தேசிய டிஜிட்டல் எழுத்தறிவு இயக்கம்
* தேசிய டிஜிட்டல் எழுத்தறிவு இயக்கம் (என்டிஎல்எம்) ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவருக்காவது டிஜிட்டல் எழுத்தறிவை 2020-க்குள் வழங்குவதை நோக்கமாக கொண்டது.
*ஆறு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிட்டல் எழுத்தறிவு வழங்குவது இயக்கத்தின் இலக்கு.
*2019 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் கிராமப் பகுதிகளில் டிஜிட்டல் எழுத்தறிவை கொண்டு வரும் இந்த திட்டத்தின் ஒதுக்கீடு ரூ. 2351 கோடி.
டிஜிட்டல் சக்சர்தா அபியான்
*டிஜிட்டல் சக்சர்தா அபியான் திட்டத்தின் இலக்கான 42.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிப்பது 2016 டிசம்பரில் அடையப்பட்டது.
*பிரதமர் டிஜிட்டல் சக்சர்தா அபியான் திட்டத்தின் கீழ் இரண்டாண்டுகளில் ஆறு கோடி வயது வந்தோருக்கு டிஜிட்டல் எழுத்தறிவு வழங்குவது இலக்கு.
பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்க்ஷா யோஜனா
*கிடைக்கும் கட்டுப்படியாகக்கூடிய / நம்பகமான மேல்நிலை ஆரோக்கியச் சேவைகளில் நிலவும் பிராந்தியச் சமமின்மையைச் சரிசெய்வதையும் நாட்டில் தரமான மருத்துவக் கல்வியை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
*பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா இரண்டு கூறுகளைக் கொண்ட
தேசிய டிஜிட்டல் எழுத்தறிவு இயக்கம்
* தேசிய டிஜிட்டல் எழுத்தறிவு இயக்கம் (என்டிஎல்எம்) ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒருவருக்காவது டிஜிட்டல் எழுத்தறிவை 2020-க்குள் வழங்குவதை நோக்கமாக கொண்டது.
*ஆறு கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு டிஜிட்டல் எழுத்தறிவு வழங்குவது இயக்கத்தின் இலக்கு.
*2019 மார்ச் மாதத்திற்குள் இந்தியாவின் கிராமப் பகுதிகளில் டிஜிட்டல் எழுத்தறிவை கொண்டு வரும் இந்த திட்டத்தின் ஒதுக்கீடு ரூ. 2351 கோடி.
டிஜிட்டல் சக்சர்தா அபியான்
*டிஜிட்டல் சக்சர்தா அபியான் திட்டத்தின் இலக்கான 42.5 லட்சம் பேருக்கு பயிற்சி அளிப்பது 2016 டிசம்பரில் அடையப்பட்டது.
*பிரதமர் டிஜிட்டல் சக்சர்தா அபியான் திட்டத்தின் கீழ் இரண்டாண்டுகளில் ஆறு கோடி வயது வந்தோருக்கு டிஜிட்டல் எழுத்தறிவு வழங்குவது இலக்கு.
பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்க்ஷா யோஜனா
*கிடைக்கும் கட்டுப்படியாகக்கூடிய / நம்பகமான மேல்நிலை ஆரோக்கியச் சேவைகளில் நிலவும் பிராந்தியச் சமமின்மையைச் சரிசெய்வதையும் நாட்டில் தரமான மருத்துவக் கல்வியை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
*பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்ஷா யோஜனா இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது.
*நமது நாட்டின் சேவை பெறாத பிராந்தியங்களில் ஏஐஐஎம்எஸ் போன்ற புதிய நிறுவனங்களை அமைத்தல்.
*தற்போது செயல்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்துதல்.
*ஏஐஐஎம்எஸ் போன்ற 20 புதிய சூப்பர் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
*73 அரசு மருத்துவமனைகள் மேம்படுத்தப் படுகின்றன.
*6 ஏஐஐஎம்எஸ் செயல்படுகின்றன :
- ரெய்ப்பூர், பாட்னா, ஜோத்பூர், போபால், ரிஷிகேஷ் மற்றும் புவனேஷ்வர்.
*8 கூடுதல் ஏஐஐஎம்எஸ் -கள் அனுமதி பெற்றுள்ளன :
- ரே பரேலி (உ.பி.), மங்களகிரி (ஆந்திரப் பிரதேசம், குண்டூருக்கு அருகில்), கல்யாணி (மேற்கு வங்காளத்தில்), நாக்பூர் (மகாராஷ்டிராவில்), கோரக்பூர் ( உ.பி.), பதிண்டா (பஞ்சாப்), காமரூப் மாவட்டம் (குவஹாத்தி), அசாம், கோதிபுரா (இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டத்தில்).
*மேலும் 3 ஏஐஐஎம்எஸ்-கள் அமைச்சரவையின் ஒப்புதலுக்குத் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
*பிற 3 ஏஐஐஎம்எஸ்களுக்கான நிலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன.
பயிலும் பாரதம், பலமான பாரதம்
*இத்திட்டம் பள்ளியின் அடிப்படை ஆண்டுகளில் அதாவது ஒ மற்றும் ஒஒ வகுப்புகளில் தரத்தை உத்தரவாதப் படுத்துவது.
