மிதாலி ராஜ் : தமிழ் வீராங்கனையின் இந்திய சாதனை!

/idhalgal/general-knowledge/mithali-raj-indian-adventure-tamil-wrestling

123 பந்துகளில் 109 ரன் எடுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் உலகக் கோப்பை பந்தயத்தில் அதிக ரன்களை (1,806) எடுத்த இந்தியர் என்ற சாதனையைப் புரிந்திருக்கிறார்.

அவரது தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக ஏழு விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை குவித்ததோடு, பின்னர் நியூசிலாந்து அணியை 25.3 ஓவர்களில் வெறும் 79 ரன்களுக்கு சுருட்டியது. இதன்மூலம் 186 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

mithaliraj

ராஜஸ்தான் மாநிலத் ஜோத்பூரில் பிறந்து வடநாட்டில் படித்து வளர்ந்த தமிழ்ப் பெண்ணான மிதாலி ராஜின் வரவுக்குப் பிறகுதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி புதிய வேகத்தைப் பெற்றது. கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வரும் மிதாலி ராஜ் இந்திய ம

123 பந்துகளில் 109 ரன் எடுத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் மகளிர் உலகக் கோப்பை பந்தயத்தில் அதிக ரன்களை (1,806) எடுத்த இந்தியர் என்ற சாதனையைப் புரிந்திருக்கிறார்.

அவரது தலைமையில் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிராக ஏழு விக்கெட் இழப்புக்கு 265 ரன்களை குவித்ததோடு, பின்னர் நியூசிலாந்து அணியை 25.3 ஓவர்களில் வெறும் 79 ரன்களுக்கு சுருட்டியது. இதன்மூலம் 186 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்றிருக்கிறது.

mithaliraj

ராஜஸ்தான் மாநிலத் ஜோத்பூரில் பிறந்து வடநாட்டில் படித்து வளர்ந்த தமிழ்ப் பெண்ணான மிதாலி ராஜின் வரவுக்குப் பிறகுதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி புதிய வேகத்தைப் பெற்றது. கடந்த 18 ஆண்டுகளாக விளையாடி வரும் மிதாலி ராஜ் இந்திய மகளிர் அணியின் பல முக்கிய வெற்றிகளுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

6,000 ரன்களை ஒரு நாள் கிரிக்கெட் பந்தயத்தில் எட்டிப்பிடித்து சாதனை புரிந்திருக்கும் மிதாலி ராஜின் பிற சாதனைகள் ஏராளம். ஒருநாள் பந்தயத்தில் ஆறு சதங்கள், 49 அரை சதங்கள், 47 பந்தயங்களில் ஆட்டமிழக்காதது என்பது மட்டுமல்லாமல் மகளிர் கிரிக்கெட்டில் அறிமுகப் பந்தயத்தில் சதமடித்த ஐந்து வீராங்களைகளில் ஒருவர் என்கிற பெருமைக்கும் உரியவர் இவர்.

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி மிதாலி ராஜின் வளர்ச்சியுடன் இரண்டறக் கலந்தது. 1999-இல் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மிதாலி ராஜ் விளையாட முற்பட்டபோது இந்த அளவுக்கு மகளிர் கிரிக்கெட் பிரபலமாக இருக்கவில்லை. அன்றைய மகளிர் கிரிக்கெட் அணியில் இருந்த அஞ்சும் சோப்ரா, நீது டேவிட் ஆகியோரும், அவர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த பூர்ணிமா ராவ், அஞ்சு ஜெயின், டயானா எடுல்ஜி, சாந்தா ரங்கசாமி உள்ளிட்ட சிறந்த வீராங்கனைகள் பலர் இருந்தாலும் கூட, அவர்களால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை சர்வதேச அளவிலும் சரி, அனைவரது கவனத்தையும் கவரும் விதத்தில் உயர்த்த முடியவில்லை.

2006-இல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் டெஸ்ட் பந்தயத்தில் அமைந்த வெற்றிதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கே திருப்புமுனையாக அமைந்தது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்ததற்கு மிதாலி ராஜ் என்கிற நட்சத்திர மகளிர் கிரிக்கெட் வீராங்கனைதான் காரணம். இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச அடையாளமாகவே மாறி விட்டிருக்கிறார் மிதாலி ராஜ். இந்திய கிரிக்கெட்டைப் பொருந்தவரை சுனில் கவாஸ்கர், கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்களுக்கு எள்ளளவும் குறைவில்லாத சாதனை படைத்திருப்பவர் மிதாலி ராஜ் என்பதுதான் உண்மை.

மிதாலி ராஜின் தலைமையில் இந்திய மகளிர் கிரிக்கெட் பல இளம் வீராங்கனைகளை அடையாளம் கண்டிருக்கிறது. இந்திய மகளிர் அணியின் கனவு நாயகி, குருநாதர், நம்பிக்கைக்குரியவர் எல்லாமே இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்தான்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி மற்றும் ஹிட்மேன் ரோகித்தை விட டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்து முதலிடம் பிடித்து புதிய சாதனையை படைத்துள்ளார் மிதாலி ராஜ்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற உலக சாதனை படைத்திருக்கும் மிதாலி ராஜுக்கும் சர்வதேச அளவில் வெற்றிகளைக் குவித்துவரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு தரப்படும் முக்கியத்துவமும் ஊடக வெளிச்சமும் தரப்படுவதில்லையே, ஏன்? ஆடவர் கிரிக்கெட்டை ஒளிபரப்புவதுபோல பரபரப்பான வர்ணனைகளுடனும் விதவிதமான ஒலிப்பதிவு நுணுக்கங் களுடனும் தொலைக்காட்சி சேனல்கள் இதனை ஒளிபரப்புவது இல்லையே ஏன்?

டென்னிஸிலும், பாட்மிண்டனிலும், ஜிம்னாஸ்டிக்கிலும் தனிநபர் பிரிவில் சாதனை படைக்கும் வீராங்கனை களுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட சர்வதேச சாதனை படைத்துக் கொண்டிருக்கும் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் அணியினருக்கு கிடைப்ப தில்லையே. கார்ப்பரேட் நிறுவனங்களில் காணப்படும் ஆணாதிக்கம்தான் மகளிர் கிரிக்கெட்டுக்கு புரவலர்கள் (ஸ்பான்சர்) அதிகமாக கிடைக்காமல் இருக்க காரணம் என்று தோன்றுகிறது. மிதாலி ராஜின் தலைமையில் உலகக் கோப்பை வெற்றி அமைந்தால், ஒருவேளை அந்த மனத்தடை உடையக்கூடும். எதிர்பார்ப்போம்! நம்பிக்கையுடன்.

gk011218
இதையும் படியுங்கள்
Subscribe