முன்முயற்சிகளும் திட்டங்களும்:

கல்வி, மக்கள் நல்வாழ்வு, குடிநீர், நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) ஆகிய முக்கியமான துறைகளில் ஆண்டுதோறும் மேம்பட்ட விளைவுகளை மதிப்பீடு செய்வதற்கு நிடி (NITI) சில குறியீடுகளை இறுதி செய்து வகுத்துள்ளது. மருத்துவமனைகளின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் மாவட்ட மருத்துவமனை குறியீடு (District Hospital Index) வகுக்கப் பட்டுள்ளது.

மக்கள் வள மூலதனம் (SATH) என்பது மாநிலங்கள் தங்களது சமூகத் துறை குறிக்காட்டிகளை (Social Sector Indicators) மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப ஆதரவை மூன்றாண்டுகளுக்கு அளித்து கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரு முக்கிய துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் புதிய சவால்களைச் சமாளிக்கும் முறையில் இத்திட்டம் தொடங்கப் பட்டது. ஒவ்வொரு முன் முயற்சிக்கும் காலாண்டு மதிப்பீட்டுடன் மாநிலங்களில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான திட்ட உத்தி (Roadmaps) இறுதி செய்யப்பட்டு விட்டது.

Advertisment

மாநிலங்களுக்கு இடையில் நீண்டகாலத் திற்கு கலாச்சார பரிவர்த்தனை, கல்விப் பரிமாற்றம் ஆகியவற்றை மேம்படுத்தி, நம் நாட்டை ஒற்றுமையுடனும் வலுவாக்குவதற்காக ஒரே பாரதம், சிறந்த பாரதம் (EBSB) என்ற கருத்தியல் உருவாக்கப்பட்டது. இது தொடர்பாக ஆறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உயர்கல்வித் துறைகள், மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து கட்டமைப்புத் துறைகளிலும் மத்திய மாநில உறவுக் கூட்டாளி மாதிரியை உருவாக்கவும், தனியார் அரசுத் துறை கூட்டாண்மை மீட்டுருவாக்கவும் மேம்பாட்டு ஆதரவு சேவைகள் (DSSS) ஏற்படுத்தப்பட்டன. இது ஆபத்தைக் குறைக்கவும் வளர்ச்சித் திட்டங்களில் அடிப்படைக் கட்டமைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கவும் உருவாக்கப்பட்டது. அத்துடன் கல்வி நிறுவன மற்றும் அமைப்பு ரீதியிலான திறன்களைக் கட்டமைக்கவும் தொடங்கப்பட்டன.

இதயவியல், புற்றுநோய் இயல், நுரையீரல் இயல் ஆகியவை தொடர்பான நோய்த் தடுப்பு, நோய் அறிதல் மற்றும் சிகிச்சை குறித்த அரசாங்கத்தின் சுகாதார இலக்கை எட்டுவதற்கு உதவும் வழிகாட்டு கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இது மாவட்ட அளவிலான மருத்துவமனை யில் செயல்படுத்தப்படும்.

Advertisment

மகாராஷ்டிரம், அசாம், தமிழ்நாடு, குஜராத், கர்நாடகம், தில்லி உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய இந்தியாவின் பந்தேல்கண்ட் மண்டலம் ஆகியவை மாநில மனித மேம்பாட்டு அறிக்கையைத் தயாரிப்பதற்கு துணை புரியப்பட்டது.

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் (SabkaSaath, Sabka Vikas) என்ற இலக்கை எட்டுவதற்காக அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் காணவும், பிரதம மந்திரி ஆர்வமுள்ள மாவட்ட திட்டத்தை (Aspirational District Programme) 2018, ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கி வைத்தார். அதன் கீழ் 49 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் (Key Performance Indicators) அனைத்துப் பிரிவிலும் அடையாளம் காணப் பட்டுள்ளன. இது வாழ்க்கையை எளிதாக்கவும், அந்த மாவட்டங்களில் வாழும் குடிமக்களின் பொருளாதார உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் இது உதவும். 2017-18 முதல் 2019-20 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு செயல் திட்ட நிரலை நிடி ஆயோக் வகுத்துள்ளது. இந்த செயல்திட்ட நிரல் மாறிய இந்தியாவின் வளர்ச்சிக்கான உத்திக்கு துணை புரியும்.

பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பங்குகளை நான்கு வகை உத்திகளில் திரும்பப் பெறுவது தொடர்பாக நிடி ஆயோக் பல்வேறு அமைச்சகங் களுடன் கலந்து ஆலோசித்து சில பரிந்துரைகளை அளித்துள்ளது. பங்குகளைத் திரும்பப் பெறுவதற்கு 30-க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

பொதுத்துறையில் 74 செயல்படாத, நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப் பட்டுள்ளது. அப்பரிந்துரைகள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 15 பொதுத் துறை நிறுவனங்களை மூடப்பட்டு வருகின்றன.

சிறப்பு நிதி அளிப்பு

மண்டல அளவிலான மேம்பாட்டுக்காக ஒடிசா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு பின்தங்கிய மண்டலத் துக்கான மானிய நிதி (Backward Region Grant Fund#BRGF) சிறப்புத் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள நிதியை அளிப்பதற்கு நிடி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

வடகிழக்கு மாநிலங்களிலும் இமயமலைப் பிரதேசங்களிலும் புதிய தொழில் கொள்கையைச் செயல்படுத்த ஆய்வு செய்யவும், திட்ட உத்தியைத் தெரிவிக்கவும் நிடி ஆயோக் முதன்மை செயல் அலுவலர் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

தீவு மேம்பாட்டு முகமை (IDA)

மத்திய உள்துறை அமைச்சரின் தலைமையில் செயல்படும் தீவுக்கான மேம்பாட்டு முகமை (IDA) 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. அதில் நிடி ஆயோக் அமைப்பின் முதன்மைச் செயல் அலுவலர் அமைப்பாளராக இருப்பார்.

அரசு சேவைகள் குறித்து திட்டம் வகுத்தல், நிர்வாகம், கண்காணிப்பு ஆகியவற்றுக்கு புவிசார் தகவல் முறையை (Geographical Information System) கடைப்பிடிப்பது குறித்து நிடி ஆயோக் ஆராய்ந்து வருகிறது.

ஹோமியோபதி தேசிய ஆணையம் (NCH) சட்டமுன்வடிவு (2017) மற்றும் இந்திய மருத்துவமுறை தேசிய ஆணையம் சட்ட முன்வடிவு (National Commission for Indian Systems of Medicine Bill, 2017) ஆகியவை விரிவான விவாதங்களுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டுவிட்டன.

சத்து மேம்பாட்டுக்கு தேசிய அளவிலான உத்தி: விரிவான விவாதங்களை அடுத்து தேசிய அளவில் சத்து மேம்பாட்டுக்கான உத்தியை நிடி ஆயோக் வகுத்துள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய அளவில் (குழந்தைகளின்) சத்து மேம்பாட்டுக்கு போஷன் அபியான் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மருந்துகள், மருத்துவப் பொருட்கள் மலிவான விலையிலும் தரமான வகையிலும் கிடைப்பதை உறுதி செய்ய கொள்கை வகுப்பதற்கான கருதுகோளை நிடி ஆயோக் அளித்துள்ளது.

மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கான தேசிய நிறுவனம் (NIPER) மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கான தேசிய நிறுவனத் தின் செயல்பாடு ஆராயப்பட்டது.

அக்கல்வியை மேம்படுத்துவதற்கான வழி வகைகள், யோசனைகள் தெரிவிக்கப் பட்டன.

வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதிகளுக் காக நிடி ஆயோக் துணைத் தலைவரின் தலைமையில் உயர்நிலை பணிக் குழுவை (High Level Task Force) நிடி ஆயோக் 2017, செப்டம்பரில் நிறுவியது.

ஊரகப் பகுதிக்கான குடிநீர் ஃப்ளோரைடு உள்ளிட்ட ரசாயனத்தால் பாதிக்கப்பட்ட 19 மாநிலங்களில் குடிநீரை மேம்படுத்து வதற்காக ரூ. 1000 கோடி அளவுக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 மாநிலங்களில் 3100-த்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது.

தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Mission) 2014, அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அது முதல் நாடு முழுவதும் 3 லட்சத்து 64 ஆயிரம் கிராமங்கள், 385 மாவட்டங்கள், 13 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் திறந்தவெளிக் கழிப்பிடம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. கிராமப்புறங் களில் வீடுகளில் கழிவறைகள் கட்டுவது 39 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாக உயர்ந்துள்ளது.

திட்டங்கள், துறைகளின் மூலம் பலன்கள் கிடைப்பதை அறிவதற்காக 15 துறைகளின் வெளியீடுகள் மதிப்பீட்டுக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆய்வுகள் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாலும் கடந்த இரு ஆண்டுகளாக அனைத்து முன்னேற்றங் களும் கண்டறியப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் பலன்சார் நிதிநிலை (Union Outcome Budget) மூலம் ஏற்படும் முன்னேற்றத்தை அவ்வப்போது பதிவேற்றுவதற்காக ஒரு தகவலேடு (Dashboard) உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சகங்களும் துறைகளும் அதில் தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.

குறிப்பிட்ட திட்டங்களுக்கு கோரிக்கை களின் அடிப்படையில் மதிப்பீட்டுப் பணிகளைக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் (DMEO) மேற்கொண்டுள்ளது. வெறும் செலவிடுதல் என்பதிலிருந்து பலன்சார்ந்த ஆளுகை என்ற நிலைக்கு முற்றிலும் புதிதாக மாறிய பிறகு, பலன்கள் பெறப்பட்டனவா என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. சாதனைகளும் அலசப்படுகின்றன.

budget

இது விஷயத்தில், இணையதளம் சார்ந்த பரிமாற்றத் தகவலேடு(Web#Based Interactive Dashboard) கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகத்தால் (DMEO) உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (Pradhan MantriAawas Yojana) கீழ் கிராமங்கள், நகரங்களில் வீடுகள் கட்டுவதற்கான பணியின் முன்னேற்றம் கண்காணிக்கப்படும்.

இந்தத் தகவலேட்டின் திரைப்படிவம் கீழே தரப்பட்டுள்ளது.

உலகளாவிய நீடித்த வளர்ச்சி இலக்குக்கான (Sustainable Development Goals - SDGs) குறிகாட்டிகளுக்கு ஐ.நா. புள்ளியியல் ஆணையம் (UN Statistical Commission) அளித்த ஒப்புதலின்படி, தேசிய அளவிலான நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) பட்டியலை மத்திய புள்ளியில் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் தயாரித்துள்ளது. அதன் செயலாக்கத்தைக் கண்காணிக்கும் பணி நிடி ஆயோக் (NITI Aayog) அமைப்பிடம் அளிக்கப் பட்டுள்ளது.

நிடி ஆயோக் அமைப்பு 2015, ஜனவரி 1-ஆம் தேதி முதல் மொத்தம் ரூ. 45,14,389 மதிப்பீட்டில் அரசு நிதியிலான 584 திட்டங்களை ஆய்வு செய்துள்ளது. அது தவிர, ரூ. 2,16,703 மதிப்பில் அரசு தனியார் பங்களிப்பிலான 277 திட்டங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இவற்றில் 229 மத்திய அரசின் திட்டங்களும், 48 மாநில அரசுகளின் திட்டங்களும் ஆகும்.

யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி, முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணிக்க தகவலேட்டை (Dashboard) நிடி ஆயோக் (NITI Aayog) வடிவமைத் துள்ளது. அந்த அரசுகளின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மாநாடுகள், பயிலரங்குகள், கூட்டு ஆய்வுத் திட்டங்கள்ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் அறிவுசார் கருத்துகளை அரசின் கொள்கைகளை வகுப்பதற்குப் பயன்படுத்த நிடி ஆயோக் வழியமைத் துள்ளது.

