மெக்சிகோவில் உள்ள மெக்சிகோ சிட்டி நகர அரங்கில், 2024-ஆம் ஆண்டுக்கான 73-வது மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டி நடைபெற்றது.
இதில் 125 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் டென்மார்க் நாட்டை சேர்ந்த 21 வயதான விக்டோரியா கெயர் தேல்விக், 2024-ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றார்.
இதன் மூலம் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற, முதல் டென்மார்க் பெண் என்ற பெருமையை அவர் பெற்றார்.
ஆரம்பம் முதலே கவனம் ஈர்த்த டென்மார்க் அழகி விக்டோரியா கெயர் தேல்விக், இறுதிச்சுற்றில் நடுவர்களின் கேள்விக்கு ‘நீங்கள் எங்கிருந்து வந்தாலும், உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும் அதை உங்கள் பலமாக மாற்ற நீங்கள் எப்போதும் தேர்வு செய்யலாம்’ என பதிலளித்தார்.
இந்த பதிலால் கவரப்பட்ட நடுவர்கள் இந்தாண்டின் மிஸ் யுனிவர்சாக விக்டோரியா கெயர் தேல்விக்கை அறிவித்தனர்.
கடந்த 2023-இல், மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற நிகரகுவாவைச் சேர்ந்த அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ், விக்டோரியா கேர் தேல்விக்கிற்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை சூட்டினார்.
விக்டோரியா கெயர் தேல்விக், வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் துறையில் பட்டம் பெற்றவர்.
இது மட்டும் அல்லாது, இவர் டேனிஷ் தொழிலதிபர், நடன கலைஞர் மற்றும் மிஸ் டென்மார்க் ஆவார்.
இந்த போட்டியில், நைஜீரியா அழகி சிதிம்மா அடெட்ஷினா இரண்டாவது இடத்தையும், மெக்சிகோ அழகி மரியா பெர்னாண்டா பெல்ட்ரான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
போட்டியில் நான்காம், ஐந்தாம் இடங்களை முறையே தாய்லாந்து, வெனிசுலா நாட்டு அழகிகள் பெற்றனர்.
இவர்களில் வெனிசுலா அழகியான 28 வயது மார்க்கெஸ், குழந்தை பெற்ற பிறகும் அந்நாட்டில் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி எனும் சிறப்பை பெற்றார்.
இந்தியாவின் சார்பில் பங்கேற்ற ரியா சிங்கா மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதல் 30 இடங்களை பிடித்தார்.