பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிடி ஆயோக் அமைப்பின் 5-வது ஆட்சியாளர்கள் குழு சந்திப்பு ஜூன் 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாட்டின் முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.
அரசின் கொள்கைகள், திட்டமிடல்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் போன்றவற்றை செயல்படுத்தும் முக்கிய அமைப்பு நிடி ஆயோக்.
பாஜக தலைமையிலான அரசினால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் ஆட்சியாளர்கள் குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங் களின் துணை நிலை ஆளுநர்கள், பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோர் இருப்பர்.
மீண்டும் பிரதமராக

மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுள்ள மோடியின் தலைமையிலான புதிய அரசின் முதல் நிடி ஆயோக் ஆட்சி யாளர்கள் குழு கூட்டம் இதுவாகும்.
இந்த சந்திப்பின்போது நீர் மேலாண்மை, விவசாயம், பாதுகாப்பு உள்ளிட்ட நாட்டின் தலையாய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இடதுசாரி ஊடுருவல் அமைப்புகளால் ஜார்கண்ட் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இந்தக் குழு உருவாக்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து சந்திப்புகள் நடத்திருக் கின்றன. முதல் கூட்டம் பிப்ரவரி 8, 2015-இல் நடத்தப்பட்டது. இரண்டாவது சந்திப்பு ஜூலை 15, 2015-இல் நடத்தப் பட்டது.
இந்தக் கூட்டத்தின்போது முதல்வர்களை இணைத்து மூன்று துணை நிலை குழுக்களும் இரண்டு செயல்படுத்துதல் குழுக்களும் உருவாக்கப்பட்டன.
2017 ஏப்ரல் 23-இல் நடந்த மூன்றாவது சந்திப்பில்தான் பொதுத்தேர்தலையும், சட்டசபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்தவும், நிதி ஆண்டை ஜனவரி முதல் டிசம்பர் வரை என மாற்றவும் முடிவு செய்யப்பட்டது.
ஜூன் 17, 2018-இல் நடந்த நான்காவது கூட்டத்தில் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், அரசின் பிரதான திட்டங் களின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தனியார் முதலீடுகளை அதிகப்படுத்தவும், விவசாயத்தை நவீனப் படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.
அதற்கான சீர்திருத்தங்களை எடுக்க அரசு முனைப்புடன் உள்ளது என்றார்.
அடுத்த 100 நாட்களில் அரசு திட்ட மிட்டுள்ள பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். முதல் கட்டமாக ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கும் திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தியதன் மூலம் 14.5 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள். இதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும் என்று தெரிவித்தார்.
____________
நிடி ஆயோக்
இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார்.
2014-ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதன்படி 2015, ஜனவரி 1-ஆம் தேதி திட்டக் குழுவுக்குப் பதிலாக நிடி ஆயோக் என்ற புதிய அமைப்பு மத்திய அரசால் உருவாக்கப்பட்டது.