அடல் புதுமையாக்க இயக்கம் (Atal Innovation Mission) நிடி ஆயோக் அமைப்பின் கீழ் அமைந்த இந்திய அரசின் முதன்மையான முன்முயற்சி யாகும். இது நாட்டில் புதுமையாக்கத்தை மேம்படுத்தவும் தொழில்முனைவை ஊக்குவிக்கவும் அமைக்கப்பட்டது. இதன் முதல் கட்ட நிகழ்ச்சிகளில் கல்லூரி, கல்லூரிகள் நிலையில் புதுமையாக்கத்துக்கான இணைப்பை (Network Of Innovation) அமைக்கப் பட்டுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்களின் நிலையில், முதன்மையான திட்டமாக அடல் செம்மையாக்க ஆய்வகங்கள் (Atal Tinkering Labs#ATLs)அமைக்கப் பட்டுள்ளன. அதன் கீழ் அடல் புதுமை யாக்க இயக்கம் (ஆஒங) 2,400-க்கும் மேற்பட்ட அடல் செம்மையாக்க ஆய்வக பள்ளிகள் (ATL Schools) நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

நிடி ஆயோக் கடந்த 2017 நவம்பரில் ஹைதராபாத்தில் தொழில்முனைவுக் கான உலகளாவிய உச்சி மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது. அம்மாநாட்டை பிரதமரும், அமெரிக்க அதிபரின் ஆலோசகர் திருமதி இவாங்க்கா டிரம்ப் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

இந்த உச்சி மாநாடு திறமையான உலகின் முன்னணி தொழில்முனைவோரையும் முதலீட்டாளர்களையும் இணைக்க உதவியது. உலகளவில் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள புதிய தீர்வுகளைக் கண்டறியவும் உதவியது.

மகளிர்க்கான தொழில்முனைவு தளத்தை (Women Entrepreneurship Platform) நிடி ஆயோக் உலக மகளிர் தினத்தன்று தொடங்கியது. நாடு முழுவதும் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்துவது என்ற அரசின் குறிக்கோளின்படி பல்வேறு தொடர் முன்முயற்சிகளில் நிடி ஆயோக் ஈடுபட்டுள்ளது. அதன்படி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு வருகிறது.

பண மதிப்பிழப்பிற்குப் பிறகு, டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றத்துக்கு நிடி ஆயோக் முக்கிய காரணியாக இருக்கிறது. டிஜிட்டல் பணப் பரிமாற்றத்தை பரவலாக்குவதற்காக நிடி ஆயோக் நீண்ட ஆலோசனையும் விரிவான ஆய்வும் நடத்தியுள்ளது.

அனைத்து அமைச்சகங்கள், தொழில்நிறுவனங்கள், கல்வி நிறுவனங் களில் மாநிலங்களில் இது தொடர்பாக விழிப்புணர்வு செயல்களும் மேற்கொள்ளப்பட்டன.

டிஜிட்டல் பணப்பட்டுவாடாவை பரவலாக்குவது தொடர்பான வழியைக் கண்டறிய ஆந்திரப் பிரதேச முதலமைச்சரை அமைப்பாளராகக் கொண்டு முதலமைச்சர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை நிடி ஆயோக் அமைத்துள்ளது.

டிஜிட்டல் பணப் பரிமாற்றத்துக்கு உதவும் வகையில் பீம் (Bharat Interface for Money) எனப்படும் செயலியை நிடி ஆயோக் உருவாக்கி பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளது. இது தொலை தூரம் இருப்போருக்கு இடையில் பணப் பரிமாற்றத்தை எளிதில் மேற்கொள்ள பெரிதும் உதவும்.

குறைந்த பணப் புழக்க நகரியம் என்ற திட்டத்தையும் நிடி ஆயோக் கொண்டு வந்துள்ளது.

யாரும் எங்கும் செல்வதற்கு வசதியாக, பல இடங்களை இணைக்கும் வகையிலான எளிதான போக்குவரத்து வழிகள் நாட்டில் பொலிவுறு நகரங்களில் கொண்டுவருவதற்கு நிடி ஆயோக் தீவிரமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

மின்சாரத்தில் இயங்கும் வாகனங் களுக்குத் தேவையான மின் இணைப்பை வழங்கும் நிலையங்கள்(EV Charging Stations) நிடி ஆயோக் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து குறித்த உலகளாவிய உச்சி மாநாடு 2018 செப்டம்பரில் நடைபெற்றது. போக்குவரத்து குறித்த பல்வேறு விஷயங்கள் குறித்து விழிப்பு ஏற்படுத்தவும், போக்குவரத்தை மேம்படுத்துவதில் சம்பந்தப்பட்ட வர்களை ஈடுபடுத்துவதும் இதன் நோக்கமாகும்.

செயற்கை அறிவு(Artificial Intelligence - AI) என அழைக்கப்படும் கணினிசார் அறிவுத் திறன் தொடர்பான தேசிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தவும், இந்தியப் பொருளாதாரம், சமூகம், ஆளுகை ஆகியவற்றில் அதன் தாக்கம் குறித்து அறியவும் நிடி ஆயோக் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய அளவில் அனைத்தும் இணைக்கும் இந்தியச் சங்கிலி (IndiaChain) குறித்த விவாத அறிக்கையை நிடி ஆயோக் தயாரித்து வருகிறது. இந்தியச் சங்கிலி என்பது ஆதார் (Aadhaar), ஒருங்கிணைந்த வழங்கீட்டு பொதுமுகம் (eSign), மின்கையெழுத்து (ங்நண்ஞ்ய்) போன்ற இந்தியா முழுமைக்குமான கட்டமைப்பு இணைப்புக்கான ஒரு திட்டமாகும். நிடி ஆயோக்கின் அறிக்கையில் இந்தியச் சங்கிலியின் கருத்தியல் கட்டமைப்பு, வடிவமைப்பு ஆகியவை விவரிக்கப்படும்.

பெட்ரோலியம் உள்ளிட்ட கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், இறக்குமதியைக் குறைக் கவும் உதவும் திட்ட உத்தி குறித்து ஓர் உயர் கமிட்டியும் ஐந்து பணிக்குழுக் களும் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.

நிலக்கரிச் சாம்பல், நகர திடக் கழிவுகள் ஆகியவற்றிலிருந்து மெத்தனால் உற்பத்தி செய்வது, மெத்தானல் இருப்பு வைத்தல், எடுத்துச் செல்லுதல், மெத்தனால் என்ஜின்கள் குறித்த ஆய்வு மேம்பாட்டுப் பணி ஆகியவை மேற்கொள்ளப் படுகின்றன.

இந்தியாவிலேயே பாதுகாப்புக் கவசங்களைத் தயாரிப்பது தொடர்பான உத்தியை நிடி ஆயோக் கமிட்டி ஒன்று தயாரித்து, பிரதமர் அலுவலகத்தில் அளித்துள்ளது. அதில் உள்நாட்டிலேயே பாதுகாப்புக் கவசங்களையும் அதற்கான மூலப் பொருட்களையும் தயாரிப்பதை மேம்படுத்துதல், கூடுதல் ஆய்வுக்கான வசதிகளை ஏற்படுத்துதல், கவசங்களுக்கு இந்தியாவின் தரநிர்ணய முறையைக் கடைப்பிடித்தல், எடைகுறைந்த கவசங்களைத் தயாரிக்க நேனோ தொழில்நுட்பத்தில் ஆய்வுக்கும் மேம்பாட்டுக்கும் ஏற்ற மேம்பாட்டு மையங்களை உருவாக்குதல், கொள்முதல் நடைமுறையை எளிதாக்குதல் ஆகிய முக்கியமான பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.