இந்திரதனுஷ் இயக்கம்
* இவ்வியக்கம் 25.12.2014-இல் தொடங்கப் பட்டது.
* 2020-க்குள் குறைந்தபட்சம் 90% குழந்தை களுக்கு முழுமையான நோய் எதிர்ப்பு அளிப்பதை எட்டும் காலம் தற்போது 2018 ஆக மாற்றப்பட்டுள்ளது.
* ஏழு உயிர்கொல்லி நோய்களுக்கு எதிராக வழக்கமான நோய் எதிர்ப்புத் திறனூட்டும் சுற்றுகளில் தவறவிட்ட, விடுபட்ட குழந்தைகளுக்கும், கருவுற்ற பெண்களுக்கும் முழுமையாக நோய் தடுப்புத் திறனை அளித்தல்.
சாதனைகள்:
* இந்திரதனுஷ் இயக்கம் 528 மாவட்டங் களை உள்ளடக்கி நான்கு கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
* தீவிர இந்திரதனுஷ் இயக்கம் குஜராத் மாநிலம் வாட் நகரில் 2017 அக்டோபர் 8 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப் பட்டது.
* கருவுற்ற மற்றும் குழந்தை ஈன்ற பெண்களுக்கு வலிப்பு நோயை ஒழித்தல்
* கருவுற்ற மற்றும் குழந்தை ஈன்ற பெண்களுக்கு வலிப்பு நோய் 2015 மே மாதத்தில் நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.
* சர்வதேச இலக்காக நிர்ணயிக்கப்பட்ட டிசம்பர் 2015-க்கு மிகவும் முன்னதாகவே நமது நாட்டில் இலக்கு எட்டப்பட்டது.
புதிய தடுப்பூசிகள்
* போலியோ ஒழிப்பு தடுப்பூசி (ஐபிவி):
உலக போலியோ ஒழிப்பு செயல் திட்டத்திற்கு இணங்க 2015 நவம்பரில் ஆறு மாநிலங்களில் ஐபிவி அறிமுகம் செய்யப்பட்டது. 2016 ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப் பட்டது.
* ஐபிவி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து 2017 டிசம்பர் வரை சுமார் 3.87 கோடி ஐபிவி சொட்டு மருந்து நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு தரப்பட்டுள்ளது.
ரோட்டா வைரஸ் தடுப்பூசி
* ரோட்டா வைரஸ் காரணமாக ஏற்படும் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த ஆந்திர பிரதேசம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிஸா ஆகிய நான்கு மாநிலங்களில் மார்ச் 2016-இல் தொடங்கப்பட்டது.
* பின்னர் ஆந்திர பிரதேசம், அரியானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிஸா, அசாம், திரிபுரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மத்திய பிரதேசம் என ஒன்பது மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.
* 2017 டிசம்பர் வரை சுமார் 1.42 கோடி ரோட்டா வைரஸ் தடுப்பூசி குழந்தை களுக்கு போடப்பட்டன.
தட்டம்மைத் (எம்ஆர்) தடுப்பூசி
* ஒன்பது மாதக் குழந்தைகளிலிருந்து 15 வயது வரை உள்ளவர்களை இலக்காகக் கொண்டு எம்ஆர் தடுப்பூசி இயக்கம் 2017 பிப்ரவரி 5 அன்று கர்நாடகா, தமிழ்நாடு, கோவா, லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் தொடங்கப் பட்டது.
* தமிழ்நாடு, கர்நாடகா, கோவா, புதுச்சேரி, லட்சத்தீவு, ஆந்திர பிரதேசம், சண்டிகர், டாமன் & டையூ, தாத்ரா நாகர்ஹவேலி, தெலங்கானா, இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட், கேரளா ஆகிய 13 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், எம்ஆர் இயக்கம் நிறைவுபெற்றது.
* இந்த மாநிலங்களில் 2018 மார்ச் வரை சுமார் 7.7 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஜப்பானிய மூளையழற்சித் தடுப்பூசி
* ஜப்பானிய மூளையழற்சி (ஜேஇ) பற்றிய பிரச்சாரம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2015-இல் வழக்கமான நோய் தடுப்புத் திறன் இயக்கத்தில் ஜப்பானிய மூளையழற்சி பரவலாக காணப்படும். 230 மாவட்டங்களில் குழந்தைகளுக்கு ஜப்பானிய மூளையழற்சி தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டது.
* ஒரு வயது குழந்தை முதல் 15 வயதுவரை உள்ள சுமார் 15.6 கோடி பேருக்கு ஜப்பானிய மூளையழற்சி தடுப்பூசி போடப்பட்டது. 99.20 லட்சம் குழந்தை களுக்கு ஜேஇ தடுப்பூசி போடப்பட்ட உத்தரபிரதேசத்தில் ஜேஇ பரவலாக உள்ள 38 மாவட்டங்களில் சிறப்பு ஜேஇ மறு பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
நுரையீரல் நோய் கூட்டுத் தடுப்பூசி (பிசிவி)
*குழந்தைகள் இறப்புக்கு பெரிதும் காரணமான நிமோனியா காய்ச்சல் மரணத்தைக் குறைப்பது.
