கல்வியில் சராசரி மாணவனாக இருந்து அதே கல்வியில் உயர் அதிகாரிகளை உருவாக்கிய சாதனையாளர். படிக்கும் காலத்திலேயே முற்போக்கு எழுத்தாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு மேடைகளில் தன் தனித் திறமையைப் பல குரலில் தந்து கல்லூரி அளவிலான போட்டிகளில் பலமுறை பரிசுகளை வென்றவர். தன்னை உணராத வரை இளமையின் முன் பகுதியை குறும்புத்தனத்துக் குள்ளும் தன்னை உணர்ந்தவுடன் இளமையின் பின் பகுதியைச் சாதிப்புக்குள்ளுமாகச் சட்டென மாற்றிக் கொண்டவர்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் தான் தோற்றாலும் பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களை உருவாக்கியவர். ஆண்டு தோறும் சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிகப் பேரைப் பங்கெடுக்க வைத்தவர். கூடவே அதிகப் பேரைத் தேர்ச்சியும் பெறவைத்தவர். வருடா வருடம் சிவில் சர்வீசஸ் தேர்வில் சத்தமில்லாமல் அதிக எண்ணிக்கை யில் தேர்ச்சிகளைத் தந்து வந்தவர்.
சாதிக்கத் துடிப்போரைச் சாதிக்க வைக்கும் சிறந்த சிவில் சர்வீசஸ் பயிற்சியாளர். சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதை லட்சியக் கனவாகக் கொண்ட தமிழக இளைஞர்களுக்கு ஓர் உந்துசக்தி யாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர் சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் சங்கர். இவரின் மறைவு பல்வேறு தரப்பினரிடமும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சங்கரின் வாழ்க்கை பயணத்தை நான் சொல்வதை விட அவரே பொது அறிவு உலகம் இதழுக்கான பேட்டியில் கூறியுள்ளார். அதன் தொகுப்பை முதலில் பார்ப்போம். திருச்செங்கோடு நல்லசமுத்திரத்தில் தந்தை (தேவராஜ்), தாயுடன் (தெய்வானை) இருந்த காலங் களை விட நல்லாக்கவுண்டன் பாளையத்தில் தாத்தாவுடன் இருந்த காலங்களே அதிகமானது.
நான் பிறந்தவுடன் என் பெற்றோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு குடிபெயர்ந்தார்கள்.
அரசுப்பள்ளியில் தான் படித்தேன். எட்டாம் வகுப்பு வரை நான் படிப்பில் சுமாருக்கும் குறைவு தான்.
நீ படிக்கவே லாயக்கு இல்லாதவன் என்று தந்தையால் தாத்தா (நஞ்சைய கவுண்டர்), பாட்டி (சங்கரம்மாள்) வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். ஒரு வருட காலம் தறி ஓட்டினேன். பின்பு லாரியில் வேலை பார்த்தேன். பின்பு நல்ல சமுத்திரம் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். அங்கு என் ஆங்கிலப் பாட ஆசிரியர் ஏதாவது ஒரு செயலை முன் வைத்து பாராட்டிக் கொண்டே இருப்பார். அவரின் பாராட்டுதலும் ஊக்கமுமே 10-ஆம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவனாக என்னைத் தேர்ச்சி பெறவைத்தது.
பனிரெண்டாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் இரண்டாவது இடம் பிடித்தேன

பனிரெண்டாம் வகுப்பில் எங்கள் பள்ளியில் இரண்டாவது இடம் பிடித்தேன். கட் ஆஃப் மார்க் குறைவாக இருந்ததால் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை. இம்ப்ரூவ்மெண்ட் எழுதி மருத்துவப் படிப்பில் சேர்ந்துவிட வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எண்ணம் எல்லாம் சினிமாவில் இருந்ததால் ஏற்கனவே எடுத்த மதிப்பெண்ணைவிட குறைவாக இம்ப்ரூவ்மெண்ட் தேர்வில் எடுத்தேன். பின்பு பி.எஸ்.ஸி. அக்ரியில் சேர்ந்தேன். அங்கு விளையாட்டு தனமாக செய்த குறும்பால் அந்த ஆண்டு படிக்க முடியாமல் போனது. அந்தச் சமயத்தில் தான் தாத்தாவை இழந்தேன். என் தாத்தாவின் இழப்பு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது. எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்கிற வேகத்துடன் அதே கல்லூரியில் மீண்டும் சேர்ந்தேன்.
கல்லூரியில் மீண்டும் சேர்ந்து படிக்கும்போதே சிவில் சர்வீஸ் தேர்வின் மீது ஆர்வம் அதிகரித்தது. என்றாலும் இடையிடையே சினிமா ஆசை என்னை விடுவேனா என்றது.
அதற்கான முயற்சியில் இறங்கிய போது கிடைத்த அனுபவம் மீண்டும் என்னைப் படிக்கத் தூண்டியது. ஹரியானாவில் அரசு உதவித் தொகையுடன் எம்.எஸ்.ஸி., அக்ரி முடித்தேன். முடித்ததும் சிவில் சர்வீஸ் தேர்விற்காக டெல்லி சென்றேன். வருடம் ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டு இலட்சம் வரை பணம் அவசியம் தேவையாக இருந்தது. பெற்றோர் களிடமிருந்து உதவியை எதிர்பார்க்க முடியாத வறுமையான காலம் அது. என் மனைவி வைஷ்ணவி எனக்காக டெல்லிக்கு வருகை புரிந்து வேலைபார்த்து என்னைப் படிக்க வைத்தார். 2001, 2002 இரண்டு வருடங்களும் நான் ஐ.ஏ.எஸ். தேர்வின் இறுதிவரை சென்றும் வெற்றிக் கிடைக்கவில்லை.
அடுத்தடுத்து முயற்சித்தேன். வெற்றி என் வசம் வரவே இல்லை.
அந்தக் காலகட்டத்தில் தந்தையையும் இழந்தேன். எல்லாமுமே எனக்கு இழப்பாகவே இருந்தது. சென்னை வந்தேன். எதனால் நான் தோற்கிறேன். என்னை நானே கேள்விகள் கேட்க ஆரம்பித்தேன். திறமையை வெளிப்படுத்துவதில் பயம், தயக்கம் இவைகளே தடையாக இருக்கிறது என்பதை காலம் கடந்து உணர்ந்தேன்.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. அந்த காலகட்டத்தில் வேலை பார்த்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம்.. கிடைத்த வேலைக்குச் சம்பளமோ ஐயாயிரம் ரூபாய் மட்டுமே. 33 வயதை கடந்தாயிற்று. ஐயாயிரம் சம்பளத்தில் அமர்ந்து குடும்பத்தை மகிழ்ச்சிகரமாக நடத்துவது சாத்தியமாகுமா? யோசிக்க ஆரம்பித்தேன். ஏன் நாமே ஒரு ஐ.ஏ.எஸ். அகாடமியைத் துவக்கக்கூடாது என்கிற முடிவுக்கு வந்தேன். நண்பர்கள் கை கொடுத்தார்கள். என் தாய் தான் சேமித்து வைத்திருந்த 720 ரூபாயைத் தந்து உதவினார்கள். மாதம் 4000 ரூபாய் வாடகையில் அண்ணா நகரில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியைத் துவக்கினேன்.
முதலாண்டு 36 பேர் சேர்ந்து படித்தார்கள்.
நோட்டீஸ் ஒன்றை அச்சடித்துக் கொண்டு ஐஏஎஸ் படிப்பவர் வீடு வீடாகச் சென்று விநியோகித்தேன். அவர்களுக்கு டெமோ கொடுத்தேன். ஒரு முறை, இரு முறை எனப் பலமுறை முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நம்ம ஊரிலேயே படித்து சாதிக்க முடியும் என்கிறநம்பிக்கையை வரவழைத்தேன். தன்னம்பிக்கை யுடன் வருகை புரிந்தார்கள். முதல் வருடம் பயிற்சி எடுத்த 36 பேரில் 11 பேர் தேர்ச்சி பெற்றார்கள்.
அதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் வென்றவர்களே விளம்பரதாரர்கள் ஆனார்கள்.
டெல்லியில் உள்ள ஏதாவது ஒரு அகாடமியில் சேர்ந்து பயில அன்று வசதி இல்லாத காரணத்தால் ஒவ்வொரு அகாடமியில் பயிலும் நண்பர்களிடம் ஒவ்வொன்றையும் கேட்டு கேட்டு தெரிந்து சிவில் சர்வீஸ் தேர்வைச் சந்தித்தவன் நான். அதனால் ஒவ்வொரு அகாடமியின் செயல்பாடு குறித்த அனுபவம் கிடைத்தது. நண்பர்களின் மூலமாக பெற்றதுடன், நான் கற்றதையும் சேர்த்து எனக்கென்று ஒருவழியை உருவாக்கி பயிற்சி பெறுபவர்கள் விரும்பும் வகையில் பாடம் எடுத்து செயல்பட ஆரம்பித்தேன். நல்ல பலன் கிடைத்தது.