*தொடக்கப் பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி கல்வியின் ஒருங்கிணைப்பு.
*சர்வசிக்ஷா அபியான், ராஷ்டிரிய மத்யாமிக்சிக்ஷா அபியான் மற்றும் ஆசிரியர் கல்வி விதிகளின் கீழ் குறிப்பிடப்படும் பள்ளிக்கல்வியின் மீதான ஒருங்கிணைந்த திட்டம்.
*2018 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்து, 2020 மார்ச் 31 வரையில் செயல்படும்.
*நிதிநிலை செலவீடு : ரூ. 75,000 கோடி.
*ஆசிரியர் மற்றும் தொழில்நுட்பம் மீது கவனத்தைக் குவிப்பதன் மூலம் பள்ளிக்கல்வியின் தரத்தை முன்னேற்ற ஒருங்கிணைந்த திட்டத்திற்கு அழுத்தம் கொடுப்பது.
உன்னத் பாரத் அபியான்
*இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களை இணைப்பதற்காக உன்னத் பாரத் அபியான் திட்டம் தொடங்கப்பட்டது.
*505 கிராமங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.
புதிய ஐஐடி-க்கள்
*ஜம்மு, பிலாய், கோவா, தார்வார், திருப்பதி, பாலக்காடு ஆகிய இடங்களில் 6 புதிய ஐஐடி-க்கள் முழுவீச்சில் செயல்படுகின்றன.
*ஐஎஸ்எம் தன்பாத் ஐஐடி ஆக மாற்றப்பட்டுள்ளது.
*அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனங்கள்:
*ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதியில் புதிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான இந்திய நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்) நிறுவப்பட்டது.
*2016 : ஒடிசாவில் பெர்ஹாம்பூரில் ஐஐஎஸ்இஆர் நிறுவப்பட்டது.
புதிய ஐஐஎம்-கள் :
* ஏழு புதிய ஐஐஎம்-கள் அமைப்பு : அமிர்தசரஸ் (பஞ்சாப்), புத்தகயா (பீகார்), நாக்பூர் (மகாராஷ்டிரா), சம்பல்பூர் (ஒடிசா), சிர்மார் (இமாச்சலப் பிரதேசம்), விசாகப்பட்டினம் ( ஆந்திரப் பிரதேசம்), ஜம்மு (ஜம்மு&காஷ்மீர்).
கல்விப்புல வலைப்பின்னல்களின் உலகளாவிய முன் முயற்சி
* இந்தியாவிலுள்ள உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிப்பதற்காக, சிறப்பு வாய்ந்த கல்வியாளர்கள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள், உலகெங்கிலுமுள்ள முன்னணி நிறுவனங்களின் வல்லுநர்கள் ஆகியோரை வரவேற்பதற்காக 2015, நவம்பர் 30-ஆம் தேதி இது தொடங்கப்பட்டது.
உச்சாதார் ஆவிஷ்கார் யோஜனா
* இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கல்வியாளருக்கும் தொழிலகங்களுக்கும் இடையில் கூட்டிணைவையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உயர்த்த 06.10.2015 அன்று இத்திட்டம் தொடங்கப் பட்டது.
தேசிய டிஜிட்டல் நூலகம்
* மனிதவள அமைச்சகத்தின் திட்டமான இந்திய தேசிய டிஜிட்டல் நூலகம், ஒரு ஒற்றைச் சாளரத் தேடும் வசதியுடன் கூடிய ஒரு மெய்நிகர் கற்கைவளக் களஞ்சியம் ஆகும்.
ஆயுஷ் கல்வி சீர்திருத்தங்கள் :
* நிர்ணயிக்கப்பட்ட ஆணையத்தின் மூலம் அனைத்து ஆயுஷ் கல்வி நிறுவனங்களுக்கான பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு ஆகியவற்றின் நுழைவுக்கான தகுதித்தேர்வு (நீட்).
* ஆயுஷ் நிறுவனக்களில் அனைத்து ஆசிரியர்கள் நியமனத்திற்கான ஆயுஷ் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அவர்களின் நியமனத்திற்கு முன்னர் அவர்களுக்கான தனித்த சரிபார்ப்புக் குறியீடு சிசிஎச்/ சிசிஐஎம் மூலம் ஒதுக்கப்படும்.
பிரதமர் யுவ யோஜனா
* இளைஞர்களிடையே தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி தொடங்கப் பட்டது.
தேசிய இளம் தலைவர்கள் திட்டம்
* இளைஞர்கள் மேம்பாட்டு நடைமுறைகளின் ஒரு அங்கமாக திகழவும், முடிவெடுத்தல் மற்றும் தேசிய கட்டமைப்பு நடைமுறையில் பங்கேற்கவும், அவர்களை உள்ளடக்கிய கொள்கைகளை வகுப்பதற்கான தேசிய இளம் தலைவர் திட்டம் மத்திய அரசால் 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
* இந்தத் திட்டம் ஐந்து அம்சங்களை கொண்டது. (1) இளைஞர் நாடாளுமன்றம் (2) இளைஞர்களுக்கான மேம்பாட்டுத் திட்டம் (3) தேசிய இளம் தலைவர்கள் விருது (4) தேசிய இளைஞர் ஆலோசனை கவுன்சில் (5) தேசிய இளைஞர் மேம்பாட்டு நிதி.