தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக திட்டமிட்டு உள்ளது.
அந்த வகையில் ஆண்டு முழுமைக்குமான நிகழ்ச்சிகளை அந்தக் கட்சி அட்டவணைப்படுத்தி இருக்கிறது. கலை இரவு, திரைக்கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, மாணவர்களை ஊக்கப்படுத்தும் மாணவர் மன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளோடு இந்த அட்டவணை மிகப் பெரியதாக நீள்கிறது.
மாணவர்களுக்கான, ‘வினாடி – வினா’ போட்டிகள்: இந்தப் போட்டிகளில் பங்கு பெற விரும்புவோர் அதற்கான செயலி-யில் (ஆல்ல்) உங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதில் முதல்கட்டமாக மாவட்ட வாரியான போட்டிகளும், இரண்டாம்கட்டமாக மண்டல வாரியான போட்டிகளும், மூன்றாம் கட்டமாக மாநில அளவிலான பேட்டிகளும் நடைபெறும்.
கவியரங்கம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்துதல்.
கலை இரவு (கலைஞர் சார்ந்த கலை நிகழ்ச்சிகள்) நடத்துதல்.
‘கலைஞர் சுடர்' ஏந்தி, கலைஞர் கோட்டம் வரை தொடர் ஓட்ட நிகழ்ச்சி.
மாவட்ட வாரியாக, ‘மாரத்தான் தொடர் ஓட்டம்' மற்றும் மாவட்டவாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்.
கலைஞர் எழுதிய திரைப்பட வசனங் களை ஒப்பித்தல்.
கலைஞர் குறித்த நிகழ்வுகளையும் - தகவல்களையும் சமூக வலைதளங்களில் தங்ங்ப்ள் தயாரித்து ஆண்டு முழுவதும் வெளியிடுதல்.
தொழிற்சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகள்:
சட்டத்துறை சார்பில் பேச்சுப் போட்டிகள் நடத்துல். இதன் தலைப்புகள்: ‘மாநில சுயாட்சி' மற்றும் ‘அரசியல் சட்ட மாண்புகளைக் காப்போம்.'
மகளிர் அணியின் சார்பில் ‘டர்க்ஸ்ரீஹள்ற்.’ கழகச் சொற்பொழிவாளர்களைக் கொண்டு கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடத்துதல்.
ஆங்கிலக் கருத்தரங்கங்கள் (நஹ்ம்ல்ர்ள்ண்ன்ம் ண்ய் ஊய்ஞ்ப்ண்ள்ட்) நடத்துதல்.
கூட்டணிக் கட்சி சொற்பொழிவாளர் களைக் கொண்டு, மாவட்ட அளவில் கருத்தரங்கங்கள் நடத்துதல்.
கலைஞரின் இலக்கியங்கள் குறித்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும் ஆய்வரங்கங்கள் நடத்துதல்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது திரைத்துறைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் ‘கலை நிகழ்ச்சி’களை நடத்துதல்.
திருநங்கைகள் - மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்.
அனைத்து நிகழ்ச்சிகளையும் சமூக வலைதளத்தில் பகிர்தல்.
கல்லூரிகளில் கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நடத்துதல்.
கலைஞரின் படைப்புகள் குறித்து கல்வியாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு.
கழக மாவட்டங்கள் அனைத்திலும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங் களுக்கு ஏற்பாடு.
மாவட்டந்தோறும் திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு.
மாவட்டத் தலைநகரங்களில், ‘புகைப்படக் கண்காட்சி’ நடத்துதல்.
அயலக அணியின் சார்பில் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் கருத்தரங்கம் நடத்துதல்.
மகளிர் அணி சார்பில் மாவட்டந்தோறும் கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்.
‘தேதி சொல்லும் சேதி' வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீடு.
கலைஞர் நூற்றாண்டில் அவர் நடத்திய தமிழ்நாடு மாணவர் மன்றம் மீண்டும் உருவாக்கப்பட்டு கல்லூரிகளில் தனி அமைப்பாகச் செயல்பட ஏற்பாடு.
மாவட்ட வாரியாகப் பேச்சுப் போட்டி நடத்தி, மாநில அளவில் சிறந்த 100 பேச்சாளர்களைக் கண்டறிந்து கழக சொற்பொழிவாளர்களாக மாற்றுதல்.
மண்டல வாரியாக பேச்சாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு நடத்துதல்.
கலைஞர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய இடங்களான கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், சமத்துவபுரங்கள் ஆகியவற்றை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அந்த இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துதல்.
‘கலைஞர் 100’ என்ற பெயரில் பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் பக்கங்களைத் தொடங்கி பரப்புதல்.
கலைஞர் கருணாநிதியின் முக்கியமான படைப்புகளை மாணவர்களுக்குப் பரிசாக வழங்கிட ஏற்பாடு.
மகளிர் அணியின் சார்பில், ‘கலைஞரும், மகளிர் மேம்பாடும்’ எனும் தலைப்பில் பயிற்சிப் பாசறைகள் மற்றும் பயிலரங்கங்கள் நடத்துதல்.
கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்களை மாவட்டந்தோறும் காட்சிப்படுத்துதல்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை அட்டவணைப்படுத்தி கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது.
கலைஞர் கருணாநிதி
95 ஆண்டுகள் வாழ்ந்த கருணாநிதி வாழ்வின் கடைசி நொடி வரை தீவிர அரசிய-லில் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவர் எப்போது முதல் அரசியலி-ல் ஈடுபட்டார் என்பது பலருக்கும் தெரியுமா என்பது சந்தேகம்தான். முதன்முதலி-ல் அவருக்கு அரசியல் உணர்வு துளிர்விட்டது அவரின் 12-வது வயதில்.
பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருந்த நீதிக்கட்சித் தலைவர் பனகல் அரசரைப் படித்துத்தான் கருணாநிதிக்கு அரசியல் ஆர்வம் வந்தது. சமூக ஏற்றத்தாழ்வுகளை நீதிக்கட்சி எப்படிக் களைய முனைந்தது என 50 பக்கங்களில் சுருக்கமாக விளக்கியது அந்த நூல்.
தீவிர அரசியலி-ல் கருணாநிதி பங்கெடுக்க மிக முக்கியக் காரணம் 1938-இல் மாநிலம் முழுக்க வெடித்துக் கிளம்பிய இந்தி எதிர்ப்பு போராட்டம். திருவாரூரில் பள்ளி மாணவர்களை ஒன்று திரட்டி போராட்டத்தில் இறங்கினார். அப்போதுதான் முதன்முதலாக கவிதைகள் எழுதவும், முழக்கங்கள் எழுதவும் ஆரம்பித்தார்.
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், அந்த வழியாக வந்த தனது ஆசிரியருக்கும் ஒரு துண்டறிக்கையை நீட்டினார்.
மறுநாள் அந்த ஆசிரியர் இந்தி எழுத்துகளை கரும்பலகையில் எழுதி, படிக்கச் சொன்னார். தெரியாமல் நின்ற கருணாநிதிக்கு கன்னத்தில் ஓங்கி அறைவிட்டார் ஆசிரியர். பின்னாளில் அதே ஆசிரியர் சென்னை மயிலாப்பூரில் கூட்டிய ஹோமியோபதி மருத்துவர்கள் மாநாட்டுக்கு கருணாநிதியை தலைமையேற்க அழைத்தார். அப்போது அவர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார்.
பள்ளி மாணவராக இருக்கும்போதே ‘மாணவநேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை தொடங்கினார். அடித்தல் திருத்தல் இல்லாமல், இலக்கணப் பிழை இல்லாமல் 8 பக்கங்களுக்கு இதழைத் தயாரித்து, அதை 50 பிரதிகள் எடுத்து சக மாணவர்கள் மத்தியில் விற்றார்.
இன்றைக்கு திமுக-வின் அதிகாரபூர்வ நாளேடாக வெளி வந்திருக்கிற முரசொலி- 1942-இல் தொடங்கப்பட்டது. முதலில் மாதாந்தரப் பிரசுரமாக முரசொ-லியைத் தொடங்கினார். சாதியச் சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள், மேலாதிக்கப் போக்குகள், பழைமைவாதங்களை மிகக் கடுமையாகத் தாக்கி முரசொலி-யில் எழுதிவந்தார்.
முரசொ-லிக்கு பெரும் வரவேற்பு கிடைக்கவே, ‘இளைஞர்களின் தியாகம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதி, அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு அனுப்பிவைத்தார். அடுத்த இதழிலேயே அந்தக் கட்டுரை வெளியானதால் மிகவும் உற்சாகமடைந்து, தனது எழுத்துப் பணிகளை தீவிரப்படுத்தினார் கருணாநிதி.
அடுத்த வாரமே திருவாரூருக்கு வந்த அண்ணா, கருணாநிதியை அழைத்துவரச் சொன்னார். ஆனால் அவரை நேரில் பார்த்த அண்ணாவுக்குப் பெரிய அதிர்ச்சி. ஏனென்றால், அப்போது கருணாநிதி பள்ளி மாணவர். பள்ளிப்படிப்பு முடியும்வரை எழுத்து வேலைகளை ஓரங்கட்டிவைத்துவிடுமாறு அண்ணா அவருக்கு அறிவுறுத்தினார்.
பள்ளி இறுதித் தேர்வில் மூன்று முறை முயன்றும் கருணாநிதியால் தேர்ச்சிபெற முடியவில்லை. ஆனால், உள்ளூர மிக மகிழ்ச்சியாகவே இருந்தார் கருணாநிதி. காரணம், இனியேனும் தடையின்றி அரசியல் பணிகளைச் செய்யலாம் என்று நினைத்தார். நாடகங்கள் எழுத ஆரம்பித்தார். அதன் மூலமாக திராவிடர் கழகத்தோடு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
எழுத்து, பேச்சு மூலம் மிகக்குறுகிய காலத்தில் திராவிடர் கழகத்தில் செல்வாக்கு பெற்றார் கருணாநிதி. அந்தச் சமயத்தில் புதுச்சேரியில் திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டின் அமைப்பாளராக கருணாநிதியை, பெரியார் நியமித்தார்.
காங்கிரஸ் கட்சியினர் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத் தினரைத் தாக்கினர். கருணாநிதியைச் சிலர் அடித்து தெருவோரம் வீசிவிட்டனர். கருணாநிதிமீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. கருணாநிதியைக் கண்டுபிடிக்க பெரியாரும் அண்ணாவும் தொண்டர் படையை அனுப்பிவைத்தார்கள். அந்த வழியாகச் சென்ற ஒரு குடும்பம் கருணாநிதியை மீட்டு, இஸ்லாமியர் போல அலங்கரித்து பெரியார் இருக்கும் இடத்துக்கு அனுப்பிவைத்தது. கருணாநிதியைப் பார்த்து கலங்கிப்போன பெரியார், காயத்துக்கு அவரே மருந்து போட்டுவிட்டாராம் அப்போது.
புதுச்சேரி சம்பவத்தை அடுத்து தன்னுடன் ஈரோட்டுக்கு வருமாறு கருணாநிதியை அழைத்தார் பெரியார். உடனடியாக திருவாரூருக்குச் சென்று, குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு ஈரோட்டுக்குச் சென்றார். பெரியார் நடத்திய ‘குடிஅரசு’ பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.
பெரியார் வீட்டில் 11 மாதங்கள் மட்டும்தான் கருணாநிதி தங்கியிருந்து குடிஅரசு இதழில் பணியாற்றினார்.
அங்கு பணியாற்றும்போதுதான் ‘ராஜகுமாரி’ படத்துக்கு வசனம் எழுத கருணாநிதிக்கு அழைப்பு வந்தது.
‘ராஜகுமாரி’ படம்தான் திரைப்பட வசனகர்த்தாவாக கருணாநிதி அறிமுகமான முதல் படம். எம்ஜிஆர் கதாநாயகனாக அறிமுகமான முதல் படமும் இதுதான். கருணாநிதியை வசனம் எழுத அழைத்த இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமிக்கும் அதுதான் முதல் படம்.
‘ராஜகுமாரி’ படம் அடைந்த வெற்றியால் ஜூபிடர் ஃபி-லிம்ஸ் நிறுவனத்தின் படத்துக்குக் கதை எழுத கருணாநிதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். மனைவி பத்மாவுடன் கோவை சிங்காநல்லூருக்குக் குடியேறினார். அவர் கதை எழுதி உருவான 2-வது படம் ‘அபிமன்யு’.
‘அபிமன்யு’ படம் வெளியானவுடன் மனைவியையும், நண்பர்களையும் படம் பார்க்க அழைத்துக்கொண்டு சென்றார். ஆனால் கதை, வசனம் என்ற இடத்தில் கருணாநிதியின் பெயருக்கு பதிலாக ஏ.எஸ்.ஏ.சாமியின் பெயர் இருந்தது. கருணாநிதி பெரிய பிரபலம் ஆன பிறகு பெயர் போடுவதாகக் கூறியது ஜூபிடர் ஃபிலி-ம்ஸ் நிறுவனம். பெரிய நிறுவனம் என்றுகூடப் பார்க்காமல் உடனே அங்கிருந்து வெளியேறிவிட்டார் கருணாநிதி.
திருவாரூருக்கே திரும்பிய கருணாநிதி முரசொ-லியை மீண்டும் தொடங்கினார்.
அந்தச் சமயத்தில் இந்திய விடுதலை தொடர்பாக பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கருத்து மாறுபாடுகள் ஏற்படத் தொடங்கியிருந்தன. இருவரும் தங்களது கட்டுரைகளில் வெளிப்படுத்திய மோதல் போக்கு

அந்தச் சமயத்தில் இந்திய விடுதலை தொடர்பாக பெரியாருக்கும் அண்ணாவுக்கும் கருத்து மாறுபாடுகள் ஏற்படத் தொடங்கியிருந்தன. இருவரும் தங்களது கட்டுரைகளில் வெளிப்படுத்திய மோதல் போக்குகளை தணிக்கும்விதமாக முரசொ-லியில் எழுதினார் கருணாநிதி.
முதல் மனைவி பத்மாவின் மறைவு, காந்தி படுகொலை, பெரியார்- அண்ணா பிளவு என 1947 முதல் 1948 வரை கருணாநிதியின் சொந்த வாழ்விலும், அரசியல் வாழ்விலும் பல சோகங்கள் நடந்தேறின.
1948-ஆம் ஆண்டு, செப்டம்பர் 15-ஆம் நாள் தயாளு அம்மாளை மணம் முடித்தார் கருணாநிதி. அப்போது வருபவர்களை வரவேற்க வீட்டு வாசலி-ல் நின்றிருந்த கருணாநிதி, அந்த வழியாக இந்தி எதிர்ப்பு ஊர்வலம் வருவதைப் பார்த்து, அவர்களோடு சேர்ந்து ஊர்வலத்துக்குச் சென்றுவிட்டார். போராட்டக் களத்துக்குச் சென்று உறவினர்கள் அவரை அழைத்து வந்தனர்.
1949-ஆம் ஆண்டு, செப்டம்பர் 17-ஆம் தேதி திராவிடர் கழகம் இரண்டாக ஆனது. அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. அந்தச் சமயத்தில் கருணாநிதி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் தங்கி பணியாற்றிக்கொண்டிருந்தார். கருணாநிதி அண்ணாவின் பக்கம் நின்றார்.
‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரி குமாரி’ என கருணாநிதி கதை, வசனம் எழுதிய படங்கள் பெரும் வெற்றிபெற்றன. 10,000 ரூபாய் சம்பளம் தருகிறேன், சென்னைக்கு வந்து ‘மணமகள்’ படத்துக்கு வசனம் எழுதுமாறு கருணாநிதியை அழைத்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். 1950-இல் 10,000 ரூபாய் என்பது மிகப்பெரிய ஊதியம். சென்னைக்கு வந்துவிட்டால் கலைப்பணியுடன் அரசியலையும் கவனிக்கலாம் என கலைவாணர் கூறியதால் உடனடியாகக் கிளம்பி வந்துவிட்டார்.
சென்னைக்குக் குடியேறிய பிறகு கருணாநிதி கற்றுக்கொண்ட மிக முக்கிய அம்சம், நேர மேலாண்மை. விடியற்காலையில் எழுந்து காலை உணவுக்கு முன்பே, எழுத்துப் பணிகளை முடிப்பார். தொண்டர்களைச் சந்திப்பது முதல் நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவது வரை அனைத்தையும் அவர் கடைசிவரை கச்சிதமாகச் செய்துகொண்டிருந்தார்.
1952-இல் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒருவருக் கொருவர் கடும் வார்த்தைப்போரில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒரே பாணியில் போராட்டம் நடத்தினர். திருச்சி ரயில் நிலையத்தில் பெரியாரும் கருணாநிதியும் ஒன்றாக நின்று இந்தி எழுத்துகளை கறுப்பு மை பூசி அழித்தனர்.
1952-இல் கருணாநிதி கதை, வசனம் எழுதி வெளியான, ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. சிவாஜி கணேசன் நடித்த முதல் திரைப்படம் அதுதான்.
கிட்டத்தட்ட 72 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும் இன்றளவிலும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வசனங்கள் பேசப்படுகின்றன.
1953-இல் திமுக நடத்திய மும்முனைப் போராட்டம் கருணாநிதியின் அரசியல் வாழ்வில் மிக முக்கியமானது.
ராஜாஜியின் குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு, தமிழர்கள் பற்றிய நேருவின் கருத்துக்கு எதிர்ப்பு, டால்மியாபுரம் ரயில் நிலையத்தை ‘கல்லக்குடி’ எனப் பெயர் மாற்றுவது இந்தப் போராட்டத்தின் நோக்கம். ‘கல்லக்குடிகொண்ட கருணாநிதி’ என நாகூர் ஹனிபா குரலில் இப்போதும் எதிரொலி-த்துக்கொண்டேயிருக்கிறது அந்த வரலாறு.
திரைப்படங்கள் மூலம் கிடைத்த வருவாயில் 1953-இல் சரபேஸ்வரர் என்பவரிடமிருந்து கோபாலபுரம் வீட்டை வாங்கினார் கருணாநிதி. மார்ச் மாதமே இந்த வீட்டை கருணாநிதி வாங்கிவிட்டாலும், ஜூன் மாதத்தில் சரபேஸ்வரரின் பேத்தி திருமணத்தை அதே வீட்டில் நடத்திக்கொள்ள அனுமதித்தார். கடைசிவரை அந்த வீட்டில்தான் இருந்தார். அவருடைய மனைவி தயாளு அம்மாள் இப்போதும் அந்த வீட்டில்தான் இருக்கிறார்.
1954-இல் பரமக்குடியில் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு, பின்னிரவில் அங்கிருந்து காரில் திருச்சிக்குப் புறப்பட்டார் கருணாநிதி. ஓட்டுநர் சாலை வளைவை கவனிக்காமல் மைல் கல் மீது மோதிவிட்டார்.
அந்த விபத்தில் கருணாநிதியின் வலது கண் பாதிக்கப்பட்டது. பல மாதங்கள் வலி-யால் துடித்து, பல அறுவை சிகிச்சைகள் செய்ய நேர்ந்தது. அதற்குப் பிறகுதான் கறுப்புக் கண்ணாடி அணிய ஆரம்பித்தார்.
1957-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலி-ல் தான் முதன்முதலாக தி.மு.க போட்டியிட்டது. கருணாநிதி குளித்தலை தொகுதியில் போட்டியிட்டார்.
அண்ணா, அன்பழகன், கருணாநிதி உட்பட 15 பேர் மட்டுமே முதல் தேர்த-லில் வெற்றிபெற்றனர்.
அப்போதி-ருந்து மறையும் வரை போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பெற்றவர் கருணாநிதி.
அடுத்து நடைபெற்ற மெட்ராஸ் மாநகராட்சித் தேர்த-லில் காங்கிரஸைத் தோற்கடித்து தி.மு.க வெற்றிபெற்றது. மெட்ராஸ் மாநகராட்சியின் தேர்தல் பொறுப்பை ஏற்று, நுட்பமாகச் செயல்பட்டு வெற்றியைத் தேடிக் கொடுத்ததற்காக கருணாநிதிக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்தினார் அண்ணா.
1962 தேர்தலி-ல் திமுக 50 உறுப்பினர் களுடன் பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது. அண்ணா அந்தத் தேர்தலி-ல் தோல்வியுற்று, பின்னர் மாநிலங்களவை உறுப்பினரானார். நெடுஞ்செழியன் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவ ராகவும், கருணாநிதி துணைத் தலைவராகவும் அமர்ந்தனர்.
பொருளாதார இன்னல்களை நீக்க இயலாத மத்திய, மாநில அரசு களைக் கண்டித்து தி.மு.க எல்லா மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அண்ணாவும் கருணாநிதியும் மூன்று மாதங்கள் முதல் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை பெற்றார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பே அண்ணா விடுதலையானார். கருணாநிதி சிறையிலிருந்து வந்தபோது அவரே நேரடியாகச் சென்று வரவேற்றார். கருணாநிதியைப் பெரிய பதவியில் அமர்த்திவிட அண்ணா தயாராகி விட்டார் என்பதை அந்தச் சம்பவம் உணர்த்தியது. தி.மு.க-வின் பொருளாளராக உயர்ந்தார் கருணாநிதி.
1962-இல் சீனப் போரை எதிர்கொள்ள இந்திய பாதுகாப்பு நிதியை அரசியல் கட்சிகள் திரட்டின.
அண்ணாவும் கருணாநிதியும் 35,000 ரூபாயைத் திரட்டிக் கொடுத்தனர்.
அன்றைய அரசியல் கட்சிகள் கொடுத்த நன்கொடையில் இதுவே மிக அதிகம். சீனப் போரை அடுத்துதான் திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டது திமுக.
திமுக-வின் பொருளாளராக இருந்த கருணாநிதி பெரும் முயற்சி எடுத்து, நிதி திரட்டி, சென்னை அண்ணாசாலையில் கட்சிக்காக ஓர் அலுவலகத்தைக் கட்டினார். ராயபுரத்தி-லிருந்து திமுக -வின் தலைமையகம் அண்ணாசாலைக்கு மாறியது. அதுதான் இன்றைய ‘அன்பகம்’.
இந்தியில்தான் கடிதப் பரிமாற்றம் இருக்க வேண்டுமென்ற இந்திரா காந்தி அரசின் முடிவுக்கு எதிராக 1967-இல் மீண்டும் இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. 3,800 மாணவர்கள் உட்பட 7,000 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
டி.ஐ.ஆர் என்ற அடக்குமுறைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு கருணாநிதி பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
1967 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள 10 லட்சம் ரூபாய் நிதி திரட்ட திமுக முடிவெடுத்தது.
அதற்கு திமுக-வின் முப்பெரும் விழாவை சாதகமாகப் பயன்படுத்தி, ‘காகிதப்பூ‘ என்ற நாடகத்தை எழுதினார் கருணாநிதி. மாநிலம் முழுவதும் நடந்த அந்த நாடகத்தில் கூடுதலாக 1 லட்சம் ரூபாய் சேர்த்து 11 லட்சம் ரூபாயாக வசூலானது. கேட்டதைவிடக் கூடுதல் நிதியைக் கொடுத்ததால் அண்ணாவும் பெரிதும் பாராட்டினார்.
ராஜாத்தி அம்மாளை கருணாநிதி முதன்முறையாக சந்தித்ததும் ‘காகிதப்பூ’ நாடக அரங்கேற்றத்தில்தான்.
பின்னாளில் ராஜாத்தி அம்மாளை 2-வது மனைவியாக கருணாநிதி திருமணமும் செய்துகொண்டார்.
1967 சட்டமன்றத் தேர்த-லில் திமுக முதன்முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய கையோடு பெரியாரைச் சந்திக்க திருச்சிக்குப் புறப்பட்டார் அண்ணா. அப்போது நெடுஞ்செழியன், அன்பில் தர்ம-லிங்கம் ஆகியோருடன் கருணாநிதியும் உடனிருந்தார். தனது அமைச்சரவையை, பெரியாருக்கும் அவரின் புரட்சிகர சிந்தனைகளுக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றார் அண்ணா.
