Advertisment

சீனாவில் பரவும் புதிய வைரஸ்

/idhalgal/general-knowledge/new-virus-spreading-china

சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல் என்ற செய்தி வந்தவுடனேயே உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உலக நாடுகள் வரை அனைத்தும் பரபரப்பாகி தொற்று தொடர்பான தகவல்களைத் தேடத் தொடங்கியுள்ளன. இந்தத் தேடலும், அதன் கூடவே ஒட்டிக் கொண்ட பதற்றமும் இயல்பே என்று சொல்லும் அளவுக்கு கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் பதிவான கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோடிக் கணக்கில் உயிரிழப்புகள், சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவு எனப் பல்வேறு பாதிப்புகளால் உலகம் பல மாதங்கள் ஸ்தம்பித்தது.

அதனாலேயே சீனாவில் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (ஐன்ம்ஹய் ஙங்ற்ஹல்ய்ங்ன்ம்ர்ஸ்ண்ழ்ன்ள்) என்ற புதிய வகை வைரஸ் பரவுகிறது என்றவுடனேயே அது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நாடுகளும் எச்சரிக்கையுடன் அதை அணுகத் தொடங்கியுள்ளன.

Advertisment

ss

எச்எம்பி வைரஸ் என்றால் என்ன?

இதை மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சாதாரண சளித் தொல்லையை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸ் ப

சீனாவில் புதிய வகை வைரஸ் தொற்று பரவல் என்ற செய்தி வந்தவுடனேயே உலக சுகாதார நிறுவனம் தொடங்கி உலக நாடுகள் வரை அனைத்தும் பரபரப்பாகி தொற்று தொடர்பான தகவல்களைத் தேடத் தொடங்கியுள்ளன. இந்தத் தேடலும், அதன் கூடவே ஒட்டிக் கொண்ட பதற்றமும் இயல்பே என்று சொல்லும் அளவுக்கு கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் பதிவான கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கோடிக் கணக்கில் உயிரிழப்புகள், சர்வதேச அளவில் பொருளாதார பின்னடைவு எனப் பல்வேறு பாதிப்புகளால் உலகம் பல மாதங்கள் ஸ்தம்பித்தது.

அதனாலேயே சீனாவில் ஹியூமன் மெடாநிமோ வைரஸ் (ஐன்ம்ஹய் ஙங்ற்ஹல்ய்ங்ன்ம்ர்ஸ்ண்ழ்ன்ள்) என்ற புதிய வகை வைரஸ் பரவுகிறது என்றவுடனேயே அது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உலக நாடுகளும் எச்சரிக்கையுடன் அதை அணுகத் தொடங்கியுள்ளன.

Advertisment

ss

எச்எம்பி வைரஸ் என்றால் என்ன?

இதை மிக எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சாதாரண சளித் தொல்லையை ஏற்படுத்தும் ஃப்ளூ வைரஸ் போன்றது எனலாம். சுவாசப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும் மற்றுமொரு வைரஸ் இது. இந்த வகை வைரஸ் பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்குப் பரவும். வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் தொட்ட பொருட்கள், புழங்கிய இடங்களில் இருந்து இன்னொரு வருக்குப் பரவும்.

தொற்று ஏற்பட்ட நபருடன் கை குலுக்கிவிட்டு கையை கண்கள், மூக்கு, வாயில் வைத்தல், அவர் தும்மும் போதோ இருமும் போதோ அருகில் இருத்தல் போன்றவற்றாலும் தொற்று பரவும். கொரோனா பரவலுக்கும் இதே காரணம் தான் சொல்லப்பட்டது என நீங்கள் யோசிக்கலாம். எல்லா ஃபோமைட் போர்ன் (ச்ர்ம்ண்ற்ங் க்ஷர்ழ்ய்ங்) அதாவது வைரஸ் பாதித்தவர் தொட்டதால் உயிரற்ற பொருட்களின் மீது வைரஸ் ஒட்டி அதன்மூலம் மனிதர்களுக்கு வைரஸ் பரவுதல் ஒரே பாணியில் தான் நடைபெறும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

