பரிசு ஆகும்.
1. இயற்பியல் (Physics))
2. வேதியியல் (Chemistry)
3. இலக்கியம் (Literature)
4. மருத்துவம் (Medicine)
5. அமைதி (Peace)
6. பொருளாதார அறிவியல் (Economic Science)
ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் பிறந்த அவர் வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.
டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். தனது கடைசி உயில் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.
ஆண்டுதோறும் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
நோபல் பரிசு வழங்கும் இடங்கள் அமைதிக்கான நோபல் பரிசு - நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதார அறிவியல் ஆகிய பிரிவுகளுக் கான நோபல் பரிசுகள்-சுவீடன் நாட்டில் வழங்கப் படுகின்றன.
சுவீடன் நடுவண் வங்கி பொருளாதார அறிவியல் நோபல் பரிசு பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு 1968-இல் சுவீடன் மத்திய வங்கியினால் அதன் 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.
அமைதி நோபல் பரிசு
அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாடு வழங்குகிறது. ஆல்பிரட் நோப-ன் உயி-ன் படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு வழங்குகிறது.
நோபல் பரிசு 2021
பரிந்துரை செய்ய தகுதியானவர்கள், உலகளவில் முக்கியமாக உள்ள வேட்பாளர்களை, பிப்ரவரி மாதத்தில் பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம், நோபல் குழுவிற்கு, தேர்வு செய்யப் போதுமான நேரம் கிடைக்கும்.
பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை பரிந்துரைக் குழு ஆய்வு செய்யும். நார்வே நாடாளுமன்றத் தால் தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து பேர் கொண்ட குழு, பரிந்துரைக்கப்பட்டவர் களில் 20 முதல் 30 பேர் தேர்வு செய்யப் படுவார்கள்.
பரிசுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரங்களில் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
ஒருமித்த முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில், பெரும்பான்மை வாக்குகளின்படி முடிவு எடுக்கப் படும்.
பரிசுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆல்ஃப்ரெட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி பரிசளிக்கும் விழா நடைபெறும்.
மருத்துவம்
2022-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசுக்கு ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அழிந்துபோன மனித இனங்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட இருக்கிறது என்று நோபல் குழு அறிவித்துள்ளது.
சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 1955-ஆம் ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி பிறந்தவரான ஸ்வாந்தே பாபோ, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள இரண்டு முக்கிய நிறுவனங்களுக்கு தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.
மருத்துவத் துறையில் சாதனை படைத்தவர்களுக்காக 1901 முதல் 2021 வரை 112 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 12 பரிசுகள் மட்டுமே பெண்கள் பெற்றுள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற உயிர்வேதியியல் நிபுணரான சுனே பெர்க்ஸ்ட்ரோமின் மகன் ஸ்வாந்தே பாபோ, தொல்பொருள் மற்றும் பழங்கால எச்சங்களிலி-ருந்து டி.என்.ஏ வரிசைகளை ஆய்வு செய்ய அனுமதிக்கும் அணுகுமுறைகளை உருவாக்கிய பின்னர் மனித தோற்றம் பற்றிய ஆய்வை மாற்றியமைத்த பெருமைக்குரியவர். அழிந்துபோன மனிதர்களுக்கும் நவீன மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்த முழு நியண்டர்டால் மரபணுவை வரிசைப்படுத்துவது அவரது முக்கிய சாதனைகளில் அடங்கும். சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட விரல் எலும்பின் 40,000 ஆண்டுகள் பழமையான துண்டுகளிலி-ருந்து டெனிசோவன்ஸ் என்று அழைக்கப் படும் முன்னர் அறியப்படாத மனித இனம் இருப்பதையும் ஸ்வாந்தே பாபோ வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.
வெப் ஆஃப் சயின்ஸில் ஸ்வாண்டே பாபோவின் மிகவும் மேற்கோள் காட்டப் பட்ட ஆராய்ச்சி இதழ் 1989-இல் 4,077 மேற்கோள்களுடன் வெளியிடப்பட்டது என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட அறிவியல் தரவு பகுப்பாய்வு வழங்குநரான Clarivate இன் டேவிட் பெண்டில்பரி கூறினார். “1970 முதல் வெளியிடப்பட்ட 55 மில்லி-யனில் சுமார் 2,000 ஆவணங்கள் மட்டுமே பல முறை மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.” ஆரம்பத்தில் பாபோ எகிப்தியலில் (எகிப்தின் வரலாறு, மொழி, கலாச்சாரம் குறித்த துறை) நாட்டம் கொண்டிருந்தார். பிறகு மரபணுவியல்(Genetics), பரிணாம மானுடவியல் (Evolutionary Anthropology) ஆகியவற்றை நோக்கி நகர்ந்தார். 1986-இல் உப்பசாலா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். நோய்த்தடுப்பாற்றல் மண்டலத்தின் மீது அடினோவைரஸின் ‘C-19’ புரதம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து அவரது முனைவர் பட்ட ஆய்வு அமைந்தது. பிறகு ஜூரிக் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் ஆய்வு மேற்கொண்டார். 1987-1990 வரை அமெரிக்காவின் க-லிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.
தொல்மரபணுவியல்’ (டஹப்ங்ர்ஞ்ங்ய்ங்ற்ண்ஸ்ரீள்) என்ற புதிய அறிவியல் துறையை உருவாக்கியவர்களுள் ஸ்வாந்தே பாபோ ஒருவர். ஒரு இடத்தில் அகழாய்வு செய்து அந்த இடத்தில் இருந்த பழைய நாகரிகங்களின் வரலாற்றைக் கண்டறிவதுபோல் உயிரினங்களின் டிஎன்ஏக்களை அகழாய்வு செய்து அவற்றின் தொல்வரலாற்றைக் கண்டறிவதுதான் இந்தத் துறை. நியாண்டர்தால் மனிதரிடமிருந்து எடுக்கப்பட்ட மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏவை ஸ்வாந்தே பாபோ 1997-இல் மரபணு வரிசைப்படுத்தலை முதன்முறையாக (முழுமையாக அல்ல) வெற்றிகரமாக மேற்கொண்டார்.