திராவிடர் கழகத்திலி-ருந்து பிரிந்து வந்த பின்னர் திமுக-வினரும், திக-வினரும் எலி-யும் பூனையுமாகச் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.
தேர்த-லில்கூட பெரியார், காமராஜரைத் தான் ஆதரித்தார். ஆனால், வெற்றிபெற்ற கையோடு அண்ணா பெரியாரைச் சந்திக்கச் சென்றதால் மிகப்பெரிய உணர்வலைகளை அது ஏற்படுத்தியது. அந்த வரலாற்றை கருணாநிதி பலமுறை நினைவுகூர்ந்திருக்கிறார். ஒருமுறைகூட உணர்ச்சிவயப்படாமல் அதைச் சாதாரணமாக அவரால் சொல்ல முடிந்ததே இல்லை.
‘எனக்கு காமராஜர் மீது மதிப்பு உண்டு. ஆனால், காங்கிரஸில் உள்ள மற்றவர்களுக்கு அது பொருந்தாது. ஆனால், திமுக-வில் உள்ள எனது சகோதரர்கள் அனைவர் மீதும் எனக்கு மதிப்பு உண்டு’ எனப் பெரியார் அப்போது அறிக்கை ஒன்றை வெளியிட, திமுக-வுக்கும் திக-வுக்கும் இடையில் நீடித்த மனஸ்தாபங்கள் முடிவுக்கு வந்தன.
முதல் அமைச்சரவையிலேயே பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் கருணாநிதி.
அண்ணா, நெடுஞ்செழியனுக்கு அடுத்து 3-வது இடத்தில் அவர் இருந்தார்.
திமுக ஆட்சியமைத்த அடுத்த ஆண்டே அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட, கட்சியும் ஆட்சியும் நிலைகுலைந்தன. இரண்டையும் தாங்கிப் பிடிக்கவேண்டிய இடத்தில் நெடுஞ்செழியனைவிட கருணாநிதியின் பங்களிப்புகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.
‘பட்ட கையிலேயே படும்’ என்பதைப் போல அண்ணா உடல்நலம் குன்றியிருந்த வேளையில், 1968, டிசம்பர் 25-ஆம் தேதி கீழ்வெண்மணியில் 44 பட்டியலி-னத்தவர்கள் குடிசையோடு வைத்து கொளுத்தப்பட்ட கொடூரம் நடந்தது. வரலாற்றில் கரும்புள்ளியாக மாறிப்போன அந்தச் சம்பவம் அன்றைய திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. அன்றைய ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சத்தியவாணி முத்துவை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றார் கருணாநிதி.
1969, பிப்ரவரி 3-இல் அண்ணா மறைந்தார். அரசமைப்பு விதிகளின்படி அன்றைய இரவே நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வராக்கப்பட்டார். அண்ணாவின் உடலை எரியூட்ட வேண்டுமென குடும்பத்தினர் முடிவுசெய்தனர்.
ஆனால், அண்ணாவுக்கு ஒரு மதிப்புமிக்க நினைவிடத்தை அமைக்க வேண்டுமென குடும்பத்தினரை தி.மு.க-வினர் மூலம் சம்மதிக்க வைத்து மெரினா கடற்கரையைத் தேர்ந்தெடுத்தார் கருணாநிதி.
அண்ணாவுக்கு அஞ்ச-லி செலுத்த அகில இந்திய வானொலி-யில் 15 நிமிட கவிதை ஒன்றை வாசித்தார் கருணாநிதி. எதையும் தாங்கும் அண்ணாவின் இதயத்தை இரவலாகக் கேட்டு கவிதையை நிறைவு செய்தார். அந்த இரங்கற்பா இன்றள விலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
அண்ணா மறைவை அடுத்து கட்சிக்கும் ஆட்சிக்கும் நிரந்தரத் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் திமுக-வுக்கு ஏற்பட்டது. அந்த இடத்தைப் பிடிக்க நெடுஞ்செழியன் விரும்பினார்.
ஆனால் “கட்சிக்கு முடிவெடுக்கும் ஆற்றல் பெற்ற தலைவர் தேவை. இந்தச் சூழலி-ல் கருணாநிதியைவிட உறுதியோடு செயலாற்றக்கூடியவர் இல்லை” என்று கூறினார் பெரியார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆதரவு எண்ணிக்கை தனக்குச் சாதகமாக இல்லை என்பதை உணர்ந்த நெடுஞ்செழியன் போட்டியிலி-ருந்து விலகிக்கொண்டார். கருணாநிதி கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைவரானார்.
கருணாநிதி முதல்வரானதும், மத்திய அரசோடு அவர் இணக்கமாக இருப்பாரா அல்லது மோதல்போக்கைக் கையாள்வரா என அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு சிறிய தயக்கம் இருந்தது. “உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம், இதில் எதிர்ப்போ பகையோ இல்லை” என்றார் கருணாநிதி. இப்போதும்கூட மு.க.ஸ்டாலி-ன் இதை அடிக்கடிச் சொல்-லி வருகிறார்.
கருணாநிதி தலைவரான பிறகு நெடுஞ்செழியன் கட்சியிலும், ஆட்சியிலும் விலகியே நின்றார்.
அண்ணா இடத்தில் கருணாநிதியை வைத்துப் பார்க்க அன்பழகனுக்கும் அப்போது சிறிய தயக்கம் இருந்தது. அந்தச் சமயம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய கருணாநிதி, ‘நான் அண்ணாவுக்கு இணை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அன்பழகனின் பாராட்டைப் பெறும்விதத்தில் கடுமையாக உழைப்பேன். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை’ என்றார். அடுத்த ஆறு மாதங்களில் கருணாநிதியைத் தலைவராக ஏற்றுக்கொண்டார் அன்பழகன். கருணாநிதி மறையும் வரை அவருக்கு மிகப்பெரிய தூணாகவும் இருந்தார்.
தமிழ்நாட்டில் நிலவிய வறட்சியை எதிர்கொள்ள மத்திய அரசிடம் 5 கோடி ரூபாய் கேட்டு டெல்-லிக்குச் சென்றிருந்தார் கருணாநிதி. ஆனால், ‘என்னிடம் பணம் காய்க்கும் மரம் எதுவும் இல்லை’ என துணைப் பிரதமர் மொரார்ஜி தேசாய் கூறிய கருத்தால் கொதிப்படைந்தார் கருணாநிதி. ‘பணம் காய்க்கும் மரம் உலகத்திலேயே எங்கும் இல்லை’ என்று பதிலடி கொடுத்துவிட்டு எழுந்து வந்தார்.
அதன் பிறகுதான் மத்திய, மாநில அரசுகளின் உரிமைகளை வரையறுக்க ராஜமன்னார் கமிஷன், திட்ட கமிஷன் போன்றவற்றை ஏற்படுத்தினார்.
மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய ‘நீராருங் கடலுடுத்த...’ பாடலை தமிழ்நாட்டின் தேசியகீதமாக 1970-இல் அறிவித்தார் கருணாநிதி. ‘தமிழைக் கொண்டாடும்போது பிற மொழிகளை இழித்துப் பேசக் கூடாது’ என, அதி--ருந்த ‘ஆரியம் உலக வழக்கொழிந்து போகும்’ என்ற வரிகளை மட்டும் நீக்கிவிட்டார்.
தேர்தலி-ல் வெற்றி பெற்ற பிறகு, மோசமான சாலைகளால் பல ஆண்டுகளாக ஓடாமல் நின்றுபோன திருவாரூர் தேரை 4 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி சரிசெய்தார். சாலைகளையும் சீரமைத்து தேரை ஓடச்செய்தார்.