மேலும், ஃப்ளூ வைரஸ்கள் மிகவும் புத்திசா-லிகள் என்கின்றனர். அதாவது அதன் மரபணு மிக வேகமாக தன்னை உருமாற்றிக் கொள்ளக் கூடியது. அதனால் வழக்கமான ஃப்ளூ வைரஸ் மனிதர்களிடம் சற்று கவனிக்கத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸாக உருமாறும் போது அதற்குப் பெயரும், கூடவே அதனைச் சுற்றிய பரபரப்பு அதிகரிக்கிறது எனக் கூறுகின்றனர் மருத்துவர் ஒருவர். ஃப்ளூ வைரஸின் மரபணுவில் இருக்கும் தன்னைத்தானே உருமாறிக் கொள்ளும் வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுத்து பெயர் வைக்க முடியாது. அவ்வளவு வேகமாக, விதவிதமாக அது உருமாறிக் கொள்ளும்.

கொரோனாவை போன்றே இந்த வைரஸால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வ-லி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூச்சுத் திணறல் ஏற்படுகிறதா என்ற தகவல் ஏதும் இல்லை. புதிய வைரஸால் சிறார் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது என்று கேட்டபோது, இதுபோன்ற வைரஸ்கள் சிறார், முதியவர் என்றில்லை யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அவர்களை எளிதாக, அதிகமாக தாக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரஸ் பரவல் குறித்து சீனா விளக்கம்

தற்போது புதிய வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு தகவல்களைக் கேட்டுள்ள நிலையில், சீனா விளக்க மளித்துள்ளது. சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “சீனாவில் குளிர் காலத்தில் எப்போதும் சுவாசப் பாதை தொற்று நோய்கள் அதிகரிப்பது இயல்பே. சீன அரசு குடிமக்கள், சுற்றுலா பயணிகளின் உடல் நலனின் எப்போதுமே அக்கறை கொண்டுள்ளது. சீனாவில் தொற்று நோய் பரவல் ஏதும் இல்லை. சீனா வுக்கு சுற்றுலா பயணிகள் தாராளமாக வரலாம். மருத்துவமனைகளில் கூட்டம் இருக்கலாம். ஆனால் இந்த வைரஸ் வீரியமற்றது. பரவலும் மிகமிகக் குறைவு.

சீனாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சீன தேசிய நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிர்வாகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் படித்தாலே தேவையற்ற அச்சங்கள் தீரும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதன் தாக்கம்

சீனாவில் பரவும் புதிய வைரஸால் நாடு முழுவதும் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், சுகாதார சேவைகள் துறை இயக்குநர் ஜெனரல் மருத்துவர் அடுல் கோயல் கூறுகையில், “எச்எம்பி வைரஸ் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை. மெடாநிமோ வைரஸ் மற்ற சுவாசப்பாதை தொற்றை ஏற்படுத்தும் வைரஸ்களைப் போல மிகச் சாதாரணமானதே.

சாதாரண சளி ஏற்படுத்தும் வைரஸ் போன்றதே. உள்நாட்டில் சுவாசப் பாதை தொற்றால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தரவுகளையும் ஆராய்ந்துவிட்டோம். டிசம்பர் 2024 தரவுகளின் படி நாட்டில் வைரஸ் தொற்று பாதிப்பு எதுவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரிக்கவில்லை. எச்எம்பி தொற்றுக்கு பிரத்யேக சிகிச்சைக்காக ஆன்ட்டி வைரல் மருந்துகள் ஏதும் தேவையில்லை.” என்று கூறியிருக்கிறார்.

வைரஸ் தொற்றுகள் குறித்த செய்தி களை நிதானமாக அணுகினால் தேவையற்ற அச்சத்தையும், பொதுமக்கள் மத்தியில் பீதியையும் ஏற்படுத்துவதைத் தவிர்க்கலாம். மேலும், கைகளைக் கழுவுதல், அதிக நெருக்கடியான, காற்று மாசு நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ளுதல், தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுதல் போன்ற பழக்கங்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ள வைரஸ் தொற்று காலத்தில் மட்டுமல்லாது எப்போதுமே பாதுகாப்பை நல்கும்.

gk010225
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe