இந்தியப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை சக்ஷம் பாரத் சுனியோஜித் பாரத் என பெயரிடப்பட்டுள்ளது.
பணமதிப்பு நீக்கம்
* ரூ. 500, ரூ. 1000 ஆகிய உயர் மதிப்பு கரன்சி நோட்டுக்களை மதிப்பிழக்கச் செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை 2016 -ஆம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதிபிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
* கருப்புப் பணம், ஊழல், கள்ள நோட்டுப் புழக்கம், தீவிரவாதிகளுக்கு நிதி அளித்தல், பண மோசடி ஆகிய தீமைகளைத் தடுப்பதை நோக்கமாக கொண்டது.
* தொலைநோக்கில் இந்தியாவின் உள்நாட்டு ஒட்டு மொத்த உற்பத்தியை அதிகரித்து தூய்மையான, உண்மையான, சிறந்த பொருளாதார அமைப்பை உருவாக்குதல்.
* டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு சிறப்பாக ஊக்கமளித்து, கணிசமான அளவு கருப்புப் பணத்தை மீட்டெடுத்தல்.
* பணமற்ற ஊதியப் பரிவர்த்தனையை ஏற்படுத்தும் வகையில் 50 லட்சம் புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன.
* 2015-16 முதல் 2016-17 வரையிலான நிதியாண்டில் 25.1 சதவீதமாக இருந்த வருமான வரிக் கணக்குத் தாக்கல் எண்ணிக்கை 2016-17 முதல் 2017-18 வரையிலான நிதியாண்டில் 29.17 சதவீதமாக அதிகரித்தது.
* 2016-17 முதல் 2017-18 வரையிலான மின்னணு கணக்குத் தாக்கலின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரிப்பு. இது 2013-14 முதல் 2017-18 வரை 81 சதவீதமாக உயர்வு.
* 2016 ஆகஸ்ட் முதல் 2017 ஆகஸ்ட் வரை உடனடி பணம் செலுத்துதல் சேவை பரிவர்த்தனைகளின் மதிப்பு 51 சதவீதமாக அதிகரிப்பு.
* 2.26 லட்சம் போலி நிறுவனங்கள் ரத்து செய்யப்பட்டன. ரூ.29,213 கோடி அளவிலான கணக்கில் வராத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டு சேர்க்கப்பட்டது. நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வருமானம் அதிகரித்தது.
* பணமதிப்பு நீக்க காலமான 2016 நவம்பர் 9-ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 30-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை மின்னணு தொழில்நுட்பத்தின் மூலம் சரிபார்க்கும் வகையில் வருமானவரித்துறை 2017 ஜனவரி 31-ஆம் தேதி ஆபரேஷன் கிளீன்மணி என்னும் சோதனையை தொடங்கியது.
* தாக்கல் செய்யப்பட்ட 20,500 வருமானவரிக் கணக்குகள் பரிசீலனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. பெருமளவு ரொக்கம் டெபாசிட் செய்து கணக்குத் தாக்கல் செய்யாதவர்களுக்கு சுமார் 3 லட்சம் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.
* 3 லட்சம் நோட்டீஸ்களுக்கு 2.1 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
* டிஜிட்டல் பணம் செலுத்துதல் மேம்பாடு
எனது கைபேசி, எனது வங்கி, எனது பணப்பை
* பணமற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில், பீம் செயலி (ஒருங்கிணைந்த பணம் செலுத்துதல் முறையை அடிப்படையாகக் கொண்டது) மூலம் பணம் செலுத்துதலை மக்களின் கைபேசிக்குக் கொண்டு சேர்ப்பது.
* டிஜிட்டல் பணம் செலுத்துதல் பயன்பாட்டை ஊக்குவிக்க போனில் பீம் செயலி; பையில் பணம் (பீம் போன் மெய்ன், கேஷ் ஜேப் மெய்ன்) பிரச்சாரம்.
* 2.64 கோடிக்கு மேல் பீம் செயலி பதிவிறக்கம் (2018 மார்ச் 31 நிலவரப்படி).
* ரூ.4972.69 கோடி அளவுக்கு பரிவர்த்தனை (2018 ஏப்ரல் 18 நிலவரப்படி)
* பீம் செயலி மூலம் 89 வங்கிகள் இணைப்பு.
ஜி.எஸ்.டி
* ஒரே நாடு, ஒரே வரி; ஒரே நாடு ஒரே சந்தை முழக்கம்
* 2017 ஜூன் மாதம் 30-ந்ஆம் தேத

* 2017 ஜூன் மாதம் 30-ந்ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கப்பட்டது. 2017 ஜூலை 1-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.
* ஜி.எஸ்.டி. மத்திய-மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுகளின்,மாநில வாட்வரி, மத்திய கலால் வரி,கொள்முதல் வரி, நுழைவு வரி போன்ற மறைமுக வரிகள் ஒருமைப்படுத்தப்பட்டது.
* 4 விதமான வரிவிகிதங்கள் 5%, 12%, 18%, 28%
* சரக்குகள் மீதான ஒட்டு மொத்த வரிகள் 25 முதல் 30 சதவீதம் அளவுக்கு குறைப்பு.
* சரக்கு மற்றும் சேவை தொடர்பாக குறைந்த விலைகளின் பயன்கள் நுகர்வோருக்கு சென்றடையும் வகையில் தேசிய லாபமீட்டாத ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.
* தொழில் நடத்துவதை சுலபமானதாக்கியது. வரி வருவாய் வசூல் அதிகரிப்பு.
ஜி.எஸ்.டி.யின் பயன்கள்
* பணவீக்கம் குறையக் காரணம் வரிகள் மீதான தொடர் விளைவு குறைந்தது.
* ஒட்டு மொத்தமாக விலைகள் குறைந்தன.
* சுலபமாக தொழில் புரியக் காரணம்
* பொது தேசிய சந்தை
* சிறிய வரி செலுத்துவோருக்கு பலன்கள்
* உலகளவில் சுலபமாக தொழில் புரியும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 130-வது இடத்தில் இருந்து 100-வது இடத்திற்கு முன்னேறியது.
* கருப்புப் பண பரிவர்த்தனைகள் குறையக்காரணம்
* சுய ஒழுங்கு ஆன்லைன் வரிமுறை
* ஊடுருவல் இல்லாத வெளிப்படையான வரிமுறை
* நுகர்வோருக்கு கூடுதல் தகவல் தெரியக் காரணம்
* எளிமையாக்கப்பட்ட வரி செலுத்தும் முறை
* பல முனை வரிகள் குறைக்கப்பட்டன.
* ஏழை மாநிலங்கள் லாபமடையக் காரணம்
* இலக்கு அடிப்படையிலான வரியாக ஜி.எஸ்.டி. உள்ளது.
* நுகர்வோர் மாநிலங்களுக்கு அதிக பயன்.
* மத்திய விற்பனை வரி ரத்து.
* மேக் இன் இந்தியாவுக்கு ஊக்கம் கிடைக்கக் காரணம்
வரியற்ற ஏற்றுமதிகள்
* உள்நாட்டு தொழிலுக்கு பாதுகாப்பு - ஐ.ஜி.எஸ்.டி.v ய் பொருளாதாரக் குறியீடுகள்
* குறு பொருளாதாரக் குறியீடு
* 2017-18-ம் ஆண்டுக்கானது
* ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் (%)v ய் 6.0 (இரண்டாம் காலாண்டு வரை)
நுகர்வோர் விலைக் குறியீடு
* 3.6% (இரண்டாம் காலாண்டு)
* மொத்த விலைக் குறியீடு
* 3.6% (இரண்டாம் காலாண்டு)
நடப்புக் கணக்கு பற்றாக்குறை
* 14.3 பில்லியன் அமெரிக்க டாலர் (முதல் காலாண்டு)
வர்த்தகப் பற்றாக்குறை
* 41.2 பில்லியன் அமெரிக்க டாலர் (முதல் காலாண்டு)
* வெளிநாட்டுக் கடன் ஜி.டி.பி. விகிதத்தில் 20.2%
வெளிநாட்டு நேரடி முதலீட்டு வரவு
* 1,350.93 மில்லியன் அமெரிக்க டாலர் (2017 அக்டோபர் வரை)
அன்னியச் செலாவணி கையிருப்பு
* 401,942 மில்லியன் அமெரிக்க டாலர் (2017 டிசம்பர் 1 வரை)
* கடந்த 3 ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடுகள் 3600 கோடி அமெரிக்க டாலரில் இருந்து 6 ஆயிரம் கோடி டாலராக அதிகரித்தது.
பட்ஜெட் சீர்திருத்தங்கள்
* வேளாண்மை, ஊரக வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, குறு சிறு நடுத்தர தொழில்கள், உள்கட்டமைப்பு பிரிவுகளை வலுப்படுத்தும் வழிகாட்டுதலுடன் பட்ஜெட் தயாரிப்பு.
* முக்கிய ரபி பருவ பயிர்களைப் போல அனைத்து அறிவிக்கப்படாத கரீப் பருவ பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை அவற்றின் உற்பத்திச் செலவைப் போல ஒன்றரை மடங்காக அதிகரிப்பு.v ய் 2014-15-இல் 8.5 லட்சம் கோடியாக இருந்த நிறுவனங்கள் சார்ந்த பண்ணைக் கடன் 2018-19-இல் 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மீன் வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடி அளவில் 2 புதிய நிதிகள் அறிவிக்கப்பட்டன. தேசிய மூங்கில் இயக்கம் மறுசீரமைக்கப்பட்டு ரூ.1,290 கோடி வழங்கப்பட்டது.
* மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.42,500 கோடி கடன் 2019-ஆம் ஆண்டில் ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்படும்.
* 2018-19 பட்ஜெட்டில் சுகாதாரம், கல்வி, சமூக பாதுகாப்புக்கான ஒதுக்கீடு ரூ.1.38 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
* 2022-ஆம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு பழங்குடியினர் வட்டாரத்திலும் பழங்குடியின மாணவர்களுக்காக ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளி ஏற்படுத்தப்படும். ஆதி திராவிடர் நல உதவித் தொகையில் குறிப்பிடத்தக்க உயர்வு.
* 10 கோடி ஏழை மற்றும் பாதிப்புக்கு இலக்காகும் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வரை இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை மருத்துவத்துக்காக உலகின் மிகப்பெரிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் அறிமுகம்.
* 3.5 சதவீதமாக உள்ள நிதிப் பற்றாக்குறை 2018-19-இல் 3.3 சதவீதமாக மதிப்பிடப் பட்டுள்ளது.
* உள்கட்டமைப்புக்கு ரூ.5.97 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* பங்கு விலக்கல் இலக்கு ரூ.72,500 கோடியைத் தாண்டி ரூ. 1லட்சம் கோடியாக உயர்ந்தது.
* மருத்துவக் காப்பீட்டு பிரீமியத்திற்கான பிடித்தம் செய்யும் அளவு உயர்வு அல்லது மருத்துவச் செலவு ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக பிரிவு 80டி-ன் கீழ் உயர்வு.
* நீண்ட கால மூலதன ஆதாய வரி எந்தவித குறியீட்டு பயனும் அனுமதிக்காத வகையில் ரூ.1 லட்சத்திற்கு மேல் 10 சதவீதமாக நிர்ணயம்.
* எளிதில் வர்த்தகம் புரிவதற்கான உலக வங்கியின் தரவரிசைvய் உலக வங்கியின் வர்த்தகம் புரியும் அறிக்கை 2018-இல் 190 நாடுகளில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு அறிக்கையில் 130-வது இடத்தில் இருந்த இந்தியா 30 இடங்கள் முன்னேறியுள்ளது.
* இந்த அறிக்கை இந்தியாவை பெரும் முன்னேற்றம் கண்ட நாடுகளில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது. இந்த அறிக்கையில் 30 இடங்கள் என்னும் பிற நாடுகள் கண்டிராத மிகப் பெரிய முன்னேற்றத்தை இந்தியா பெற்றுள்ளது.
* இந்த ஆண்டின் உலக வங்கியின் அறிக்கையில் மிகச் சிறந்த முன்னேறிய பொருளாதார நாடுகளில் இந்தியா குறிப்பிடப் பட்டுள்ளது. தெற்காசியா மற்றும் பிரிக்ஸ் நாடுகளில் இந்த முன்னேற்றத்தைக் கண்ட ஒரே நாடு இந்தியா.
* 10 குறியீடுகளில் 6-ஐ பெற்று இந்தியா முன்னேறியுள்ளதுடன் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு மிகவும் நெருக்கத்தில் வந்துள்ளது.
* பிரதமரின் சீர்திருத்தம், செயல்பாடு, மாற்றம் என்ற தாரக மந்திரத்தின் வழிகாட்டுதலில் இந்தியா செயல் படுகிறது. அதிகாரிகளை செயல்பட வைக்கும் விரிவான கூட்டு சீர்திருத்தங் களை மேற்கொள்ளும் அரசியல் உறுதிப்பாட்டை வலுவான தலைமை வழங்கியுள்ளது.
வங்கித் துறையில் சீர்திருத்தங்கள்
* பொதுத்துறை வங்கிகளுக்கான மூலதனம்
* கடன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுத்துறை வங்கிகளுக்கு அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2,11,000 கோடி மறு முதலீடாக ஒதுக்கப்படும்.
* பட்ஜெட்டில் ரூ.18,139 கோடி ஒதுக்கீடு. ரூ.1,35,000 கோடிக்கு மறு முதலீட்டுப் பத்திரங்கள். அரசின் சம பங்குகளை தளர்விக்கும் வகையில் பங்குச் சந்தைகள் மூலம் வங்கிகள் எஞ்சிய முதலீட்டைத் திரட்டும்.
* அரசு வங்கிகளுக்கு முதலீட்டுக்காக துணை மானியக் கோரிக்கைகளின் மூன்றாவது தொகுதியாக ரூ.80 ஆயிரம் கோடிக்கு மறுமதிப்பீட்டு உத்தரவாதப் பத்திரங்களை வெளியிடும் திட்டத்துக்கு 2018-ஆம் ஆண்டு ஜனவரி 5-ஆம் தேதி நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.
மாற்று இயக்க முறை அமைப்பு
* மாற்று செயல்திட்டத்தின் மூலம் பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப் பதற்கான உத்தேசத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை 2017 ஆகஸ்ட் 23-ஆம் தேதி கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியது.
* பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைத்து வலுவான போட்டியிடக் கூடிய வங்கிகளாக மாற்ற இது வகை செய்யும்.
* பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைக்க மாற்று செயல் திட்டக் குழு 2017 நவம்பர் 1-ஆம் தேதி அமைக்கப்பட்டது.
எஸ்.பி.ஐ. துணை வங்கிகள் பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பு
* 1. ஸ்டேட் பாங்க் ஆப் பிக்கானிர் & ஜெய்ப்பூர் 2. ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் 3. ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர். 4. ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா. 5. ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகியவை பாரத ஸ்டேட் வங்கியுடன் 2017 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இணைக்கப்பட்டன.
* இதன் மூலம் எஸ்.பி.ஐ. மற்றும் துணை வங்கிகளின் அதிக மதிப்பிலான கடன் வெளியீடு மற்றும் சிறந்த மேலாண்மைக்கு வழி ஏற்பட்டுள்ளது. மேலும் வாராக்கடன் களில் கவனம் செலுத்தும் வகையில் பெரு வணிக நிறுவனங்களின் முதலீடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
* துணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உலக கட்டமைப்பை அணுக வழி ஏற்பட்டுள்ளது.
* தங்க மதிப்புத் திட்டம், சவரன் தங்கப் பத்திரத் திட்டம் மற்றும் இந்தியா தங்க நாணயங்கள்.
* இந்த ஆண்டு பிப்ரவரி 18-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், 2017 மார்ச் 10-ஆம் தேதி நிலவரப்படி தங்க மதிப்புத் திட்டத்தின் கீழ் 6410 கிலோ தங்கம் சேர்ந்துள்ளது.
* சவரன் தங்கப் பத்திரத் திட்டத்தின் வழிமுறைகளை திருத்துவதற்கு மத்திய அமைச்சரவை 2017 ஜூலை 26-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது.
தொழிலாளர் சீர்திருத்தங்கள்
* ஷ்ரமேவ் ஜெயதே எனப்படுகிறது.
* வேளாண்மை மற்றும் வேளாண்மை அல்லாத துறைகளில் குறைந்தபட்ச ஊதியம் 42 சதவீதம் அதிகரிப்பு.
* 7-வது ஊதியக் குழு: 50 லட்சம் ஊழியர்கள் 35 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு பலன்.
* 2016 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டது. பணவீக்கம் மற்றும் பொதுவான ஊதிய உயர்வை கருத்தில் கொண்டு இது அமலாக்கப்பட்டது. தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கும் இது பொருந்தும்.
போனஸ் (திருத்தம்) சட்டம் 2015-ன்படி கட்டணம் செலுத்துதல்
* போனஸ் பெறுவதற்கான தகுதி வரம்பு மாதத்திற்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து மாதத்திற்கு ரூ.21 ஆயிரமாக உயர்வு.
*புதிய ஊழியர்களுக்கு 3 ஆண்டு காலத்திற்கு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு 8.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ஜவுளி, தோல், காலணி தயாரிப்பு போன்ற அதிகம் பேர் பணிபுரியும் அரசு துறைகளில் 3 ஆண்டுகளுக்கு புதிய தொழிலாளர்களுக்கான பங்களிப்பு 12 சதவீதமாக நிர்ணயம்.
ஸ்ரம் சுவிதா திட்டம்
* ஆன்லைன் பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு தனித்துவ தொழிலாளர் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
* தொழிலாளர்களுக்கு நிரந்தர அடையாளம் அளிக்கும் வகையில் தனித்துவ தொழிலாளர் அடையாள எண் ஒதுக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி அமைப்பு 12 கோடி ஊழியர்களுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கியுள்ளது. அதில் 3 கோடி எண்கள் கைபேசி மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. (31.03.2017 வரை) 7.05 கோடி பேருக்கு டிஜிட்டல் சந்தாதார விவரங்கள் இல்லை.
* சில நிறுவனங்களுக்கு கணக்கு தாக்கல் செய்தல், தொழிலாளர் பதிவு, பரிசோதனைக்கு விலக்கு அளிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்.
1948-ஆம் ஆண்டு ஆலைகள் சட்டத்தில் திருத்தம்
* இரவு பணியில் பெண்கள், மிகை நேரப் பணி நேரத்தை அதிகரித்தலுக்கு அனுமதி.
* கூடுதல் தொழில் பணி பழகுனர்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் 1961 தொழில் பழகுனர் சட்டத்தில் திருத்தம். உதவித் தொகையுடன் குறைந்தபட்ச சம்பளம்.
பிரசவ கால பயன் (திருத்தம்) சட்டம் 2017
* ஊதியத்துடன் கூடிய பிரசவ விடுப்பை 12 வாரத்திலிருந்து 26 வாரமாக அதிகரிக்க முதல் முறையாக 12 வார கால ஊதியத்துடன் கூடிய விடுப்பை தாய்மார்கள் மற்றும் தத்தெடுக்கும் தாய்மார்களுக்கு வழங்குதல். இச்சட்டத்தின் மூலம் சுமார் 18 லட்சம் பெண் ஊழியர்கள் பயனடைந்துள்ளனர்.
சிறார் தொழிலாளர் (தடுப்பு மற்றும் ஒழுங்கு முறை) திருத்தச் சட்டம் 2016
* 14 வயதுக்கு குறைவாக உள்ள சிறார் தொழிலாளர் முறைக்கு முழுமையான தடை. ஊறுவிளைவிக்கக் கூடிய வேலை மற்றும் தொழிலில் விடலைப் பருவ (14 முதல் 18 வரை) வேலைவாய்ப்பு தடுப்பு.
மாற்றியமைக்கப்பட்ட கொத்தடிமை மறுவாழ்வுத் திட்ட செயலாக்கம்
* வயது வந்தோர் பயனாளிகளுக்கு நிதியுதவி தலா ரூ.1 லட்சமாகவும், சிறப்புப் பிரிவு (குழந்தைகள் மற்றும் பெண்கள்) பயனாளிகளுக்கு ரூ.2 லட்சமாகவும். இதர சிறப்புப் பிரிவினருக்கு ரூ.3 லட்சமாகவும் அதிகரிப்பு.
சம்பளம் அளித்தல் (திருத்தம்) சட்டம்
* 2017: ஊழியர்களுக்கு தொழிலதிபர்கள் ரொக்கமாகவோ அல்லது காசோலை யாகவோ அல்லது ஊழியர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல் மூலமாகவோ ஊதியம் வழங்குவது.
* ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக ஜீவன் பிரமான் பத்ரா டிஜிட்டல் திட்டம் அறிமுகம்.
* பீடித் தொழிலாளர்கள். சினிமா தொழிலாளர்கள், நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் அல்லாதோர் ஆகியோருக்கான வீட்டு வசதி மானியம் ரூ.40 ஆயிரத்திலிருந்து ரூ.1,50,000-மாக அதிகரிப்பு.
* சரக்கு மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்த இந்திய தர நிர்ணய சபை சட்டத்தில் சீர்திருத்தங்கள்.
தேசிய பணித்துறை சேவைத் திட்டம்
* தொழிலதிபர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வேலை தேடுபடுபவர்களை ஒரே தளத்தில் கொண்டு வரும் திட்டம். இந்த இணையதளத்தில் 2018 பிப்ரவரி 28 வரை 4.10 கோடி வேலை தேடுவோர், 14.87 லட்சம் தொழிலதிபர்கள் பதிவு செய்துள்ளனர். 8.43 லட்சம் காலி பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 3,151 பணித்துறை ஆலோசகர்கள் பதிவு செய்துள்ளனர்.