1973-இல் பெரியார் மறைந்தபோது அவருக்கு அரசு மரியாதை செலுத்த கருணாநிதி விரும்பினார். பெரியார் அரசுப் பதவி எதிலும் இல்லை என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
ஆனால் ‘மகாத்மா காந்தி எந்தப் பதவியில் இருந்தார்... பெரியாருக்கு அரசு மரியாதை கொடுப்பதால், ஆட்சி கலைக்கப்படுமாயின், அதற்கான விலையை கொடுக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று கூறிவிட்டு, பெரியாருக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை கொடுத்தார். மார்க்ஸ் மறைந்தபோது, ‘மார்க்ஸின் மூளை சிந்திப்பதை நிறுத்திக்கொண்டது’ என ஏங்கெல்ஸ் எழுதிய உலகப் புகழ்பெற்ற இரங்கற்பாவுக்கு ஈடாக, ‘பெரியார் தனது சுற்றுப்பயணத்தை நிறுத்திக்கொண்டார்’ என இரங்கற்பா வடித்தார் கருணாநிதி.
1969-லி-ருந்து அண்ணா மறைந்து கருணாநிதி முதல்வரானது முதல் 1976 வரையிலான அவரது ஆட்சியில் பல முக்கியமான பணிகளைச் செய்தார். தனியார் வசமிருந்த பேருந்துப் போக்குவரத்தை நாட்டுடைமை யாக்கி, அனைவருக்கும் பொதுப் போக்குவரத்தை சாத்தியப்படுத்தினார்.
அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதிகள் கொண்டு சேர்க்கப்பட்டன; 1,500 பேருக்கு மேல் வாழும் அனைத்துக் கிராமங்களுக்கும் சாலைகள் போடப்பட்டன. குடிசை மாற்று வாரியம், குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் போன்றவற்றைத் தோற்றுவித்தார் கருணாநிதி மனிதனை மனிதன் இழுத்துச்செல்லும் கை ரிக்ஷா முறை ஒழிப்பு, யாசகர்கள் மறுவாழ்வுத் திட்டம் போன்ற கருணாநிதி உருவாக்கிய திட்டங்கள் இன்றவிலும் பேசப்படுகின்றன. இந்தியாவில் முதன்முறையாக காவல்துறை ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகம், பி.யூ.சி வரை இலவசக் கல்வித் திட்டங்களையும் கருணாநிதி செயல்படுத்தினார்.
மே தினத்துக்கு ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையும் கருணாநிதியின் 1971-76 வரையிலான ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்டதுதான். சேலம் இரும்பு உருக்காலை,நெய்வே-லி மின் திட்டம், சிட்கோ, சிப்காட், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் என தொழில்துறை வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
குழந்தைகளுக்கான கருணை இல்லம், நில உச்சவரம்புச் சட்டம், மனுநீதித் திட்டம், இட ஒதுக்கீட்டைப் பரவலாக்கியது என குறிப்பிடத்தக்க பல திட்டங்களையும் சாதனைகளையும் செய்தார் கருணாநிதி.
திட்டங்கள் தீட்டுவது, செயல்படுத் துவது போன்ற பணிகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் பிளவு, காவிரி நதிநீர் பிரச்னை ஆகியவை அரசியல்ரீதியான நெருக்கடிகளை கருணாநிதிக்குக் கொடுத்துக்கொண்டேயிருந்தன.
1975, ஜூன் 25-ஆம் தேதி அவசரநிலையைப் பிரகடனப்படுத் தினார் இந்திரா காந்தி. எமர்ஜென்சி காமராசரையும் கருணாநிதியையும் ஒன்று சேர்த்தது. இருவரும் வெவ்வேறு காலங்களில் இந்திரா காந்தியை ஆதரித்ததற்கு இன்று நாடு விலை கொடுக்கிறது என கருணாநிதியிடம் கூறினார் காமராசர்.
எமர்ஜென்சி காலத்தில் பத்திரிகைகள் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாகின. எமர்ஜென்சிக்கு எதிராக காமராசரின் கருத்துகளை முரசொ-லியில் வெளியிட்டார் கருணாநிதி. காமராசரின் கருத்துகள் முரசொலி-யில் முதன்முதலாக வெளியானது அப்போதுதான்.
இந்திரா காந்தியின் செயல்பாடுகளால் விரக்தியுற்று காணப்பட்ட காமராசர், 1975-ஆம் ஆண்டு, அக்டோபர் 2-ஆம் தேதி, அதாவது காந்தி பிறந்தநாளில் காலமானார். காந்தியவாதியான காமராசரை சென்னை காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்து, அரசு மரியாதை கொடுத்தார் கருணாநிதி.
எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு வெளி மாநிலத் தலைவர்களுக்கு தமிழ்நாட்டில் அடைக்கலம் கொடுத்திருந்தார் கருணாநிதி. ஒருகட்டத்தில் ஆட்சி கலைக்கப்படலாம் என்ற நிலையை நோக்கி, நகர்ந்தவுடன், பாதுகாப்பாக அனைவரும் வெளியேறிவிடுமாறு கேட்டுக்கொண்டார். அவர் எதிர்பார்த்தது போலவே 1976, ஜனவரி 30-இல் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது.
கருணாநிதியைத் தவிர அவரைச் சுற்றியிருந்த, அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோபாலபுரம் வீட்டுக்குச் சென்ற போலீஸார், ஸ்டாலி-னைக் கைது செய்வதற்குத் தேடினர். ஒரு நிகழ்ச்சியில் இருந்த ஸ்டா-லின் மறுநாள் வீட்டுக்குச் சென்றவுடன், கருணாநிதியே அவரை போலீஸாரிடம் அனுப்பிவைத்தார். ஸ்டா-லினுக்கு அப்போதுதான் திருமணமாகிச் சில மாதங்கள் ஆகியிருந்தன. அவரின் மனைவி துர்கா ஸ்டாலி-ன் கருவுற்றிருந்தார். அடுத்த மூன்று நாள்களில் முரசொ-லி மாறனும் கைதுசெய்யப்பட்டார் 1976, மே மாதத்தில் தணிக்கைகள் மேலும் தீவிரமாகின. அண்ணா பெயரைக் குறிப்பிடக்கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கொதித்துப்போன கருணாநிதி, அமெரிக்கத் தூதரகம் அருகிலி-ருந்து அண்ணாசிலை நோக்கி ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு துண்டறிக்கைகளை வழங்கினார். சுமார் நான்கு மணி நேரம் நீடித்த அந்தப் போராட்டம்தான் எமர்ஜென்சிக்கு எதிராக நடந்த ஒரே மக்கள் திரள் போராட்டம்.
1977-இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலி-ல் இந்திரா காந்தி அதிமுக -வுடனும், சி.பி.ஐ-உடனும் சேர்ந்து தமிழ்நாட்டில் கூட்டணி வைத்தார். இந்த அணி 39 இடங்களில் 34 இடங்களைக் கைப்பற்றியது. அதே ஆண்டில் நெடுஞ்செழியன், மாதவன், ராஜாராம், சி.ப.ஆதித்தனார் சேர்ந்து தனிக்கட்சி தொடங்கியதால் கருணாநிதிக்குச் சவால்கள் அதிகரித்தன.
1977-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலி-ல் நான்கு முனைப்போட்டி உருவானது. அதிமுக 129 இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. திமுக 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சி யானது. அடுத்த 12 ஆண்டுகள் கருணாநிதிக்கு வனவாசம்போல அமைந்தன. 1987-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறையும் வரை அதிமுக ஆட்சியே நீடித்தது.
எம்ஜிஆருக்கும் கருணாநிதிக்கு மிடையில் அரசியல் போட்டி ஆழமாக இருந்தாலும், இருவருக்குமிடையில் நல்லுணர்வுவே இருந்தது. சட்டசபையில் திறக்கப்படவிருந்த காமராசரின் படத்துக்கு வாசகம் எழுதித் தருமாறு முதல்வராக இருந்த எம்ஜிஆர்., கருணாநிதியிடம்தான் கேட்டார். ‘உழைப்பே உயர்வு தரும்’ என எழுதிக்கொடுத்தார் கருணாநிதி.
சத்யபாமா கல்வி நிறுவனர் ஜேப்பியார் ஒருமுறை எம்ஜிஆருடன் காரில் செல்லும்போது ‘கலைஞர்’ என்று சொல்லாமல் ‘கருணாநிதி’ என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் மிகப்பெரும் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை ஜேப்பியார் அவமதித்துவிட்டதாக காரி-லிருந்து கீழே இறக்கிவிட்டார் எம்ஜிஆர் என்று அரசியல் வட்டாரங்களில் இன்றளவும் பேசப்படுவது உண்டு.
