சிற்பி திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பள்ளி மாணவர்கள் ஒழுக்கத் திலும் கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிப் படுத்தவும், "சிற்பி’ (SIRPI - Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு (Nodal Officers) பணி நியமனை ஆணை களையும், இத்திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு சிற்பி திட்டத்தின் சீருடைகளையும் வழங்கி வாழ்த்தினார்.
தமிழகத்தில், சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் விளங்கவும், பொதுமக்கள் அச்சமின்றி அமைதியான முறையில் வாழ்வதற்கும், பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நிலையில், காவல்துறையுடன், பள்ளி மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து நல்லுறவை ஏற்படுத்தி, சட்டத்தை மதிக்கும் சிறந்த குடிமக்களாகவும், காவல்துறையின் உண்மையான நண்பர்களாகவும் மாற்றும் உயரிய நோக்கில் ”சிற்பி” திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிடவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடாமல் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், போதை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் அவர்களை நல்வழிப்படுத்தவும், தாம் கற்ற கல்வியையும், ஒழுக்கத்தையும் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு அவர்களை வளர்ப்பதற்கும், ஒரு வழிகாட்டி தேவைப்படுவது அறிந்து, பள்ளி மாணவர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாக, காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவாக "சிற்பி''(SIRPI # Students In Responsible Police Initiatives) என்ற இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு நற்பண்பு, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, பொது அறிவு ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதுடன், உடலை ஆரோக்கிய மாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகள், யோகா போன்றவையும் கற்றுக் கொடுக்கப்படும்.
இதன் முதற்கட்டமாக 100 அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளிகளி-லிருந்து 8-ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவர்கள் அவர்களது விருப்பத்தின் பேரில், தன்னார்வலர் களாக (Volunteers) தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நற்பண்புகள் மற்றும் உடற்பயிற்சி குறித்த வகுப்புகள் நடத்தப்படும். மேலும், அம்மாணவர்கள் 8 சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்வி, வரலாறு, பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும். அத்துடன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக, விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சி, கவாத்து ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படும். நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள நல்லொழுக்கம், நாட்ட
சிற்பி திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பள்ளி மாணவர்கள் ஒழுக்கத் திலும் கல்வியிலும் மேலும் சிறந்து விளங்கவும், நாட்டுப்பற்றுடன் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களை நல்வழிப் படுத்தவும், "சிற்பி’ (SIRPI - Students In Responsible Police Initiatives) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், சிற்பி திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு (Nodal Officers) பணி நியமனை ஆணை களையும், இத்திட்டத்தில் இணைந்துள்ள மாணவ, மாணவியர்களுக்கு சிற்பி திட்டத்தின் சீருடைகளையும் வழங்கி வாழ்த்தினார்.
தமிழகத்தில், சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் விளங்கவும், பொதுமக்கள் அச்சமின்றி அமைதியான முறையில் வாழ்வதற்கும், பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் நிலையில், காவல்துறையுடன், பள்ளி மாணவர்களின் நெருக்கத்தை வளர்த்து நல்லுறவை ஏற்படுத்தி, சட்டத்தை மதிக்கும் சிறந்த குடிமக்களாகவும், காவல்துறையின் உண்மையான நண்பர்களாகவும் மாற்றும் உயரிய நோக்கில் ”சிற்பி” திட்டம் தொடங்கப் பட்டுள்ளது.
பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கிடவும், சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடாமல் நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளவும், போதை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் அவர்களை நல்வழிப்படுத்தவும், தாம் கற்ற கல்வியையும், ஒழுக்கத்தையும் பிறருக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு அவர்களை வளர்ப்பதற்கும், ஒரு வழிகாட்டி தேவைப்படுவது அறிந்து, பள்ளி மாணவர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டியாக, காவல்துறையினரின் முயற்சிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் பிரிவாக "சிற்பி''(SIRPI # Students In Responsible Police Initiatives) என்ற இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு நற்பண்பு, நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, பொது அறிவு ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பதுடன், உடலை ஆரோக்கிய மாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகள், யோகா போன்றவையும் கற்றுக் கொடுக்கப்படும்.
இதன் முதற்கட்டமாக 100 அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளிகளி-லிருந்து 8-ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவர்கள் அவர்களது விருப்பத்தின் பேரில், தன்னார்வலர் களாக (Volunteers) தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நற்பண்புகள் மற்றும் உடற்பயிற்சி குறித்த வகுப்புகள் நடத்தப்படும். மேலும், அம்மாணவர்கள் 8 சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கல்வி, வரலாறு, பொது அறிவு குறித்து எடுத்துரைக்கப்படும். அத்துடன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்காக, விளையாட்டுப் பயிற்சி, உடற்பயிற்சி, கவாத்து ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படும். நற்பண்புகளை வளர்த்துக்கொள்ள நல்லொழுக்கம், நாட்டுப்பற்று, தேசிய ஒற்றுமை, பிறருக்கு உதவுதல், தாம் கற்ற கல்வியையும், நல்லொழுக்கத்தையும் பிறருக்கு எடுத்துரைத்தல், கண்டு களித்த வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் நல்ல அனுபவங்கள் குறித்து பிறருக்குக் கற்றுத் தருதல் போன்ற நல்ல பண்புகளை வளர்க்க இச்சிறப்பு வகுப்புகள் உதவும்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கு உறுதுணை யாக இருக்கும் காவல்துறையின் செயல்பாடுகள், அமைப்பு, பணிகள் குறித்தும், அவசர உதவி மையங்கள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும், சென்னை பெருநகர காவல் துறையின் செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
புதுமைப் பெண் திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை, பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்ட டெல்லி- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வீதம் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
மாநிலத்தின் அனைத்து வளர்ச்சியிலும் பெண்களுக்கு உரிய இடம் வழங்கும் பொருட்டு, தமிழ்நாடு அரசு சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை என்ற பெயரை "சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை'' என மாற்றம் செய்துள்ளது.
பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள், திருநங்கையர் போன்றவர்களின் நலனைக் காத்திடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பெண் கல்வியைப் போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தைத் தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களைப் பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தைச் சார்ந்தவராகவும், உருவாக அடித்தளமாக புதுமைப் பெண் என்னும் உன்னத திட்டத்தைத் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், பெண்களுக்கு உயர் கல்வி அளித்து, பா-லின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்குப் பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தைக் குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பைத் தொடர ஊக்குவித்தல், உயர் கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி அனைத்துத் துறைகளிலும் பங்கேற்கச் செய்தல், உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும் அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைத் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்று 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவியர்களாக இருத்தல் வேண்டும். மாணவிகள் 8-ஆம் வகுப்பு அல்லது 10-ஆம் வகுப்பு அல்லது 12-ஆம் வகுப்புகளில் படித்து பின்னர், முதன்முறையாக உயர்கல்வி நிறுவனங் களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.
புதுமைப் பெண் திட்டத்தில், சான்றிதழ் படிப்பு (Certificate Course), ThPVl T¥l× (Diploma / ITI / D.Ed. Courses),, பட்டயப் படிப்பு (Diploma / ITI / D.Ed. Courses),, இளங்கலைப் பட்டம் (B.A., B.Sc., B.Com., B.B.A., B.C.A., and all Arts & Science, Fine Arts Courses),, தொழில் சார்ந்த படிப்பு (B.E., B.Tech., M.B.B.S., B.D.S., B.Sc. (Agri.), B.V.Sc., B.F.Sc., B.L. etc.) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing, Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc.) போன்ற படிப்புகளைப் பயிலும் மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
மேலும், முதலாம் ஆண்டி-லிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலி -ருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில், மூன்றாம் ஆண்டி -லிருந்து நான்காம் ஆண்டிற்குச் செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில், நான்காம் ஆண்டிலி-ருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர் களும் இத்திட்டத்தின் கீழ் பயனடைவர்.
சென்னையில், 2500 மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி புத்தகம் மற்றும் நிதிக்கல்வி புத்தகம் அடங்கிய "புதுமைப் பெண்'' பெட்டகப்பை மற்றும் வங்கி பற்று அட்டை (Debit Card) ஆகியவை வழங்கப்பட்டது.
கல்வி என்னும் நிரந்தர சொத்தினை பெண்கள் அனைவரும் பெற்றிட வேண்டும் என்ற பெண்ணுரிமை கொள்கையின் மறு உருவமாகவும், பெண் சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வலி-மையான பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையவும் இப்புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தை களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் பொருட்டு மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1545 அரசு தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5–ஆம் வகுப்பு வரை) பயிலும் 114095 தொடக்கப் பள்ளி மாணவ மாணவியருக்கு முதற்கட்டமாகக் காலை உணவு வழங்கும் திட்டம் ரூ. 33.56 கோடி செலவினத்தில் தொடங்கப்படும்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் நோக்கம், சிற்றுண்டியின் வகைகள், பொதுவான நடைமுறைகள், கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப் பட்டுள்ளது.
குறிக்கோள்கள்
மாணவ / மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல் மாணவ / மாணவியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப் படாம-லிருத்தலை உறுதி செய்தல் மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக இரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல் பள்ளிகளில் மாணவ / மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் / தக்க வைத்துக் கொள்ளுதல் வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி / ரவை / கோதுமை ரவை / சேமியா / உள்ளூரில் அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள் / மற்றும் சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக் கூடிய காய்கறிகள் (சமைத்த பின் 150 - 200 கிராம் உணவு மற்றும் 60 மி.கி. காய்கறியுடன் கூடிய சாம்பார்). ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம்.
பொதுவான வழிமுறைகள்
காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப் படும் மூலப் பொருட்களின் தரம் எநநஆஒ நெறிமுறைகளுக்கு உகந்தவாறு இருக்க வேண்டும்.
நகரப்புறப் பகுதிகளில், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் மையப்படுத்தப் பட்ட சமையலறை அல்லது வேறு ஏதேனும் தகுதி வாய்ந்த அமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்.
ஊரக பகுதிகளில் கிராம ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் மூலம் தரமான காலை உணவு வழங்குதலை உறுதிப்படுத்த வேண்டும்.
காலை உணவு தயாரிக்க பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள் இயல்பான நிறம், மணம் உடையதாகவும், வேறு வெளிப் பொருட்கள் (ங்ஷ்ற்ழ்ஹய்ங்ர்ன்ள் ள்ன்க்ஷள்ற்ஹய்ஸ்ரீங்) கலக்காமலும் சுத்தமாக இருக்க வேண்டும்.
உள்ளூரில் சமைக்கப் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயைக் கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
உணவு சமைக்கப் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள் தரமானதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்.
காய்கறிகளின் தரத்தை உறுதி செய்வதுடன் அவற்றை சமைப்பதற்கு முன் தண்ணீரில் நன்கு கழுவி பயன்படுத்தப்பட வேண்டும்.
தயார் செய்யப்பட்ட உணவினை குழந்தைகளுக்கு வழங்கும் முன்பு பள்ளி மேலாண்மைக் குழு ஒவ்வொரு நாளும் தரத்தினை உறுதி செய்யும் பொருட்டு உணவினை ருசி பார்த்தல் வேண்டும்.
உணவுப் பாதுகாப்புத் துறை
அலுவலர்கள் அவ்வப்போது பள்ளிகளை ஆய்வு செய்து உணவின் தரத்தினை உறுதி செய்ய வேண்டும்.
உணவு தயாரிக்கப்படும் இடத்தைத் தேர்வு செய்து, அந்த குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே உணவு தயாரிக்கப்பட வேண்டும்.
உணவு தயாரித்தல் மற்றும் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடும் சமையலர் மற்றும் உதவியாளர்கள் தன் சுத்தத்தைப் பராமரித்தல் வேண்டும்.
திட்டம் செம்மையாக செயல்படுத்தப் பட்டுள்ளதா என்பதை மதிப்பீடு செய்ய ஏதுவாக அடிப்படை மற்றும் இறுதி நிலை ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையினால் தகுதி வாய்ந்த வெளி முகமை நிறுவனங்களின் வாயிலாக இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம்
பள்ளி மாணவர் புதிய மருத்துவத் திட்டம் அல்லது ராஷ்ட்ரீய பால்சுவத்ஸ்திய காரிய கிராம் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் அங்கன்வாடி முதல் மேல்நிலைப்பள்ளி வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான புதிய இலவச மருத்துவத் திட்டம். இத்திட்டம் இந்திய அரசின் நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசு, 01 ஏப்ரல் 2015 முதல் செயல்படுத்தி உள்ளது. இத்திட்டப்படி பள்ளிக் குழந்தைகளுக்கு இலவசமாக உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்படும். புதிய மருத்துவத் திட்டத்திற்காக தமிழ்நாடு மாநில அளவில் தனி இயக்குநரும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் தலைமையில் வட்டார மருத்துவக் குழுக்களும் செயல்படும்.
இல்லம் தேடிக் கல்வி
இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்ய ஏதுவாக இல்லம் தேடிக் கல்வி இணையதளத்தில் படிவம் வழங்கப்பட்டு உள்ளது. இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக சேர விரும்புபவர்களுக்கான தகுதிகள்:
வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம். கண்டிப்பாக குழந்தை களுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத் தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்). யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும் குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்.