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். சுமார் 900 பேர் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வருகின்றனர். பலர் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் ஐஎஃப்எஸ் அதிகாரியாக பணிபுரிகின்றனர். ஐஏஎஸ் தேர்வுக்கு மட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி குரூப்-1, குரூப்-2 தேர்வுகள், வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி அளித்து வருகிறது.
முன்பு தமிழக மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வுக்குப் படிக்க டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்வது உண்டு. ஆனால், தற்போது வட இந்திய மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வுக்குப் படிப்பதற்காக தமிழகம் நோக்கி வருகின்றனர். இதில் சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு பெரும் பங்கு உண்டு. ஆண்டுதோறும் சுமார் 300 பேர் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. சிவில் சர்வீசஸ் தேர்வில் நான் வெற்றி பெற்றிருந்தால் நான் மட்டும்தான் ஐஏஎஸ் ஆகியிருப்பேன். தோற்றதால் இன்று பல ஐஏஎஸ், ஐபிஎஸ்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன் என்று சங்கர் உணர்ச்சிபூர்வமாக கூறிமுடித்தார்.
கிராமப்புற, ஏழை மாணவர்களிடம் எவ்வித கட்டணமும் வாங்காமல் இலவசமாக பயிற்சி அளித்து அவர்களது ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவுகளை நனவாக்கியவர் சங்கர்.
சென்னை வருமானவரி இணை ஆணையர் ஆர்.நந்தகுமார் ""நானும் சங்கரும் 2004-இல் சிவில் சர்வீசஸ் நேர்காணலுக்கு சென்றோம். சிவில் சர்வீசஸ் அதிகாரிக்குத் தேவையான அனைத்து தகுதி களும் அவரிடம் இருந்த போதிலும், ஏதோ ஒரு காரணத்தால் அவர் தேர்வில் வெற்றி பெறவில்லை. தேர்வில் தோல்வி அடைந்தாலும் வாழ்க்கையில் அவர் நிறைய சாதித்துள்ளார். ஏராளமான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளை உருவாக்கி யுள்ளார். ஐஏஎஸ் ஆவதே மற்றவர்களுக்கு உதவத்தான். அவரும் ஒரு வகையில் பலருக்கு உதவிதான் செய்துள்ளார். 14 ஆண்டுகளாக அவரை அறிவேன். அவர் இல்லாதது தமிழக மாணவர்கள் இடையே மனோரீதியாக ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்து ஐஆர்எஸ் அதிகாரியாகி சென்னை சுங்கத் துறை துணை ஆணையராக (ஏற்றுமதி) பணியாற்றி வரும் மோகன் கோபு ""சங்கர் கடின உழைப்பாளி. சிவில் சர்வீசஸ் தேர்வில் தொடர்ந்து முயன்று வெற்றி பெற முடியாமல் போனாலும், அதில் இருந்து மீண்டுவந்து பயிற்சி மையத்தை சிறப்பாக நடத்தி வந்தார். புவியியல் பாடத்தில் நாட்டிலேயே அவர்தான் மாஸ்டர் என்று கூறலாம். எப்படி கேள்வி கேட்பார்கள்; அதற்கு எப்படி விடையளிக்க வேண்டும் என்பதில் பல புதிய உத்திகளை கொண்டுவந்தார். அவரிடம் படிப்பதற்காக டெல்லி, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் சென்னை வந்தனர். சிவில் சர்வீசஸ் தேர்வு தயாரிப்பில் அவர் ஒரு ராஜாங்கம் என்று சொல்லலாம். அவரது மறைவு ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வரும் தமிழக மாணவர்கள் மனதில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது. புவியியலில் அவருக்கு நிகர் அவர்தான்.
அதுதொடர்பாகப் பல தகவல்கள் அவரிடம் கொட்டிக்கிடந்தன. அதைப் புத்தகமாகவும் எழுதியுள்ளார். அந்தப் பாடத்தில் எந்தக் கேள்வி களைக் கேட்டாலும் மற்றவர்களுக்குப் புரியும்படி விளக்கமளிப்பார். சிவில் கோச்சிங் பெற பாடப் புத்தகங்களை நன்றாகப் படித்தாலே போதும் என்று அடிக்கடி கூறுவார்'' என்றார்.
மறைந்த சங்கர் பொது அறிவு உலகம் இதழுடன் மிக நெருக்கமாக பயணித்தவர். சங்கர் முதன் முதலில் 2006-இல் நக்கீரன் அலுவலகத்தில் என்னை சந்தித்தார். பொது அறிவு உலகத்தில் சங்கர் ஐஏஏஸ் அகாடமி பற்றி எழுத முடியுமா என கேட்டார்.
அப்போது இந்த பயிற்சி மையம் தமிழகத்தில் அறியப்பாடாத ஒரு சிறிய பயிற்சி மையம். ஒரு ஆயிரம் ரூபாய் விளம்பர பணம் கூட தரமுடியாத நிலை என்பதை வெளிப்படையாகவே கூறினார்.
சங்கர் ஐஏஏஸ் அகாடமி பற்றி அன்றைய காலக்கட்டத்தில் எந்த பத்திரிக்கையும் எழுத தயாராக இல்லை. 2008 வரை கூட இதே நிலை. சங்கரின் மாணவர்கள் சிவில் சர்வீசஸ் தேர்வில் தொடர்ந்து வெற்றி பெற்ற போதும் எந்த பத்திரிக்கையும் செய்தியாகக் கூட வெளியிடவில்லை. ஆனால் பொது அறிவு உலகம் 2006-லிருந்து சங்கர் ஐஏஏஸ் அகாடமி பற்றி மட்டுமே தொடர் கட்டுரைகளாக வெளியிட்ட இதழாக இருந்து வருகிறது. தொடர்ந்து பயிற்சி மையத்தை மேம்படுத்துவது சம்பந்தாக என்னுடன் உரையாடி வருவது வழக்கம். சேலத்தில் வடிவமைக்கப் பட்ட சங்கர் ஐஏஏஸ் அகாடமி இணையத்தளம், தென்னிந்தியாவில் பயிற்சி மையத்தின் கிளைகள் போன்றவற்றை ஆலோசித்துள்ளோம். 2014-இல் பயிற்சி வகுப்புகளை ஆன்லைன் மூலம் கொண்டு செல்வதையும் யூடியூப் வழியான அறிமுக பயிற்சிக்கான சேனல் பற்றியும் நான் கூறிய ஆலோசனையை முதலில் மறுத்துவிட்டார். அவை பாதுகாப்பாக இருக்காது என்பது அவரின் அப்போதைய பதில். அப்போது இயற்பியல் விஞ்ஞானி ரிச்சர்டு பெயின்மான் வீடியோக்காளை பார்க்க சொன்னேன்.
இன்று சங்கர் ஐஏஏஸ் அகாடமி நேரடி வகுப்புகளை விட ஆன்லைன் வகுப்புகளில் அதிகளவில் மாணவர்கள் இந்தியா முழுவதும் படிக்கிறார்கள். இன்றும் சங்கரின் யூடியூப் வீடியோக்கள் ஐஏஎஸ் படிக்க விரும்பும் மாணவர் களுக்கு மிக சிறந்த அறிமுக வகுப்பாக இருந்து வருகிறது. அதேபோல சங்கர் சொந்த பத்திரிக்கை நடத்த வேண்டும் என்ற விருப்பம் நீண்ட காலமாக இருந்தது. அதுவே பின்னர் சிவில்பீடியா என்ற ஆங்கில மாத இதழாக ஆரம்பித்தார்.
இவ்விதழ் நக்கீரன் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வினியோகிக்கப்பட்டது.
அடிக்கடி சங்கர் சிவில் சர்வீசஸ் தேர்வில் இடஒதுக்கீட்டில் நடக்கும் குளறுபடிகளை சொல்லி வருத்தப்படுவார். நீட் தேர்வு, தமிழ்வழி கல்வி, இடஒதுக்கீடு என பல விஷயங்களில் சங்கருக்கு சிறந்த சமூக பார்வை இருந்தது. கலைஞர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகளுக்காக இடஒதுக்கீடு அறிவித்த போது, மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். தெற்கிலிருந்து வடக்கு சென்று சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படித்து வந்த வரலாற்றை தலைகீழாக மாற்றி இந்திய மாணவர்களுக்கு சென்னையில் பயிற்சியளித்தார். சென்னையை ஐஏஎஸ் தேர்வுக்கான தலைநகரமாக மாற்றிய தென்னிந்தியாவின் நாயகன் சங்கர்.
- எஸ். செல்வராஜ்