லர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் "கல்தா'. மருத்துவக்கழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் ஹரி உத்ரா, தயாரிப்பாளர் ரகுபதி, நாயகன் சிவ நிஷாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

இயக்குநர் ஹரி உத்ரா "" "கல்தா' எனது மூன்றாவது திரைப்படம். "மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் இதில் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். அய்ரா, திவ்யா ஆகியோர் நாயகியா நடித்திருக்கிறார்கள். வைர முத்து பாடல்கள் எழுதியிருக் கார். ஜெய் கிரிஷ் இசைய மைச்சிருக்கார். கல்தாங்கிறது வழக்கமா நாம் வாழ்க்கையில் கையாளுற சொல்லாடல்தான். அரசியல்வாதிகள் தொடர்ச் சியா மக்களுக்கு கல்தா கொடுத்திட்டு இருக்காங்க.

Advertisment

kk

அதை அடிப்படையா கொண்டு தான் இந்த டைட்டில் வைத் தோம். அரசியல் பழகு அப்படிங்கிறதுதான் இந்தப் படம் சொல்லும் கருத்து. கமர்ஷியல் கலந்த இயல் பான படமா இத உருவாக் கியிருக்கோம்.''

தயாரிப்பாளர் ரகுபதி ""இது எங்களுக்கு முதல் தயாரிப்பு. எனது மகன் இதில் நாயகனா நடிச்சிருக்கார். படம் நல்லா வந்திருக்கு. உங்கள் எல்லாருக்கும் பிடிக்கும்னு நம்புறேன்.''

நாயகன் சிவ நிஷாந்த் ""ஒரு கமர்ஷியல் படமா மட்டுமில்லாம, ஒரு நல்ல தரமான படமாகவும் இந்தப் படம் இருக்கும். எல்லாரும் சேர்ந்து நல்ல படம் பண்ணி யிருக்கோம்.''

ஒளிப்பதிவு- எபி. வாசு, படத்தொகுப்பு- முத்து முனியசாமி, இசை- கே. ஜெய் கிரிஷ், கலை- இன்ப ஆர்ட் பிரகாஷ், சண்டைப் பயிற்சி- கோட்டி, நடனம் - சுரேஷ் எஸ்., மக்கள் தொடர்பு- சுரேஷ் சந்திரா, ரேகா டி. ஒன்.