* இமாச்சல பிரதேசம், உத்தரபிரதேசம் (6 மாவட்டங்கள்) பீகார் (17 மாவட்டங்கள்) என 3 மாநிலங்களில் 2017 மே 13அன்று இந்த தடுப்பூசித் திட்டம் தொடங்கப் பட்டது.
* இதைத் தொடர்ந்து பீகார், மத்திய பிரதேசம் மாநிலங்கள் முழுமைக்கும் தடுப்பூசித் திட்டம் விரிவாக்கப்பட்டது. ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய வற்றின் பகுதிகளில் 3 ஆண்டுக் காலத் திற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
* மேற்குறிப்பிட்ட பகுதிகளில் 2018
ஜனவரி வரை 14 லட்சம் பிசிவி தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளன.
ஜனனி சுரக்ஷா யோஜனா
* மருத்துவமனைகளில் மகப்பேறு என்பது 47%லிருந்து (டிஎல்எச்எஸ்-5, 2007-08) 78.9%ஆக(என்எப்எச்எஸ்-4, 2015 -16) அதிகரித்துள்ளது.
பிரதமரின் சுரக்ஷித் மாத்ரித்வா அபியான்-பிஎம்எஸ்எம்ஏ
* கருவுற்ற பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ஒன்பதாம் தேதி விரிவான தரமான மருத்துவ சேவை கட்டணமின்றி வழங்குவதை உறுதி செய்தல்.
* அங்கீகரிக்கப்பட்ட அரசு சுகாதார மையங்களில் கருவுற்ற பெண்களுக்கு ஆறாவது / ஒன்பதாவது மாதங்களில் பிஎம் எஸ்எம்ஏ குறைந்தபட்ச பராமரிப்புத் திட்டங்களை உறுதி செய்கிறது.
சாதனைகள்:
* 1.16 கோடிக்கும் அதிகமான கருவுற்ற பெண்களுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
* அனைத்து மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களில் 12900 சுகாதார முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
* அனைத்து மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் பிஎம்எஸ்ஏ இணையப் பக்கத்தில் 4,900 தன்னார்வத் தொண்டர்கள் பதிவு செய்துள்ளனர்.
* ஆறு லட்சத்திற்கும் அதிகமான ஆபத்து நிறைந்த கருத்தரிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஆறு மாத பேறுகால விடுப்பு
*பணியாற்றும் பெண்களுக்கான பேறுகால விடுப்பை 12 வாரங்களிலிருந்து 26 வாரங்களாக அதிகப்படுத்த பேறுகால விடுப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
நோய்கள் ஒழிப்பு
* தொற்றும் நோய்களை ஒழித்தல் - 2018-க்குள் தொழுநோயையும், 2020க்குள் தட்டம்மையையும், 2025-க்குள் காசநோயையும் ஒழிப்பதற்கான செயல் திட்டங்கள் அமலாக்கப்பட்டுள்ளன.
* அனைவருக்கும் குறைந்த செலவில் தரமான சுகாதாரப் பராமரிப்பு- குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்தல்.
* உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட 1084 அத்தியாவசிய மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதால், நுகர்வோருக்கு மொத்தம் ரூ.9241 கோடி பயன் கிடைத்துள்ளது. (31.03.2018 நிலவரப்படி)
* இருதயத்தில் பொருத்தும் ஸ்டெண்டுகள் 85% விலைக் குறைப்பு.
* முழங்கால் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக் கட்டணம் 69% குறைப்பு.
பிரதமரின் ஜன்அவ்ஷாதி பாரி யோஜனா (பிஎம்பிஜேபி)
* 9.05.2018 நிலவரப்படி மொத்தம் 3517 பிரதமரின் பாரதீய ஜன்அவ்ஷாதி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மே 2014-இல் இது 99ஆக இருந்தது.
* அனைத்து வகையான சிகிச்சை முறைகளையும் உள்ளடக்கியதாக இந்த உடனடித் திட்டத்தின் பொருட்கள் பெட்டி 700-க்கும் அதிகமான மருந்துகள், 154 அறுவை சிகிச்சை சாதனங்களுடன் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கம் (ஏபி-பிஎம்என்எச்பிஎம்)
* பட்ஜெட் உரையில் 2018 -19ல் ஆயுஷ்மான் பாரத்-பிரதமரின் தேசிய சுகாதார பாதுகாப்பு இயக்கத்தின் (ஏபி-பிஎம் என்எச்பிஎம்) தொடக்கம்.
* ஏப்ரல் 14, 2018-இல் சண்டிகரில் உள்ள பிஜப்பூரில் முதலாவது சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் பிரதமரால் தொடங்கப்பட்டது.
நோக்கம்:
* இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் வரை என பத்து கோடி ஏழை மற்றும் பாதிப்படையும் குடும்பங்களுக்கு (சுமார் 50 கோடி பயனாளிகளுக்கு ) விரிவான சுகாதாரத் திட்டம் கிடைக்கச் செய்தல்.
* ஏபி-பிஎம்என்எச்பிஎம் தொடங்கப் பட்டபின், ஆர்எஸ்பிஒய்/எஸ்சிஎச்ஐஎஸ் அதில் மேம்படுத்தப்படும்.
சிறப்பம்சங்கள்:
* குடும்பத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல், அங்கீகரிக்கப்பட்ட குடும்பங்களின் அனைத்து உறுப்பினர்களுக்கும், குறிப்பாக பெண் குழந்தை மற்றும் மூத்த குடிமக்களுக்கும் திட்டப் பயனை உறுதிசெய்தல்.
* இந்தியா முழுவதும் பட்டியலிடப்பட்ட (அரசு மற்றும் தனியார்) மருத்துவமனைகளில் பயனாளிகள் கட்டணமின்றியும், காகித குறிப்புகள் இன்றியும், மருத்துவ சேவை பெறுவது.
* பிஎம்-ஆர்எஸ்எஸ்எம்-ன் பயன் மதிப்பு ரூ.5,00,000.
* 10 கோடிக்கும் அதிகமான பயனாளி குடும்பங்கள் பயன்பெறும். (எஸ்இசிசி தகவல் விவரத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டவை)
* எஸ்இசிசி தகவல் விவரத்தில் குறிப்பிடப் பட்டுள்ள ஒவ்வொரு குடும்பமும் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்குத் தகுதி பெற்றவை. ஆதார் இல்லாததற்காக இந்தத் திட்டத்தின் கீழான பயன்களை எவருக்கும் மறுக்கக்கூடாது.
சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் (எச்டபிள்யுசி)
* சமூகத்திற்கு விரிவான ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்கு 1.5 லட்சம் துணை மையங்களும், ஆரம்ப சுகாதார மையங்களும், சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்களாக மாற்றப் பட்டுள்ளன.
* வீடுகளுக்கு / குடியிருப்புகளுக்கு அருகிலேயே சேவைகள் வழங்கப் படுகின்றன.
* ஆரம்ப சுகாதார கவனிப்பு, முதியோர் சுகாதார கவனிப்பு, நோய் தடுப்பு பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு சேவைகள் உட்பட விரிவான ஆரம்ப சுகாதார கவனிப்புத் திட்டங்களை எச்டபிள்யுசி வழங்கும்.
ஸ்வச் ஸ்வஸ்த் சர்வத்ரா
* தூய்மை இந்தியா இயக்கம்(எஸ்பிஎம்) மற்றும் காயகல்ப் திட்டத்தின் சாதனைகளுக்கு கூடுதல் உந்துதலாக இருப்பதற்கு குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகத்துடன் இணைந்த முயற்சி.
பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம்(பிஎம்-என்டிபி)
* ஏழைகளுக்கு கட்டணமின்றியும் என்எச்எம் திட்டத்தின்கீழ் அனைத்து நோயாளிகளுக்கும் மானியத்துடனும், டயாலிசிஸ் சேவை கிடைக்கச் செய்வது.
* 2016-இல் நாடு முழுவதும் 219 மாவட்டங் களில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 356 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
காயகல்ப்
* பொது சுகாதார மையங்களில் சுத்தம், சுகாதாரம், நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகளை மேம்படுத்த தொடங்கப்பட்டது காயகல்ப் விருதுகள். 2015-16-இல் மாவட்ட மருத்துவமனைகளில் அமலாக்கப்பட்டு, பின்னர் 2016-17-இல் சிஎச்சி-களுக்கும் பிஎச்சி-களுக்கும், 2017-18 நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
சர்வதேச யோகா தினம்
* வீட்டிலும், உலக அளவிலும் யோகாவை பரவலாக்குவது.
* முதலாவது ஐடிஒய் புதுதில்லியில் ஜூன் 21-லும், இதைத் தொடர்ந்து 2016-இல் சண்டிகரிலும், 2017-இல் லக்னோவிலும் கடைப்பிடிக்கப்பட்டது.
*ஜூன் 21-ஐ, சர்வதேச யோகா தினமாக ஐ.நா. அறிவித்தது.
* யுனெஸ்கோவின் மனித சமூக பாரம்பரிய கலாச்சார பட்டியலில் இது இடம்பெற்றுள்ளது.
* பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விளையாட்டுக் கட்டமைப்பு மற்றும் சாதனங்களில் சேர்க்கப் பட்டிருப்பதோடு அனைத்து பள்ளிகளில் உடற்பயிற்சி செயல்பாட்டின் பகுதியாகவும் சேர்க்கப்பட்டுள்ளது.