மொழியறிவு தொடர்பான குறைபாடுகளை ஏற்படுத்தும் மொழி மரபணு’ (எஃப்.ஓ.எக்ஸ்.பி2) தொடர்பான கண்டுபிடிப்புகளை 2002-இல் பாபோவின் தலைமையிலான துறை வெளியிட்டது.
நியாண்டர்தால் மனிதரின் மைட்டோகாண்ட்ரியா டிஎன்ஏவின் முழுமையான மரபணு வரிசைப்படுத்தலை பாபோ 2008-இல் வெற்றிகரமாக செய்துமுடித்தார்.
தொல்மனிதர்களின் டிஎன்ஏவை ஆராய்ச்சி செய்வது கிட்டத்தட்ட சாத்திய மில்லாத ஒன்றா

தொல்மனிதர்களின் டிஎன்ஏவை ஆராய்ச்சி செய்வது கிட்டத்தட்ட சாத்திய மில்லாத ஒன்றாகவே இருந்துவந்தது. டிஎன்ஏ என்பது உயிரிப் பொருள் என்பதால் எளிதில் அழிந்துபடக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது. தொல்மனிதர்களின் டிஎன்ஏவுடன் பாக்டீரியாவின் டிஎன்ஏவும் நவீன மனிதர்களின் டிஎன்ஏவும் கலந்து விடுவதால் துல்லி-யமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத நிலை நீடித்தது. இதனால் தொல்மனிதர்களின் டிஎன்ஏவைக் கொண்டு முழுமையான மரபணு வரிசையை உருவாக்கவே முடியாது என்று அறிவியல் உலகம் நம்பிவந்தது. இந்த நிலையை மாற்றியதில் ஸ்வாந்தே பாபோவுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அவர் கண்டறிந்த மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளால் தொல்மனிதர்களின் டிஎன்ஏக்களின் முழுமையான மரபணு வரிசையை உருவாக்க முடிந்தது. இந்த ஆய்வின் மூலம், மனித குலத்தின் உறவினரான நியாண்டர்தால் மனிதர்களும், புதிதாகக் கண்டறியப்பட்ட டெனிசோவான் மனிதர்களும் ஹோமோ சேப்பியன்ஸுடன் (நவீன மனித இனம்) ஒரே சமயத்தில் வாழ்ந்தார்கள் என்பது தெரியவந்தது. ஹோமோ சேப்பியன்ஸ் இனத்துக்கும் நியாண்டர்தால், டெனிசோவான் இனங்களுக்கும் இடையே கலப்பு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்தது. நியாண்டர்தால், டெனிசோவான் இனங்கள் அழிந்துபோனாலும் அவற்றின் மரபணு எச்சங்கள் சிறிய அளவிலாவது இன்றைய ஹோமோ சேப்பியன்ஸ் இனத்திடம் காணப்படுகிறது.
நியாண்டர்தால், டெனிசோவான் இனங்களின் மரபணு எச்சம் இன்றைய மனிதர்களிடமும் காணப்படுவதால் மனித குலத்தின் வரலாறு குறித்த இன்னும் மேம்பட்ட தெளிவைப் பெற முடிகிறது. மனித இனங்களில் எந்த ஒன்றுமே கலப்பற்ற இனம் கிடையாது என்பது ஸ்வாந்தே பாபோவின் கண்டுபிடிப்புகளால் திட்டவட்டமாக நிறுவப்பட்டிருக்கிறது.
இனத் தூய்மை பற்றிப் பேசுவதற்கு உண்மையில் எந்த முகாந்திரமும் இல்லை. அது மட்டுமல்லாமல், நியாண்டர்தால், டெனிசோவான் இனங்கள் சில வகையான நுண்ணுயிரி களுக்கு எதிர்ப்புத் திறனைப் பெற்றிருந்தன. சில வகையான நுண்ணுயிரிகளுக்கு போதிய அளவு எதிர்ப்புத் திறனும் இல்லாமல் இருந்தன எடுத்துக்காட்டாக, தொல்மனிதர் களிடமிருந்து மரபணு எச்சங்களைப் பெற்றிருப்பவர்களுக்கு சார்ஸ்- கோவ்-2-இன் தொற்று ஏற்பட்டால் சுவாச மண்டலம் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஸ்வாந்தேவும் அவரது குழுவினரும் 2020-இல் கண்டறிந்தனர். அதேபோல், கடுமையான கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பாதுகாப்பைத் தரும் கூறுகள் நியாண்டர்தால் மனிதர்களின் கொடையாக சிலருக்குக் கிடைத்திருக்கின்றன என்பதை ஸ்வாந்தே பாபோவும் அவரது குழுவினரும் 2021-இல் கண்டறிந்தனர்.
ஆகவே, ஸ்வாந்தே பாபோவின் பங்களிப்புகளை மனித இன வரலாறு குறித்த கண்டறிதல்களுடன் சுருக்கிவிடாமல் மனித இனம் இனியும் நீடித்திருப்பதற்கான பங்களிப்புகள் என்றும் பார்க்க வேண்டியிருக்கிறது!
வேதியியல்
2022-ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கரோலி-ன் ஆர். பெர்டோஸி, டென்மார்க்கை சேர்ந்த மோர்டன் மெல்டல் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பேரி ஷார்ப்லெஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் இயக்கவியலில் மூலக்கூறுகள் மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் மேம்பாட்டுக்காக இம்மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கூறுகளை உருவாக்க சுற்றுச்சூழலுக்கு தூய்மையான வழியைக் கண்டுபிடித்ததற்காக 2021-ஆம் ஆண்டில், வேதியியலுக்கான நோபல் பரிசு விஞ்ஞானிகள் பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் டபிள்யூ.சி. மேக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விஞ்ஞானி பேரி ஷார்ப்லெஸ் கடந்த 2001-ஆம் ஆண்டும் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேதியியலுக்கான நோபல் பரிசு 2022 கடினமான செயல்முறைகளை எளிதாக்குகிறது. பேரி ஷார்ப்லெஸ் மற்றும் மோர்டன் மெல்டல் வேதியிய-லின் செயல்பாட்டு வடிவத்திற்கு அடித்தளம் அமைத்துள்ளனர் - கிளிக் கெமிஸ்ட்ரி - இதில் மூலக்கூறு கட்டுமானத் தொகுதிகள் விரைவாகவும் திறமையாகவும் ஒன்றிணைகின்றன. கரோலி-ன் ஆர். பெர்டோஸி கிளிக் வேதியியலை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு சென்று அதை உயிரினங் களில் பயன்படுத்தத் தொடங்கினார்.
பெருகிய முறையில் சிக்கலான மூலக்கூறு களை உருவாக்குவதற்கான விருப்பத்தால் வேதியியலாளர்கள் நீண்ட காலமாக உந்தப்பட்டுள்ளனர். மருந்து ஆராய்ச்சியில், இது பெரும்பாலும் மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கை மூலக்கூறுகளை செயற்கையாக மீண்டும் உருவாக்குவதை உள்ளடக்கியது. இது பல போற்றத்தக்க மூலக்கூறு கட்டுமானங்களுக்கு வழிவகுத்தது, ஆனால் இவை பொதுவாக நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் உற்பத்தி செய்வதற்கு மிகவும் விலை உயர்ந்தவை.
பேரி ஷார்ப்லெஸ் 2000-ஆம் ஆண்டில், கிளிக் கெமிஸ்ட்ரி என்ற கருத்தை உருவாக்கினார், இது எளிமையான மற்றும் நம்பகமான வேதியியலி-ன் ஒரு வடிவமாகும், அங்கு எதிர்வினைகள் விரைவாக நிகழ்கின்றன மற்றும் தேவையற்ற துணை தயாரிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
மோர்டன் மெல்டல் மற்றும் பேரி ஷார்ப்லெஸ் ஆகியோர் ஒருவரை யொருவர் சாராமல், கிளிக் வேதியியலின் மகுடமாக இருப்பதை வழங்கினர்: தாமிரம் வினையூக்கிய அசைட்- ஆல்கைன் சைக்ளோஅடிஷன் . இது ஒரு நேர்த்தியான மற்றும் திறமையான இரசாயன எதிர்வினை ஆகும், இது இப்போது பரவலான பயன்பாட்டில் உள்ளது. வேறு பல பயன்பாடு களுக்கு மத்தியில், டிஎன்ஏவை வரைபடமாக்குவதற்கும், நோக்கத்திற்காக மிகவும் பொருத்தமான பொருட்களை உருவாக்குவதற்கும் இது மருந்துகளின் வளர்ச்சியில் பயன்படுத்தப்படுகிறது.
கரோ-லின் ஆர். பெர்டோஸி கிளிக் வேதியியலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றார். உயிரணுக்களின் மேற்பரப்பில் உள்ள முக்கியமான உயிர் மூலக்கூறுகளை வரைபடமாக்க -
கிளைக்கான்கள் - உயிரினங்களுக்குள் செயல்படும் கிளிக் எதிர்வினைகளை அவர் உருவாக்கினார். உயிரணுவின் இயல்பான வேதியியலை சீர்குலைக்காமல் அவளது உயிரியக்க எதிரவினைகள் நடைபெறுகின்றன.
இந்த எதிர்வினைகள் இப்போது செல்களை ஆராயவும் உயிரியல் செயல்முறைகளைக் கண்காணிக்கவும் உலகளவில் பயன்படுத்தப்படுகின்றன. பயோஆர்த்தோகனல் எதிர்வினைகளைப் பயன்படுத்தி, ஆராய்ச்சி யாளர்கள் புற்றுநோய் மருந்துகளின் இலக்கை மேம்படுத்தியுள்ளனர்,
அவை இப்போது மருத்துவ பரிசோதனைகளில் சோதிக்கப்படுகின்றன.
க்ளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோஆர்த்தோகனல் எதிர்வினைகள் வேதியியலை செயல்பாட்டு வாதத்தின் சகாப்தத்திற்கு கொண்டு சென்றுள்ளன. இது மனித குலத்திற்கு மிகப்பெரிய பலனைத் தருகிறது.
இயற்பியல்
2022- ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக் கான நோபல் பரிசு, அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எஃப் கிளாசர் மற்றும் அன்டன் ஜெயி-லிங்கர் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகின்றது.
குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2 விருதாளர்களில் அலைன் ஆஸ்பெக்ட் யுனிவர்சிட்டி பாரிஸ்-சாக்லே மற்றும் எகோல் பாலி-டெக்னிக், பாலைசோ, பிரான்சில் பேராசிரியராக உள்ளார்.
ஜான் எஃப் கிளாசர்(John F Clauser) ஜேஎஃப் கிளாசர் அண்ட் அசோசியேட் அமெரிக்கா (JF Clauser & Assoc., USA) இல் ஆராய்ச்சி இயற்பியலாளராக உள்ளார். அன்டன் ஜெயிலி-ங்கர் (Anton Zeilinger), ஆஸ்திரியாவின் வியன்னா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.
நோபல் விருதாளர்கள் ஆஸ்பெக்ட், கிளாசர், ஜெயிலி-ங்கர் பணிகள் குறித்து பார்க்கலாம்.
விஞ்ஞானிகள் செய்த பணி என்ன?