1979-இல் திமுக-வையும் அதிமுக-வையும் இணைக்க பிஜு பட்நாயக் முயற்சி மேற்கொண்டார். கருணாநிதியையும், எம்ஜிஆரையும் ஆளுக்கு ஒரு பக்கம் அமரவைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். கருணாநிதியும் அன்பழகனும் ஆறு நிபந்தனைகளை வைத்தனர். பெயர் திமுக எனதான் இருக்க வேண்டும், அதிமுக கொடியில் அண்ணா இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளலாம், பொருளாதார இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் போன்றவை அதில் முக்கியமானவை.
திமுக- அதிமுக இணைப்புக்குச் சம்மதம் தெரிவித்த எம்ஜிஆர் இரண்டு கட்சிகளின் பொதுக்குழுவிலும் ஒப்புதல் பெற்று இணைத்துக்கொள்ளலாம் என பிஜு பட்நாயக்கிடம் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் அடுத்த 24 மணி நேரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். தான் உயிரோடு இருக்கும்வரை இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என மறுநாள் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூறிவிட்டார் எம்ஜிஆர்.
1987-இல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயல-லிதா அணி என இரண்டாகப் பிரிந்து மூன்று மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது. மத்தியில் போஃபர்ஸ் ஊழலால் ராஜீவ் காந்தியின் அரசும் ஆட்டம் கண்டது. ராஜீவ் காந்திக்கு எதிராக தேசிய முன்னணியை ஏற்படுத்தினார் வி.பி.சிங். அதில் திமுக-வும் ஓர் அங்கமாக இருந்தது.
1989 சட்டமன்றத் தேர்தலி-ல் மீண்டும் திமுக வெற்றிபெற்று கருணாநிதி முதல்வரானார். வி.பி.சிங் உள்ளிட்ட தேசிய முன்னணித் தலைவர்கள் முன்னிலையில் வள்ளுவர் கோட்டத்தில் பதவியேற்றார் கருணாநிதி.
பெண்களுக்குச் சொத்துரிமை, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு, ஏழைப் பெண்களுக்கான திருமண நிதி, கைம்பெண்கள் மறுமண நிதி, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு நிதி, கர்ப்பிணிகளுக்கு நிதி போன்ற திட்டங்களை அந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தினார் கருணாநிதி.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்தது, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு உருவாக்கம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம், பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டன.
நாட்டிலேயே முதன்முறையாக விவசாயி களுக்கு இலவச மின்சாரம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டதும் அப்போதுதான்.
1990-இல் தமிழகத்துக்கு வந்த வி.பி.சிங்குக்கு பிரமாண்ட வரவேற்பைக் கொடுத்தது தி.மு.க அரசு. அது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்கவில்லை. வைகோவின் இலங்கைப் பயணத்தால் ஈழ அரசியலும் புயலைக் கிளப்பிக்கொண்டிருந்த சமயம் அது. 1991, ஜனவரி 30-ஆம் நாள் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி திமுக அரசைக் கலைத்தார் அன்றைய பிரதமர் சந்திரசேகர்.
1991, மே 21- இ ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக இரண்டு இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. கருணாநிதி, பரிதி இளம் வழுதியைத் தவிர மற்ற அனைவரும் தோற்றனர். அதிமுக வெற்றிபெற்று ஜெயல-லிதா முதல்வரானார்.
1991-இல் கருணாநிதிக்கு தெரியாமலேயே வைகோ இலங்கைக்குச் சென்று வந்ததிலி-ருந்தே கட்சிக்குள் சலசலப்புகள் இருந்துவந்தன. 1993-இல் திமுக-விலி-ருந்து வைகோ நீக்கப்பட்டார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு மீண்டும் ஒரு பிளவை சந்தித்தது திமுக. வைகோவுடன் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் சென்றனர். திமுக தங்களுக்கே சொந்தம் என இருதரப்பும் சட்டப் போராட்டம் நடத்தின. 447 பொதுக்குழு உறுப்பினர்கள் வைகோவுடன் இருந்தனர். 907 பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாநிதியுடன் இருந்ததால் உதயசூரியன் சின்னமும், கட்சியும் கருணாநிதி அணிக்கே செல்லும் எனத் தீர்ப்பளித்தது தேர்தல் ஆணையம்.
கட்சி பெரும் பிளவைச் சந்தித்தபோதிலும் அடுத்த நடந்த நாடாளுமன்றத் தேர்தலி-ல் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வென்றது. 1996 சட்டமன்றத் தேர்த-லிலும் 172 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றது. அந்தத் தேர்த-லில் 177 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக 168 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. வைகோ சொந்தத் தொகுதியிலேயே தோற்றார். கருணாநிதியின், திமுக-வின் எழுச்சியையும் நிரூபித்தது அந்தத் தேர்தல்.
‘பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்’ என்ற இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத புதுமையான திட்டத்தையும் கொண்டுவந்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர அமைப்பு முறை என முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நிறைவேற்றினார்.
மெட்ராஸ் மாநகர் சென்னையாக பெயர் மாற்றப்பட்டதும் அப்போதுதான்.
சாலைகள், பாலங்கள் கட்டமைப்பு, கிராமங்களில் கான்கிரீட் சாலைகள், புதிய தொழில் கொள்கை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி பேருந்துகள், நீர்நிலைகளைத் தூர்வாருதல் எனத் தமிழ்நாட்டின் கட்டமைப்புகளை பலப்படுத்தும் பல திட்டங்களைச் செயல்படுத்தினார் கருணாநிதி.
குமரிக்கடலில் திருவள்ளுவருக்கு 133 அடியில் பிரமாண்ட சிலை, மதுரை உயர் நீதிமன்றக் கிளை, கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டுமானம் போன்றவையும் அந்த சமயத்தில்தான் மேற்கொள்ளப்பட்டன.
உலகமயமாக்கலி-ன் வேகத்துக்கு ஈடுகொடுத்து கணினி சார்ந்த படிப்பு களையும், தொழில்களையும் விரிவு படுத்தினார் கருணாநிதி. 2000-ஆம் ஆண்டில் சென்னையில் டைடல் பார்க்கைத் திறந்துவைத்தார்.
திமுக ஆட்சியின் ஐந்து ஆண்டுக்காலப் பணிகள், ஜெயலலி-தாவின் முந்தைய ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளால் மீண்டும் 2001 சட்டமன்றத் தேர்த-லில் திமுக எளிதாக வென்றுவிடும் என்றே கருணாநிதி எண்ணியிருந்தார். ஆனால் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது.
ஜெயலலிதா 2-வது முறையாக முதல்வரானார்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த சில நாள்களிலேயே கருணாநிதி கைது செய்யப்பட்டார். சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்ததாக ஒரு புகார் அளிக்கப்பட்டு, அதன்பேரில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, இரவு நேரத்தில் வீடு புகுந்து கருணாநிதியை போலீஸார் தூக்கிச் சென்றனர். அரசியல்ரீதியாக மிகக் கடும் விமர்சனங்களை இது ஏற்படுத்தியது.
கருணாநிதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இரண்டு வாரங்கள் அவர் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. முன்னதாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதியிடம் பத்திரிகையாளர் ஒருவர் ஒரு நோட்டுப் புத்தகத்தையும், பேனாவையும் நீட்டினார். ‘அநீதி வீழும்; அறம் வெல்லும்’ என அதில் எழுதினார் கருணாநிதி. அந்த வாசகம் இன்றளவிலும் பிரபலமானது.
2003-இல் பாஜக கூட்டணியிலி-ருந்து திமுக வெளியேறியது. பாஜக-வுக்கு எதிரான காங்கிரஸ் அணியை பலப்படுத்துவதில் மிக முக்கிய சக்தியாக கருணாநிதி விளங்கினார்.
அடுத்த 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தியாவை ஆளும் வாய்ப்பைப் பெற்றது காங்கிரஸ். 2008 ஈழப்போர் இறுதிக்கட்டம் வரை இந்தக் கூட்டணி எந்தச் சிக்கலும் இன்றி தொடர்ந்தது.
