* மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவை யில் மத்திய பட்ஜெட் 2018-19 தாக்கல் செய்தார்.அதன் விவரம் வருமாறு.

*சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் இந்தியாவின் சுகாதார அமைப்பின் அடித்தளம் என்று தேசிய சுகாதாரக் கொள்கை 2017 கூறுகிறது. இதன் கீழ் 1.5 லட்சம் மையங்களும் சுகாதார சேவையை மக்களின் வீடுகளுக்கு அருகிலேயே கொண்டு வந்து அளிக்கும். இந்த மையங்கள் தொற்று இல்லாத நோய்கள் மற்றும் தாய் சேய் சேவைகள் உட்பட முழுமையான சுகாதார சேவைகளை அளிக்கும். இவை அத்தியாவசிய மருந்துகளையும் பரிசோதனை சேவைகளையும் இலவசமாக அளிக்கும். இந்த முன்னோடி திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ. 1200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுவன சமூக பொறுப்புணர்வு மூலம் தனியார் துறையின் பங்களிப்பு மற்றும் தொண்டு நிறுவனங் களின் நன்கொடைகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

jaitley

*தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டம் என்பது ஆயுஷ்மான் பாரத் கீழ் வரும் இரண்டாவது முன்னோடித் திட்டமாகும். இந்த திட்டம் 10 கோடி ஏழை மற்றும் நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஓராண்டில் (சராசரியாக 50கோடி பயனாளிகள்) 5 லட்சம் ரூபாய் வரைஇரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை சிகிச்சைகளை மருத்துவமனையில் சேர்ந்து பெற அளிக்கும். இது உலகின் மிகப்பெரிய சுகாதார வசதிக்கான அரசின் உதவி அளிக்கும் திட்டமாக இருக்கும். இந்த திட்டத்தை எளிதாக நடைமுறைப்படுத்த போதிய நிதி அளிக்கப்படும்.

*நாட்டிலுள்ள ரயில்வே ஒன்றிணைப்பை வலுப்படுத்துவதில் அரசின் நோக்கத்தை கவனத்தில்கொண்டு இந்த பொது நிதிநிலை அறிக்கையில் ரயில்வே அமைச்சகத்துக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் மூலதனச்செலவுகள் 2018-19-ஆம் ஆண்டில் ரூ.1,48,528 கோடியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

*இதில் பெரும்பகுதி திறன் உருவாக்கத்திற்கு செலவிடப்படும். 18 ஆயிரம் கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதை, 3-வது மற்றும் 4-வது பாதைப்பணிகள், 5 ஆயிரம் கிலோமீட்டர் பாதையை அகலமாக்குவது, பெரும்பாலும் அனைத்து பாதைகளையும் அகல ரயில் பாதைகளாகமாற்றுவது ஆகியவை இதில் அடங்கும். 4000 கிலோமீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்படவுள்ளது

*2018-19-இல், 12000 சரக்குப் பெட்டிகள், 5,160 ரயில் பெட்டிகள், சுமார் 700 ரயில் என்ஜின்கள் கொள்முதல் செய்யப்படும். மேலும், கிழக்கு மற்றும் மேற்கு பகுதி சரக்கு போக்குவரத்து வழிதடங்களின் பணிகள் முழுவேகத்தில் நடைபெறும்.

*தனியார் துறையினரின் அதிவேக வழித்தட இயக்கம் மற்றும் சரக்குகள் சேமித்து வைக்கும் இடங்களில் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற பெரும் திட்டங்களுக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

*ராஷ்ட்ரீய ரயில் சன்ரக்ஷ கோஷ் திட்டத்திற்கு போதிய நிதி கிடைக்கும் என்றும் ஜெட்லி உறுதியளித்தார். 2018-19-இல் 3600 கிலோமீட்டருக்கும்அதிகமாக பாதை புதுப்பித்தலுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ""மூடுபனி பாதுகாப்பு'', ""ரயில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை முறை'' போன்ற தொழில்நுட்ப பயன்பாடு அதிகரிக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், அகல ரயில் பாதை ஒன்றிணைப்பு பகுதியில் 4267 ஆளில்லாத லெவல் கிராசிங்குகள் நீக்கப்படும்.

*நவீன வசதிகள் கொண்ட ரயில் பெட்டிகள் பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையில் வடிமைக்கப்படவுள்ளன. இத்தகைய முதலாவது ரயில் தொகுப்பு 2018-19-இல் இயக்கி வைக்கப்படும்.

*இந்திய ரயில் நிலைய மேம்பாட்டு நிறுவனம்மூலம் 600 முக்கிய ரயில் நிலையங்கள்மறுசீரமைக்கப்படும். 25000-க்கும்அதிகமான படிகள் உள்ளன. அனைத்து ரயில் நிலையங் களிலும் நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்படவுள்ளன. அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில் வண்டிகளிலும் வைஃபை வசதி செய்து தரப்படும். பயணிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்த அனைத்து ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் சி சி டி வி கேமராக்கள் பொருத்தப்படும்.

*மும்பை போக்குவரத்துப் பிரிவில் ரூ.11000 கோடி செலவில் 90 கிலோமீட்டர் இரட்டை ரயில் பாதைகள் அமைக்கப்படும். சில பகுதிகளில் உயர்மட்ட போக்குவரத்துப் பாதைகள் உட்பட ரூ40,000 கோடி செலவில் கூடுதலாக 150 கிலோமீட்டர் தூரத்திற்கு புறநகர் ரயில் பாதை ஒன்றிணைப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது. பெருநகர வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பெங்களூருவில் சுமார் 160 கிலோமீட்டர் தூரத்திற்கான புறநகர் ரயில் ஒன்றிணைப்பை ரூ,17,000 கோடி மதிப்பில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

*இந்தியாவின் முதலாவது அதிவேக ரயில் திட்டமான மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் போக்குவரத்துக்கு 2017 செப்டம்பர் 14 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. அதிவேக ரயில் திட்டங்களுக்கு தேவைப்படும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க வதோதராவில் கல்வி நிறுவனம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

*ஆண்டுக்கு ரூ. 330 ப்ரிமியம் செலுத்தினால், ரூ. 2 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கும் பிரதமர் ஜீவன் ஜோதி காப்பீட்டு திட்டத்தில் 5.22 கோடி குடும்பங்கள் பயனடைந்து உள்ளன. பிரதமர் சுரக்‌ஷ காப்பீட்டு திட்டத்தின்கீழ், 13 கோடியே 25 லட்சம் பேர் ஆண்டுக்கு 12 ரூபாய் ப்ரீமியம் செலுத்தி, தனிநபர் விபத்து காப்பீடாக ரூ. 2 லட்சம் பெறும் திட்டத்தில் சேர்ந்துள்ளனர்

*விவசாயம், சமுகத்துறைகள், டிஜிட்டல் செலுத்துகைகள், அடிப்படை வசதி, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முதலீட்டை குறிப்பிடத் தக்க அளவு உயர்த்துவதில் அரசின் உறுதிப்பாட்டை இந்த நிதிநிலை அறிக்கை எதிரொலிக்கிறது

*2017-18 மறுமதிப்பீட்டுக்கு கூடுதலாக நிதி பற்றாக் குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதம் குறைப்பது நோக்கம் என்றார் அருண் ஜெட்லி 2018-19-ஆம் ஆண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

*பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், மலைப் பகுதிகளில் வசிக்கும் 500 மக்கள் உள்ள 1,78,184 குடியிருப்புகளுக்கு எல்லா பருவநிலைகளையும் தாங்கக் கூடிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

*மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தேவையான சமயத்தில், கைகொடுத்தது. விவசாயக் கூலிகளுக்கான தேவையை முழுமையாகபயன்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த மூன்றாண்டுகளாக அவர்கள் வாழ்க்கை தரத்தைமேம்படுத்தி, அனைத்து பருவநிலைக்கான பயிர்களை கண்டறிந்து, தண்ணீர் சேமிப்பு, காடு வளர்ப்பு மற்றும் ஆதாரங்கள் உருவாக்குதல் போன்றவற்றின் மூலம் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை வளர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