மூவரும் சிக்கிய குவாண்டம் நிலைகள் என்று அழைக்கப்படும் ஒரு தொடர் சோதனைகளை நடத்தினர், அங்கு இரண்டு தனித்தனி துகள்கள் ஒரு அலகு போல செயல்படுகின்றன என்பதை கண்டறிந்தனர்.
குவாண்டம் கணினிகள், குவாண்டம் நெட்வொர்க்குகள் மற்றும் பாதுகாப்பான குவாண்டம் மறைகுறியாக்கப்பட்ட தகவல்தொடர்பு ஆகிய துறைகளில் அவற்றின் வழித்தோன்றல் முடிவுகள் தாக்கங்களை ஏற்படுத்தும்.
எளிமையாகச் சொன்னால், குவாண்டம் கணினிகள் வழக்கமான கணினிகளுக்கு மிகவும் சிக்கலான சிக்கல்களைத் தீர்க்க குவாண்டம் இயக்கவியலைப் பயன்படுத்துகின்றன. 1960-களில், ஜான் ஸ்டீவர்ட் பெல் கணித சமத்துவமின்மையை உருவாக்கினார். இருப்பினும், குவாண்டம் இயக்கவியல் ஒரு குறிப்பிட்ட வகை சோதனையானது பெல்லி-ன் சமத்துவமின்மையை மீறும் என்று கணித்துள்ளது.
முக்கியத்துவம்
குவாண்டம் இயக்கவியலின் அடிப்படைகள் ஒரு கோட்பாட்டு அல்லது தத்துவப் பிரச்சினை மட்டுமல்ல. குவாண்டம் கணினிகளை உருவாக்கவும், அளவீடுகளை மேம்படுத்தவும், குவாண்டம் நெட்வொர்க்குகளை உருவாக்கவும் மற்றும் பாதுகாப்பான குவாண்டம் மறைகுறியாக்கப்பட்ட தகவல்தொடர்புகளை நிறுவவும் உதவும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான தனிப்பட்ட துகள் அமைப்புகளின் சிறப்பு பண்புகளைப் பயன்படுத்த தீவிர ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நடந்து வருகிறது.
இந்த ஆண்டு பரிசு பெற்றவர்கள் இந்த சிக்கலான குவாண்டம் நிலைகளை ஆராய்ந்தனர், மேலும் அவர்களின் சோதனைகள் குவாண்டம் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஆலென் ஆஸ்பெக்ட்(Alain Aspect), ஜான் கிளாசர் (John Clauser), அன்டன் ஜெய்லி-ங்கர் (Anton Zeilinger) ஆகிய மூன்று இயற்பியலர் களுக்கும் தற்போது நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க ஐன்ஸ்டைன் உயிரோடு இருந்திருந்தால் தனது கூற்றை இப்படி மாற்றிக் கொண்டிருப்பார்: “ஆம், கடவுள் இந்தப் பிரபஞ்சத்தை வைத்துக் கன்னாபின்னாவென்று தாயம் விளையாடிக்கொண்டிருக்கிறார்தான்.”
கடந்த 120 ஆண்டு கால அறிவியலைப் பற்றிப் பேசினால் ஐன்ஸ்டைனை விட்டு விட்டுப் பேச முடியாது அல்லவா.
அதேபோல் இந்த நோபல் பரிசுக்கும் ஐன்ஸ்டைனுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஏனெனில், குவாண்டம் கோட்பாட்டுக்கு எதிராக ஐன்ஸ்டைன் முன்வைத்த கருத்துகளை மறுத்து, குவாண்டம் கோட்பாடே சரியானது என்று நிரூபித்ததற்காக இந்த மூவருக்கும் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பரிசு எதற்காக அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு குவாண்டம் கோட்பாட்டின் சில அடிப்படைகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.
குவாண்டம் கோட்பாட்டின் தொடக்கம்
ஐன்ஸ்டைனின் சார்பியல் கோட்பாடுகள் பிரபஞ்சம், விண்மீன்கள், கருந்துளை என்று பேருலகு குறித்துப் பேசுபவை. குவாண்டம் கோட்பாடு என்பது அணுவின் உள் உலகு குறித்தும் அடிப்படை விசைகள் குறித்தும் பேசுவது.
குவாண்டம் கோட்பாட்டின் தந்தையர்களாகக் கருதப்படுபவர்கள் மாக்ஸ் பிளாங்க் (ஙஹஷ் டப்ஹய்ஸ்ரீந், 1858-1947), நீல்ஸ் போர் (சண்ங்ப்ள் இர்ட்ழ், (1885-1962)), ஐன்ஸ்டைன் ஆகிய மூவரும். (பாருங்கள், ஐன்ஸ்டைன் தான் பெற்ற பிள்ளைக்கு எதிராகவே பின்னாளில் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்!).
மின்காந்த சக்தி என்பது சிறு குவாண்டாக்களாக (பொட்டலங்களாக) வெளிப்படுகிறது என்று மாக்ஸ் பிளாங்க் 1900-இல் அறிவித்தார். இதுதான் குவாண்டம் இயற்பியலி-ன் தொடக்கப்புள்ளி. இதற்காக 1918-இல் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. ஒளி என்பது சக்திப் பொட்டலங்களாக வெளிப்படுகிறது என்று 1905-இல் தனது அறிவியல் கட்டுரையில் ஐன்ஸ்டைன் எழுதினார். இது குவாண்டம் இயற்பியலி-ன் அடுத்த கட்டம். பிறகு, நீல்ஸ் போர் தன்னுடைய மாணவர்கள், சக அறிவியலர்களை இணைத்துக்கொண்டு குவாண்டம் இயற்பியலுக்கு மட்டுமல்ல அறிவியலுக்கும் நம் சிந்தனைக்குமே புதிய வரையறை எழுதப்படுவதற்கு வித்திட்டார்.
குவாண்டம் கோட்பாடு என்ன சொல்கிறது?
நோபல் பரிசு பெற்ற இயற்பியலர் ரிச்சர்ட் ஃபெய்ன்மேன் குவாண்டம் இயற்பியலைப் பற்றி இப்படிக் கூறினார்: “குவாண்டம் இயற்பியலை யாருமே புரிந்துகொள்ளவில்லை என்று நான் உறுதியாகச் சொல்வேன்.” அந்த அளவுக்கு குவாண்டம் கோட்பாடு விளக்குவதற்கு மிகவும் கடினமானது என்றாலும் சில அடிப்படைகளை நாம் இங்கு பார்க்கலாம்.
பொருள் என்பது அடிப்படையில் அலை-துகள் என்ற இரட்டைத்தன்மை (ஜ்ஹஸ்ங்-ல்ஹழ்ற்ண்ஸ்ரீப்ங் க்ன்ஹப்ண்ற்ஹ்) கொண்டது.
அதாவது ஒரு பொருள் ஒரே நேரத்தில் அலையாகவும் பொருளாகவும் இருக்கிறது. அலை என்றால் நாம் வழக்கமாகக் கற்பனை செய்துகொள்வது போல் மேலும் கீழும் இறங்கும் கடல் அலை போன்றது அல்ல. இது சாத்தியங் களின் அலை, சாத்தியங்களின் தொகுப்பு. இந்தப் பிரபஞ்சத்தில், அணுவின் உள்ளிருந்து ஒட்டுமொத்தப் பிரபஞ்சம் வரை, எதற்கும் திட்டவட்ட மான அர்த்தமோ வரையறையோ கிடையாது. ஒன்றைப் பார்க்கும்போதோ கேட்கும்போதோ வேறு புலன்களால் உணரும்போதோ சோதனையில் அளவிடும்போதோதான் அதற்கான வரையறை ஏற்படுகிறது. அதுவரை அது சாத்தியங்களின் தொகுப்பாகத்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தேன்மொழி என்ற பெண் ஃபீனிக்ஸ் மாலுக்கு உங்களை வரச் சொல்லிவிட்டு அதன் பிறகு தனது செல்பேசியைத் தொலைத்துவிடுகிறார். அந்தப் பெண்ணை ஃபீனிக்ஸ் மாலில் தேடுகிறீர்கள். நீங்கள் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்கும் வரை அவர் அந்த மாலின் எல்லாக் கடை களிலும் எல்லாத் தளங்களிலும் இருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. ஃபீனிக்ஸ் மாலில் இல்லாததற்கான சாத்தியமும் இருக்கிறது. இந்த அத்தனை சாத்தியங்களையும் ஒரு தாளில் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். நூறு சாத்தியங்கள் என்று வைத்துக் கொள்வோம். இறுதியில் தேன்மொழியை இரண்டாவது தளத்தில் உள்ள ஒரு புத்தகக் கடையில் கண்டுபிடிக்கிறீர்கள். இப்போது தேன்மொழிக்கு உங்கள் அளவில் ஒரு திட்டவட்ட வரையறை கிடைத்துவிடுகிறது. மற்ற 99 சாத்தியங் களையும் அடித்துவிடுகிறீர்கள் (குவாண்டம் மொழியில் சொன்னால், தேன்மொழியின் அலைச் செயல் பாட்டை நீங்கள் குலைத்துவிடுகிறீர்கள்). இப்படித்தான் எல்லாவற்றுக்கும். உங்கள் அவதானிப்பு ஒரு பொருளுக்கு வரையறையைக் கொடுக்கிறது. உங்கள் அவதானிப்பு நீங்கள் அவதானிக்கும் பொருளில் மாற்றம் ஏற்படுத்துவிடுகிறது. ஏன் என்றால் அவதானிக்கும் ஒன்று, உங்களையும் அவதானிக்கிறது.
குவாண்டம் பிணைப்புக்கு வருவோம். (இது தொடர்பாகத்தான் தற்போது நோபல் விருது வழங்கப்பட்டிருக்கிறது). ஒன்றுக்கொன்று தொடர்புடைய அல்லது தொடர்புகொள்ள நேரிடும் எலெக்ட்ரான்கள், ஃபோட்டான்கள் போன்றவை குவாண்டம் பிணைப்புக்கு உள்ளாகின்றன. இதனால் இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைக்கப்பட்ட நிலையில், ஒன்றையொன்று தாக்கம் செலுத்தக்கூடிய நிலையில் இருக்கின்றன. குவாண்டம் பிணைப்பில் உள்ள இரண்டு பொருட்களை எவ்வளவு தூரத்தில் பிரித்துவைத்தாலும் அவை தொடர்பில் இருக்கும். குவாண்டம் பிணைப்பிலுள்ள எலெக்ட்ரான்களுள் ஒன்றை இடையூறு செய்தால் தூரத்தில் உள்ள அதன் இன்னொரு இணைக்கும் இடையூறு ஏற்படும். ஒளிவேகத்தைவிட அவற்றுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் இருக்கும்.
ஒளியைவிட வேகமாகத் தகவல் எப்படிப் பயணிக்கும்?
பிணைக்கப்பட்ட நிலையில் உள்ள இரண்டு எலெக்ட்ரான்களை பிரபஞ்சத்தின் இரண்டு முனைகளுக்கு அனுப்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம். இரண்டு முனைகளுக்கும் இடையே உள்ள தூரம் கோடி கோடி கோடி கோடி...
மைல்களுக்கும் மேலே இருக்கும். ஒரு முனையில் உள்ள எலெக்ட்ரானுக்கு இடையூறு விளைவித்தால் மறுமுனையில் உள்ள எலெக்ட்ரான் உடனே எதிர்வினையாற்றும். முதல் எலெக்ட்ரான் இடையூறுக்கு உள்ளாக்கப்பட்ட தகவல் இரண்டாவது எலெக்ட்ரானிடம் எப்படிப் போய்ச் சேர்ந்தது என்பதைவிட முக்கியமான கேள்வி இவ்வளவு வேகத்தில், அதாவது நேர இடைவெளி இன்றி, அந்தத் தகவல் எப்படிப் போய்ச்சேர்ந்தது என்பதுதான்.
குவாண்டம் இயற்பியலுக்கு எதிராக ஐன்ஸ்டைன் வைத்த முக்கியமான கேள்வி 'இந்த பிரபஞ்சத்தில் ஒளியின் வேகம்தான் உச்சபட்சம். அதை விஞ்சி எப்படி தகவல் பயணிக்கும்?'
ஐன்ஸ்டைன் உள்ளிட்ட நாம் அனைவரும் நினைப்பது என்னவென்றால் இரண்டு எலெக்ட்ரானும் தனித்தனி இடத்தில் தனித்தனிப் பொருளாக இருக்கின்றன என்பதே. உண்மை என்னவென்றால் பிணைக்கப்பட்ட பின் இரண்டும் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஒரே பொருள்தான். அதாவது ஈரிடம் ஓருயிர். ஓருயிருக்கு தனக்கு நேரும் எதுவும் உடனே தெரியாதா என்ன?
குவாண்டம் பிணைப்பின் நடைமுறைப் பயன்கள் என்னென்ன?
குவாண்டம் பிணைப்பின் அடிப்படைத் தன்மைகளுள் ஒன்று வெகு தொலைவில் ஒளியின் வேகத்தை விஞ்சித் தகவல் அனுப்புவது என்பதால் தற்போதைய தகவல் தொழில்நுட்ப உலகில் அது மிகப் பெரிய புரட்சிகளை ஏற்படுத்தும். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இயற்பியலர்கள் ஆறு அடி தொலைவில் உள்ள இரண்டு அணுக் கடிகாரங்களை குவாண்டம் பிணைப்புக்கு உட்படுத்திய செய்தி செப்டம்பர் மாதம் வெளியானது.
(அநேகமாக, இது குறித்து நம் இதழ்கள் ஏதும் கண்டுகொள்ளவில்லை).
இதன் மூலம் வெவ்வேறு இடங்களில் உள்ள கடிகாரங்களை நம்பவே முடியாத அளவுக்குத் துல்லி-யத்துடன் மாற்ற முடியும். இந்தக் கடிகாரங்களைக் கொண்டு கரும் பொருள் (க்ஹழ்ந் ம்ஹற்ற்ங்ழ்), ஈர்ப்பு விசை போன்றவை குறித்து மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்.
அடுத்ததாக, குவாண்டம் கணினி. சூரக் கணினி (ள்ன்ல்ங்ழ்ஸ்ரீர்ம்ல்ன்ற்ங்ழ்) நூறு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் கணக்கை குவாண்டம் பிணைப்பைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் குவாண்டம் கணினி ஒரு சில நொடிகளில் செய்துமுடித்துவிடும் என்று நம்பப்படுகிறது. மேலும், தகவல்களை மிகுந்த பாதுகாப்புடனும் ரகசியத்துடனும் சேமித்துவைக்கவோ ஒரு இடத்தி-லிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்பவோ முடியும்!
பொருளாதார அறிவியல்
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்க பொருளாதார வல்லுநர்கள் பென் எஸ்.பெர்னாக், டக்ளஸ் டைமண்ட் மற்றும் பி-லிப் எச். டிவிக் (Ben Bernanke, Douglas Diamond and Philip Dybvig) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இவர்களின் ஆராய்ச்சிகள் தற்போதைய நவீன வங்கி கட்டமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன. இவர்கள், வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது தொடர்பான ஆராய்ச்சிக்கு இந்தப் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இவர்களின் ஆராய்ச்சி நவீன வங்கிகள், பொருளாதார அறிவியலுக் கான நெருக்கடிகளை எதிர்கொள்ளுதல் தொடர்பானது. 1980-களின் முற்பகுதியில் பென் பெர்னான்கே, டக்ளஸ் டைமண்ட் மற்றும் பிலி-ப் டிப்விக் ஆகியோரால் இந்த ஆராய்ச்சியின் அடித்தளம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், 2020-இல் தொற்றுநோய் தாக்கியபோது, உலகளாவிய நிதி நெருக்கடியைத் தவிர்க்க குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த பிந்தைய நெருக்கடிகள் சமூகத்திற்கு பேரழிவு தரும் விளைவுகளுடன் புதிய மந்தநிலைகளாக உருவாகாமல் இருப்பதை உறுதி செய்ததில் இவர்களின் நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கிறது.
பென் எஸ்.பெர்னாக் (Ben S Bernanke) பென் எஸ்.பெர்னாக் அளித்துள்ள செய்திக் குறிப்பில், “இங்கே ஒரு முரண்பாடு உள்ளது எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டால், சேமிப்பாளர்கள் தங்கள் பணத்தை உடனடியாக அணுக விரும்புகிறார்கள். இது ஒரு அடிப்படை சிக்கலை முன்வைக்கிறது, இது வங்கிகளையும் பணத்தையும் நிலையற்றதாக ஆக்குகிறது மற்றும் சில நேரங்களில் அதிர்ச்சிக்கு ஆளாகிறது.
எடுத்துக்காட்டாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் உள்ள ஒரு சில கிராமப்புற வங்கிகளில் இருந்து மக்கள் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் போனது.
அப்போது, வங்கி ஸ்தம்பித்தது. இது வங்கியின் சரிவுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், 1930-களின் உலகளாவிய மந்தநிலையில், நவீன வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில், தோல்வியடைந்த வங்கிகள் எவ்வாறு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தன என்பதை பெர்னான்கே நிரூபித்தார்.