மீண்டும் 2006-இல் திமுக கூட்டணி வெற்றிபெற்று, கருணாநிதி முதலமைச்சரானவுடன் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, ரேஷனில் ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கினார். கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்தார். சத்துணவில் முட்டை சேர்த்தார்.
இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டு மலை கிராமங்களிலும் தொலைக்காட்சி இல்லாத வீடு இல்லை என்ற நிலையை ஏற்படுத்தினார். இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டில் மக்கள் செய்திகளை உள்வாங்கும் விகிதம் அதிகரித்திருப்பதாக அப்போது பல புள்ளிவிவரங்களும் வெளியாகின.
2006-11 ஆட்சிக்காலத்தில்தான் அனைத்துச் சாதி அர்ச்சகர் சட்டத்தையும் கருணாநிதி நிறைவேற்றினார். அந்தச் சட்டத்தின்கீழ்தான் 2022-ஆம் ஆண்டில் நியமனங்களைப் பிறப்பித்தார் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்துக்கு வரம்பு, சமச்சீர் கல்வி, நுழைவுத்தேர்வுகள் ரத்து எனக் கல்விரீதியாகவும் 2006 முதல் 2011 வரையிலான ஆட்சியில் பல முக்கியமான முடிவுகளை கருணாநிதி எடுத்தார். அருந்ததியர்களுக்கு 3% உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதும் அப்போதுதான்.
2007-க்கு பிறகு தனது பொதுவாழ்வில் கண்டிராத பல்வேறு நெருக்கடிகளையும், துன்பியல் சம்பவங்களையும் கருணாநிதி எதிர்கொள்ள நேர்ந்தது. ஈழப் போரின் இறுதிக்கட்டம் உணர்வுபூர்வச் சிக்கலாக மாறியது. நிர்வாகிகளின் செயல்பாடுகளும் அதிருப்திகளை சம்பாதித்துக் கொடுத்தன. ஆயினும் 2009 நாடாளுமன்றத் தேர்த-லில் திமுக கூட்டணியே வெற்றிபெற்றது.
2009 நாடாளுமன்றத் தேர்த-ல் வெற்றி 2011-இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலி-ல் நீடிக்கவில்லை. அந்தத் தேர்தலி-ல் காங்கிரஸுக்கு எப்படி 63 இடங்களை கருணாநிதி ஒதுக்கினார் என்பது இன்றளவிலும் விமர்சகர்கள் வைக்கும் கேள்வி.
கட்சி நிர்வாகத்தைச் சீர்செய்யவேண்டிய நிலைமை கருணாநிதிக்கு ஏற்பட்டது. பல்வேறு காரணங்களால் மு.க.அழகிரி திமுக-வி-லிருந்து நீக்கப்பட்டார். நீண்ட சட்டப் போரட்டத்தால் 2-ஜி வழக்கிலி-ருந்து திமுக 2017 டிசம்பரில் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும் அதற்காகப் பெரிய விலையை கருணாநிதியும், திமுக-வும் கொடுக்க நேர்ந்தது.
2011-க்குப் பிறகு கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் அவர் பெயரில் அறிக்கையோ, செய்தியோ இல்லாத நாள் இல்லை என்ற நிலைதான் இருந்தது. ஆனாலும் மரணப் படுக்கைக்குச் செல்லும்வரை அவரின் அரசியல் பணிகள் ஓயவே இல்லை.
எம்.ஜி.ஆரின் அரசியல் எழுச்சி, ராஜீவ் படுகொலை, வைகோவின் பிளவு எனப் பலமுறை கருணாநிதி சரிவுகளைக் கண்டிருந்தாலும் பீனிக்ஸ் பறவைபோல ஒவ்வொருமுறையும் எழுந்துகொண்டேயிருந்தார். 2011-க்குப் பிறகு முதுமை அவரை முழுமையாக முடக்கிவிட்டது. 2018, ஆகஸ்ட் 8-இல் தனது 95-வது வயதில் கலைஞர் மறைந்தார்.
அண்ணா, பெரியார், ராஜாஜி, காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலி-தா வரை கருணாநிதி வாழ்ந்த காலத்தில் மறைந்த தலைவர்கள் ஏராளம்.
அவர்களுக்கு, கருணாநிதி எழுதிய இரங்கற்பாவும் மிக முக்கியமானவை. ‘எல்லோருக்கும் இரங்கற்பா எழுதிய கலைஞர், எனக்கு மட்டும் எழுதக் காத்திருக்காமல் போய்விட்டாரே’ எனக் கண்ணீர்விட்டார் அன்பழகன் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். வாழ்நாள் முழுவதும் இட ஒதுக்கீட்டு உரிமைகளுக்குப் போராடியவர்,சட்டப் போராட்டம் நடத்தியவர், ஒவ்வொரு சமூகத்துக்கும் பார்த்துப் பார்த்து இட ஒதுக்கீட்டை வழங்கியவர் கருணாநிதி. கடைசியில் மெரினாவில் அண்ணாவுக்கு அருகில் அவருக்கான இடத்தையும் அப்படி சட்டப் போராட்டம் நடத்தித்தான் பெற்றார்.
கலைஞரின் சாதனைகள் அரசு போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கியது.
பஸ் போக்குவரத்தை தேசியமைய மாக்கியது.
மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது.
1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது.
குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது.
இலவச காணொளித் திட்டம் கொடுத்தது.
பிச்சைகாரர்கள் மறுவாழ்வு இல்லம் அமைத்தது.
கை ரிக்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தது.
இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தது.
குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது.
இந்தியாவிலேயே முதன்முதலி-ல் காவல் துறை ஆணையம் அமைத்தது.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப் பட்டோருக்கென துறை அமைத்தது.
அரசியலமைப்பில் பிற்படுத்தப் பட்டோருக்கான அமைப்பை அமைத்தது.
அரசியலமைப்பில் இட ஒதுக்கீடு இஈ – 31%, நஈ – 18 % ஆக உயர்த்தியது
+2 வரை இலவசக்கல்வி உருவாக்கியது.
மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது.
வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது.
முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கியது.
அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தது.
அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது.
மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது.
கோவில்களில் குழந்தைகளுக்கான “கருணை இல்லம்” தந்தது.
சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது.
நில விற்பனை வரையறை சட்டம் அமைத்தது.
இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தியை நெய்வேலி-யில் கொண்டு வந்தது.
பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலையை தூத்துக்குடியில் கொண்டு வந்தது.
நஒஉஈஞ உருவாக்கியது மற்றும் உப்பு வாரியம் அமைத்தது.
நஒடஈஞப உருவாக்கியது மற்றும் தேயிலை வாரியம் அமைத்தது..
உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தப்பட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தது.
பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டு வந்தது.
மனு நீதி திட்டம் தந்தது.
பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது.
பசுமை புரட்சி திட்டம் தந்தது.
கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தது.
மிக பிற்படுத்தப்பட்டோரில் வன்னியர், சீர் மரபினரை சேர்த்தது.
மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தது.
அருந்ததியின மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு தந்தது.
பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது.
மிக பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது.
வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளம்கலை பட்டப்படிப்பு வரை தந்தது.
தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது.
இந்தியாவிலேயே முதன்முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது.
சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கியது.
அரசு வேலைவாய்ப்புகளில் பெண் களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது.
ஆசியாவிலேயே முதன்முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகம் அமைத்தது.
ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது.
விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது.
நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது.
நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அமைத்தது.
கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது.
பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவியது.
பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவியது.
டாக்டர் ஙஏத மருத்துவ கல்லூரி நிறுவியது.
காவிரி நடுவர் மன்றம் அமைந்ததற்கு காரணம் இருந்தது.
உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டு வந்தது.
உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தது.
இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப் பட்ட இனத்தி-லிருந்து வர செய்தது.
மெட்ராஸ், சென்னையாக்கியது முதல் தடவை விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் அளித்தது.
தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை அமைத்தது.
முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியது.
கான்கிரீட் சாலை அமைத்தது.
தொழிற்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்தது.
ஐயன் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது.
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது.
செம்மொழி மாநாடு நடத்தியது.
சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்தது.
பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர்.
விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர் கலைஞர். (2006-2011 வரை ஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்) நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர் கலைஞர். விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது.
அன்று ஈழத் தமிழர்க்காக இரு முறை ஆட்சி துறந்தவர்.
சமத்துவபுரம் கண்டது.
உழவர் சந்தை தந்தது.
டைடல் பார்க் முதல் ஊகஈஞப ஒப நஊழ பார்க்குகளை கொண்டு வந்தது.
தமிழகத்தில் தொழில் புரட்சியையும், கணினிப் புரட்சியையும் கொண்டு வந்தது.
தொல்காப்பியர் பூங்கா, செம்மொழி பூங்காக்கள் அமைத்தது.
சமச்சீர் கல்வி கொண்டு வந்தது.
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னை அண்ணா மேம்பாலம் முதல் கோவை அடுக்கு மேம்பாலம் போன்ற பல நகரங்களில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டியது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டியது.
திராவிடக் கலைநுணுக்கத்தோடு புதிய தலைமைச் செயலகம் கட்டியது .
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலை மாற்றி மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு அமைச்சர் பதவிகளை அள்ளிவந்ததோடு மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப் படுத்தியது.
சென்னைக்கருகில் பன்னாட்டுத் தரம் வாய்ந்த கடல்சார் தேசிய பல்கலைக் கழகம். (சஹற்ண்ர்ய்ஹப் ஙஹழ்ய்ண்ங்மய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்) திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகம். (ஈங்ய்ற்ழ்ஹப் மய்ண்ஸ்ங்ழ்ள்ண்ற்ஹ்) கோவையில் உலகத் தரத்திலான மத்தியப் பல்கலைக்கழகம்.
திருச்சியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம். (ஒஒங) ஆசியாவிலேயே முதலாவதாக சென்னைக்கு அருகில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல் ஊனமுற்றோர்ருக் கான தேசிய நிறுவனம்.
சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் (என்.எஸ்.ஜி.) திருச்சியில் தேசிய சட்ட கல்லூரி (சஹற்ண்ர்ய்ஹப் கஹஜ் நஸ்ரீட்ர்ர்ப்) தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்.
ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் மத்திய அரசின் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.
கிண்டி கத்திபாரா, கோயம்பேடு, பாடி போன்ற இடங்களில் உள்ள மிகப் பெரிய மேம்பாலங்கள், துறைமுக விரிவாக்கப் பணிகள், சரக்குப் பெட்டக முனையங்கள், நீர்வழிப் போக்குவரத்து வசதிகள் போன்றவை இந்த காலகட்டத்தில் உருவாகின.
சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.
120 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை “சூப்பர் ஸ்பெஷாலி-ட்டி” மருத்துவமனையாக மேம்பாடு.
கரூர், ஈரோடு & சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா.
1650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம்.
2427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம்.
908 கோடி ரூபாய்ச் செலவில் நெம்மே-லியில் கடல்நீரைக் குடிநீராக்கும் மற்றொரு திட்டம்.
தமிழகத்திலுள்ள மீட்டர் கேஜ் இரயில் பாதைகள் அனைத்தும் அகல இரயில் பாதைகளாக மாற்றிட அனுமதி.
1828 கோடி ரூபாய்ச் செலவில் 90 இரயில்வே மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி.
சென்னை மாநகரில் மெட்ரோ இரயில் திட்டம்.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
சென்னை, திருச்சி, கோவை, மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.
1553 கோடி ரூபாய்ச் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.
கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய்ச் செலவில், 4,676 கிலோமீட்டர் நீள தேசிய நெடுஞ் சாலைகளில், 3,276 கிலோமீட்டர் சாலைகள், நான்கு வழிச் சாலைகளாக மேம்பாடு.
நெசவாளர் சமுதாயத்தினர் பெரும்பயன் எய்திட சென்வாட் வரி நீக்கம்.
இந்தியா முழுவதும் விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளில், வங்கியில் பெற்றிருந்த ரூ.72,000 கோடி மதிப்பிலான கடனும் வட்டியும் மத்திய அரசால் தள்ளுபடி.
இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு பல நூறு கோடி ரூபாய் கல்விக் கடன்.
மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற திட்டத்தை கொண்டுவந்து, பல மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைத்தவர் கலைஞர்.
திமுக ஆட்சியில் 42 அணைகள் கட்டப்பட்டன கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி திட்டத்தை 1973-ஆம் ஆண்டு துவக்கி செயல்படுத்தியது.
அத்திக்கடவு அவிநாசி குடிநீர் முதல் பகுதியான கோவைக்கு குடிநீர் வழங்கும் “பவானி அத்திக்கடவு திட்டம்” என்கிற அந்த திட்டத்தை 2001-06 ஆண்டுகளில் செயல்படுத்தியது.
சென்னையில் கோயம்பேடு காய் கனி அங்காடி, சென்னை மருத்துவ கல்லூரி கட்டிடம், நாமக்கல் கவிஞர் மாளிகை, பனகல் மாளிகை, சென்னை டிரேட் சென்டர், புதிய தலைமை செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் இப்படி எண்ணற்ற பெரிய திட்டங்களை கட்டியதும் திமுக தான்.
செம்மொழி பூங்கா, தொல்காப்பிய பூங்கா, பெரம்பூர் மாறன் பூங்கா, அண்ணா நகர் பூங்கா இப்படி பல பல பூங்காக்களை சென்னையில் உருவாக்கியதும் திமுக ஆட்சிதான்.
சோழிங்கநல்லூர் நஊழ, சிறுசேரி நஊழ, ஒப ஹைவே, கோவை, மதுரை, திருச்சி என முக்கிய நகரங்களில் ஒப பார்க்குகள் என பல தொழில்வளர்ச்சி திட்டங்களை கொண்டுவந்து மென்பொருள் துறையில் சென்னையை முக்கிய இடம் பிடிக்கசெய்தது.
சென்னை துறைமுக விரிவாக்கம், எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம், நின்றுபோன கிருஷ்ணா கால்வாய் குடிநீர் திட்டம் என்று சென்னையின் வளர்ச்சிக்காக திட்டங்களை கொண்டு வந்ததும் திமுக தான்.
பல பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைத்து தொழில் வளர்ச்சிக்கு உதவியது திமுக. தமிழ்நாடு மென்பொருள் ஏற்றுமதி மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியில் முன்னிலை வகிக்க காரணம் திமுக..
2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே, சுமார் ஏழு பெரிய புதிய மின் உற்பத்தி நிலையங்களை மேட்டூர், வல்லூர், எண்ணூர் போன்ற இடங்களில் துவக்கப்பட்டன..
தமிழகத்தின் தொழில்வளர்ச்சி 33% அதிகரித்தது. 2006-11 திமுக ஆட்சியின் போதுதான். தமிழகத்தை தொழில்வளர்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக்கியது கலைஞரின் திமுக ஆட்சி. அதன் காரணமாக, இந்தியாவிலேயே ஏஉடயில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு. ஏநப வரிவசூ-லிலும் இரண்டாம் இடத்தில், அதிகளவு வரி செலுத்தும் உற்பத்தி மாநிலமாக தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது.
தமிழ் மொழியிலும் கோயில்களில் அர்ச்சனை செய்ய பயிற்சிகளும் சட்டமும் போடப்பட்டது திமுக ஆட்சியில்.
2006-11 திமுக ஆட்சியில் மட்டுமே 2,459 இந்து கோயில்களுக்கு திருப்பணி நடைபெற்று குடமுழுக்கு விழாக்கள் நடைபெற்றன.
ஆசியாவிலேயே பெரிய தேர் ஆன பெரிய தேர் ஆன, திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் 1948-ஆம் ஆண்டோடு நின்றுவிட்டது. அதை பழுதுபார்த்து, புணரமைத்து 1970-ஆம் ஆண்டில், 25 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தேரோட்டத்தை நடத்தியவர் கலைஞர்.