நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான (ஏப்ரல், மே, ஜூன்) இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி தொடர்பாக அண்மையில் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தரவுகளை வெளியிட்டபோது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கணிசமாக குறைந்திருக்கும் என்று பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்திருந்தாலும், பரந்த ஒருமித்த கருத்து சரிவு 20% ஐ விட அதிகமாக இருக்காது என்று கூறினர். ஆனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி ண1 இல் 24% குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு, கடந்த ஆண்டு இதே மூன்று மாதங்களில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு -24% என்ற விகிதத்தை அடைந்துள்ளது. பொருளாதார வளர்ச்சிகளை சுட்டும் காரணிகள் இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. சிமெண்ட் உற்பத்தி மற்றும் ஸ்டீல் பயன்பாடு போன்றவை முற்றிலும் குறைந்துள்ளது. இந்த காலாண்டில் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், இந்த ஊரடங்கு உத்தரவால், டேட்டாவின் தரமும் சப்-ஆப்டிமலாக இருக்கிறது. பெரும்பாலான பார்வையாளர்கள் இந்த எண் சரியான நேரத்தில் திருத்தப்படும் போது மோசமடையும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்திருப்பதால், இந்த முழு ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் மோசமடையக்கூடும் என்று நம்பப்படுகிறது. முழு நிதியாண்டில் 7%மாக வளர்ச்சி விகிதம் குறையக்கூடும். இதையே முதலாவது படமும் சுட்டிகாட்டுகிறது.

பொருளாதார தாராளமயமாக்கல் நடைபெற்றுக் கொண்டிருந்த 1990களின் முற்பகுதிக்குப் பின்னர், இந்திய பொருளாதாரம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 7% மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு அதற்கு மாற்றாக 7% குறைவை சந்திக்க உள்ளது. பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளில் மொத்த மதிப்பு சேர்க்கப்பட்ட போது, விவசாயத்தில் மட்டுமே ஜி.வி.ஏ 3.4% உயர்ந்துள்ளது என்பதை தரவுகள் உறுதி செய்கிறது. மற்ற அனைத்து துறைகளும் வருமானத் தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

Advertisment

கட்டுமானம் (50%), வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் பிற சேவைகள் (47%), உற்பத்தி (39%) மற்றும் சுரங்க வேலைகள் (23%) ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் அதிகபட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகள் இவை என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த துறைகளின் வளர்ச்சி குறைந்து கொண்டிருக்கும் போது அவற்றின் உற்பத்தி மற்றும் வருமானங்கள் வீழ்ச்சியடைகின்றன . இது மேலும் பலருக்கு வேலையை இழக்க காரணியாக அமைகிறது. அல்லது ஒரு வேலை கிடைப்பதை சிக்கலாக்குகிறது. எந்த ஒரு பொருளாதாரமாக இருந்தாலும், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மொத்த தேவை, அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தி, வளர்ச்சியின் நான்கு முக்கிய காரணிகள் ஒன்றிலிருந்து உருவாக்கப்படுகிறது. பெரிய காரணி, உங்களைப் போன்ற தனி நபர்களின் தேவை நுகர்வு. இதை சி என்று அழைப்போம். இதன் அளவு, இந்திய பொருளாதாரத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்த காலாண்டிற்கு முன்பு 56.4%-மாக இருந்தது.

indian economy

இரண்டாவது பெரிய காரணி தனியார் துறை வணிகங்களால் உருவாக்கப்படும் தேவை. இதை நாம் ஐ என்று அழைப்போம், இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 32% ஆகும். மூன்றாவது காரணி அரசாங்கத்தால் உருவாக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை. இதை ஜி என்று அழைப்போம், இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11% ஆகும்.

இந்தியாவின் ஏற்றுமதியிலிருந்து இறக்குமதியைக் கழித்தபின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிகர தேவைதான் கடைசி காரணி. இதை சல என்று அழைப்போம். இந்தியாவின் விஷயத்தில், இது மிகச்சிறிய காரணியாகும், மேலும் இந்தியா பொதுவாக ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்வதால், அதன் விளைவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்மறையானது. தனியார் நுகர்வு இந்திய பொருளாதாரத்தை இயக்கும் மிகப்பெரிய காரணி 27% குறைந்துள்ளது. பணத்தைப் பொறுத்தவரை, இந்த வீழ்ச்சியை கடந்த ஆண்டின் மதிப்பீட்டோடு ஒப்பீடு செய்தால் இதே காலாண்டில் 5,31,803 கோடி ரூபாய்.

இரண்டாவது பெரிய காரணி வணிகங்களின் முதலீடுகள் இன்னும் கடினமாகிவிட்டன இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் இருந்ததில் பாதி. பண அடிப்படையில், சரிவு மட்டும் ரூ. 5,33,003 கோடி. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88%க்கும் அதிகமான இரண்டு பெரிய காரணி களால், ண1 ஒரு பெரிய சரிவை சந்தித்தது.

என்எக்ஸ் அல்லது நிகர ஏற்றுமதி தேவை சாதகமாக மாறியுள்ளது, ஏனெனில் இந்தியாவின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதியை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. ​​இது ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு ஊக்கத்தை அளிக்கிறது, பொருளாதார நடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது. இது வளர்ச்சியின் கடைசி காரணியாகும். அரசாங்கம். தரவுகளின் படி அரசாங்கத்தின் தேவை 16% அதிகரித்துள்ளது, ஆனால் இது பொருளாதாரத்தின் பிற துறைகளில் (என்ஜின்கள்) ஏற்பட்ட தேவை இழப்பை ஈடுசெய்யும் அளவுக்கு இல்லை. சி மற்றும் ஐலியிடம் இருந்து தேவை 10,64,803 கோடி ரூபாயாக வீழ்ச்சியடைந்தபோது, அரசாங்கத்தின் செலவு வெறும் ரூ. 68,387 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது அரசாங்கத் தின் செலவினங்கள் அதிகரித்தன, ஆனால் இது மிகக் குறைவானது, இது மக்கள் மற்றும் வணிகர்களால் அனுபவிக்கப்படும் மொத்த தேவையின் 6% ஐ மட்டுமே ஈடு செய்யும். நிகர முடிவு என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்க செலவினங்களின் பங்கு 11% முதல் 18% வரை உயர்ந்துள்ளது, ஆனால் உண்மை என்னவென்றால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24% குறைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியில் அடிமட்ட காரணி தான் ஜி.டி.பி. ஆனால் தற்போது வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணியாக அது மாறியுள்ளது.

வருமானங்கள் கடுமையாக வீழ்ச்சி யடையும் போது, தனி நபர்கள் தங்களின் நுகர்வுகளை குறைக்கிறார்கள். தனி நபர்களின் நுகர்வு கடுமையாக வீழ்ச்சியடையும் போது, வணிகங்கள் முதலீட்டை நிறுத்துகின்றன. இவை இரண்டும் தன்னார்வ முடிவுகள் என்பதால், தற்போதைய சூழ்நிலையில் அதிக முதலீடு செய்ய வணிகங்களை கட்டாயப்படுத்த , அதிக செலவு செய்ய மக்களை கட்டாயப்படுத்த எந்த வழியும் இல்லை. இந்த சூழ்நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தக்கூடிய ஒரே ஒரு காரணி அரசாங்கம் (ஜி). சாலைகள் மற்றும் பாலங்களைக் கட்டுவதன் மூலமும், சம்பளத்தை செலுத்துவதன் மூலமோ அல்லது நேரடியாக பணத்தை ஒப்படைப்பதன் மூலமோ அரசாங்கம் அதிக செலவு செய்யும் போது மட்டுமே குறுகிய காலத்திற்கு பொருளாதாரம் புத்துயிர் பெற முடியும். அரசாங்கம் போதுமான அளவு செலவிடவில்லை என்றால் பொருளாதாரம் மீள நீண்ட நேரம் எடுக்கும்.

கொரோனா வைரஸ் விவகாரத்திற்கு முன்பே, அரசின் பொருளாதார நிலை மோசமாக இருந்தது. கடன் மட்டும் வாங்கவில்லை. எவ்வளவு வாங்க வேண்டுமோ அதைக்காட்டிலும் கூடுதலாக கடன் வாங்கியுள்ளது. இதன் விளைவாக அரசிடம் தற்போது பணம் இல்லை. வளங்களை உருவாக்க புதிய வழிமுறைகளை அரசு யோசிக்க வேண்டும்.

புதிய வேளாண் மசோதா 2020

இந்தியாவின் வேளாண்துறையை சீர்திருத்தும் நோக்கில் இருக்கும் அரசின் தற்போதைய உந்துதல், இந்திய விவசாயத்துறை மீதான கருத்துகளை பிரித்து விவாதத்தை உருவாக்கியுள்ளது. இந்த விவாதங்களில் இரண்டு கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒன்று, இந்திய விவசாயத்துறை பெரிய அளவில் வருமான ஈட்ட முடியாதது. இரண்டு, விவசாயத்துறை அதிக அளவு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, சந்தைகளின் சுரண்டல்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. புதிய மசோதாக்கள் விவசாயிகள் தங்களின் விலைபொருட்களை எளிதில் விற்கவும், தனியார் நிறுவனங் களுக்காக எளிதில் உற்பத்தி செய்யவும் வழி வகுக்கிறது. இந்தத் துறையை தாராளமயமாக்குவதும், இந்திய விவசாயத்தை மிகவும் திறமையாகவும், விவசாயிகளுக்கு அதிக ஊதியம் கிடைப்பதையும் உறுதி செய்யும் என்று இந்திய அரசு கருதுகிறது. இந்த சூழலில் இந்திய விவசாய துறையின் அடிப்படையை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

சுதந்திரம் கிடைத்த பொழுதில், இந்தியாவில் 70% வேலைகள் (100 மில்லியனுக்கு சற்று குறைவானவர்கள்) விவசாயத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது விவசாயம் மற்றும் அதன் சார் துறைகள் மூலமாக இந்தியாவின் வருமானம் 54% -ஆக இருந்தது. ஆண்டுகள் செல்ல, நாட்டின் வருமானத்தில் விவசாயத்தின் பங்கானது குறைய துவங்கியது. 2019 -20ஆம் ஆண்டில் 17% குறைவாகவே இருந்தது. (மொத்த மதிப்பு கூட்டப்பட்ட அளவுகளில்).

அதே போன்று விவசாயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மக்களின் எண்ணிக்கையும் 70%-இல் இருந்து 55% ஆக குறைந்துள்ளது. விவசாய வருமானத்தை இரட்டிப்பு செய்வதற் காக அமைக்கப்பட்ட குழுவின் 2017-ஆம் ஆண்டு அறிவிப்பில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு விகிதம் குறைந்தாலும் கூட கிராமப்புற தொழிலாளர்கள் வேலைவாய்ப்புக்காக விவசாயத்தை நம்பியிருப்பது குறையவில்லை என்று கூறியுள்ளது.

விவசாய துறையில் இருக்கும் நிலமற்ற விவசாயிகளில் வறுமை உயர்ந்து வருகிறது என்பதை ஒரு முக்கியமான புள்ளிவிவரம் அறிவிக்கிறது. 1951-ஆம் ஆண்டு 28%-மாக இருந்த இந்நிலை 2011-ஆம் ஆண்டில் 55% ஆக உயர்ந் துள்ளது. விவசாயத்துறை சார்ந்து வாழும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கின்ற சூழலிலும் கூட, சொந்தமாக வைத்திருக்கும் நிலத்தின் சராசரி அளவும் குறைந்துள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து நில உரிமையாளர்களில் 86% நபர்கள் 1 ஹெக்டர் முதல் 2 ஹெக்டர் என்ற அளவில் தான் நிலம் வைத்துள்ளனர். விளிம்பு நிலையில் இருப்பவர்கள் 1 ஹெக்டருக்கும் குறைவாக, ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் பாதி அளவு தான் நிலத்தை உரிமை கொண்டாடு கிறார்கள். விளிம்பு நிலையில் இருக்கும் நபர்களிடம் இருக்கும் சராசரி நில அளவு 0.37 ஹெக்டர் ஆகும்.

0.63 ஹெக்டருக்கும் குறைவாக இருக்கும் நிலத்தில் இருந்து வரும் வருமானம் வறுமை கோட்டிற்கு மேலே ஒருவரை வாழ வைக்காது என்று 2015-ஆம் ஆண்டு ரமேஷ் சந்த், தற்போது நிதி ஆயோக்கின் உறுப்பினர், வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபோன்ற பல திறமையின்மைகளின் ஒருங்கிணைந்த முடிவு தான் பெரும்பாலான இந்திய விவசாயிகளை அதிக அளவு கடனுக்கு தள்ளியுள்ளது. 24 லட்சம் வீடுகளில் 40% மக்கள் 0.01 ஹெக்டர் அளவிற்கும் குறைவாக நிலம் வைத்திருப்பவர்கள் கடனில் சிக்கியுள்ளனர். இவர்களின் சராசரி கடன் தொகையானது ரூ. 31 ஆயிரம் ஆகும்.

இந்தியாவில் அதிக அளவில் விவசாயிகள் கடனில் இருப்பதற்கு, ஊதியம் கிடையாது, என்ற காரணம் முன்வைக்கப்படுகிறது.

அட்டவணை மூன்று, வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒரு விவசாய குடும்பத்திற்கான மாத வருமான மதிப்பீடுகளையும், அகில இந்திய அளவில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடுகிறது. பீகார், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் அதிக அளவில் விவசாயிகள் கடனில் இருக்கின்றனர் அதே நேரத்தில் அவர்களின் வருமானமும் குறைவாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் மிகவும் வளமான மாநிலங்களில் இருக்கும் விவசாயிகள் கூட அதிக அளவில் கடன்களை வாங்கியுள்ளனர்.

வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் அல்லாதோருக்கு இடையிலான வர்த்தக விதிமுறைகளை பார்க்கும் போது விவசாயிகளின் அவலநிலையை அறிந்து கொள்ள இயலும். வர்த்தகம் என்பது விவசாயிகள் உள்ளீடுகளுக்கு செலுத்தும் விலைகளுக்கும், விவசாயிகள் தங்களின் உற்பத்திக்காக பெறும் விலைகளுக்கும் இடையிலான விகிதமாகும் என்று ஜே.என்.யுவின் பொருளாதார பேராசிரியர் ஹிமான்ஷு கூறுகிறார்.

100 என்பதை அளவுகோளாக கொள்வோம். டி.ஒ.டி. (Terms of trade) 100 புக்கிகளுக்கும் குறைவாக இருந்தால் விவசாயிகள் மிகவும் மோசமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

Terms of trade 2004 - 2005 மற்றும் 2010 - 2011க்கான கால இடைவெளிகளில் 100 என்ற புள்ளியை தாண்டும் அளவில் அதிகரித்துள்ளது. ஆனால் அதன் பிறகு அப்படியே சரிவடைந்து மோசமானது.

விவாதத்தில் ஒரு முக்கிய மாறுபாடு குறைந்தபட்ச ஆதரவு விலை (minimum support prices) ஆகும். எம்.எஸ்.பி முறையை அரசாங்கம் நீக்கிவிடுமோ என்று பலரும் அச்சம் அடைகின்றனர். எம்.எஸ்.பி என்பது ஒரு விவசாயியிடமிருந்து உற்பத்தி பொருட்களை அரசாங்கம் வாங்க நிர்ணயிக்கப்படும் விலை. பல ஆண்டுகளாக, எம்.எஸ்.பி பல இலக்குகளை அடைந்துள்ளது. உணவு தானியங்களில் அடிப்படை தன்னிறைவை அடைவதற்குத் தேவையான முக்கிய பயிர்களை உற்பத்தி செய்வதை நோக்கி விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனர்.

ஙநடகள் விவசாயிகளுக்கு உத்தரவாத மான விலை மற்றும் உறுதிப்படுத்தப் பட்ட சந்தை ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் விலைவாசி மாறுபாடுகளில் இருந்து விவசாயிகளை காப்பாற்று கின்றனர். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் பெரும்பாலான விவசாயி களுக்கு போதுமான தகவல்கள் சென்று சேரவில்லை.

23 விலைபொருட்களுக்கு எம்.எஸ்.பி. அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே அரிசி, கோதுமை போன்ற சில விளைப்பொருட்கள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. மாநிலங்களை பொறுத்து கொள்முதல் செய்யப்படும் உற்பத்தி பொருட் களின் அளவும் மாறுபடுகிறது.

அதன் விளைவாக, விவசாயிகள், சந்தைகளில், எம்.எஸ்.பிக்கும் குறை வான அளவிலேயே வருமானம் பெறுகின்றனர்.

வருமானம், கடன் மற்றும் கொள்முதல் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் புலம் பெயர்வுடன் இணைக்கப்படுகிறது. அட்டவணை 6, அதிக அளவு இடம் பெயர்வுகளை கண்ட மாநிலங்களை பட்டியலிடுகிறது. இறுதியாக உணவு பொருட்கள் சேமிப்பது உட்பட இந்த சீர்திருத்தங்கள், உணவு பதப்படுத்துதல் துறையை மேம்படுத்தும் என்று அரசு நம்புகிறது. ஆர்.பி.ஐ-யின் ஆய்வு ஒன்று, இந்த துறையில் அதிக அளவு வேலை வாய்ப்பினையும், வருமானத்தையும் ஈட்ட முடியும் என்று கூறுகிறது.

கொரோனா வைரஸ் புதிய ஆய்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், விஞ்ஞானிகள் சில வாய்வழி கிருமி நாசினிகள் மற்றும் மவுத்வாஷ்கள் மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வின் போது, ஆராய்ச்சி குழு பல வாய்வழி மற்றும் நாசோபார்னீஜியல் வாய்க் கொப்பளிப்பான்களை ஒரு ஆய்வக அமைப்பில் சோதித்தது. அவை மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சோதனை செய்யப்பட்ட தயாரிப்புகளில் குழந்தை ஷாம்பு, பெராக்சைடு புண்-வாய் சுத்தப்படுத்திகள் மற்றும் மவுத்வாஷ்கள் ஆகியவை அடங்கும்.

தொற்றுநோய்க்குப் பிறகு வாயில் உருவாகும் வைரஸின் அளவைக் குறைக்க இந்த தயாரிப்புகள் சில பயனுள்ளதாக இருக்கும்.