இதில் சுவாரஸ்யமாக, பெர்னாக் 2008-களில் வங்கிகளில் நெருக்கடிகள் அதிகரித்தபோது அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தலைவராக இருந்தார், டக்ளஸ் டைமண்ட் மற்றும் பிலிப் எச். டிவிக்(Douglas Diamond and Philip H Dybvi) டைமண்ட் மற்றும் பிலிப் இருவரும் இணைந்து வங்கிகள் ஏன் வெளியேறுகின்றன? வரவிருக்கும் சரிவு பற்றிய வதந்திகளின் பாதிப்பு, இந்தப் பாதிப்பை சமூகம் எப்படி குறைக்க முடியும் என்பது பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர்.
இவர்களின் ஆராய்ச்சிகள் நவீன வங்கி ஒழுங்குமுறையின் அடித்தளத்தை உருவாக்கியுள்ளன.
இந்த மாதிரியானது வங்கியின் மைய வழிமுறைகளையும், அதன் பலவீனங் களையும் படம்பிடிக்கிறது. இது குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் சிலவற்றைச் சேமிப்பதை அடிப்படை யாகக் கொண்டது. அத்துடன் அவர்கள் விரும்பும் போது தங்கள் பணத்தை எடுக்க முடியும். இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரே நேரத்தில் நடக்காது. நிதி தேவைப்படும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய அனுமதிக்கிறது. எனவே, வங்கிகள் பணப்புழக்கத்தை எளிதாக்க உதவும் இயற்கையான இடைத்தரகர்களாக வெளிப்படுகின்றன என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
ஆனால் வரலாற்றில், குறிப்பாக அமெரிக்காவில் மிகப்பெரிய அளவில் நிதி நெருக்கடிகள் காணப்பட்ட நிலையில், வங்கிகள் தாங்கள் கொடுக்கும் கடன்களை மதிப்பீடு செய்வதில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் அல்லது நெருக்கடியில் இருக்கும் வங்கிகளுக்கு பிணை எடுப்பது எப்படி இருக்கும் என்பது பற்றி அடிக்கடி விவாதிக்கப்படுகிறது.
மேலும், நிதிச் சந்தைகள் அவற்றின் செயல்பாட்டை நிறைவேற்ற எப்படி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் – தொடர்ச்சியான நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் உற்பத்தி முதலீடு களுக்கு சேமிப்பை மாற்றுவது –
என்பது ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் எழுப்பப்படும் தொடர் கேள்வி ஆகும்.
அந்த வகையில், நிதி சமூகத்திற்கு கடுமையான விளைவுகளுடன் நீண்ட கால மந்தநிலைகளாக வளரும் நிதி நெருக்கடிகளின் அபாயத்தைக் குறைப்பது, நம் அனைவருக்கும் மிகப்பெரிய நன்மையாகும்.
இலக்கியம்
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். 'L' Occupationஎன்ற நூலை எழுதியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து உண்மையை உடைத்து எழுதக்கூடிய எழுத்தாளராக ஆனி எர்னாக்ஸ் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1940-இல் பிறந்த ஆனி எர்னாக்ஸ் நார்மண்டியில் உள்ள சிறிய நகரமான யெவ்டாட் நகரில் வளர்ந்தார்.
ஆனி எர்னாக்ஸ் தனது செழுமையான எழுத்தின் மூலம் “பா-லினம், மொழி, வர்க்கம் தொடர்பான வலுவான ஏற்றத்தாழ்வுகளால் குறிக்கப்பட்ட வாழ்க்கையை ஆய்வு செய்கிறார்” என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.
Journal du dehors Utßm La vie extérieure போன்ற புத்தகங்களை எழுதிய ஆனி எர்னாக்ஸ், தான் ஒரு புனைகதை எழுத்தாளர் என்பதைவிட “தன்னுடைய இனவியலாளர்” என்று கூறியுள்ளார்.
இவருடைய நான்காவது புத்தகமான லா ப்ளேஸ் ஒரு முக்கியமான இலக்கிய படைப்பாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அவர் “தன் தந்தை மற்றும் அவரை அடிப்படையாக உருவாக்கிய முழு சமூக சூழ-லின் உணர்ச்சியற்ற உருவப்படத்தை உருவாக்கினார்” என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஆனி எர்னாக்ஸ்க்கு அறிவிக்கப்பட்டபோது தமிழக இலக்கிய வட்டாரத்தில் பலரும் ஆச்சரியத்துடன் அந்தப் பெயரைப் பார்த்தார்கள். இலக்கிய நோபல் பரிசு பெறும் முதல் பிரெஞ்சு பெண் எழுத்தாளர் இவர். ‘‘அதிசயிக்கத்தக்க வகையிலும் நீடித்து நிற்கும் தன்மையிலும் ஆனி எர்னாக்ஸ் புத்தகங்களை எழுதியுள்ளார். மனித உணர்வுகளின் வேர்களை அவருடைய எழுத்து தொடுகிறது. அவருடைய மிகப் பெரிய சிறப்பம்சம் அவருடைய எழுத்து நடை என்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டபோது அவரைத் தேர்ந்தெடுத்த குழுவினர் சொன்னார்கள்.
தமிழில் சிலருக்கு ஏற்கெனவே ஆனி எர்னாக்ஸ் அறிமுகம் ஆகியிருந்தார். சொல்லப்போனால், அவருடைய புகழ்பெற்ற நூலை மொழிபெயர்க்கும் பணி இங்கே பேசப்பட்டிருந்தது.
அப்படி மொழிபெயர்க்கவிருந்த வெ. ஸ்ரீராம் இங்கே ஆனி எர்னாக்ஸின் படைப்புலகத்தை ‘அருஞ்சொல்’ வாசகர் களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை ஆனி எர்னாக்ஸ் எழுதியிருந்தாலும், 2008-இல் வெளிவந்த ‘வருடங்கள்’ (LES ANNEES) என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். இலக்கிய விமர்சகர்கள் பலராலும் போற்றப்படும் படைப்பாக அது இருந்தது. புகைப்படங்கள், நிகழ்வுகள், சொற்கள், நினைவுகள் இவற்றின் வாயிலாக, சுயசரிதை போன்று தோன்றும் இதில் தன்னைப் பற்றி ‘நான்’ என்று குறிப்பிடாமல் ஒரு அறுபது ஆண்டு வாழ்க்கையை ஒரு சமூகத்தின் சுய வரலாறாகச் சித்தரிக்கிறார் ஆனி எர்னாக்ஸ். ஓர் எழுத்தாளரின் படைப்பை வர்ணிப் பதைக் காட்டிலும் அவருடைய எழுத்துகளிலிருந்து சிறு துண்டை யேனும் அளிப்பது வாசகர்களுக்கு நல்ல அறிமுகமாக இருக்கக்கூடும்.
ஆனி எர்னாக்ஸின் ‘வருடங்கள்’ புத்தகத்தின் முதல் வரி ‘எல்லாக் காட்சிகளும் மறைந்து போகும்’ என்று தொடங்கும். தனி மனித வாழ்வில் காலத்தின் ஓட்டத்தை நினைவுறுத்தும் அந்த வரியிலிருந்து தொடங்கி பல நிகழ்வுகளையும், எண்ணங்களையும் துண்டு துண்டாக திரையில் சட்டென்று தோன்றி மறையும் பிம்பங்களைப் போல் அடுக்கிய பின் “எல்லாம் ஒரு நொடியில் அழிந்துவிடும். தொட்டிலி -லிருந்து வாழ்நாளின் இறுதிப் படுக்கை வரை சேகரித்து வைக்கப்பட்டிருந்த அகராதி இல்லாமல் போய்விடும்.
அமைதி மட்டுமே நிலவும்; அதைச் சொல்ல ஒரு வார்த்தைகூட இருக்காது.
திறந்த வாயிலிருந்து எதுவும் வெளிப்படாது. ‘நான்’, ‘என்னுடைய’ எதுவுமே. புற உலகை விவரிக்கும் சொற்களை மொழி தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கும். விருந்துண்ணும் மேஜையைச் சுற்றித் தொடரும் உரையாடல்களில், காலப்போக்கில் முகங்களை இழந்து, அவரவர் பெயர்கள் மட்டும் அழியாமல் இருக்கும் - அதுவும் தொலைந்துபோய் மிகத் தொலைவிலுள்ள தலைமுறையின் அநாமதேயக் கும்பலில் மறையும் வரை!” என குறிப்பிட்டுள்ளார்.
அமைதி
2022-ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசை சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான அலெஸ் பியாலியாட்ஸ்கிக்கு அறிவிக்கப்பட்டது.
அந்நாட்டில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறலை எதிர்த்து போராடி வரும் இவர், தற்போது பெலாரஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரை தவிர, இரண்டு மனித உரிமை அமைப்புகளான, 'ரஷ்யன் குரூப் மெமோரியல்' மற்றும் உக்ரைன் சிவில் உரிமைகளுக்கான மையம் ஆகியவற்றுக்கும் பரிசு பகிர்ந்தளிக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அலெஸ் பியாலி-யாட்ஸ்கி ரஷ்யன் மனித உரிமைகள் அமைப்பு நினைவகம் (Russian human rights organisation Memorial)மற்றும் உக்ரைனின் சிவில் உரிமைகளுக்கான மனித உரிமைகள் அமைப்பு (Ukrainian human rights organisation Center for Civil Liberties) என இரு அமைப்புகளிலும் முக்கிய பங்காற்றி வருபவர். பெலாரசில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கில் 1980களில் நடைபெற்ற போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர்.
பெலாரசில் ஜனநாயகம் வலுப்படவும் அமைதி வழியில் முன்னேற்றம் ஏற்படவும் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். சர்வாதிகாரிக்கு இணையான அதிகாரத்தை அதிபருக்கு அளிக்கும் நோக்கில் பெலாரசில் மேற்கொள்ளப்பட்ட சட்டத் திருத்தத் திற்கு எதிராக தொடர் போராட்டங் களை நடத்தியவர். இதற்காக, வியாஸ்னா என்ற அமைப்பை உருவாக்கியவர்.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக 2011 முதல் 2014 வரை இவர் சிறையில் அடைக்கப்பட்டார். அரசுக்கு எதிரான தொடர் போராட்டங்களை அடுத்து 2020-இல் மீண்டும் இவர் கைது செய்யப்பட்டார். தற்போது வரை விசாரணையின்றி இவர் தடுப்புக்காவ-லில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், தனது நோக்கத்தில் சமரசமின்றி செயல்பட்டு வருகிறார்.
ரஷ்யாவில் மிக குறைந்த அளவில் இருக்கும் சுதந்திரமான பத்திரிக்கை களில் ஒன்றான ரஷ்யன் நொவயா கஸேட்டாவின் தலைமை ஆசிரியர் டிமிட்ரி முரட்டோவ் ‘கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் அவரது முயற்சிகளுக்காக’ பரிசுக்கு கூடுதலாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உக்ரைனில் ஜனநாயகத்தை வளர்ப்ப தற்காக தொடங்கப்பட்ட சிவில் சுதந்திர மையம் அந்நாட்டில் ரஷ்யா நிகழ்த்தியபோர் குற்றங்களை ஆவணப் படுத்துவதற்காக அறியப்பட்ட ஒரு அமைப்பு. பிப்ரவரி 24-இல் உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு தொடங்கிய போதி-லிருந்தே ரஷ்யா செய்ததாக சொல்லப்பட்ட அத்துமீறல்களை ஆவணப்படுத்தி வருகிறது சிவில் சுதந்திர மையம்.