*ஊரக வறுமையை ஒழிக்க உறுதி பூண்டுள்ள ஊரக வளர்ச்சித் துறை, 2022-ஆம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்கி அதன் பொருட்டு, உட்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. 50,000 கிராம பஞ்சாயத்துகளில், 5000 இடங்கள் அடையாளம் காணப்பட்டு, மாநில அரசுகளின் உதவியோடு வறுமையை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

*தீன்தயாள் உபாத்யாயா, ஊரக திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுய வேலைவாய்ப்பை உருவாகும் வகையில், திறன் வளர்ச்சிக்காக, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

*திறன் இந்தியா திட்டத்தின் கீழ், இளைஞர்களின் திறன் வளர்ச்சிக்காக தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்படும்.

*கடந்த நிதிநிலை அறிக்கையில், அந்தோத்யா திட்டத்தின் கீழ், 50,000 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 1 கோடி வீடுகளை வறுமையின் பிடியிலிருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

*மாநில அரசுகள் தேர்ந்தெடுத்தபடி, ஊரக வளர்ச்சித் துறை, இந்த கிராமங்களை வரிசைப்படுத்தியது.உட்கட்டமைப்பில் குறைபாடு, மனிதவள மேம்பாட்டில் குறைகள், பொருளாதார வளர்ச்சியில் குறைகள் ஆகியவை கண்டறியப்பட்டு, அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த குறைகளை சரி செய்து மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்க, இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

*கிராமங்களைத் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் அற்றவையாக ஆக்கவும் கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக இயற்கை உயிரி-வேளாண் ஆதாரங்கள் நிறைந்த கிராமம் எனப்படும் கோபர்-தன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.

நிதிநிலை அறிக்கை 2018-19 முக்கிய அம்சங்கள்

*நாட்டில் வளர்ச்சி விகிதம் அடுத்த நிதி ஆண்டில் 8 சதவீதமாக இருக்கும். மேலும் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா விளங்கும்.

*பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுபதவி ஏற்றது முதல் மேற்கொள்ளப்பட்டபொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது.

*விவசாயிகளின் வருவாயை உயர்த்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

*இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் வெளிப்படைத் தன்மை உறுதிசெய்யப்படும்.

*நடப்பு நிதிநிலை ஆண்டில் இரண்டாவது அரையாண்டில் வளர்ச்சி விகிதம் 7.2- 7.5 சதவீதத்தைஎட்டும்.

*அரசியல் லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் சீர்திருத்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

*வேளாண்மை உற்பத்தி முன்பு எப்போதும் இல்லாத அளவு உயர்ந்துள்ளது.

*அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு.

*வரி ஏய்ப்பு குறைந்துள்ளது.

*அரசு கொள்கை முடிவு எடுப்பதில் இருந்த தேக்க நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

*பிரதமர் கிராம சாலை திட்டம் வேளாண் மையங்களைஇணைக்கும்.

*வேளாண் கட்டமைப்பு வசதிகளுக்கு 22000 கோடி ஒதுக்கீடு

*இயற்கை வேளாண்மையை பெருமளவில் ஊக்குவிக்க நடவடிக்கை

*பிரதமர் மோடி தலைமையிலான அரசு அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப் பட்டுள்ளன.

*இந்தியாவின் பொருளாதாரம் 2.5 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

*விவசாயிகள் கடன் அட்டைத்திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறைக்கும் விரிவாக்கம்

*சேவைகள் மக்களின் இல்லத்திற்கே கொண்டு செல்லப்படுகின்றன. அல்லது அவரது வங்கிகளை அடைகின்றன.

*வேளாண் ஏற்றுமதிக் கொள்கை எளிதாக்கப் பட்டுள்ளது.

*உணவு பதப்படுத்துதல் துறைக்கான ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

*வேளாண் ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் அளவை எட்ட வாய்ப்பு.

*42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்.

*மீன் மற்றும் இறால் வளத்துறைக்கு 10000 ரூபாய் ஒதுக்கீடு.

*கிராமப்புறங்களைச் சேர்ந்த 8 கோடி மகளிருக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

*தில்லியில் மாசுக் கட்டுப்பாட்டை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

*அடுத்த நிதி ஆண்டிற்குள் கூடுதலாக 2 கோடி கழிப்பறைகள் கட்டப்படும்.

*2020-இல் அனைவருக்கும் வீடு. கட்டுப்படியாகக் கூடிய வீட்டு வசதிக்கென பிரத்யேக நிதி.

*2022-க்குள் அனைவருக்கும் வீடு.

*ஊரக சாலைத்திட்டத்தின் கீழ் 3 கோடியே 21 லட்சம் ஊரக வேலைவாய்ப்பு.

*ஆசிரியர் பயிற்சியில் ஒருங்கிணைந்த பி.எட் பயிற்சித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

*பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சித் தர புதிய திட்டம். ஒருங்கிணைந்த பி.எட். திட்டம் அறிமுகம்.

*கல்வித்துறைக்கு ரூ.1லட்சம் கோடி முதலீடு. நவோதையா பள்ளிகள் அடிப்படையில் புதிய ஏகலைவன் பள்ளிகள்.

*நேர்மையான ஊழலற்ற அரசை வழங்க உறுதி

*ஏழ்மையை ஒழித்து வலுவான புதிய இந்தியாவை வடிவமைக்க அரசு உறுதி.

*ஊரகப் பகுதிக்கு கூடுதல் நிதி வழங்க முடிவு.

*வளர்ச்சிப் பாதையில் உற்பத்தித் துறை.

*வேளாண், கல்வி, ஊரகத்துறை, சுகாதாரம் ஆகியவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம்.

*சுகாதார இந்தியாவை உருவாக்க ஆயுஷ்மான் இந்தியா திட்டம்.

*அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்து.

*3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி வீதம் ஏற்படுத்தப்படும்.

*24 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.

*ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீடு 50 சதவீதம் கூடுதல் நிதி ஒதுக்கீடு.

*சமூக நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்விக்கு 1.35 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு .

*கங்கையை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள்

*முத்ரா கடன் திட்டத்திற்கு ரூ.3லட்சம் கோடி. மாற்றுத்திறனாளிகளுக்கும், கணவனை இழந்த பெண்களுக்கு சமூக பாதுகாப்புத்திட்டம்.

*ஷெட்யூல்டு வகுப்பினர் நலனுக்காக ரூ. 56,919 கோடி ஒதுக்கீடு.

*காசநோயாளிகள் நலனுக்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு-நிதி அமைச்சர்

*வேலைவாய்ப்பை பெருக்குவதே அரசு கொள்கைத் திட்டங்களின் மையம் ஆகும் .

*ஸ்மார்ட் மற்றும் அம்ரூத் நகரங்களுக்கு ரூ. 2.04 லட்சம் கோடி ஒதுக்கீடு .

*நாட்டின் 10 பிரபலமான சுற்றுலாத் தலங்கள் நாட்டின் அடையாளமாக உயர்த்தப்படும் .

*கட்டமைப்புத் துறையில் ரூ. 50 லட்சம் கோடி முதலீடு செய்ய பரிசீலனை.

*9000 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை நடப்பு நிதி ஆண்டிலேயே அமைத்து முடிக்கத் திட்டம்.

*4000 கி.மீ. ரயில்வே பாதைகள் மின்மயமாக்கப்படும்.

*2017-18 நிதி ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் - ரூ 250 கோடி வரை வருடாந்திர விற்றுவரவு உள்ள நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதமாக குறைப்பு

*வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ((NBFCs) நிதியுதவியை மேம்படுத்தும் வகையில் குறுந்தொழில்கள் வளர்ச்சி மற்றும் மறுநிதியளிப்பு ஏஜென்சி (MUDRA)

அமைத்துள்ள மறுநிதியளிப்புக் கொள்கை, தகுதி ஆகியவை குறித்து மறு ஆய்வு செய்யப்படும்

*நிதி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்வதற்கான சூழலை உருவாக்குரிய கொள்கையையும் நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகளையும் ஆராய நிதியமைச்சகத்தில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது